என் மலர்

  நீங்கள் தேடியது "Tasmac shop"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பல்வேறு முறைகேடு நடந்துள்ளதாக முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு பல்வேறு புகார் சென்றனர்.
  • சுமார் 5-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சுமார்4 மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடத்தினர்.

  விழுப்புரம்:

  விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் மேம்பாலம் கீழ்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் அதிக விலையில் மதுபானங்கள் விற்கப்படுவதாகவும்,போலி மதுபானங்கள்,மற்றும் புதுவை மதுபானங்கள் விற்கப்படுவதாகவும்,விற்பனையில் தொடர்ந்து சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், போன்ற பல்வேறு முறைகேடு நடந்துள்ளதாக முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு பல்வேறு புகார் சென்றனர். இதனை தொடர்ந்து சென்னையில் இருந்து மாவட்ட மேலாளர் சத்தியன் தலைமையிலானசுமார் 5-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சுமார்4 மணி நேரத்திற்கு மேலாக சோதனை நடத்தினர். இதில் பல்வேறு ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.இதனால் திண்டிவனத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நகரச்செயலாளர் வக்கீல் கிருஷ்ணராஜ்தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
  • கௌதம்,பிரபு, இள சுந்தர்,கவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  கடலூர்:

  பண்ருட்டி பஸ் நிலையம் மற்றும் ெரயில் நிலையம் செல்லும் வழியில் பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரிசெல்லும்மாணவ,மாணவியர்களுக்கு இடையூறாக இருந்து வரும் அரசு மதுபான கடையை (டாஸ்மாக்) அகற்றக்கோரி நகரச்செயலாளர் வக்கீல் கிருஷ்ணராஜ்தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.

  இதில் நகர இணை செயலாளர் ராஜி,இளையராஜா,புஷ்பராஜ்,ராஜவேல்,பென்னி,கௌதம்,பிரபு, இள சுந்தர்,கவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்புஅழை ப்பாளர்களாக பிரகாஷ்,கலியபெருமாள், அருள்செல்வன் இளஞ்சி றுத்தை எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பா ளர்வெங்கடசாமி, விவசாய அணி மாநில துணைச் செயலாளர்தமிழ்மாறன் நகர பொருளாளர் பக லவன், வாசன்,சந்தானம்,சவுந்தர், சுப்பு ராய லு,ரமேஷ் ,பிரகாஷ் பாலூர்மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆலங்குளம் அருகே உள்ள நாலாங்கட்டளை கிராமத்தில் தீர்த்தாரபுரம் சாலையில் டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது.
  • நேற்று கடைக்கு வந்த மதுப்பிரியர் ஒருவர் 590 ரூபாய்க்கு மது வாங்கியுள்ளார்.

  ஆலங்குளம்:

  ஆலங்குளம் அருகே உள்ள நாலாங்கட்டளை கிராமத்தில் தீர்த்தாரபுரம் சாலையில் டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வருகிறது.

  அங்கு விற்பனையாளராக செல்வம் என்பவர் பணியாற்றி வருகிறார். நேற்று கடைக்கு வந்த மதுப்பிரியர் ஒருவர் 590 ரூபாய்க்கு மது வாங்கியுள்ளார். ரூ.600 கொடுத்து மீதி 10 ரூபாய் சில்லரை கேட்டுள்ளார்.

  அதற்கு செல்வம் மது வாங்கியதற்கு மொத்த ரூபாயும் சரியாக போய்விட்டது என்றும் மீதி சில்லரை இல்லை என்றும் செல்வம் கூறியுள்ளார். அதற்கு மது பிரியர் மது வாங்கியதற்கான கணக்குகளை திரும்ப அவரிடம் சொல்லி மீதி 10 ரூபாய் கேட்டுள்ளார்.

  இதில் ஆத்திரமடைந்த விற்பனையாளர் செல்வம் மதுக்கடையின் உள்ளிருந்து கதவை திறந்து கொண்டு வெளியில் வந்து மது பிரியரை ஆபாச வார்த்தைகளால் திட்டியதோடு தாக்கவும் முற்பட்டார். இதனை அருகில் இருந்த மற்றொரு நபர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

  செல்வம் ஏற்கனவே ஆலங்குளம் அருகே மதுக்கடையில் வேலை பார்க்கும் பொழுது மது பிரியர் ஒருவரை சில்லரை கேட்டதற்காக அடித்து உதைத்த வீடியோ சிசிடிவி காட்சிகள் வெளியாகி சிறிது காலம் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த நிலையில் மீண்டும் பணியில் சேர்ந்து அதே பாணியை கடைபிடித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவர் வலியுறுத்தினார்.
  • இதனால் மாணவர்கள் மதுவுக்கு அடிமையாகும் சூழ்நிலை ஏற்பட்டுவிடுமோ? என மாணவர்களின் பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர்.

  முதுகுளத்தூர்

  ஏர்வாடி ஊராட்சி மன்ற தலைவர் செய்யது அப்பாஸ் முதல்-அமைச்சருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

  ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியை புனித தலமாக போற்றப்பட்டு வருகிறது. ஏர்வாடி ஊராட்சி வெட்ட மனை கிராமத்தில் தர்ஹா மெயின்ரோட்டில் பள்ளி அருகில் ஒரு டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.இந்த கடை வழியாக மாணவ-மாணவிகள் செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் மாணவர்கள் மதுவுக்கு அடிமையாகும் சூழ்நிலை ஏற்பட்டுவிடுமோ? என மாணவர்களின் பெற்றோர்கள் அச்சமடைந்துள்ளனர்.

  மேலும் டாஸ்மாக் கடைக்கு வருபவர்கள் மதுவை குடித்துவிட்டு பாட்டில்களை மாணவ- மாணவிகள் செல்லும் வழியில் போட்டு விட்டு செல்கின்றனர்.

  மற்றொரு மதுபானக்க டை மனநல காப்பகம் மற்றும் பஸ் நிலையம் அருகில் செயல்படுகிறது. அங்கும் பலர் மது குடித்துவிட்டு செல்கின்றனர். இங்கு மதுகுடிக்கும் சிலர் பஸ் நிலையம் அருகில் இருப்பதால் மது குடித்துவிட்டு பஸ் நிலையத்திலேயே மயங்கி கிடக்கின்றனர். இந்த மதுபான கடைகள் பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதால் அவைகளை அங்கிருந்து அகற்றி ஊருக்கு வெளியே கொண்டு செல்லவேண்டும்.

  ஏர்வாடி ஆரம்ப சுகாதார நிலையத்தை 24 மணிநேரமும் செயல்படும் மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். ஏர்வாடி ஊராட்சியை பேருராட்சியாக தரம் உயர்த்த வேண்டும்.

  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பா.ம.க. மாவட்ட செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தல்
  • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்

  குடியாத்தம்:

  குடியாத்தம் நடுப்பேட்டையில் பாட்டாளி மக்கள் கட்சியின் வேலூர் மேற்கு மாவட்ட செயற்குழு மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது .

  கூட்டத்திற்கு வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் என்.குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்டத் தலைவர் கு. வெங்கடேசன், முன்னாள் மாநில துணைத்தலைவர் ரமேஷ் நாயுடு, மாவட்ட அமைப்பு செயலாளர் ஆர். பாலாஜி, மாவட்ட இளைஞர் சங்க செயலாளர் ஜி. சுரேஷ் குமார், நகர செயலாளர் எஸ்.ரமேஷ் உள்பட ஏராளமான மாநில மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

  இதில் குடியாத்தம் நகரத்தில் போக்கு வரத்துக்கு இடையூறாக இருக்கும் நேதாஜி சவுக் மற்றும் காமராஜர் பாலம் அருகில் உள்ள டாஸ்மாக் மதுபான கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என தமிழக அரசு கேட்டுக் கொள்வது, குடியாத்தம் ஊராட்சி க்குட்பட்ட பகுதிகளில் அமைக்கப்படும் சாலைகள் மற்றும் கால்வாய்கள், நீர் தேக்க தொட்டிகள் மற்றும் அனைத்து பணிகளையும் தரமாக செய்ய வேண்டும் என குடியாத்தம் மற்றும் கே.வி.குப்பம் வட்டார வளர்ச்சி அலுவலர்களை வலியுறுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
  • டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கண்டன கோஷங்களை எழுப்பி, கண்டன உரையாற்றினர்.

  மங்கலம்  :

  திருப்பூர் மாவட்டம் இடுவாய் ஊராட்சியில் பா.ஜ.க மற்றும் இடுவாய் ஊர்ப்பொதுமக்கள் இணைந்து இடுவாய் குடியிருப்பு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

  ஆர்ப்பாட்டத்திற்கு பா.ஜ.க. திருப்பூர் தெற்கு ஒன்றிய தலைவர் சரவணக்குமார் தலைமை தாங்கினார். திருப்பூர் வடக்கு மாவட்ட துணைத்தலைவர் சி.பி.சுப்பிரமணியம்,திருப்பூர் வடக்கு மாவட்ட தொழில் பிரிவு துணைத்தலைவர் ஐ.ஈ.டி.சி.விநாயகமூர்த்தி ,திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் மோகன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

  திருப்பூர் தெற்கு ஒன்றியத்தின் பொதுச்செயலாளர்கள் தேன்மொழி ,சம்பத்குமார், ஓ.பி.சி அணி தெற்கு ஒன்றிய தலைவர் கார்த்திகேயன், தெற்கு ஒன்றிய துணைத்தலைவர் கந்தசாமி, தெற்கு ஒன்றிய இளைஞர்அணி தலைவர் ராஜ்குமார், இடுவாய் பகுதி தலைவர் செகமலையப்பன், மங்கலம் பகுதி தலைவர் ரகுபதி ,இடுவாய் பா.ஜ.௧ நிர்வாகி சின்னச்சாமி, இடுவாய் பகுதி மூத்த நிர்வாகி மு.பழனிச்சாமி, சமூக ஊடகபிரிவு மாவட்ட தலைவர் ராகேஸ்பாண்டி, திருப்பூர் வடக்கு மாவட்ட பொதுச்செயலாளர் கே.சி.எம்.பி.சீனிவாசன்,கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஈஸ்வரன்,மாநில மகளிரணி செயலாளர் சுதாமணி சதாசிவம் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்கள் இடுவாய் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கண்டன கோஷங்களை எழுப்பி ,கண்டன உரையாற்றினர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கலெக்டர் அலுவலகத்திற்கு பூசாரி போல மாலை அணிந்தும், மணி அடித்தவாறும், சாமி ஆடியபடியும் ஒருவர் வந்து மனு அளித்தார்.
  • பாதுகாப்பு கருதி கோவில் அருகே டாஸ்மாக் கடை அமைக்க கூடாது.

  நெல்லை:

  மேலப்பாளையம் மேல கருங்குளத்தை சேர்ந்தவர் முருகன் என்ற முருகையா. இவர் அப்பகுதியில் உள்ள இசக்கி அம்மன் கோவிலின் தர்மகர்த்தாவாக உள்ளார்.

  இவர் இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு பூசாரி போல மாலை அணிந்தும், மணி அடித்தவாறும், சாமி ஆடியபடியும் வந்து ஒரு மனு அளித்தார்.

  அதில் கூறியிருப்பதாவது:-

  எங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை கோவிலின் அருகே இடமாற்றம் செய்வதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.

  கோவிலுக்கு தினமும் காலையிலும், மாலையிலும் ஏராளமான பெண்கள் மற்றும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். எனவே அவர்களின் பாதுகாப்பு கருதி கோவில் அருகே டாஸ்மாக் கடை அமைக்க கூடாது.

  இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

  இந்த கோரிக்கைக்கு ஆதரவாக அப்பகுதியை சேர்ந்த தமிழர் விடுதலை களம் பகுதி செயலாளர் கணேசன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் தர்மகர்த்தாவுடன் வந்திருந்தனர்.

  மகளிர் மட்டும் பஸ்

  மேலப்பாளையம் சந்தை ரவுண்டானா பகுதியில் இருந்து ரெட்டியார்பட்டி செல்லும் சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் 1,000-க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர்.

  மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவிகள் கல்லூரிக்கு வந்து செல்வதால் காலை மற்றும் மாலை நேரங்களில் மேலப்பாளையம் சந்தை ரவுண்டானாவில் இருந்து கல்லூரிக்கு மகளிர் மட்டும் பஸ் இயக்க வேண்டும் எனவும் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • டாஸ்மாக் கடை அருகே தொழில் நிறுவனங்கள் உள்ளது.
  • பள்ளி மாணவர்கள் சென்று வரும் பகுதியாகும்.

  திருப்பூர் :

  திருப்பூர் மாநகராட்சி 42-வது வார்டு கே.வி.ஆர். நகர் பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடை அருகே தொழில் நிறுவனங்கள் உள்ளது. மேலும் பள்ளி மாணவர்கள் சென்று வரும் பகுதியாகும். எனவே அந்த கடையை அகற்ற வேண்டுமென மாகராட்சி கவுன்சிலர் அன்பகம் திருப்பதி மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

  இந்தநிலையில் இன்று காலை அன்பகம் திருப்பதி தலைமையில் பொதுமக்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதுடன், சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இது குறித்த தகவல் அறிந்ததும் திருப்பூர் தெற்கு போலீஸ் உதவி கமிஷனர் கார்த்திக்கேயன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கலெக்டரிடம் மனு கொடுங்கள் என்றனர்.

  இதையடுத்து மறியலை கைவிட்ட பொதுமக்கள் கவுன்சிலர் அன்பகம் திருப்பதி தலைமையில் திருப்பூர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். இது குறித்து அன்பகம் திருப்பதி கூறுகையில், கே.வி.ஆர்.நகர் டாஸ்மாக் கடையால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. கடையை அகற்ற வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கபடாமல் உள்ளது. 10 நாட்களுக்குள் அகற்றாவிட்டால் பொதுமக்களை திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • டாஸ்மாக் கடையை இடமாற்றம் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  • பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது

   அரியலூர்:

  அரியலூர் மாவட்டம் தா.பழூரில் மனித உரிமைகள் கழக தொழிற்சங்கத்தின் கலந்தாய்வு கூட்டம் மண்டல தலைவர் மருதமுத்து தலைமையில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் தா.பழூர் சுத்தமல்லி பிரிவு சாலையில் பொதுமக்களுக்கு இடையூறாக அமைந்துள்ள அரசு டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும். தா.பழூரில் பஸ் நிறுத்தம் அமைந்துள்ள இடங்களில் கழிவறை வசதி அமைத்து தர வேண்டும். அரசு புறம்போக்கு நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். விவசாயிகளுக்கு தட்டுப்பாடு இல்லாத யூரியா வழங்க வேண்டும். மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும். தொழிலாளர்கள் நலவாரிய சான்றிதழ்களுக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் காலதாமதப்படுத்தாமல் சான்றிதழ் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பள்ளிக்கூடங்கள், கோவில்கள், மசூதி மற்றும் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
  • பொதுமக்கள் மற்றும் பெண்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  கருமத்தம்பட்டி:

  சோமனூர் சவுடேஸ்வரி காலனி பகுதி உள்ளது. இங்கு பள்ளிக்கூடங்கள், கோவில்கள், மசூதி மற்றும் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

  இந்த நிலையில், இந்த பகுதியில் புதிதாக அரசு டாஸ்மாக் கடை திறப்பதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதற்கு அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

  இது தொடர்பாக கடந்த மார்ச் மாதம் கோவை கலெக்டர் அலுவலகத்திலும் மனு அளித்தனர். அதில், குடியிருப்பு நிறைந்த இந்த பகுதியில் மதுக்கடை அமைக்க வேண்டாம் என கேட்டு கொண்டனர்.

  இந்த நிலையில் மீண்டும் இந்த பகுதியில் மது கடை திறக்கப்படுவதாக தகவல் வந்ததை தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பெண்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  இதுகுறித்து தகவலறிந்த கருமத்தம்பட்டி இன்ஸ்பெக்டர் ராஜதுரை தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்ைத நடத்தியதை தொடர்ந்து திரும்பி சென்றனர்.

  இந்த நிலையில் இன்று 2-வது நாளாக 100க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் சாலையோரம் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

  அப்போது பொதுமக்கள், இந்த பகுதியில் மதுக்கடை அமைக்க அனுமதி வழங்கப்படாது என உத்தரவாதம் வழங்க வேண்டும் என தெரிவித்தனர். உத்தரவாத கடிதம் கொடுத்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என கூறி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்து வண்டியின் பதிவெண்ணை வைத்து விசாரணை செய்தனர்.
  • மணிகண்டன் என்பவர் மார்க்கெட் பகுதிக்கு சென்று 2 பேரையும் அரிவாளால் வெட்டியது தெரிய வந்தது

  நெல்லை:

  பாளை சாவடி தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (வயது 51). அதே தெருவை சேர்ந்தவர் கணேசன்(54).

  அரிவாள் வெட்டு

  இவர்கள் 2 பேரும் பாளை மார்க்கெட் அருகே நேற்று நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர், 2 பேரையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றார்.

  இதில் படுகாயம் அடைந்த பாலசுப்பிரமணியன், கணேசன் ஆகியோர் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

  சி.சி.டி.வி. காமிரா

  இதுதொடர்பாக பாளை போலீசார் வழக்குப்பதிவு செய்து அரிவாளால் வெட்டிய நபரை தேடி வந்தனர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்து வண்டியின் பதிவெண்ணை வைத்து விசாரணை செய்தனர்.

  அப்போது அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன்(24) என்பவர் 2 பேரையும் வெட்டியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு:-

  டாஸ்மாக்கில் தகராறு

  தாழையூத்து பூந்தோட்ட தெருவை சேர்ந்தவர் கங்கை முருகன்(வயது 56). இவர் தனது மனைவியின் சிகிச்சைக்காக சமீபத்தில் பாளை பரிசுத்த ஆவி தெருவில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு குடியேறினார்.

  நேற்று மார்க்கெட் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் அவர் மது அருந்த சென்றுள்ளார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த பாலசுப்பிரமணியன், கணேசன் ஆகியோருடன் தகராறு ஏற்பட்டுள்ளது.

  கைது

  இந்த தகராறில் 2 பேரும் சேர்ந்து கங்கை முருகனை அவதூறாக பேசி உள்ளனர். இதனை கங்கை முருகன் தனது மகனிடம் தெரிவித்துள்ளார்.

  இதனால் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் மார்க்கெட் பகுதிக்கு சென்று 2 பேரையும் அரிவாளால் வெட்டியது தெரியவந்தது. இதையடுத்து கங்கை முருகன், மணிகண்டன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print