மக்கள் புகார் தந்தால் டாஸ்மாக் கடைகள் மீது 30 நாட்களில் நடவடிக்கை- தமிழக அரசு உத்தரவு

சில இடங்களில் கடைகள் வந்த பிறகு வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள் போன்றவை வந்திருக்கும். தமிழக அரசு அதற்கான விதியில் மாற்றம் கொண்டு வந்துள்ளது.
மக்கள் புகார் தந்தால் டாஸ்மாக் கடைகள் மீது 30 நாட்களில் நடவடிக்கை- தமிழக அரசு உத்தரவு
Published on

சென்னை:

தமிழகத்தில் மொத்தம் 4 ஆயிரத்து 777 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகள் அமைக்கும் போது, கல்வி நிறுவனங்கள், ஆஸ்பத்திரிகள் மற்றும் வழிபாட்டு தலங்களில் இருந்து நகர் பகுதியாக இருந்தால் 50 மீட்டரும், கிராமப்புறங்களில் 100 மீட்டர் தூரமும் இருக்க வேண்டும். ஆனால் இந்த விதிகளை மீறி பல கடைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

இது குறித்து பொதுமக்கள் அந்தந்த மாவட்ட கலெக்டரிடம் முறையிட்டு தீர்வு காணலாம். அதேபோல் சில இடங்களில் கடைகள் வந்த பிறகு வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள் போன்றவை வந்திருக்கும். இந்த கடைகள் மீது நடவடிக்கை எடுக்க முடியாத நிலை இருந்தது.

இந்த நிலையில் தமிழக அரசு அதற்கான விதியில் மாற்றம் கொண்டு வந்துள்ளது. அதன்படி கடை வந்த பிறகு கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு தலங்கள் ஆகியவை அமைக்கப்பட்டு இருந்தாலும், அந்த கடைகள் மீது புகார்கள் வந்தால் அதனை கலெக்டர் பரிசீலனை செய்து 30 நாட்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com