என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Chandrababu Naidu"
- சந்திரபாபு நாயுடு அங்குள்ள விருந்தினர் மாளிகையில் இரவு தங்கினார்.
- நாட்டில் தர்மத்தை காக்க வேண்டும் என பிரார்த்தனை செய்தேன்.
திருப்பதி:
ஆந்திர முன்னாள் முதல் மந்திரியும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் கைதாகி ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்தார்.
பின்னர் ஜாமீனில் வெளிய வந்தார். சந்திரபாபு நாயுடு நேற்று தனது மனைவி புவனேஸ்வரியுடன் திருப்பதிக்கு வந்தார். அவருக்கு தெலுங்கு தேசம் கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பின்னர் திருப்பதி மலைக்கு வந்த சந்திரபாபு நாயுடு அங்குள்ள விருந்தினர் மாளிகையில் இரவு தங்கினார். இன்று காலை வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் வைகுண்ட வாசல் வழியாக ஏழுமலையானை தரிசனம் செய்தார்.
தரிசனம் முடிந்து வெளியே வந்த சந்திரபாபு நாயுடு கூறியதாவது:-
ஏழுமலையான் காலடியில் பிறந்து படிப்படியாக வளர்ந்தவன் நான். கஷ்டம் வரும் காலங்களில் காப்பாற்றுவார்.

அலிபிரியில் தன்மீது வெடிகுண்டு தாக்குதல் நடந்த போது ஏழுமலையான் தான் என்னை காப்பாற்றினார். நாட்டில் தர்மத்தை காக்க வேண்டும் என பிரார்த்தனை செய்தேன்.
உலகில் இந்தியா முதல் இடத்திலும் தெலுங்கு இனம் உலகின் நம்பர் 1 ஆக இருக்க வேண்டும். மக்களுக்கு சேவை செய்யும் ஆற்றலை தர வேண்டும் என சாமியிடம் வேண்டிக் கொண்டேன். தனது செயல்பாடுகள் குறித்து விரைவில் அறிவிப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருப்பதியில் நேற்று 58,278 பேர் தரிசனம் செய்தனர். 17,220 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.53 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
நேரடி இலவச தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் 8 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
#WATCH | Former Andhra Pradesh CM and Telugu Desam Party president N Chandrababu Naidu along with his wife offered prayers at Sri Venkateswara Swamy Temple in Tirupati. pic.twitter.com/1hmqNY8MXo
— ANI (@ANI) December 1, 2023
- ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சந்திரபாபு நாயுடுவிற்கு கண் புரை அறுவை சிகிச்சை நடைபெற்றது.
- ஆந்திர பிரதேச உயர் நீதிமன்றம், அக்டோபர் 31-ந்தேதி அன்று சந்திரபாபு நாயுடுவுக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது.
ஆந்திர மாநில முன்னாள் முதல்-மந்திரியும் தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு அவரது ஆட்சிக்காலத்தில் திறன் மேம்பாட்டு கழகத்தில் ஊழல் செய்ததாக கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையில் அவர் உடல் ஆரோக்கியத்தில் சரிவு ஏற்பட தொடங்கியது. மேலும், கண் பார்வை குறைபாடுகளை சரி செய்ய அவருக்கு கண் புரை அறுவை சிகிச்சையும் தேவைப்பட்டது. எனவே, இதற்கு அனுமதிக்குமாறு நீதிமன்றத்தில் சந்திரபாபு நாயுடு ஜாமின் கோரியிருந்தார். அந்த மனுவை பரிசீலனை செய்த ஆந்திர பிரதேச உயர் நீதிமன்றம், அக்டோபர் 31-ந்தேதி அன்று அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது.
இதையடுத்து ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சந்திரபாபு நாயுடுவிற்கு கண் புரை அறுவை சிகிச்சை நடைபெற்றது. தொடர்ந்து சிகிச்சை பெற வேண்டியுள்ளதால் இடைக்கால ஜாமினை சாதாரண ஜாமினாக மாற்ற கோரி அவர் மனு தாக்கல் செய்தார். இன்று அவருக்கு ஆந்திர உயர் நீதிமன்றம் சாதாரண ஜாமின் வழங்கியது.
இந்நிலையில், சந்திரபாபு நாயுடுவுக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம் உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் ஆந்திர அரசு மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது.
இம்மனு மீது விரைவில் விசாரணை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- 40 ஆண்டுகால அரசியலில் இதுவரை எந்த தவறையும் செய்தது இல்லை.
- மற்றவர்கள் தவறு செய்யவும் அனுமதித்தது கிடையாது.
திருப்பதி:
தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு ராஜ மகேந்திரவரம் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
சந்திரபாபு நாயுடுவுக்கு ஆந்திர ஐகோர்ட்டு 4 வார இடைக்கால ஜாமீன் வழங்கியது.
இதையெடுத்து நேற்று மாலை சந்திரபாபு நாயுடு ஜெயிலிருந்து வெளியே வந்தார். அவரது மனைவி புவனேஸ்வரி மகன் லோகேஷ் மருமகள் பேரக்குழந்தைகள் வரவேற்பு அளித்தனர்.
மேலும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
பின்னர் சந்திரபாபு நாயுடு கூறியதாவது :-
எனது ஜாமீனுக்காக போராடிய ஜனசேனா, பி.ஆர்.எஸ், பா.ஜ.க, கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தெலுங்கு தேசம் தொண்டர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னுடைய 40 ஆண்டுகால அரசியலில் இதுவரை எந்த தவறையும் செய்தது இல்லை.மற்றவர்கள் தவறு செய்யவும் அனுமதித்தது கிடையாது.
எனது நேர்மையின் காரணமாக ஜெயிலில் 52 நாட்கள் தாக்குப் பிடிக்க முடிந்தது. ஆந்திரா தெலுங்கானாவை சேர்ந்த தெலுங்கு மக்கள் என் மீது காட்டிய பாசத்தை விவரிக்க முடியவில்லை. அவர்கள் ஒவ்வொருவருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஜாமின் கோரி சந்திரபாபு நாயுடு மனு தாக்கல் செய்திருந்தார்.
- ஜாமின் வழங்கப்பட்டதை அடுத்து சந்திரபாபு நாயுடு சிறையில் இருந்து விடுவிப்பு.
ஆந்திர மாநில முன்னாள் முதல் மந்திரியும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு அவரது ஆட்சிக்காலத்தில் திறன் மேம்பாட்டு கழகத்தில் ஊழல் செய்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார்.
தனது வலது கண்-இல் பிரச்சினை இருப்பதால், அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டிய தேவை இருப்பதால் ஜாமின் கோரி சந்திரபாபு நாயுடு மனு தாக்கல் செய்திருந்தார். அதன்படி 53 நாட்கள் சிறையில் இருந்த சந்திரபாபு நாயுடுவுக்கு ஆந்திரா பிரதேசம் உயர் நீதிமன்றம் நான்கு வார காலத்திற்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டு இருந்தது.
#WATCH | Supporters of former Andhra Pradesh CM and TDP Chief N Chandrababu Naidu surround him as he walks out of Rajahmundry jail. Andhra Pradesh High Court granted him interim bail in the Skill Development Scam Case today. pic.twitter.com/Yw31roGMcw
— ANI (@ANI) October 31, 2023
ஜாமின் வழங்கப்பட்டதை அடுத்து சந்திரபாபு நாயுடு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். இவரை வரவேற்க தெலுங்கு தேசம் கட்சி தொண்டர்கள் அதிகளவில் திரண்டு இருந்தனர். மேலும் ஆந்திர பிரதேச மாநிலத்தின் ராஜமுந்திரி மற்றும் பல்வேறு பகுதிகளில் கட்சி தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- விஜயவாடா ஊழல் ஒழிப்பு நீதிமன்ற நீதிபதிக்கு சிறையில் இருந்து சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளார்.
- அதில் தனக்கும், தனது குடும்பத்தினர் உயிருக்கும் ஆபத்து உள்ளதால் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றார்.
அமராவதி:
தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ஆந்திர முதல் மந்திரியாக இருந்தபோது, திறன் மேம்பாட்டு நிதியில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக சந்திரபாபு நாயுடுவை ஆந்திர சிஐடி போலீசார் கடந்த மாதம் 9-ம் தேதி கைது செய்தனர். இதையடுத்து, நீதிமன்ற காவலில் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, சந்திரபாபு நாயுடு மீது அமராவதி உள்வட்ட சாலை வழக்கு, பைபர் நெட் வழக்கு, அங்கள்ளு பகுதியில் போலீஸ் விதிகளை மீறி பொதுக்கூட்டம் நடத்திய வழக்கு என மேலும் 3 வழக்குகளை ஆந்திர அரசு பதிவு செய்தது.
இந்த 3 வழக்குகளில் முன் ஜாமீன் கோரி சந்திரபாபு நாயுடு தாக்கல் செய்த மனுவை விசாரித்த ஆந்திர மாநில ஐகோர்ட்டு, அங்கள்ளு போலீஸ் வழக்கு, அமராவதி உள்வட்ட சாலை வழக்கு ஆகியவற்றில் சந்திரபாபு நாயுடுவுக்கு முன் ஜாமீன் வழங்கியது.
இந்நிலையில், திறன் மேம்பாட்டு நிதியில் முறைகேடு நடந்த வழக்கில் சந்திரபாபு நாயுடுவுக்கு 4 வாரங்களுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி ஆந்திரா ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு அவருக்கு நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. ஜாமின் மனு ஆணை ஜெயிலில் வழங்கப்பட்டதும் சந்திரபாபு நாயுடு ஜெயலில் இருந்து வெளியே வருவார் என தெரிவித்துள்ளனர்.
.
- திடீரென சாலையோரம் காரை நிறுத்திய ராம் கோபால் வர்மா ஜெயில் வாசல் முன்பாக நின்று தனது செல்போனில் செல்பி எடுத்தார்.
- ஜெயில் முன்பாக தான் எடுத்த செல்பி போட்டோவை எக்ஸ் தளத்தில் ராம் கோபால் வர்மா பதிவிட்டார்.
திருப்பதி:
ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாடு கழக ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் பிரபல திரைப்பட தயாரிப்பாளரான ராம்கோபால் வர்மா நேற்று காலை ராஜமுந்திரி ஜெயில் முன்பாக காரில் சென்று கொண்டு இருந்தார்.
திடீரென சாலையோரம் காரை நிறுத்திய ராம் கோபால் வர்மா ஜெயில் வாசல் முன்பாக நின்று தனது செல்போனில் செல்பி எடுத்தார்.
பின்னர் ஜெயில் முன்பாக தான் எடுத்த செல்பி போட்டோவை எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். படத்திற்கு கீழே இல்லை@ஒய்.எஸ். ஜெகன் உள்ளே இல்லை என பதிவு செய்து இருந்தார்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்:-
ஜெயில் வாயில் முன்பாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
ராம் கோபால் வர்மா ஜெயில் வாயில் அருகே செல்லாமல் மெயின் ரோட்டில் இருந்து செல்பி எடுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்ததாக தெரிவித்தனர்.
சந்திரபாபு நாயுடு அடைக்கப்பட்டுள்ள சிறை முன்பாக அவர் செல்பி எடுத்ததால் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- விஜயவாடா ஊழல் ஒழிப்பு நீதிமன்ற நீதிபதிக்கு சிறையில் இருந்து சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளார்.
- சிறைக்கு உள்ளேயும், சிறைக்கு வெளியேயும் இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
ஆந்திர மாநில முன்னாள் முதல் மந்திரியும் தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு அவரது ஆட்சிக்காலத்தில் திறன் மேம்பாட்டு கழகத்தில் ஊழல் செய்ததாக கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இந்நிலையில், விஜயவாடா ஊழல் ஒழிப்பு நீதிமன்ற நீதிபதிக்கு சிறையில் இருந்து சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், சிறையில் இருக்கும் எனக்கும், வெளியில் இருக்கும் என் குடும்பத்தினரின் உயிருக்கும் ஆபத்து உள்ளது. அதனால் ராஜமுந்திரி மத்திய சிறைக்கு உள்ளேயும், சிறைக்கு வெளியேயும் இசட் பிரிவு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
- எந்த ஒரு சக்தியானாலும் என்னை மக்களிடமிருந்து அந்நியபடுத்தி விட முடியாது.
- நான் வெளியே வரும் வரையில் அமைதியான முறையில் போராட்டத்தை தொடங்குங்கள்.
திருப்பதி:
ஆந்திர மாநில முன்னாள் முதல் மந்திரியும் மந்திரியும் தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு அவரது ஆட்சிக்காலத்தில் திறன் மேம்பாட்டு கழகத்தில் ஊழல் செய்ததாக கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இந்த நிலையில் ஜெயிலில் உள்ள சந்திரபாபு நாயுடு கட்சி தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.
நான் ஜெயிலில் இல்லை. மக்களின் இதயங்களில் இருக்கிறேன். எந்த ஒரு சக்தியானாலும் என்னை மக்களிடமிருந்து அந்நியபடுத்தி விட முடியாது. நான் இப்போது மக்களிடையே இல்லை. ஆனால் வளர்ச்சியின் பெயரால் எல்லா இடங்களிலும் என் பெயர் உள்ளது. நான் எப்போதுமே மக்களுக்காக உழைத்து வந்துள்ளேன்.
எனது முதல் கவனம் தெலுங்கு மக்களின் வளர்ச்சி மற்றும் நலன்களை நோக்கி தான் இருக்கிறது. நான் மாநிலத்தில் இல்லாதபோது மனைவி புவனேஸ்வரி என் சார்பில் செயல்படுவார். அவர் மக்களோடு தொடர்பில் இருப்பார்.
நான் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளது பொறுத்துக்கொள்ள முடியாமல் இறந்தவர்களின் குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூற அவர் வருவார். இந்த அராஜக ஆட்சியை அவர் முழுமையாக அம்பலப்படுத்துவார்.
சட்டம் இருக்கிறது. கால அவகாசம் எடுத்தாலும் நான் மக்களுக்காகவும், மாநில நலனுக்காகவும் உழைக்க புதிய வீரியத்துடன் வெளியே வருவேன். நான் வெளியே வரும் வரையில் அமைதியான முறையில் போராட்டத்தை தொடங்குங்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஜெயிலில் இருந்து கொண்டு சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதுவதற்கு அனுமதி இல்லை என்று ஜெயில் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார். இதனால் சர்ச்சை ஏற்பட்டது.
இதுகுறித்து ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி விடுத்துள்ள அறிக்கையில்:-
சந்திரபாபு நாயுடுவின் கடிதத்தை தெலுங்கு தேசம் வெளியிட்டுள்ளது. ஜெயிலில் அவருக்கு பேனாவும், பேப்பரும் எப்படி கிடைத்தது? இந்த கடிதம் போலியானது.
சந்திரபாபு நாயுடுவின் ஊழலால் தான் மக்கள் சோர்ந்து போய் அவரை ஆட்சி அதிகாரத்தில் இருந்து நீக்கினர் என கூறப்பட்டுள்ளது.
தன்னை ஜெயிலில் பார்க்க வந்த குடும்பத்தினரிடம் இந்த கடிதத்தை கொடுத்து சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ளார் என கூறப்படுகிறது.
- சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை கண்டித்து அவரது மனைவி புவனேஸ்வரி ஆந்திரா முழுவதும் யாத்திரை செல்ல உள்ளார்.
- சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டவுடன் அதிர்ச்சியில் இறந்த கட்சியினரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.
திருப்பதி:
ஆந்திர முன்னாள் முதல்-மந்திரியும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு திறன் மேம்பாட்டு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரது நீதிமன்ற காவல் நேற்று முடிய இருந்த நிலையில் காணொலி மூலம் விஜயவாடா லஞ்ச ஒழிப்பு கோர்ட்டில் அவரை ஆஜர்படுத்தினர். அப்போது சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்ற காவல் வருகிற நவம்பர் 1-ந்தேதி வரை நீட்டிக்கப்படுவதாக கோர்ட்டு அறிவித்தது.
இந்த நிலையில் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதை கண்டித்து அவரது மனைவி புவனேஸ்வரி ஆந்திரா முழுவதும் யாத்திரை செல்ல உள்ளார். உண்மை வெல்லும் என்ற பெயரில் புவனேஸ்வரி யாத்திரைக்கு திட்டமிடப்பட்டுள்ளது.
அடுத்த வாரம் அவர் உண்மை வெல்லும் யாத்திரையை தொடங்குகிறார்.
அப்போது சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டவுடன் அதிர்ச்சியில் இறந்த கட்சியினரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.
இதே போல தெலுங்கு தேசம் கட்சி பொதுச்செயலாளர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் பிரசார பயணம் பாதியில் நிறுத்தப்பட்டது. அதுவும் இந்த வாரம் தொடங்கப்படும் என தெரிவித்துள்ளனர்.