search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "Pawan Kalyan"

  • ஜெகன்மோகன் ரெட்டியின் நலன் மற்றும் வளர்ச்சித் திட்டங்களைக் கண்டு எதிர்க்கட்சிகள் பயப்படுகிறார்கள்.
  • சர்மிளா போன்றவர்கள் தங்களுக்கு வாக்குரிமை உள்ள மாநிலத்துக்கு நிச்சயம் திரும்பிச் செல்வார்கள்.

  திருப்பதி:

  ஆந்திர மாநில சுற்றுலாத்துறை மந்திரி ரோஜா தடா அருகே சுற்றுலா விடுதிகளைத் திறந்து வைத்தார்.

  ஓங்கோலு பாராளுமன்ற தொகுதியில் வேட்பாளராக போட்டியிட போவதாக வதந்தி பரப்பி வருகின்றனர். ஆனால், தொடர்ந்து 2 முறை தனக்கு ஆதரவளித்த நகரி சட்டமன்றத் தொகுதியில் இந்த முறையும் போட்டியிடுவேன்.

  ஆரம்பத்தில் சீட் கிடைக்காது என்றார்கள். இப்போது வேறு எங்காவது சென்று போட்டியிடுவேன் என்று வேறு ஒரு கதையை உருவாக்கிவிட்டார்கள்.

  ஜெகன்மோகன் ரெட்டியின் நலன் மற்றும் வளர்ச்சித் திட்டங்களைக் கண்டு எதிர்க்கட்சிகள் பயப்படுகிறார்கள்.

  சந்திரபாபு நாயுடு, நாரா லோகேஷ், பவன் கல்யாண், சர்மிளா போன்றவர்கள் தங்களுக்கு வாக்குரிமை உள்ள மாநிலத்துக்கு நிச்சயம் திரும்பிச் செல்வார்கள்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  • கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு சமீபத்தில் அனைத்து கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு அறிவித்தார்.
  • ஆளும் கட்சியில் இணைந்த ராயுடு, ஒரு வாரத்தில் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

  அமராவதி:

  கிரிக்கெட் வீரர் அம்பதி ராயுடு சமீபத்தில் அனைத்து கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு அறிவித்தார். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு ஆந்திராவில் ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

  ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவரும் ஆந்திர முதல்-மந்திரியுமான ஜெகன் மோகன் ரெட்டியின் முன்னிலையில் சேர்ந்தார். இதைத் தொடர்ந்து தீவிர அரசியல் பணியில் ஈடுபடுவார் என எதிர்பார்த்த நிலையில், கட்சியில் இணைந்த ஒரு வாரத்தில் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

  அரசியலில் காலடி எடுத்துவைத்த ஒரு வாரத்தில் அம்பதி ராயுடு ஓய்வு அறிவித்தது திடீர் திருப்பமாக அமைந்தது.

  குண்டூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட சீட் கேட்டு மறுக்கப்பட்டதால் அவர் கட்சியில் இருந்து ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது.

  இந்நிலையில், ஆளும் கட்சியில் இருந்து விலகிய சில தினங்களுக்கு ஜனசேனா கட்சி தலைவரும், நடிகருமான பவன் கல்யாணை அம்பதி ராயுடு திடீரென சந்தித்துள்ளார்.

  இதுதொடர்பான புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள அவர், ஒய்.எஸ்.ஆர். கட்சியில் சேர்ந்து மக்களுக்கு சேவை செய்யவேண்டும் என்ற தனது கனவை தன்னால் நிறைவேற்ற முடியவில்லை. அதற்காக யாரையும் குறைசொல்ல மாட்டேன். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் சித்தாந்தமும், என்னுடைய சிந்தாந்தமும் ஒத்துப் போகவில்லை.

  எந்த தொகுதியிலும் போட்டியிட விருப்பமில்லை. இதனால் அரசியலில் இருந்து விலக முடிவு செய்தேன். பவன் கல்யாண் கொள்கைகளைப் புரிந்துகொள்ள அவரது நலம் விரும்பிகள் கேட்டுக் கொண்டதன் பெயரில் அவரை சந்தித்தேன். பவன் கல்யாண் உடன் நிறைய நேரம் பேசினேன். அப்போது தனது வாழ்க்கை மற்றும் அரசியல் பற்றி என்னுடன் விவாதித்தார்.

  அவரது கொள்கையும், பார்வையும் என்னுடையது போலவே இருப்பதாக சொல்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். எனது கிரிக்கெட் கடமைகளுக்காக துபாய்க்கு புறப்படுகிறேன். நான் எப்போதும் ஆந்திர மக்களுக்காக துணை நிற்பேன் என பதிவிட்டுள்ளார்.

  அம்பதி ராயுடு விரைவில் ஜனசேனா கட்சியில் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • நாயுடுவுக்காக தனது கட்சிப் பணியாளர்கள் உட்பட அனைத்தையும் தியாகம் செய்து வருகிறார்.
  • "ஆந்திராவில், எந்த ஒரு பெரிய அரசியல் கட்சியும் தனித்து போட்டியிட முடியாது.

  திருப்பதி:

  ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் பீமாவரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி பேசியதாவது:-

  நடிகர் பவன் கல்யாண் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை மனைவியை மாற்றி வருகிறார். அவர் ஒரு கல்யாண ஸ்டார். அவரை போன்ற அரசியல்வாதியை எந்தப் பெண் குழந்தைகளின் பெற்றோராவது நம்ப முடியுமா? பவன் கல்யாண் எம்.எல்.ஏ.வாகவோ அல்லது முதல் மந்திரியாக அமர்ந்தால் சிறுமிகளின் எதிர்காலம் என்னவாகும்?

  "மிஸ்டர். பவன் கல்யாணுக்கு வாக்களிப்பது புத்திசாலித்தனமான முடிவு அல்ல பக்கத்து வீட்டுக்காரரான சந்திரபாபு நாயுடு ஒரு மாநிலத்தின் முதல்-மந்திரியாக வருவதற்காக அரசியல் கட்சியை நிறுவிய ஒரே அரசியல்வாதி பவன் கல்யாண் மட்டுமே.


  நாயுடுவுக்காக தனது கட்சிப் பணியாளர்கள் உட்பட அனைத்தையும் தியாகம் செய்து வருகிறார். ஒரு பேக்கேஜ்'க்காக மட்டுமே அவர் தியாகம் செய்து வருகிறார்.

  "ஆந்திராவில், எந்த ஒரு பெரிய அரசியல் கட்சியும் தனித்து போட்டியிட முடியாது.

  இவ்வாறு அவர் பேசினார்.

  நடிகர் பவன் கல்யாணின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து முதல் மந்திரி விமர்சித்திருப்பது ஆந்திர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

  இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • மகளிர் அணி சார்பில் விசாகப்பட்டினம் காந்தி சிலை முன்பு கண்டன போராட்டம் செய்தனர்.
  • பவன் கல்யாண் பஞ்சர் செய்யப்பட்ட சைக்கிள். அந்த சைக்கிளை தான் அவர் வைத்திருக்கிறார் என்பது உண்மை.

  திருப்பதி:

  ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் வியூகம் என்ற தெலுங்கு சினிமா பட விழா நடந்தது.

  இதில் கலந்துகொண்ட ஆந்திர மந்திரி ரோஜா பேசுகையில் :-

  பவன் கல்யாண் ரசிகர்களும் கபு ஜாதியினரும் பவன் கல்யாண் முதல் மந்திரியாக வரவேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் பவன் கல்யாண் பஞ்சர் செய்யப்பட்ட சைக்கிள். அந்த சைக்கிளை தான் அவர் வைத்திருக்கிறார் என்பது உண்மை எனக் கிண்டலாக பேசினார்.

  மேலும் மந்திரி ராம்பாபு பேசுகையில்:-

  ராஜமுந்திரி ஜெயிலில் சந்திரபாபு நாயுடுவிடம் ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் சரண் அடைந்தார் என்றார்.

  பட விழாவில் ரோஜா மற்றும் ராம் பாபு பேசியது பவன் கல்யாண் ரசிகர்கள் மற்றும் அவரது கட்சியினருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

  இதனை கண்டித்து பவன் கல்யாண் கட்சியைச் சேர்ந்த மகளிர் அணி சார்பில் விசாகப்பட்டினம் காந்தி சிலை முன்பு கண்டன போராட்டம் செய்தனர்.

  அப்போது மந்திரி ரோஜா மற்றும் ராம் பாபு ஆகியோரின் படங்களை செருப்பால் அடித்து கோஷம் எழுப்பினர்.

  இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

  • பவன் கல்யாண் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கிறார்.
  • பவன் கல்யாணின் கவனம் முழுவதும் அரசியல் பக்கம் திரும்பி முழு நேர அரசியல்வாதியாக உருவெடுத்து உள்ளார்.

  ஜனசேனா கட்சி தலைவர் நடிகர் பவன் கல்யாண் தீவிர அரசியலில் ஈடுபட்டுள்ளார்.

  தெலுங்கானாவில் வருகிற 30-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது இதையொட்டி பவன் கல்யாண் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கிறார். இதனால் ஓய்வு இன்றி கடும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

  இவரது நடிப்பில் ஓ.ஜி, உஸ்தாத் பகத்சிங், ஹரிஹர வீரமல்லூர் ஆகிய 3 படங்கள் முடிவடையும் தருவாயில் உள்ளது. ஆனால் பவன் கல்யாண் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருவதால் ஒப்பந்தம் செய்யப்பட்ட திரைப்படங்களை முடித்துக் கொடுக்க முடியாமல் உள்ளார்.

  இந்நிலையில் பவன் கல்யாண் தெலுங்கானா சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு ஆந்திராவில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல் மற்றும் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியுடன் சேர்ந்து கூட்டணி வைத்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என அரசியல் நோக்கர்கள் தெரிவித்து வருகின்றனர்.

  பவன் கல்யாணின் கவனம் முழுவதும் அரசியல் பக்கம் திரும்பி முழு நேர அரசியல்வாதியாக உருவெடுத்து உள்ளார்.

  திரைப்பட தயாரிப்பாளர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்ட 3 படங்களையும் முடித்துக் கொடுக்க நேரம் ஒதுக்க வேண்டுமென பவன் கல்யாணிடம் வற்புறுத்தி வருகின்றனர். ஆனால் அவரது தரப்பில் படப்பிடிப்பிற்கு நேரமில்லை என கூறுகின்றனர்.

  • உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பை உயர்த்திக் காட்டியவர் பிரதமர் மோடி.
  • மோடி தனது சொல்லும் செயலும் ஒன்றுதான் என்பதை நிரூபித்துள்ளார்.

  திருப்பதி:

  ஜனசேனா கட்சியின் தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் ஐதராபாத்தில் பா.ஜ.க. ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

  உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பை உயர்த்திக் காட்டியவர் பிரதமர் மோடி. முன்பு 3 முறை குஜராத் முதல்-அமைச்சராக இருந்து, இப்போது பிரதமராக இருக்கிறார்.

  குஜராத்தின் வளர்ச்சியில் கவனம் செலுத்திய விதத்தில், பிரதமர் நரேந்திர மோடியை தெலுங்கு மாநிலத் தலைவர்கள் முன்மாதிரியாகக் காண வேண்டும்.

  மோடி எனக்கு மிகவும் பிடித்த பிரதமர், நான் அவரை மிகவும் மதிக்கிறேன், அவர் மிகவும் திறமையான தலைவர். வலுவான தலைமைத்துவம் வேண்டும் என மக்கள் எதிர்பார்த்திருந்த வேளையில் நாட்டை வழிநடத்த வந்துள்ளார்.

  மோடி தனது சொல்லும் செயலும் ஒன்றுதான் என்பதை நிரூபித்துள்ளார். 3-வது முறையாக பா.ஜ.க.வுக்கும், மோடிக்கும் எனது முழு ஆதரவையும் அளிக்கிறேன். பிரதமர் மோடி தான் என்னுடைய ரோல் மாடல்.

  இவ்வாறு அவர் பேசினார்.

  இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
  • பா.ஜ.க மற்றும் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.
  • பவன் கல்யாண் தேர்தலுக்காக 32 வேட்பாளர்களை அறிவித்துள்ளார்.

  திருப்பதி:

  ஆந்திர மாநில திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு ராஜமுந்திரி ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

  அவரை தெலுங்கு தேசம் கட்சியின் தெலுங்கானா மாநில தலைவர் காசானி ஞானேஸ்வர் சந்தித்து பேசினார்.

  தொடர்ந்து அவர் கூறுகையில் தெலுங்கானா மாநில சட்டப்பேரவை தேர்தலில் தெலுங்கு தேசம் போட்டியிடவில்லை என அறிவித்தார்.

  கடந்த 2018-ம் ஆண்டு தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. 3.51 சதவீத வாக்குகளை பெற்றிருந்தது.

  பா.ஜ.க மற்றும் நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. பவன் கல்யாண் தேர்தலுக்காக 32 வேட்பாளர்களை அறிவித்துள்ளார்.

  அவரது வேட்பாளர்களுக்கு தெலுங்கு தேசம் கட்சி ஆதரவளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இது தெலுங்கானா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

  • பணத்தை ரஷ்யா, துபாய், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் உள்ள வங்கிகளில் டெபாசிட் செய்துள்ளார்.
  • 2-வது முறையாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தேர்தலில் வெற்றி பெறும்.

  திருப்பதி:

  ஆந்திர மாநிலம், காக்கிநாடா, ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த துவரம்புடி சந்திர சேகர ரெட்டி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக உள்ளார்.

  இவர் நேற்று தனது கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

  ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி சேர்வதற்காக பல கட்டங்களாக தெலுங்கு தேசம் கட்சியினரிடம் ரூ.1400 கோடியை பெற்றுள்ளார்.

  தெலுங்கு தேசம் கட்சியினரிடம் பெற்ற பணத்தை ரஷ்யா, துபாய், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் உள்ள வங்கிகளில் டெபாசிட் செய்துள்ளார்.

  இந்த விவரங்கள் அனைத்தும் மத்திய அரசிடம் உள்ளது. அதனால்தான் பவன் கல்யாண் தெலுங்கு தேசம் கட்சியுடன் பா.ஜ.க. கூட்டணி வைத்து தேர்தலில் சந்திக்க போவதாக மீண்டும் மீண்டும் கூறி வருகிறார்.

  2-வது முறையாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தேர்தலில் வெற்றி பெறும். அப்போது ஜெகன்மோகன் ரெட்டி முதல்-மந்திரியாக பதவி ஏற்பதும் தெலுங்கு தேசம் கட்சி காணாமல் போவதும் ஒரே சமயத்தில் நடக்கும்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  • முழுநேர அரசியலில் ஈடுபடும் என்னைப் போன்ற பிடிவாதமான ஒருவன், என் போக்கில் ஏராளனமான கருத்துக்களைக் கூறலாம்.
  • என்.டி.ராமராவ் காலத்திலிருந்தே தெலுங்கு தேசம் கட்சிக்கு சொந்த அடித்தளம் இருந்தது.

  திருப்பதி:

  ஜனசேனா கட்சியின் (ஜேஎஸ்பி) தலைவர், நடிகர் பவன் கல்யாண் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

  சந்திரபாபு நாயுடுவை பொய் வழக்குகளில் சிக்க வைப்பதை எதிர்க்கும் மக்கள் தங்கள் கவலைகளை வெளிப்படையாகக் கூறமாட்டார்கள்.

  திரைப்படத் துறை வெவ்வேறு குழுக்களைக் கொண்டுள்ளது, ஒவ்வொன்றும் அதன் சொந்த அரசியல் சார்புகளைக் கொண்டிருக்கின்றன, அவை எச்சரிக்கையாக உள்ளன.

  "முழுநேர அரசியலில் ஈடுபடும் என்னைப் போன்ற பிடிவாதமான ஒருவன், என் போக்கில் ஏராளனமான கருத்துக்களைக் கூறலாம். இருப்பினும், திரையுலகில் உள்ளவர்கள் எந்த ஒரு அரசியல் கட்சியையும் பகைத்துக் கொள்ளத் தயாராக இருக்க மாட்டார்கள், ஏனெனில் அவர்களுக்கு அன்றாடம் போராட வேண்டிய சொந்தப் பிரச்சனைகள் உள்ளன.

  மறைந்த ஆந்திர சூப்பர் ஸ்டார் கிருஷ்ணா மற்றும் பிரபல குணச்சித்திர நடிகர் எம். பிரபாகர் ரெட்டி ஆகியோர் காங்கிரசின் தீவிர ஆதரவாளர்களாக அறியப்பட்டவர்கள். என்.டி.ராமராவ் காலத்திலிருந்தே தெலுங்கு தேசம் கட்சிக்கு சொந்த அடித்தளம் இருந்தது.

  சந்திரபாபு நாயுடு செய்த நல்ல பணியை ஆதரித்ததற்காக, தாதா சாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிகாந்த் போன்ற ஒரு நட்சத்திரத்தை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி கேலி செய்திருக்க கூடாது. அது துரதிர்ஷ்டவசமானது.

  இவ்வாறு அவர் கூறினார்.

  • பா.ஜ.க.வுடன் சென்றால் ஓட்டு கிடைக்காது என பவன் பேசி உள்ளார்.
  • பா.ஜ.க.வுக்கு ஒரு குறிப்பிட்ட சிந்தனை உள்ளது. மாநிலத்தில் எங்களுக்கு பலம் உள்ளது.

  திருப்பதி:

  ஆந்திராவில் பிரபல நடிகரும் ஜனசேனா கட்சி தலைவருமான பவன் கல்யாண் வாராஹி யாத்திரை நடத்தி வருகிறார்.

  யாத்திரையின்போது ஆளும் கட்சிக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து பேசி வருகிறார்.

  கடந்த சில நாட்களுக்கு முன்பு பவன் கல்யாண் பேசும்போது பிரதமர் மோடி ஜெகன்மோகனுக்கும் அவரது ஆட்சிக்கும் ஆதரவாக செயல்பட்டு வருகிறார்.

  இதனால்தான் ஜெகன்மோகன் யாரையும் மதிக்காமல் சர்வாதிகாரப் போக்கில் ஆட்சி நடத்தி வருகிறார். ஆந்திராவில் பா.ஜ.க. தனித்து நின்றால் சட்டமன்ற தேர்தலில் ஒரு தொகுதியை கூட கைப்பற்ற முடியாது என்றார்.

  பா.ஜ.க. கூட்டணியில் உள்ள பவன் கல்யாண் திடீரென இப்படி பேசியது அவர் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து விலக முடிவு செய்திருப்பதாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

  தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணியில் இருப்பதாக அவர் ஏற்கனவே கூறியுள்ளார். ஆனால் பா.ஜ.க. தனது கூட்டணியில் பவன் கல்யாண் இருப்பதாக கூறியது.

  பவன் கல்யாண் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஆந்திர மாநில பா.ஜ.க. தலைவர் புரந்தேஸ்வரி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

  கூட்டணி தொடர்பாக எந்த முடிவையும் மத்திய தலைமை எடுக்கும். கொள்கை முடிவுகளை இப்போதெல்லாம் எடுக்க முடியாது. பவன் கல்யாண் இன்னும் தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் இருக்கிறார். பா.ஜ.க.வுடன் சென்றால் ஓட்டு கிடைக்காது என பவன் பேசி உள்ளார். ஜனசேனாவில் இருந்து எத்தனை பேர் சட்டசபைக்கு சென்று உள்ளனர்.

  பா.ஜ.க.வுக்கு ஒரு குறிப்பிட்ட சிந்தனை உள்ளது. மாநிலத்தில் எங்களுக்கு பலம் உள்ளது.

  தெலுங்கு தேசம் கட்சியுடன் பவன் கல்யாண் கட்சி கூட்டணி உறுதி செய்யப்படலாம். எங்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பதை தலைமைதான் முடிவு செய்யும். பவன் கல்யாண் பேச்சுக்கள் குறித்து பா.ஜ.க. தலைமையிடம் புகார் செய்யப்படும் என்றார்.

  இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக பவன் கல்யாண் அறிவித்துள்ளார். மேலும் தெலுங்கு தேசம் கட்சியுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்து உள்ளார்.