என் மலர்
நீங்கள் தேடியது "srisailam"
- பிரதமர் மோடி ஸ்ரீசைலம் கோவிலில் பூஜை செய்து வழிபட்டார்.
- இந்தியர்களின் நல்வாழ்வு மற்றும் நல்ல ஆரோக்கியத்திற்காக பிரார்த்தனை செய்தேன்.
பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆந்திரா மாநிலத்திற்கு வருகை தருகிறார். அவரை முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மற்றும் துணை முதலமைச்சர் பவன் கல்யாண ஆகியோர் விமான நிலையத்தில் வரவேற்றனர்.
இதனையடுத்து, பிரதமர் மோடி ஸ்ரீசைலத்தில் உள்ள மல்லிகார்ஜுன சுவாமி கோவில் மற்றும் கோவில்களில் பூஜை செய்து வழிபட்டார். அவருடன் சந்திரபாபு நாயுடு மற்றும் பவன் கல்யாண் ஆகியோரும் சாமி தரிசனம் செய்தனர்.
இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஸ்ரீசைலத்தில் உள்ள ஸ்ரீ பிரம்மராம்பா மல்லிகார்ஜுன சுவாமி வர்ல தேவஸ்தானத்தில் பிரார்த்தனை செய்தேன். என் சக இந்தியர்களின் நல்வாழ்வு மற்றும் நல்ல ஆரோக்கியத்திற்காக பிரார்த்தனை செய்தேன். அனைவரும் மகிழ்ச்சியாகவும் வளமாகவும் இருக்கட்டும்" என்று தெரிவித்துள்ளார்.
சாமி தரிசனம் செய்தது தொடர்பாக சந்திரபாபு நாயுடு வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "ஸ்ரீசைலம், ஸ்ரீ பிரம்மராம்பா மல்லிகார்ஜுன சுவாமி வர்ல தேவஸ்தானத்தில் நமது மாண்புமிகு பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி அவர்களுடன் சேர்ந்து பிரார்த்தனை செய்ததில் பாக்கியம் பெற்றேன். இந்த புனித கோயில் தனித்துவமானது, ஏனெனில் இது ஒரு ஜோதிர்லிங்கமும் சக்தி பீடமும் ஒரே வளாகத்தில் ஒன்றாகக் காணப்படும் நாட்டின் ஒரே ஆலயமாகும், இது உண்மையிலேயே இந்தியாவில் தனித்துவமான ஒன்றாகும்" என்று தெரிவித்துள்ளார்.
- கிபி 7 - 9 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த தமிழ் நாயன்மார்கள் இக்கோயிலைப் பாடியுள்ளனர்.
- ஆதிசங்கரர் இங்கு வந்ததாகவும் இங்கேயே தனது சிவானந்த லகரி என்னும் சமஸ்கிருத நூலை எழுதியதாகவும் சொல்லப்படுகிறது.
மல்லிகார்ஜுனர் கோவில், இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கர்னூல் மாவட்டத்தில் அமைந்துள்ள நல்லமலைக் குன்றில் அமைந்துள்ளது. சிறீசைலம் என்றும் அழைக்கப்படும் இது ஹைதராபாத் நகரில் இருந்து 232 கிமீ தொலைவில் கிருஷ்ணா நதியின் கரையில் அமைந்துள்ளது. இது மல்லிகார்ஜுன சுவாமி, பிரமரம்பா ஆகிய கடவுளருக்காக அமைக்கப்பட்டது. இது இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகும்.
தோற்றம்
இக்கோயிலின் தோற்றம் பற்றி அதிகம் தெரியவரவில்லை. சிறீசைலம் மகாபாரதத்திலும், புராணங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. கந்த புராணத்தில் சிறீசைல காண்டம் என்னும் அத்தியாயம் ஒன்று உண்டு. இது இக்கோவில் மிகப் பழங்காலத்திலேயே தோன்றியதற்குச் சான்றாக அமைகின்றது.
அத்துடன் கிபி 7 - 9 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த தமிழ் நாயன்மார்கள் இக்கோயிலைப் பாடியுள்ளனர். ஆதிசங்கரர் இங்கு வந்ததாகவும் இங்கேயே தனது சிவானந்த லகரி என்னும் சமஸ்கிருத நூலை எழுதியதாகவும் சொல்லப்படுகிறது.






