என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கர்னூல்"

    • பூசாரியிடம் உதை வாங்குவதற்காக வரிசையாக பக்தர்கள் காத்திருந்தனர்.
    • 500 ஆண்டுகளாக தொடர்வதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்னஹோதுரு கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ சித்த ராமேஸ்வர சாமி கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவின் போது அருள் வந்து ஆடும் பூசாரி உதைத்தால் முக்தி அடையலாம் என்ற நம்பிக்கை உள்ளூர்வாசிகளிடையே உள்ளது. பல ஆண்டுகளுக்கு மேல் நடைபெறும் இந்த வினோத திருவிழா சமீபத்தில் நடந்தது.

    இதில் சாமிக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் முடிந்ததும் பூசாரி அருள் வந்து ஆடினார். பூஜை பொருட்கள் அடங்கிய பொருட்களை தலையில் சுமந்து கொண்டும், கையில் ஒரு பிரம்பை வைத்துக்கொண்டு ஆவேசமாக அங்கும் இங்குமாக ஓடி ஆடினார். பூசாரியிடம் உதை வாங்குவதற்காக கோவிலில் இருபுறமும் வரிசையாக பக்தர்கள் காத்திருந்தனர்.


    பக்தர்கள் வரிசையாக நிற்கும் பகுதிக்கு ஆவேசமாக வந்த பூசாரி ஓடி ஓடி பக்தர்களை காலால் எட்டி உதைத்தார்.மேலும் சில பக்தர்களுக்கு காலால் எட்டி உதைக்கும் போது அருள் வாக்கினையும் கூறினார். பூசாரியிடம் உதை வாங்காத பக்தர்கள் தன்னை பூசாரி உடனே மிதிக்க வேண்டும் என இரு கைகளையும் கூப்பி சாமியை வணங்கிய படி நின்றனர்.

    பூசாரியிடம் மிதி வாங்கிய பக்தர்கள் குங்குமம், மஞ்சள் நீர் போன்றவற்றை அர்ச்சனை செய்து வேண்டுதல்களை நிறைவேற்றினர். கோவில் பூசாரி பக்தர்களை காலால் எட்டி உதைக்கும் வினோத திருவிழா வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது.

    ஆச்சரியப்பட வைக்கும் இந்த வினோத திருவிழாவை பார்த்து வியந்து வருகின்றனர். கிட்டத்தட்ட 500 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த சடங்கு பாரம்பரியத்தை தொடர்வதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.

    • கிபி 7 - 9 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த தமிழ் நாயன்மார்கள் இக்கோயிலைப் பாடியுள்ளனர்.
    • ஆதிசங்கரர் இங்கு வந்ததாகவும் இங்கேயே தனது சிவானந்த லகரி என்னும் சமஸ்கிருத நூலை எழுதியதாகவும் சொல்லப்படுகிறது.

    மல்லிகார்ஜுனர் கோவில், இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கர்னூல் மாவட்டத்தில் அமைந்துள்ள நல்லமலைக் குன்றில் அமைந்துள்ளது. சிறீசைலம் என்றும் அழைக்கப்படும் இது ஹைதராபாத் நகரில் இருந்து 232 கிமீ தொலைவில் கிருஷ்ணா நதியின் கரையில் அமைந்துள்ளது. இது மல்லிகார்ஜுன சுவாமி, பிரமரம்பா ஆகிய கடவுளருக்காக அமைக்கப்பட்டது. இது இந்தியாவிலுள்ள 12 ஜோதிர்லிங்கத் தலங்களுள் ஒன்றாகும்.

    தோற்றம்

    இக்கோயிலின் தோற்றம் பற்றி அதிகம் தெரியவரவில்லை. சிறீசைலம் மகாபாரதத்திலும், புராணங்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. கந்த புராணத்தில் சிறீசைல காண்டம் என்னும் அத்தியாயம் ஒன்று உண்டு. இது இக்கோவில் மிகப் பழங்காலத்திலேயே தோன்றியதற்குச் சான்றாக அமைகின்றது.

    அத்துடன் கிபி 7 - 9 ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த தமிழ் நாயன்மார்கள் இக்கோயிலைப் பாடியுள்ளனர். ஆதிசங்கரர் இங்கு வந்ததாகவும் இங்கேயே தனது சிவானந்த லகரி என்னும் சமஸ்கிருத நூலை எழுதியதாகவும் சொல்லப்படுகிறது.

    ×