என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திருப்பரங்குன்றம்"

    • டெல்லியில் மத்திய மந்திரி அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
    • முருகனின் அறுபடை வீடுகள் இருக்கும் தொகுதிகளை பாஜக கேட்டுள்ளதாக கூறப்படுகிறது

    தமிழகத்தில் சட்டசபை தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, த.வெ.க., நாம் தமிழர் கட்சி ஆகிய 4 முனை போட்டிகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

    பா.ஜ.க.வுடன் தொகுதி உடன்பாட்டை இறுதி செய்வதற்காக எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு சென்றார். டெல்லியில் மத்திய மந்திரி அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

    இதையடுத்து கூட்டணியில் தொகுதி உடன்பாடு இறுதி செய்யப்பட்டு கையெழுத்தாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில், மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் திருப்பரங்குன்றத்தில் பாஜக போட்டியிடுமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஏற்கனவே திருப்பரங்குன்றத்தில் அதிமுக எம்.எல்.ஏ. தான் உள்ளார். ஆகவே இந்த மாதிரியான கோரிக்கைகளை நாங்கள் எழுப்பவில்லை என்றார்.

    இதையடுத்து முருகனின் அறுபடை வீடுகள் இருக்கும் தொகுதிகளை அதிமுகவிடம் பாஜக கேட்டுள்ளதாக கூறப்படும் தகவல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அத்தகைய எந்த தொகுதிகளையும் நாங்கள் அதிமுகவிடம் கேட்கவில்லை" என்று தெரிவித்தார்.

    • திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார்.
    • பிரதமர் மோடி எதனை முறை இங்கு வந்தாலும் பாஜகவிற்கு தமிழ்நாட்டில் இடமில்லை.

    மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார்.

    இதனுடைய செய்தியாளர்களை சந்தித்தா காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகையிடம் பிரதமர் மோடி திருப்பரங்குன்றம் முருகன் கோவிலுக்கு செல்வது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு பதில் அளித்த செல்வப்பெருந்தகை, "மத கலவரங்களை ஏற்படுத்துவது, அணைத்து மக்களும் அமைதியாக வாழ்வதை அனுமதிக்க முடியாது என்று கங்கணம் கட்டி கொண்டிடுக்கும் ஆர்.எஸ்.எஸ். - பாஜகவின் முகமாக பிரதமர் மோடி உள்ளார்.

    பிரதமர் மோடி எதனை முறை இங்கு வந்தாலும் பாஜகவிற்கு தமிழ்நாட்டில் இடமில்லை. திருப்பரங்குன்றம் என்றில்லை ஆறுபடை கோயிலுக்கு சென்றாலும் கூட பிரதமர் மோடியை முருகன் மன்னிக்க மாட்டார்" என்று தெரிவித்தார்.

    • பிரதமர் மோடியுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியும் திருப்பரங்குன்றம் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.
    • பிரதமர் வருகையை ஒட்டி திருப்பரங்குன்றம் முழுவதும் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. ஆளும் கட்சியான தி.மு.க. மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைக்க தேர்தல் களப்பணிகளை தீவிரப்படுத்தி உள்ளது.

    அதேபோல் முக்கிய எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வும் ஆட்சியை கைப்பற்ற கூட்டணி, தொகுதி பங்கீடு, தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பு போன்றவற்றில் தீவிரம் காட்டி வருகின்றன.

    அதுமட்டுமின்றி புதிய வரவான நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகமும், சீமானின் நாம் தமிழர் கட்சியும் தேர்தல் பணிகளை முன்னெடுத்து உள்ளது. இதனால் தமிழக அரசியல் களம் விறுவிறுப்பு அடைந்துள்ளது.

    தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அ.தி.மு.க. தலைமையில் பா.ஜ.க., அ.ம.மு.க., பா.ம.க. (அன்புமணி), தமிழ் மாநில காங்கிரஸ், ஐக்கிய ஜனநாயக கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன.

    தமிழகத்தில் இந்த கூட்டணி சார்பில் மதுராந்தகத்தில் ஜனவரி மாதம் நடைபெற்ற முதல் தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

    அதனைத் தொடர்ந்து தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் 2-வது கட்டமாக தமிழகத்தில் பிரதமர் மோடி தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். அதன்படி, புதுச்சேரியை தொடர்ந்து, மதுரைக்கு வருகை தந்தார். பல்வேறு அரசு திட்டங்களையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்து, பாஜக தொண்டர்கள் மத்தியில் உரையாற்றினார்.

    இதைத்தொடர்ந்து, கார் மூலம் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலுக்கு சென்ற பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார்.

    திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பிரதமர் மோடிக்கு பூரண கும்பம் மரியாதை அளிக்கப்பட்டது. பிரதமர் மோடியுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியும் திருப்பரங்குன்றம் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

    பிரதமர் வருகையை ஒட்டி திருப்பரங்குன்றம் முழுவதும் போக்குவரத்து தடை செய்யப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    திருப்பரங்குன்றம் கோவில், மலைப்பகுதியில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றும் விவகாரம் நாடு முழுவதும் பேசுபொருளான நிலையில் பிரதமர் மோடி வருகை தந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தமிழகத்தில் சிலர் தங்களைப் பகுத்தறிவாளர்கள் என்று கூறிக்கொள்கிறார்கள்.
    • குருவின் அருள் மூலமே தைரியமும் ஆதரவும் கிடைக்கும்.

    திருப்பரங்குன்றம் மலையில் தர்காவிற்கு அருகில் உள்ள தூணில் விளக்கேற்ற வேண்டும் என்ற இந்துத்துவா அமைப்பை சேர்ந்தவரின் மனுவை ஏற்று விளக்கேற்ற உத்தரவிட்டவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்.

    இந்த உத்தரவும், அதை தமிழக அரசு செயல்படுத்தாததும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்நிலையில் ஆன்மீக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நீதிபதி சுவாமிநாதன், "தமிழகத்தில் சிலர் தங்களைப் பகுத்தறிவாளர்கள் என்று கூறிக்கொள்கிறார்கள்.

    குருவை கடவுளின் உருவமாகப் பார்ப்பதால் எங்களை அவர்கள்  அயோக்கியர்கள், முட்டாள்கள் , காட்டுமிராண்டிகள் என்று  அழைக்கிறார்கள்.

    அவ்வாறு கூறுபவர்கள்தான் உண்மையான அயோக்கியர்கள், முட்டாள்கள் மற்றும் காட்டுமிராண்டிகள்.

    குருவின் அருள் மூலமே தைரியமும் ஆதரவும் கிடைக்கும், குருமார்களின் அருகே செல்லும்போது அவர்களின் Aura பக்தர்களின் பலவீனங்களை நீக்க உதவும்

    எனது பணிக்காலத்தில் இன்னும் நான்கு ஆண்டுகள் உள்ளன. இன்னும் துணிச்சலுடன் செயல்பட வேண்டும் என்று நினைக்கிறேன்." என்று பேசியுள்ளார். 

    • போராட்டத்தின் அடுத்தக்கட்டமாக மார்ச் 2ம் தேதி கிரிவலம் செல்ல பாஜக முடிவு செய்துள்ளது.
    • முருகப் பெருமானுக்கு 7 தீபங்கள் ஏற்றுமாறு பாஜக மாநில தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபமேற்றும் போராட்டத்தின் அடுத்தக்கட்டமாக மார்ச் 2ம் தேதி கிரிவலம் செல்ல பாஜக முடிவு செய்துள்ளது. சதுர்த்தியும், கிருத்திகையும் இணைந்து வரும் இன்று முருகப் பெருமானுக்கு 7 தீபங்கள் ஏற்றுமாறு பாஜக மாநில தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    அனைவருக்கும் வணக்கம்! திருப்பரங்குன்ற தீபத்தூணில் கார்த்திகை தீபமேற்ற வேண்டுமென நாம் தொடர்ந்து போராடி வருகிறோம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

    இப்போராட்டத்தின் அடுத்தகட்டமாக, சதுர்த்தியும் கிருத்திகையும் இணைந்து வரும் சிறப்பான நன்னாளான இன்று அதாவது பிப்ரவரி 23-ஆம் தேதியன்று, அருள்மிகு முருகப்பெருமானுக்காக ஆறு தீபங்கள் மற்றும் நாம் சார்ந்த பகுதியின் நன்மைக்காக ஒரு தீபம் என நம் வீடுகளில் மொத்தம் ஏழு விளக்குகளில் தீபமேற்றி, கந்தசஷ்டி கவசத்தை நாம் பாராயணம் செய்ய வேண்டுமென உங்கள் அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன்.

    அதே போல வருகின்ற மார்ச் 2-ஆம் தேதி பௌர்ணமியன்று, மாலை வேளையில் திருப்பரங்குன்ற மலையில் கிரிவலம் வருவதற்கும் மக்கள் முன்வர வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுக்கிறேன்!

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா!

    வீர தண்டாயுதபாணிக்கு அரோகரா!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தர்காவில் பக்ரீத், ரலமான் பண்டிகைகள் மட்டுமே தொழுகை நடத்த உயர்நீதிமன்ற அனுமதி உள்ளது.
    • அங்கு விலங்குகளை பலியிட கூடாது என்ற உயர்நீதிமன்ற உத்தரவையும் உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தி உள்ளது.

    திருப்பரங்குன்றம் முருகன் கோயில் அருகே நெல்லித்தோப்பு பகுதியில் உள்ள தர்காவில் பக்ரீத், ரலமான் பண்டிகைகள் மட்டுமே தொழுகை நடத்த உயர்நீதிமன்ற அனுமதி உள்ளது.

    அனைத்து நாள்களிலும் தொழுகை நடத்த அனுமதி கோரி இமாம் உசேன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

    மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் பிரஷாந்த் பூஷண், ''நெல்லித்தோப்பு பகுதி இஸ்லாமியர்களுக்குச் சொந்தமானதாக இருக்கும்போது, அங்கு தொழுகை நடத்த அனுமதி மறுப்பது ஏற்புடையதல்ல. தொழுகை நடத்துவதால் அங்கு சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டதில்லை'' என வாதிட்டார்.

    ஆனால்,உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சமநிலையாக உள்ளதாகவும், இதில் தலையிட விரும்பவில்லை எனக் குறிப்பிட்டு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு மனுவை தள்ளுபடி செய்தது.

    மேலும், அங்கு விலங்குகளை பலியிட கூடாது என்ற உயர்நீதிமன்ற உத்தரவையும் உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தி உள்ளது. 

    • மனதில் சனாதன தர்மம் வேண்டும் என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பேசியுள்ளார்
    • சனாதனம் என்பது பாகுபாடு, ஏற்றத்தாழ்வை அடிப்படையாகக் கொண்டது.

    திருப்பரங்குன்றம் வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் தீர்ப்பு தமிழ்நாடு அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. திருப்பரங்குன்றம் மலையில் வழக்கத்திற்கு மாறாக கார்த்திகை தீபம் ஏற்றக்கூறிய ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவை பின்பற்றமாட்டோம் என்று தமிழ்நாடு அரசு உறுதியாக இருந்தது.

    இந்நிலையில், மனதில் சனாதன தர்மம் வேண்டும் என்று நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய ஜி.ஆர்.சுவாமிநாதன், "பொது கடமைகளை செய்யும் போது சனாதன தர்மத்தை மனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்; பொது வாழ்வில் ஒருவரது பங்கையோ குணத்தையோ வெறும் தொழில் ரீதியான அறிவு மட்டும் வரையறுக்காது. நான்கரை ஆண்டுகள் இருக்கும் நிலையில் முழுமையாக பணியாற்றுவேன் என்று நம்புகிறேன். சனாதன தர்மத்தை மனதில் வைத்து சிறப்பாக பணியாற்றுவேன்" என்று தெரிவித்தார்.

    சனாதனம் குறித்த ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "சனாதனம் என்பது பாகுபாடு, ஏற்றத்தாழ்வை அடிப்படையாகக் கொண்டது. சாதிக்கொரு நீதி சொல்வது. இந்திய அரசியல் சாசனம் இதற்கு நேர் எதிரான விழுமியங்களைக் கொண்டது. சனாதனத்தை அடிப்படையாகக் கொண்டு தீர்ப்பளிப்பேன் என்று நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்கள் கூறியிருப்பதால், அவர் நீதிபதியாக நீடிக்கும் தகுதியை இழந்துவிட்டார். எனவே, அவரைப் பதவியிலிருந்து நீக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

    • பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
    • தொடர்ந்து சுவாமி 16 கால் மண்டபம் அருகே உள்ள சிறிய தேரில் எழுந்தருளினார்.

    முருகப் பெருமானின் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தெப்பத்திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவினை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி-தெய்வானையுடன் காலையில் தங்க சப்பரத்திலும், மாலையில் தங்கமயில், பச்சைக் குதிரை, அன்ன வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    விழாவின் 9-ம் நாள் நிகழ்ச்சியாக தை கார்த்திகையை முன்னிட்டு தெப்பத்திருவிழா தேரோட்டம் இன்று நடைபெற்றது. உற்சவர் சன்னதியில் சுப்பிரமணிய சுவாமி-தெய்வானைக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் சுவாமி-அம்பாள் ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள தெப்பத்தில் எழுந்தருளினர். அங்கு சுவாமி முன்னிலையில் தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    தொடர்ந்து சுவாமி 16 கால் மண்டபம் அருகே உள்ள சிறிய தேரில் எழுந்தருளினார். அங்கு பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க ரத வீதிகள் வழியாக சுவாமி சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவின் சிகர நிகழ்ச்சியாக நாளை ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள தெப்பத்தில் சுப்பிரமணிய சுவாமி-தெய்வானையுடன் எழுந்தருள தெப்பத்திருவிழா நடைபெற உள்ளது.

    • சோம்நாத் பற்றி நாம் பேசும்போதும், சுவாபிமான் பர்வாவைக் கொண்டாடும் போதும் எதிர்க்கட்சிகளுக்குப் பிரச்சனை ஏற்படுகிறது.
    • இந்திய அரசியலில் இது போன்ற சக்திகளுக்கு இடமில்லை என்பதை உறுதிப்படுத்த நாம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்

    பாஜக தேசியத் தலைவராக நிதின் நபின் இன்று பதவியேற்றுக் கொண்டார். 45 வயதான நிதின் நபின் தற்போது பாஜகவின் 12வது தேசியத் தலைவராகியுள்ளார். பாஜக தலைமையகத்தில் முறையான செயல்முறைகள் முடிந்த பிறகு பிரதமர் மோடி முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டார். இதனைத்தொடர்ந்து இந்த நிகழ்வில் பேசிய நிதின் நபின், மேற்கு வங்கம் உட்பட ஐந்து மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல்களில் பாஜகவின் வெற்றியை உறுதிசெய்ய கட்சித் தலைவர்களும் தொண்டர்களும் முழு முயற்சி எடுக்க வேண்டும் எனக்கூறினார். 

    மேலும் திருப்பரங்குன்ற விவகாரம் தொடர்பாக பேசிய அவர், 

    சமீபத்தில், எதிர்க்கட்சிகளால் கார்த்திகை தீபம் ஏற்றுவதைத் தடுக்கவும், நீதிபதியை பதவி நீக்கம் செய்யவும் எப்படி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன என்பதை நாம் பார்த்தோம். சோம்நாத் பற்றி நாம் பேசும்போதும், சுவாபிமான் பர்வாவைக் கொண்டாடும் போதும் எதிர்க்கட்சிகளுக்குப் பிரச்சனை ஏற்படுகிறது.

    நமது பாரம்பரியங்களைத் தடுக்கவும், ராமர் சேதுவின் இருப்பை மறுக்கவும், கார்த்திகை தீபத்தை எதிர்க்கவும் முயலும் இத்தகைய சக்திகளைத் தோற்கடிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இந்திய அரசியலில் இது போன்ற சக்திகளுக்கு இடமில்லை என்பதை உறுதிப்படுத்த நாம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்," என்று அவர் கூறினார். 

    • திருப்பரங்குன்றத்தில் புதிதாக வேறு இடத்தில் தீபம் ஏற்ற முனைவோரின் நோக்கமென்ன?
    • திருப்பரங்குன்ற விவகாரத்தில் உச்சநீதிமன்றத்திற்குச் செல்வது அவசரத் தேவையாகும்!

    திருப்பரங்குன்றத்தில் வழக்கமாக தீபம் ஏற்றப்படும் இடத்திலேயே தீபம் ஏற்றிய பிறகு, புதிதாக வேறொரு இடத்தில் தீபம் ஏற்ற முயற்சிப்பவர்களின் நோக்கம் என்ன? இதில் ஆர்.எஸ்.எஸ். மூக்கை நுழைப்பது ஏன்? இதற்கு நீதிபதிகள் துணைப் போகலாமா? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின்மீது தரந்தாழ்ந்து போகலாமா என்பது போன்ற வாசகங்களைப் பயன்படுத்தலாமா? மேல்முறையீட்டில் உச்ச நீதிமன்றத்திற்குச் செல்வது அவசரத் தேவையாகும் என்று திராவிடர் கழகத் தலைவர் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

    அந்த அறிக்கையில், "திருப்பரங்குன்றத்தில் 'தீபத்தூண்' என்ற பெயரை அண்மையில் உருவாக்கிக் கொண்ட, ஹிந்துத்துவ – காவிக் கட்சியினர் திருப்பரங்குன்றம் மலைமீது வழமையான இடத்தில் முறைப்படி விளக்கு ஏற்றிய நிகழ்வு நடத்தப்பட்டது – அக்கோயில் நடைமுறைப்படி.

    இதை ஏற்காமல், தாங்கள் குறிப்பிடும் தர்காவிற்கு அருகில் தீபம் ஏற்றுவது என்று கடந்த பல ஆண்டுகளாக மதக் கலவரத்தை ஏற்படுத்த – ஹிந்து முன்னணியினரும் அவர்களது ''சுற்றுக்கிரகங்களும்'' தமிழ்நாட்டில் மதக் கலவரங்களைத் தொடங்க திட்டமிடுகின்றனர்.

    இவர்கள் உண்மையான முருக பக்தர்களோ, கடவுள் பக்தர்களோ அல்ல; தங்களது ஹிந்துத்துவ வெறியைப் பரப்புவதன் மூலம் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வை எப்படியாவது தமிழ்நாட்டில் வளர்த்துவிட வேண்டும் என்ற நோக்கத்துடனும், தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆட்சி, கொள்கை உறுதியும், மக்களின் பேராதரவும் பெற்ற ஓர் ஆட்சியாக, அசைக்க முடியாத பாறைபோல் இருப்பதால், வாக்காளர்களிடம் மத உணர்வைத் தூண்டி, 'பக்தி' முகமூடியுடன் அந்தத் திருப்ப ரங்குன்றத்தை வைத்து ''அரசியல்'' செய்ய கிளம்பியுள்ளது.

    எதிர்மனுதாரர்களுக்குப் போதிய அவகாசம் தராத நீதிபதிகள்!

    சென்னை உயர்நீதிமன்றத்தில் உள்ள ஜஸ்டிஸ் ஜி.ஆர்.சுவாமிநாதன் என்ற, தன்னை ஆர்.எஸ்.எஸ்.காரர் என்று பகிரங்கப்படுத்திய ஒருவர், இந்த தீப நிகழ்ச்சியில், அரசியலமைப்புச் சட்ட விதிகளைப் புறக்கணித்து, அவசர அவசரமாக – மற்றவர்களுக்குப் போதிய அவகாசம்கூடத் தராமல், குறிப்பிட்ட இடத்தில் மனுதாரருடன், சிலர் சென்று தீபம் ஏற்றுவதற்கு, மத்திய காவல்துறை துணை யுடன் அதை நிறைவேற்றவேண்டும் என்று கொடுத்த அரசியலமைப்புச் சட்ட விரோத அவசரத் தீர்ப்பின்மீது தமிழ்நாடு அரசும், அறநிலையத் துறையும் மேல்முறையீடு (அப்பீல்) செய்து, அவ்வழக்கு இரு நீதிபதிகள் கொண்ட அமர்வின்முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

    (அந்த இரு நீதிபதிகள் அமர்வு டாக்டர் ஜஸ்டிஸ் ஜி.ஜெயச்சந்திரன், ஜஸ்டிஸ் கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் ஆவர்).

    அந்த மேல்முறையீட்டில், தமிழ்நாடு அரசு, அறநிலையத் துறை, தர்கா தரப்பு, வக்ஃப் போர்டு, தொல்பொருள் துறை, மதுரை மாநகர காவல்துறை ஆணையர் தரப்பு, மதுரை மாவட்ட ஆட்சியர் (இவர்களை நீதிமன்றமே இணைத்திருக்கிறது) ஆகியோர் தரப்பில் எடுத்து வைத்த ஆழமான வாதங்களை அப்படியே புறந்தள்ளி, மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்ததோடு அல்ல,

    தனி நீதிபதியின் ஆணையில் கண்ட பல அம்சங்கள்பற்றி மேலே குறிப்பிட்ட பல அமைப்புகளின் வாதங்களுக்கு உரிய முறையில் தாங்கள் ஏற்கவில்லை என்பதற்கான விரிவான விளக்கம் ஏதும் தராமல், மேல் முறையீட்டை ஏற்காமல், தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

    தேவையற்ற கருத்துகளை அரசுமீதும், துறைகள்மீதும் நீதிபதிகள் சுமத்தலாமா?

    மேல்முறையீட்டில், நீதிபதிகள் கருத்துப்படி, தீர்ப்பு வழங்க முழு உரிமை உடையவர்கள் என்பது மறுக்க முடியாதது என்றாலும், இந்த மேல்முறையீட்டுத் தீர்ப்பில்,

    1. அப்பீல்தாரர்களின் வாதங்களுக்கு விளக்கம் தராதது மட்டுமல்ல; அதில் தரப்பட்ட தீர்ப்பு தமிழ்நாடு அரசுமீது, காவல்துறை முதலிய பல துறைகளின் – பொறுப்புணர்வு பற்றிய தேவையற்ற கருத்துகளை எடுத்து எழுதியிருக்கிறார்கள். தனி நீதிபதி தீர்ப்பைவிட, மிகவும் மோசமான – அரசியலமைப்புச் சட்ட மதச் சுதந்திர கூறுகள் 25, 26–க்கேகூட முற்றிலும் எதிரானதாகவே உள்ளது என்பதை அவர்களது வாசகங்களில் இருந்து, நடுநிலையாளர் எவரும் புரிந்துகொள்ள முடியும்.

    எடுத்துக்காட்டாக,

    It is "ridiculous and hard to believe" the fear of the mighty State that by allowing representatives of the Devasthanam to light the lamp at the stone pillar near top of the hill located within its territory of devasthanam land, on a particular day in a year, will cause disturbance to public peace. Of course, it may happen only if such disturbance is sponsored by the State itself. "We pray no State should stoop to that level to achieve their political agenda,"

    இதன் தமிழாக்கம்:

    தேவஸ்தானத்திற்குச் சொந்தமான நிலப்பரப்பிற்குள் அமைந்துள்ள மலையின் உச்சியில் உள்ள கல் தூணில், ஆண்டின் ஒரு குறிப்பிட்ட நாளில், தேவஸ்தானத்தின் பிரதி நிதிகளை விளக்கேற்ற அனு மதிப்பதால் பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படும் என்று சக்திவாய்ந்த அரசு அஞ்சுவது, 'கேலிக்குரியதும் நம்ப முடியாததும்' ஆகும். நிச்சயமாக, அத்தகைய குழப்பம் அரசாலேயே தூண்டிவிடப்பட்டால் மட்டுமே அது நிகழக்கூடும். ''தங்கள் அரசியல் நோக்கங்களை அடைவதற்காக எந்த அரசும் அந்த அளவிற்குத் தாழ்ந்துவிடக் கூடாது என்று நாங்கள் பிரார்த்திக்கிறோம்.''

    கலவரத்தைத் தூண்டுவது அரசு என்று நீதிபதிகள் கூறலாமா?

    பொது அமைதிக்குப் பங்கம் ஏற்படும் என்ற நிலைபற்றி பொறுப்புள்ள ஓர் அரசு, அதன் அமைப்புகள் கவலைப்படுவதை கேலி செய்வதோடு, மிகவும் கீழிறக்கமான ஒரு கருத்தாக – அரசாங்கம்தான் அத்தகைய கலவரத்தையே தூண்டிவிடக் கூடும் என்று குற்றம் சுமத்தி எழுதலாமா? அதோடு அரசுக்கு ஏதோ ஓர் அரசியல் திட்டம் (Political Agenda) இருக்கிறது என்று எதை வைத்துக் கூறுகின்றனர்? இதுதான் மேல்முறையீடு தீர்ப்பின் லட்சணமா? இது முறையானதா? பொறுப்பான குற்றச்சாற்றா?

    அதுமட்டுமா?

    மற்றொரு பாராவில்,

    "We find that the apprehension expressed by the District Administration regarding probability of disturbance to the public peace is nothing but an imaginary ghost created by them for their convenience sake and to put one community against other community under suspicion and constant mistrust," the bench said.

    இதன் தமிழாக்கம்:

    ''பொது அமைதிக்குக் குந்தகம் ஏற்படக்கூடும் என்பது குறித்து மாவட்ட நிர்வாகத்தால் வெளிப்ப டுத்தப்பட்ட அச்சம், அவர்களின் வசதிக்காக அவர்களால் உரு வாக்கப்பட்ட ஒரு கற்பனையான 'பூதமே' தவிர வேறில்லை என்றும், ஒரு சமூகத்தை மற்றொரு சமூகத்திற்கு எதிராகச் சந்தேகத்திலும், தொடர்ச்சியான அவநம்பிக்கையின் கீழும் நிறுத்துவதே இதன் நோக்கம் என்றும்'' நீதிபதிகள் அமர்வு கூறியது.

    அரசியலமைப்புச் சட்டத்தின்மீது எடுத்த உறுதிமொழியை அடித்து நொறுக்கலாமா நீதிபதிகள்?

    ''தனி நீதிபதியின் ஏற்க முடியாத தீர்ப்பினை, அகலப்படுத்துவதுபோல, ''தீபத்தூண் கோயில் நிர்வாகத்துக்குச் சொந்தமானது. கார்த்திகைத் தீபத்தை மலை உச்சியில் இருக்கும் தீபத்தூணில் கோயில் நிர்வாகம் ஏற்றவேண்டும். அதனை மாவட்ட ஆட்சியர் மேற்பார்வையிடவேண்டும்.

    தீபம் ஏற்றும் நிகழ்வின்போது கோயில் நிர்வாகத்துடன் செல்ல, மக்களுக்கு அனுமதி இல்லை.''

    இப்படிக் கூறுவது நீதிபதிகள் எடுத்த பதவிப் பிரமாணப்படி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்பாற்றும் உறுதிமொழிக்கு நேர் முரண் அல்லவா! பீடிகை (Preamble) அடிக்கட்டுமானம் கூறிய Secular என்பதை இது அடித்து நொறுக்குவதாகாதா?

    கூறு (Article) 25, 26, Subject to Public Order, Morality, Health என்ற பிரிவுகளைத் தூக்கி தூர எறிந்திருப்பது, தமது கடமை உணர்வு தவறியதாகாதா?

    முந்தைய பக்கங்களில் பக்தர்கள் வழிபாட்டு உரிமைபற்றி விளக்கம் கூறுவதை ஏற்ற இந்த அமர்வு, அதற்கு நேர்முரணாக சிலர் மட்டுமே தீபம் ஏற்ற மேலே செல்லவேண்டும் – மாவட்ட ஆட்சியர், மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் துணையோடு என்றால், மற்ற பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்றால், கொதிப்பு, கொந்தளிப்பு, கலவரம் ஏற்படாதா?

    இது சட்டம் – ஒழுங்குப் பிரச்சினையை உருவாக்காதா? அந்த அமர்வு நீதிபதிகள்தான் இந்த முரண்பாட்டுக்குப் பதில் அளிக்க வேண்டும்!

    அதுமட்டுமல்ல!

    திருமூலர் பாட்டு ஆகமம் ஆகுமா?

    ஆகமப்படி, உச்சிப்பிள்ளையார் கோயிலில் முறைப்படி 'தீபம்' ஏற்றியாகிவிட்டது. மறு முறை செய்ய ஆகமத்தைச் சுட்டிக் காட்டிய அறநிலையத் துறை வாதத்தினை மறுத்து, திருமூலரைத் தேடி, தீர்ப்புச் சொல்கிறார்கள்.

    ''திருமூலர் பாட்டு ஆகமமாகுமா?'' அர்ச்சகக் கூட்டத்தினர்கூட ஏற்க மாட்டார்களே!

    திருமூலர், சித்தர்பாட்டு – அதுமட்டுமல்ல,

    ''நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே

    சுற்றிவந்து முணமுணென்று சொல்லு மந்திரம் ஏதடா

    நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள் ளிருக்கையில்

    சுட்டசட்டி சட்டுவம் கறிச்சுவை அறியுமோ''

    என்று சித்தர் சிவவாக்கியர் எழுதியுள்ளதை ஏற்பார்களா என்று கேள்வி கேட்டால், கனம் நீதிபதிகளின் நிலை என்ன?

    கலவரம் செய்ய காத்திருக்கும் ''தெரு மூலர்கள்'' தீபம் ஏற்ற தூபம் போடுவோர் யோசிக்காதது ஏன்?

    கிராமத்தில் நம் மக்கள் ஒரு பழமொழி கூறுவார்கள்.

    ''அசல் அநியாயம்; அப்பீலில் அதுவே காயம்'' (காயம் என்றால், நிரந்தரம் என்று பொருள்).

    மதக்கலவரம் ஏற்படாமல் பார்த்துக் கொள்வது அரசின் கடமையாகும்!

    அரசியலமைப்புச் சட்டத்தைப் புறக்கணித்து, இப்படி தீர்ப்பு எழுதுவது, அறத்தை மீறியது மட்டுமல்ல; மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழ்நாட்டை மதக் கலவர பூமியாக்காமல் காக்கும் மாநில அரசுமீது வெறுப்பை, வன்மத்தை உமிழ்வது எந்த வகையிலும் நீதியாகாது, நியாயமாகாது!

    மக்களின் பொதுப் பாதுகாப்புக்குக் குந்தகம் ஏற்படுத்துவது மிக கீழிறக்கமான கண்ட னத்திற்குரிய தீர்ப்பு இது!

    உச்சநீதிமன்றத்திற்குச் சென்றால், இது மாறிவிடக் கூடும் என்பது வேறு விஷயம்!

    ஆனால், எல்லாவற்றிற்கும் மேலானது மக்கள் மன்றம் என்பதை மறந்துவிடக் கூடாது!

    Political Agenda எங்கே, யாரிடம் உள்ளது?

    'Political Agenda' என்றெல்லாம் (தி.மு.க.) மாநில அரசு மீது அவசர குற்றப்பத்திரிகை எழுதும் நீதிபதிகளே,

    ''திருப்பரங்குன்றத்தை அயோத்தி ஆக்குவோம்'' என்று, திருப்பரங்குன்ற தீபத்தை சாக்காக வைத்து, அமைதிப்பூங்காவான தமிழ்நாட்டை அமளிக்காடாக ஆக்கக் குர லெழுப்பும் கலவரக் கும்பலுக்கு, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத், தமிழ்நாடு ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி உள்ளதோடு, திருச்சியில் பேசியபோது,

    ''திருப்பரங்குன்றம் பிரச்சினையில் ஹிந்து அமைப்புகள், ஆர்.எஸ்.எஸ். உதவியை நாடினால், பரிசீலிப்போம்'' என்று கூறியுள்ளது ஏடுகளில், ஊடகங்களில் வந்தன என்பதை அறியமாட்டீர்களா?

    Political Agenda எங்கே, யாரிடம் உள்ளது? என்பது இதன்மூலமாவது உங்களுக்குப் புரியாதா? எனவே, இந்தத் தீர்ப்பு நியாயவாதிகள் ஏற்கத்தகுந்த தீர்ப்பல்ல; சாய்ந்த தராசுத் தீர்ப்பேயாகும்! மக்கள் மன்றத்தின் கண்டனத்திற்குரிய ஒரு சார்புத் தீர்ப்பேயாகும்! உச்சநீதிமன்றத்திற்குச் செல்வது அவசரத் தேவையாகும்!" என்று தெரிவித்துள்ளார்.

    • ஒரு தீர்ப்பு இரண்டு அம்சங்களின் அடிப்படையில் அமைய வேண்டும்
    • நிர்வாகத் திறமையின்மையுடன் நீதித்துறையின் சோம்பல்-ஆணவம் மற்றும் கள யதார்த்தங்களைப் பற்றிய போதிய புரிதல் இல்லாமை ஆகியவை இணைகின்றன.

    திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தர்காவுக்கு அருகில் உள்ள தூணில் தீபம் ஏற்றலாம் என, தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை ஜனவரி 6 அன்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் இரு நீதிபதிகள் அமர்வு உறுதி செய்துள்ளது. இந்த உத்தரவுக்கு இந்து அமைப்பினர் வரவேற்பு அளித்தநிலையில், தமிழ்நாடு அரசு மீண்டும் மேல்முறையீடு செய்யும் என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். 

    இந்நிலையில் இந்த தீர்ப்பு தொடர்பாக திமுக துணைப் பொதுச்செயலாளரும், எம்.பியுமான ஆ.ராசா தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், 

    நீதி நிலைநாட்டப்பட வேண்டுமானால், ஒரு தீர்ப்பு இரண்டு அம்சங்களின் அடிப்படையில் அமைய வேண்டும்; உண்மைகளை மதிப்பிடுதல் மற்றும் சட்டத்தை விளக்குதல்.

    இதில் ஒன்று தவறினால், அது அபத்தமாகிவிடும்!

    இரண்டுமே தவறினால், அது சங்கடமாகிவிடும்!

    நீதிபதி வி.ஆர். கிருஷ்ண ஐயர் கூறுவார், "நிர்வாகத் திறமையின்மையுடன் நீதித்துறையின் சோம்பல்-ஆணவம் மற்றும் கள யதார்த்தங்களைப் பற்றிய போதிய புரிதல் இல்லாமை ஆகியவை இணைகின்றன. அதன் விளைவு எப்படி இருக்கும்?"  முருகனுக்கு அரோகரா" எனக் குறிப்பிட்டுள்ளார். 

    • திருப்பரங்குன்றம் கல் தூணில் தீபம் ஏற்றியதற்கான ஆதாரம் இருக்கிறதா என்று நாங்கள் கேட்கிறோம்.
    • தூணில் தீபம் ஏற்றியதற்கான ஆதாரத்தை சமர்பிக்க வேண்டியது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவரின் பொறுப்பு.

    திருப்பரங்குன்றம் வழக்கில் நேற்று உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் ரகுபதி, சுடுகாட்டை தவிர வேறு எங்கும் உடலை எரிக்க முடியாது. அதைப்போலத்தான் மற்ற பழக்க வழக்கங்களையும் மாற்றமுடியாது என்று கூறியிருந்தார். இவரின் இந்த கருத்து சர்ச்சையானது. இதனை தொடர்ந்து இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் ரகுபதி கூறியதாவது:-

    * திருப்பரங்குன்றம் விவகாரத்தில் பேய் கதையை அரசு அவிழ்த்துவிடுவதாக நீதிமன்றம் கூறுகிறது.

    * பேய் கதை என நீதிபதிகள் கூறியதால் சுடுகாடு என்ற உதாரணத்தை நான் கூறினேன்.

    * பேய் இருக்கிறது என்று கதை சொல்லி இருக்கிறார்கள். அதற்கு நான் சுடுகாடு என்று கூறினேன். அதில் தப்பில்லை.

    * அரசு பேய் கதைகள் சொல்கிறது என நீதிபதிகள் சொல்லும்போது நான் கூறியதில் தவறில்லை.

    * நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் எந்த ஒரு கருத்தையும் நான் கூறவில்லை. சட்டத்திற்கு உட்பட்டுதான் பேசினேன்.

    * முந்தைய தீர்ப்புகளின் அடிப்படையில் அதனை சுட்டிக்காட்டும் உரிமை வழக்கறிஞராகிய எனக்கும் உண்டு.

    * திருப்பரங்குன்றம் கல் தூணில் தீபம் ஏற்றியதற்கான ஆதாரம் இருக்கிறதா என்று நாங்கள் கேட்கிறோம்.

    * தூணில் தீபம் ஏற்றியதற்கான ஆதாரத்தை சமர்பிக்க வேண்டியது நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவரின் பொறுப்பு என்றார். 

    ×