என் மலர்
நீங்கள் தேடியது "prayer"
- விமான நிலையத்தில் தொழுகை நடத்த முன் அனுமதி பெற்றிருந்தார்களா?
- ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்தும் போது அரசு ஆட்சேபனை தெரிவிப்பது ஏன்?
பெங்களூருவில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தின் 2-வது முனையத்தில் ஏராளமான முஸ்லிம்கள் தொழுகை செய்தனர். இதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
இது தொடர்பாக பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் விஜய்பிரசாத் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "உயர் பாதுகாப்பு மண்டலத்தில் இதுபோன்ற செயல் எவ்வாறு அனுமதிக்கப்பட்டது. இது தொடர்பாக முதலமைச்சர் சித்தராமையா மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சர் பிரியங்க் கார்கே ஆகியோர் விளக்கம் அளிக்க வேண்டும்.
மேலும் விமான நிலையத்தில் தொழுகை நடத்த முன் அனுமதி பெற்றிருந்தார்களா? மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இருந்து உரிய அனுமதி பெற்ற பிறகு ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்தும் போது அரசு ஆட்சேபனை தெரிவிப்பது ஏன்? ஆனால் தடை செய்யப்பட்ட பொதுப்பகுதியில் இது போன்ற செயல்களை கண்டுகொள்ளாமல் இருப்பது ஏன்? என்று கூறி தொழுகை நடத்திய போட்டோ மற்றும் வீடியோவை பகிர்ந்தார்.
- மன்னர் சார்லஸ் III மற்றும் ராணி கமிலா இன்று வாடிகனுக்கு வருகை தந்தனர்.
- ஆங்கிலம் மற்றும் லத்தீன் ஆகிய இரண்டு மொழிகளில் பிரார்த்தனை நடந்தது
கடந்த 500 ஆண்டுகளில் முதல் முறையாக போப் மற்றும் இங்கிலாந்து மன்னர் ஒன்றாக பிரார்த்தனை செய்தனர்.
கத்தோலிக்க திருச்சபையிலிருந்து ஆங்கிலிகன் திருச்சபை பிரிந்ததிலிருந்து கிட்டத்தட்ட 500 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் முதல் கூட்டு பிரார்த்தனை இதுவாகும்.
தங்கள் தேவாலயங்களுக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வருகைக்காக மன்னர் சார்லஸ் III மற்றும் ராணி கமிலா இன்று வாடிகனுக்கு வருகை தந்தனர்.
இந்த பிரார்த்தனை மைக்கேலேஞ்சலோவின் புகழ்பெற்ற ஓவியமான தி லாஸ்ட் ஜட்ஜ்மென்ட்டின் கீழ் உள்ள சிஸ்டைன் சேப்பலில் நடைபெற்றது. ஆங்கிலம் மற்றும் லத்தீன் ஆகிய இரண்டு மொழிகளில் பிரார்த்தனை நடந்தது
- அனுமதி பெறாமல் பிரார்த்தனை கூட்டங்கள் நடத்தப்படுகிறதா என காவல்துறை கண்காணிக்க வேண்டும்
- சிலரின் காதுகளுக்கு தெய்வீகமாக விளங்கும் இசை, மற்றவர்களுக்கு இடையூறாக இருக்கும்.
மாவட்ட ஆட்சியரின் அனுமதி இல்லாமல் குடியிருப்பு பகுதிகளில் எந்த மதத்தினரும் கூட்டு பிரார்த்தனை நடத்த கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், அனுமதி பெறாமல் பிரார்த்தனை கூட்டங்கள் நடத்தப்படுகிறதா என்பதை காவல்துறை கண்காணிக்க வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றம் தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
சிலரின் காதுகளுக்கு தெய்வீகமாக விளங்கும் இசை, மற்றவர்களுக்கு இடையூறாக இருக்கும் என்று வழக்கின் விசாரணையில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கருத்து தெரிவித்தார்.
- கர்த்தர் எலியாவின் சத்தத்தை கேட்டு பிள்ளையினுடைய ஆத்துமா திரும்பி வர கட்டளையிட்டார்.
- நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தரை சந்திக்க அனுதினமும் நம்மை ஆயத்தப்படுத்துவோம்.
உயிர்த்த இயேசுவோடு வாழ்வை கொண்டாட நாம் உயிர்ப்பிக்கப்பட வேண்டும். கிறிஸ்துவின் நாமத்தை சொல்லியும் தீமையைவிட்டு விலகவில்லை என்றால், நமக்கு ஜெயம் கொடுக்கிற தேவனிடத்தில் பங்கு இல்லை.
மரணத்தின் பிடியிலிருந்து விடுதலை
இஸ்ரவேல் நாட்டிலே ஆகாப் ராஜாவின் காலத்தில் நிலவிய பஞ்சத்தில் எலியாவை கர்த்தராகிய ஆண்டவர் கேரீத் ஆற்றங்கரையிலே காகங்களை கொண்டு போஷித்து வந்தார். (1 இராஜாக்கள் 17: 1-24).
காகங்கள் அவனுக்கு விடியற்காலம் மற்றும் சாயங்காலத்தில் அப்பமும், இறைச்சியும் கொண்டு வந்தன. தாகத்திற்கு அந்த ஆற்றின் தண்ணீரை குடித்தான். தேசத்தில் பஞ்சம் இருந்தபடியினாலும், மழை பெய்யாதபடியினாலும் சில நாட்களுக்குப் பின்பு அந்த ஆறு வற்றிப் போனது. பின்னர் கர்த்தர் எலியாவை சீதோனுக்கு அடுத்த அதாவது தீரு- சீதோன் பட்டணங்களுக்கு இடையே காணப்பட்ட சாறிபாத் என்ற கடற்கரை ஊருக்கு அழைத்து வந்தார். (1 இராஜாக்கள் 16:31).
அங்கே எலியாவை பராமரிப்பதற்கு ஒரு விதவையை ஏற்பாடு பண்ணினார். அந்தப்பெண் கர்த்தரின் வார்த்தையை நம்புகிறவர். அவளுக்கு ஒரு மகன். எலியா அவளை அணுகி எனக்கு அப்பமும், தண்ணீரும் கொண்டு வா என்று சொன்னபோது அவள், நானும் என் குமாரனும் இருக்கிற ஒரு பிடி மாவிலே அடை செய்து சாப்பிட்டு செத்துப் போக தக்கதாக விறகு பொறுக்க வந்திருக்கிறேன் என்றாள். கர்த்தருடைய வார்த்தையை நம்புகிற பெண்ணாக அவள் இருந்தபடியால் மரணத்தின் பிடியிலிருந்து அவளை விடுவிக்க எலியாவை சாறிபாத் ஊருக்கு அனுப்பினார். அங்கு அவர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர்.
இவை நடந்த பின்பு வியாதியில் விழுந்து அந்த மகன் உயிரிழந்தான். அப்பொழுது அந்தப் பெண், 'தேவனுடைய மனுஷனே, என் அக்கிரமத்தை நினைக்க பண்ணவும், என் குமாரனை சாகப் பண்ணவுமா என்னிடத்தில் வந்தீர்' என்று கேட்டாள்.
சாறிபாத் விதவையைப் போலவே எலியாவும் சந்தேகப்பட்டு பஞ்சகாலத்தில் வாழ வழிகாட்டி ஆசீர்வதித்த கர்த்தர், சாவை அனுமதித்து துக்கத்தை வருவித்து விட்டார் என சந்தேகப்பட்டு விட்டான். உடனே எலியா கர்த்தரை நோக்கி, 'நான் தங்கிஇருக்க இடம் கொடுத்த இந்த பெண்ணின் மகனை சாகப் பண்ணினதினால் அவளுக்கு துக்கத்தை வருவித்தாரோ' என்று அந்தப் பிள்ளையின் ஆத்துமா அவனுக்குள் திரும்பி வர விண்ணப்பம் பண்ணினான்.
அப்படியே கர்த்தர் எலியாவின் சத்தத்தை கேட்டு பிள்ளையினுடைய ஆத்துமா திரும்பி வர கட்டளையிட்டார். அந்தப் பையன் பிழைத்தான். இரண்டாவது முறையாக மரண சங்கிலியிலிருந்து அந்த குடும்பம் விடுவிக்கப்பட்டது. (1 இராஜாக்கள் 17: 24).
இயேசுவோடு நித்திய வாழ்வை கொண்டாட
கர்த்தருடைய வார்த்தையை பற்றிக்கொண்டு அவர் மேல் நம்பிக்கையாய் இருந்து நம்முடைய அக்கிரமங்களை அவரிடம் அறிக்கையிடும் போது, அவர் மரணத்திலிருந்து ஜெயம் பெற நம்மை ஆசீர்வதிக்கிறார். இதுதான் உயிர்த்த இயேசுவோடு வாழ்வை கொண்டாடுதலின் பங்கு.
ராஜாவாகிய யோசியா நியாயப்பிரமாண புத்தகத்தின் வார்த்தைகளை சாப்பான் வாசிக்க கேட்டு, தன்னைத்தானே கர்த்தரிடத்தில் தாழ்த்தினார். இதனால் தீர்க்கதரிசியாகிய உல்தாள் மூலம் (2 இராஜாக்கள்22:20) அவனுக்கு கிடைத்த கர்த்தருடைய வார்த்தை, "நீ சமாதானத்தோடு உன் கல்லறையில் சேர்வாய்". அதேபோல யோசியா ராஜா கர்த்தரின் நியாயத்தீர்ப்பு நாள் வருவதற்கு முன்னால் அதாவது, எருசலேம் நேபுகாத்நேச்சாரால் அழிக்கப்படுவதற்கு முன்னால் தன்னுடைய பிதாக்களுடன் சேர்த்துக்கொள்ளப்பட்டான் (2 இராஜாக்கள் 23:29,30). அதுபோல நாமும் இந்த உலகத்தின் நியாயத்தீர்ப்பு வரும் போது கர்த்தருடைய வருகையிலே கர்த்தருக்கு எதிர்கொண்டு போக (1 தெசலோனிகேயர் 4:15-18) நமக்கென்று கர்த்தர் ஆயத்தம் பண்ணி இருக்கிற ஸ்தலத்திலே (யோவான் 14:3) அவர் மறுபடியும் வந்து நம்மை சேர்த்துக்கொள்ள ஆயத்தப்படுவோம். மற்றவர்களையும் ஆயத்தப்படுத்துவோம். ஆதியில் இருந்த அன்பை விட்டாய் என்று எபேசு சபைக்கு சொன்னது போல, (வெளிப்படுத்தல் 2:4) நம்மைப் பார்த்து சொல்லப்பட்டு விடாமல் விழித்துக்கொள்வோம்.
கடைசி எக்காளம் தொனிக்கும்போது நாம், கர்த்தரோடு என்றென்றைக்கும் ஜீவிக்க கூடிய சரீரமாக்கப்படுவதற்கு, அதாவது மறுரூபமாக்கப்படுவதற்கு நமக்கு கொடுக்கப்பட்டிருக்கின்ற இந்த ஓட்டத்திலே நீதியுள்ளவர்களாய், விசுவாசத்தை காத்துக் கொள்பவர்களாய் (2 தீமோத்தேயு 4) நீதியுள்ள நியாயாதிபதியாகிய கர்த்தரை சந்திக்க அனுதினமும் நம்மை ஆயத்தப்படுத்துவோம். பிறரையும் ஆயத்தம் பண்ணும் செயல்களில் ஈடுபடுவோம்.
- அதன் பிறகுதான் அவர் தனது கடையைத் திறக்க அனுமதிக்கப்படுவார்.
- அவரை சுத்தப்படுத்துவதாகக் கூறி இந்து அமைப்பினர் அவர்மீது கங்கை நீரைத் தெளித்திருக்கின்றனர்.
உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில் மாமு பன்ஜா பகுதியை சேர்ந்தவர் சுனில் ரஜனி. இவர் மின்சாரப் பொருட்களை விற்கும் கடையை நடத்தி வருகிறார்.
இந்துவான இவர் தனது முஸ்லீம் நண்பர்களுடன் சேர்ந்து கடந்த மார்ச் 27 ஆம் தேதி உள்ளூர் மசூதியில் மாலை தொழுகையில் ஈடுபட்டிருக்கிறார். இதை யாரோ வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட அது வைரலானது. இதைத்தொடர்ந்து இந்து அமைப்புகள் அவருக்கு கடும் கண்டனம் தெரிவித்தது.
இந்நிலையில், அந்தப் பகுதியில் உள்ள பாஜகவின் இளைஞர் பிரிவான பாரதிய பாரதிய ஜனதா யுவ மோர்ச்சாவின் (BJYM) உள்ளூர் தலைவரான மோனு அகர்வால் செய்தியாளர்களிடம் கூறுகையில், சுனில் ரஜனி இந்து மதத்தின் புனிதத்தை பாழ்படுத்தியதாகவும் அதற்கு பொது மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும் அப்பகுதியில் உள்ள கோயிலில் அவரை வைத்து பரிசுத்தப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும் அதன் பிறகுதான் அவர் தனது கடையைத் திறக்க அனுமதிக்கப்படுவார் என்று தெரிவித்தார்.
மேலும் ரஜனி மசூதியில் இருந்து வெளியே வந்தபோது அவரை சுத்தப்படுத்துவதாகக் கூறி இந்து அமைப்பினர் அவர்மீது கங்கை நீரைத் தெளித்திருக்கின்றனர். ஆர்வத்தின் பேரிலேயே தான் மசூதிக்கு சென்றதாக சுனில் தெரிவித்துள்ளார்.
- நவம்பர் 2-ஆம் தேதியை கிறிஸ்தவர்கள் கல்லறைத் திருநாளாக கடைப்பிடித்து வருகின்றனர்.
- கல்லறைத் தோட்டத்தில் திருப்பலியும், சிறப்பு வழிபாடும் நடத்தப்படும்.
கடலூர்:
கல்லறைத் திருநாளை முன்னிட்டு, கடலூரில் உள்ள கல்லறைத் தோட்டங்களில் கிறிஸ்தவர்கள் சிறப்புத் திருப்பலி நடத்தினர். இறந்தவர்களை நினைவு கூறும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 2-ஆம் தேதியை கிறிஸ்தவர்கள் கல்லறைத் திருநாளாக கடைப்பிடித்து வருகின்றனர். இது அனைத்து ஆன்மாக்கள் தினம் என்றும் அழைக்கப்படுகிறது. கல்லறைத் திருநாள் அன்று கிறிஸ்தவர்கள் கல்லறை தோட்டத்துக்குச் சென்று இறந்த தங்கள் உறவினர்களின் கல்ல றையில் அவர்களின் ஆன்மா இளைப்பாற ஜெபம் செய்வது வழக்கம்.
மேலும், கல்லறைத் தோட்டத்தில் திருப்பலியும், சிறப்பு வழிபாடும் நடத்தப்படும். அதன்படி, கடலூரில் உள்ள புனித கார்மேல் அன்னை கல்லறைத்தோட்டம், ஏ.எல்.சி. கல்லறைத் தோட்டம், புனித எபிநேசர் கல்லறைத் தோட்டம், ஆர்.சி. கத்தோலிக்க கல்லறைத் தோட்டம், கம்மியம்பேட்டை புனித சூசையப்பர் கல்லறைத் தோட்டம், அரசு தலைமை மருத்துவமனை பின்புறம் உள்ள கல்லறைத் தோட்டத்தில் கிறிஸ்தவர்கள் சென்று பிரார்த்தனை நடத்தினர். மேலும் தங்கள் உறவினர் கல்லறைகளில் மெழுகுவர்த்தி ஏற்றி மலர்கள் தூவி மாலை அணிவித்து முன்னோ ர்களை நினைவு கூர்ந்தனர்.
- மதுரையில் நடந்த கல்லறை திருநாளில் கிறிஸ்தவர்கள் மனமுருகி பிரார்த்தனை செய்தனர்.
- குடும்பத்துடன் வந்து மலர்தூவி வழிபாடு செய்தனர்.
மதுரை
மதுரையில் கல்லறை திருநாளையொட்டி முன்னோர்களை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்கள் குடும்பத்துடன் சென்று கல்லறை தோட்டங்களில் மலர் தூவி, படையல் செய்து சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 2-ந் தேதி உயிர் நீத்த முன்னோர்களை நினைவு கூறும் வகையில் கல்லறை திருநாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த தினத்தில் கிறிஸ்தவர்கள் கல்லறை தோட்டங்களில் அடக்கம் செய்யப்பட்டுள்ள தங்களது முன்னோர்களின் கல்லறைகளுக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்துவது வழக்கம்.
ஒவ்வொரு ஆண்டும் கல்லறை தோட்டங்களில் கல்லறை திருநாள் வழிபாட்டில் கிறிஸ்தவர்கள் முன்னோர்களை நினைவு கூர்ந்து மனம் உருகி கண்ணீரோடு வழிபாடு நடத்துவது வழக்கம்.இன்று (2-ந்தேதி) மதுரையில் கல்லறை திருநாள் அனுஷ்டிக்கப்பட்டது. மதுரையில் மகபூப் பாளையம், தத்தனேரி, பாக்கியநாதபுரம், புதூர், அழகரடி, கூடல் நகர், கீரைத்துறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ கல்லறை தோட்டங்களில் அடக்கம் செய்யப்பட்டுள்ள முன்னோர்களை நினைவு கூறும் வகையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் இன்று காலை குடும்பத்துடன் சென்று வழிபாடு நடத்தினர்.
கல்லறைகளை சுத்தம் செய்து மாலை அணிவித்து, மலர் தூவி, மெழுகுவர்த்தி கொளுத்தி பிரார்த்தனை செய்தனர். இதை தொடர்ந்து முன்னோர்களுக்கு பிடித்த பலகாரங்கள் மற்றும் உணவுப் பொருட்களை படையல்களாக படைத்து மனம் உருகி கண்ணீருடன் இறைவழிபாடு செய்தனர். இறந்தவர்களின் ஆன்மா இறைவனின் திருப்பாதத்தில் இளைப்பாறும் வகையில் இறை வேண்டுதல்களும் செய்யப்பட்டன.பல்வேறு கிறிஸ்தவ கல்லறை தோட்டங்களில் இன்று மாலை சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறுகின்றன இந்த நிகழ்ச்சியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு காலஞ்சென்ற முன்னோர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்துகிறார்கள்.
மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே உள்ள கல்லறைத் தோட்டத்தில் சில ஆண்டுகளாக கல்லறை திருநாள் அனுஷ்டிக்கப்படவில்லை. தற்போது அங்கு கல்லறைகள் முழுமையாக அகற்றப்பட்டுள்ள நிலையில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் தடுக்கும் வகையில் அங்கு 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மற்ற பகுதிகளில் உள்ள அனைத்து கல்லறை தோட்டங்களிலும் கிறிஸ்தவர்கள் அமைதியான முறையில் தங்களது முன்னோர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
- கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்த இடத்தில் அவர்களுக்கு மலர் அணிவித்தனர்.
- பிரார்த்தனை செய்து மெழுகுவர்த்தி ஏந்தி மரியாதை செலுத்தி அஞ்சலி.
தஞ்சாவூர்:
உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள், இறந்துபோன தங்களின் முன்னோர்களை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 2-ந் தேதியை கல்லறை திருநாளாக அனுசரித்து வருகின்றனர். இதையொட்டி கிறிஸ்தவர்கள் தங்களது முன்னோர்களை அடக்கம் செய்த கல்லறைகளை சுத்தம் செய்து, வர்ணம் பூசி, வண்ண மலர்களால் அலங்கரிப்பார்கள். பின்னர் அந்தந்த பகுதி ஆலய பங்குதந்தை மூலம் கல்லறை தோட்டங்களில் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டதும், மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்துவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டு கல்லறை திருநாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு தஞ்சை பூக்கார தெருவில் உள்ள சூசையப்பர் கல்லறை தோட்டத்தில் மரித்தவர்களை அடக்கம் செய்த இடத்தில் அவர்களை நினைவு கூர்ந்து கிறிஸ்தவர்கள் ஜெபித்து மலர் தூவினர். குடும்பம் குடும்பமாக வந்து மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் தங்களது முன்னோர்களை நினைத்து ஜெபம் செய்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இதனை முன்னிட்டு பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகளும் நடத்தப்பட்டது. ஆயர்கள், பாதிரியார்களும் கல்லறைகளுக்கு சென்று ஜெபித்தனர்.
இதே போல் தஞ்சை நகரில் உள்ள பல்வேறு கல்லறை தோட்டங்களில் ஏராளமான கிறிஸ்தவர்கள் மலர் அஞ்சலி செலுத்தினர்.
- புனித கொடி பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லாக்கில் வைக்கப்பட்டது.
- முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு விழா வருகிற 4-ந் தேதி நடைபெற உள்ளது.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடையில் உலக புகழ் பெற்ற ஹக்கீம் ஷெய்கு தாவூது ஆண்டவர் தர்ஹா அமைந்துள்ளது.
தர்ஹாவின் 721-ம் ஆண்டு பெரிய கந்தூரி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக, மாலை 5 மணிக்கு சேக்தாவூது ஆண்டவர் அடக்க சமாதியி லிருந்து புனித கொடியை பிராத்தனையுடன் தர்ஹா டிரஸ்டிகள் சுமந்து வந்து பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லாக்கில் வைக்கப்பட்டது.
பின்னர், புனித கொடியை சுமந்த பூ பல்லாக்கின் ஊர்வலம் தர்ஹா முதன்மை அறங்காவலர் எஸ்.எஸ்.பாக்கர் அலி சாஹிப் தலைமையில் புறப்பட்டது.
இதில் பெரிய பல்லாக்குடன் பூக்களால் ஆன சிறிய பல்லாக்குகள், கண்ணாடிகளால் அலங்கரிக்கப்பட்ட ரதம் மேளதாளங்கள், பேண்டு வாத்தியங்கள் யானை, ஒட்டகங்கள், ஆட்டகுதிரைகள் என ஊர்வலமாக வந்தது.
ஊர்வலம் தர்ஹாவிலி ருந்து புறப்பட்டு ஜாம்புவா னோடை மேலக்காடு வழியாக ஆசாத்நகர் சென்றது.
அங்கு ஆசாத்நகர் மீன் மார்க்கெட் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்து ஊர்வலம் புறப்பட்டு திருத்துறைப்பூண்டி சாலை வழியாக பழைய பஸ் நிலையம் சென்றது. அங்கு ஆட்டோ சங்கம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
அங்கு நடந்த சிறப்பு பிரார்த்தனை முடிந்து அங்கிருந்து ஊர்வலம் புறப்பட்டு புதிய பஸ் நிலையம் சென்று மீண்டும் ஆசாத்நகர் வழியாக கோரையாறுபாலம், ஜாம்புவானோடை சென்று தர்ஹாவை வந்தடைந்தது.
பின்னர், தர்ஹா அருகில் உள்ள அம்மா தர்ஹா, ஆற்றாங்கரை பாவா தர்ஹா சென்று மீண்டும் தர்ஹாவை ஊர்வலம் மூன்று முறை சுற்றியது.
பின்னர், கொடியேற்றும் நிகழ்ச்சி தர்ஹா முதன்மை அறங்காவலர் எஸ்.எஸ்.பாக்கர் அலி சாஹிப் தலைமையில் தொடங்கியது. தொடர்ந்து, அகமது முகைதீன் லெப்பை துஆ ஓதினார். பின்னர், சிறப்பு பிராத்தனை ஓதப்பட்டு இரவு புனித கொடியேற்றப்பட்டது.
இதில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் உட்பட அனைத்து சமூகத்தினரும் கலந்து கொண்டனர்.
விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு விழா வருகிற 4-ந் தேதி நடைபெற உள்ளது.
தொடர்ந்து, 8-ந் தேதி இரவு புனித கொடி இறக்கப்பட்டு அனைவருக்கும் தப்ரூக் (அன்னதானம்) வழங்கப்படும்.
- மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 1500 போலீசார் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக பாதுகாப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
- இயேசு கிறிஸ்துவின் பிறப்பை விளக்கும் குடில்கள் மற்றும் நட்சத்திரங்களும் பார்ப்பதற்கு மனதை கவரும் கண்கொள்ளா காட்சியாக இருந்து வருகிறது.
மதுரை
மதுரையில் நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை விமரிசை யாக கொண்டாடப்படும் நிலையில் இன்று நள்ளிரவு முதல் அதிகாலை வரை மதுரையில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறுகின்றன.
இதற்காக அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களும் மின்விளக்குகள் மற்றும் அலங்கார விளக்கங்களால் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் ஜொலித்து வருகின்றன.
இயேசு கிறிஸ்துவின் பிறப்பை விளக்கும் குடில்கள் மற்றும் நட்சத்திரங்களும் பார்ப்பதற்கு மனதை கவரும் கண்கொள்ளா காட்சியாக இருந்து வருகிறது.
நள்ளிரவு கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பு பிரார்த்தனைகள் தொடங்குவதால் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் தேவாலயங்க ளுக்கு சென்று இந்த பிரார்த்தனையில் ஈடுபடுகிறார்கள்.
இதையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பணி பலப்படுத்தப்பட்டுள்ளது. நள்ளிரவு நேரம் என்பதால் பிரார்த்தனைக்கு செல்பவர் களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மதுரை நகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் ஆகியோரது உத்தரவு பேரில் பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 1500 போலீசார் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக பாதுகாப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முக்கிய பகுதிகளில் வாகன சோதனை நடத்தவும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடும் வகையில் கூடுதல் போலீசாரை பணியமர்த்த வும் உத்தரவிடப்பட்டுள்ளது.
- திருச்சி தேவாலயங்களில் கிறிஸ்தவர்கள் சிறப்பு பிரார்த்தனை நடத்தினர்
- தேவாலயங்கள் வண்ண வண்ண ஸ்டார்கள், அலங்கார மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தன
திருச்சி :
இயேசு கிறிஸ்து பிறந்த தினமான இன்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. கிறிஸ்துமஸ் பண்டிகையை–யொட்டி நேற்று இரவு 12 மணிக்கு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள், வழிபாடுகள் நடத்தப்பட்டன. நள்ளிரவு 12 மணிக்கு இயேசு கிறிஸ்து பிறந்ததை அறிவிக்கும் வகையில் குடில்களில் இயேசு கிறிஸ்துவின் சொரூபம் வைக்கப்பட்டு பிரார்த்தனை நடந்தது. அதே–போன்று இன்று அதிகாலை 5 மணிக்கு தேவாலயங்களில் சிறப்பு ஆராதனைகள் நடை–பெற்றன. இதற்காக தேவாலயங்கள், வண்ண வண்ண ஸ்டார்கள், அலங்கார மின்விளக்குகள், குடில்களால் அலங்கரிக்கப் பட்டு இருந்தன. திருச்சி மறை மாவட்ட ஆயர் ஆரோக்கியசாமி, திருச்சி-தஞ்சை திருமண்டல பேரா–யர் தன்ராஜ் சந்திரசேகரன், லுத்ரன் திருச்சபை பேராயர் ஆகி–யோர் தேவாலயங்களில் நடைபெற்ற பிரார்த்த–னை–களில் கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தி அளித்தனர். திருச்சி மேலப்புதூர் மரியன்னை ஆலயம், பாலக்கரை பசிலிக்கா, புத்தூர் பாத்திமா, மெயின் கார்டு கேட் தூய வளனார் ஆல–யம், பொன்மலை புனித சூசையப்பர் ஆலயம், பெரிய மிளகுபாறை சந்தியாகப்பர் ஆலயம், கருமண்டபம் ஆரோக்கிய மாதா ஆலயம், மார்க் ஆலயம், காட்டூர் பிலோமினாள் ஆலயம், வெனிஸ் நகர் செபஸ்தியார் ஆலயம், கே.கே.நகர் ஜெகன் மாதா ஆலயம், திருச்சி பொன்ன–கர் ஏ.ஜி. சபை, தலைமை தபால் நிலையம் லூத்ரன் திருச்சபை உள்ளிட்ட ஏரா–ளமான தேவா–லயங்க–ளில் சிறப்பு பிரார்த்த–னைகள் நடைபெற்றன. கிறிஸ்தவ தேவலாயங்க–ளில் வழங்கப்பட்ட நற் செய்திகளில் இயேசு கிறிஸ்து உலகில் மனிதர் களை பாவங்களில் இருந்து ரட்சிக்கவும், ஏழை–களுக்கு இரங்கவும், மாட்டுத்தொ–ழுவத்தில் கன்னி மரியா–ளுக்கு மகனாக பிறந்தார். இயேசுவின் பிறப்பு எளி–மையானது. ஏழை–களிடம் இரக்கம் காட்டுங்கள் என தெரிவிக்கப்பட்டது. மேலும் ஏழைகளுக்கு உதவி செய்வதன் மூலம் நாம் இயேசுவின் பிள்ளைகளாக மாறுகிறோம். ஏழைகளுக்கு உதவி செய்கிற ஒவ்வொரு நேரத்திலும் இயேசு உங்க–ளுக்குள் பிரவே–சிப்பார். அந்த ஒவ்வொரு நாளும் நன்னாள்தான் என செய்தி அளித்தனர். தேவாலயங்களுக்கு வந்த கிறிஸ்தவர்கள் ஒருவ–ருக்கொருவர் ஆரத்தழுவி–யும், கை குலுக்கியும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.
- கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
- மதுரை மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை நள்ளிரவு முதலே தொடங்கி விட்டது.

மதுரை
கிறிஸ்துமஸ் விழா இன்று உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இயேசு கிறிஸ்து பிறந்த நாளான இன்று (25- ந்தேதி) அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் நள்ளிரவு முதல் சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சி நடந்தது.இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் புத்தாடைகள் அணிந்து கலந்து கொண்டனர்.
மதுரை மாவட்டத்தில் ஞானஒளிபுரம், மாடக்குளம், நரிமேடு, கே.புதூர், கீழவாசல், தெற்குவாசல், மேலவாசல், காளவாசல், அண்ணா நகர் உள்பட பல்வேறு பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட தேவாலயங்கள் உள்ளன. அங்கு கிறிஸ்து மஸ் பண்டிகையை முன்னிட்டு வண்ண விளக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டு இருந்தன. தேவாலயத்தின் உட்புற பகுதியில் கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்பட்டு இருந்தது.
மதுரை மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை நள்ளிரவு முதலே தொடங்கி விட்டது. அப்போது கிறிஸ்தவர்கள் புத்தாடைகள் அணிந்து குடும்பத்துடன் தேவாலயத்துக்கு புறப்பட்டு வந்தனர். அங்கு பங்குத் தந்தையின் மறையுறை, கூட்டு திருப்பலி, சிறப்பு வழிபாடுகள் ஆகியவை நடத்தப்பட்டன.
தேவாலயங்களில் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். கிறிஸ்துமஸ் பண்டிகையில் முத்தாய்ப்பாக, திருப்பலி யின் நிறைவில், தேவதை கள் வேடமிட்டு இருந்த குழந்தைகள், பங்கு தந்தையிடம் குழந்தை இயேசுவின் சொரூபத்தை கொடுத்தனர். இதனை அவர் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டார்.
இதனை தொடர்ந்து பங்குத்தந்தைகள் இயேசு பிறப்பை அறிவிக்கும் வகை யில், அந்த சொரூபத்தை கிறிஸ்துமஸ் குடிலில் வைத்தார்கள். இதனை தொடர்ந்து கிறிஸ்தவர்கள் ஒருவருக்கொருவர் கேக் ஊட்டி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். இயேசு கிறிஸ்து பிறந்த தினத்தை வரவேற்கும் வகையிலும் ஒவ்வொரு வீட்டின் வாசலிலும் கிறிஸ்துமஸ் நட்சத்திரம் கட்டப்பட்டு உள்ளன. 2023-புத்தாண்டு வரை ஒவ்வொரு கிறிஸ்தவர் வீட்டு வாசல்களிலும் "ஸ்டார்கள்" அலங்கார விளக்குகள் தொங்க விடப்பட்டு உள்ளன.நண்பர்கள், உறவினர் களுக்கு கிறிஸ்துமஸ் பரிசுபொருட்களை வழங்கி வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.
மதுரை மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். பொதுமக்கள் கூடும் இடங்களில் ரோந்து வந்து கண்காணித்தனர். மேலும் சோதனை சாவடிகளில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.






