என் மலர்

  நீங்கள் தேடியது "Dargah"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வருகிற 18 -ந்தேதி தலைக்கிழமை நிகழ்ச்சி நடக்கிறது.
  • 28-ந் தேதி கொடி இறக்கம் நடைபெறுகிறது.

  திருவாடானை தாலுகா பாசிபட்டினத்தில் பிரசித்தி பெற்ற மகான் சர்தார் நைனா முகமது ஒலியுல்லா தர்கா உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த தர்காவின் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது.

  விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா நேற்று நடைபெற்றது. இதனையொட்டி ஸ்தானிகன் வயல் மாணவநகரி கிராமத்தில் இருந்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு வாணவேடிக்கை, மேளதாளங்களுடன் சுமார் 3 கிலோமீட்டர் தூரம் உள்ள பாசிபட்டினம் சந்தனக்கூடு மைதானத்தை வந்தடைந்தது.

  அதனைத் தொடர்ந்து தர்கா கமிட்டியினர் நாட்டிய குதிரை, மேளதாளங்கள் முழங்க தர்காவிற்கு அழைத்து வந்தனர். அதன் பின்னர் தர்காவில் மகான் அடக்க ஸ்தலத்தில் வைக்கப்பட்டிருந்த சந்தனக்குடம் சந்தனக்கூட்டில் வைக்கப்பட்டது. அதன்பின்னர் சந்தனக்கூடு தர்காவை 3 முறை வலம் வந்தது. பின்னர் மகான் அடக்க ஸ்தலத்தில் சந்தன குடம் வைக்கப்பட்டு உலக நன்மைக்காகவும் மத நல்லிணக்கத்திற்காகவும் சிறப்பு பிரார்த்தனை மற்றும் பாத்தியா ஓதும் நிகழ்ச்சி நடைபெற்றது.

  தொடர்ந்து மகான் அடக்க ஸ்தலத்தில் சந்தனம் பூசப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு சந்தனம், மல்லிகைப் பூ, சீனி, பேரிச்சம்பழம் போன்றவை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

  திருவாடானை தாசில்தார் செந்தில் வேல்முருகன், போலீஸ் துணை சூப்பிரண்டு நிரேஷ், தொண்டி போலீஸ் இன்ஸ் பெக்டர் முருகேசன், விழா கமிட்டியை சேர்ந்த அமீர்கான், சேகனாதுரை, முஸ்தபா கமல், அபூபக்கர், காமீது மைதீன், கலியநகரி ஊராட்சி தலைவர் உம்மு சலீமா நூருல் அமீன், வருவாய்த்துறை, காவல்துறையினர், மகான் வாரிசுதாரர்கள், தர்கா கமிட்டியினர் கலந்து கொண்டனர்.

  வருகிற 18 -ந் தேதி தலைக்கிழமை நிகழ்ச்சியும், 28-ந் தேதி கொடி இறக்கமும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை ஒலியுல்லா பேரர்கள் விழா கமிட்டியினர் செய்து இருந்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இஸ்லாமியர்கள் சந்தனம் தடவி, மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.
  • சந்தனக்கூடு ஊர்வலமாக தர்காவிற்கு எடுத்து வரப்பட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது.

  மொகரம் பண்டிகையையொட்டி திருச்செங்கோடு பெரிய பள்ளிவாசலில் உள்ள காஜா அகமது அலிஷா தர்காவில் சந்தனக்கூடு உரூஸ் திருவிழா நடந்தது. திருச்செங்கோடு முஸ்லிம் மஸ்ஜித் நிர்வாக கமிட்டி தலைவர் முத்தவல்லி முபாரக் அலி தலைமை தாங்கினார்.

  நிர்வாகிகள் கமால் பாய், அப்துல் கனி, ஷாஜகான், நவாப், ஜமால் மொய்தீன், ஜமேஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இமாம் ஜலாலுதீன் பாத்தியா ஓதினார். ஜமாத்தார்கள் மற்றும் இஸ்லாமியர்கள் சந்தனம் தடவி, மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.

  தொடர்ந்து பரம்பரைக்காரர் இதயத்துல்லா வீட்டிலிருந்து சந்தனக்கூடு ஊர்வலமாக தர்காவிற்கு எடுத்து வரப்பட்டு சிறப்பு தொழுகை நடைபெற்றது. முடிவில் சமபந்தி விருந்து நடந்தது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தர்கா அமைந்துள்ள தெற்கு விஜயநாராயணத்தில் ஒரு முஸ்லிம் குடும்பம் கூட கிடையாது.
  • சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டு அனைவருக்கும் நேர்ச்சை வழங்கப்பட்டது.

  நெல்லை மாவட்டம் தெற்கு விஜயநாராயணத்தில் மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக மேத்தப்பிள்ளையப்பா தர்கா அமைந்துள்ளது.

  இந்த தர்காவில் ஒவ்வொரு ஆண்டும் கந்தூரி விழா ஆடி மாதம் 16-ந் தேதி நடைபெறுவது வழக்கம். ஆனால் தர்கா அமைந்துள்ள தெற்கு விஜயநாராயணத்தில் ஒரு முஸ்லிம் குடும்பம் கூட கிடையாது. கந்தூரி விழாவில் கலந்து கொள்ள வெளியூர்களில் இருந்து வரும் முஸ்லிம்களை தெற்கு விஜயநாராயணத்தில் வசிக்கும் இந்து தேவர் சமுதாயத்தினர் தங்கள் இல்லங்களில் தங்குவதற்கு இடம் கொடுத்து, அவர்களுக்கு பாதுகாப்பும் அளிக்கின்றனர். மேலும் கந்தூரி விழாவையும் முன்னின்று நடத்துகின்றனர்.

  இந்த நிலையில் நேற்று கந்தூரி விழா நடைபெற்றது. இதை முன்னிட்டு காலையில் கொடி ஊர்வலமானது மேத்தப்பிள்ளையப்பா பிறந்ததாக கூறப்படும் வீட்டில் இருந்து புறப்பட்டது. இந்த ஊர்வலத்தில் திரளான முஸ்லிம்கள், இந்துக்கள் கலந்து கொண்டு முக்கிய தெருக்கள் வழியாக வந்தனர். பின்னர் தர்காவில் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டு அனைவருக்கும் நேர்ச்சை வழங்கப்பட்டது. இந்த விழா மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக இருந்தது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • வெள்ளிப்பேழையில் எடுத்து வரப்பட்ட சந்தனம் மகான் செய்யதுஅலி ஒலியுல்லா சமாதியில் பூசப்பட்டது.
  • விழாவின் நிறைவாக வரும் 27-ந்தேதி கொடி இறக்கம் நடைபெறுகிறது.

  ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகா பெரியபட்டினத்தில் உள்ள மகான் செய்யது அலி ஒலியுல்லா தர்காவின் 121-வது ஆண்டு மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா மற்றும் கந்தூரி விழா வெகுசிறப்பாக நடைபெற்றது. முன்னதாக கடந்த 6-ந்தேதி மாலை கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. அதை தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை சந்தனக்கூடு திருவிழா தொடங்கியது.

  ஜலால் ஜமால் பள்ளிவாசல் வளாகத்தில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு ரதம் தாரை தப்பட்டை வாணவேடிக்கைகளுடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. ஊர்வலத்தில் அனைத்து மதங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் திரளாக கலந்து கொண்டனர். சந்தனக்கூடு தர்காவை சுற்றி வலம் வந்த பின்னர் வெள்ளிப்பேழையில் எடுத்து வரப்பட்ட சந்தனம் மகான் செய்யதுஅலி ஒலியுல்லா சமாதியில் பூசப்பட்டது.

  இதை தொடர்ந்து உலக அமைதிக்காக சிறப்பு துவா ஓதி பிரார்த்தனை செய்யப்பட்டது. நேற்று காலை மவ்லீது ஓதி கந்தூரி விழா நடைபெற்றது. இதனையொட்டி ஆயிரக்கணக்கானோருக்கு நெய்சோறு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவையொட்டி ஊர் முழுவதும் திருவிழா கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. இன்னிசை கச்சேரி, கிராமிய பல்சுவை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

  பெரியபட்டினம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த அனைத்துமத பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். விழாவின் நிறைவாக வரும் 27-ந்தேதி கொடி இறக்கம் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை தலைவர் காஜா நஜ்புதீன், துணைத்தலைவர்கள் சிராஜ்தீன், சாகுல்ஹமீது, செய்யது இபுராம்சா, செயலாளர் ஹபீபு, துணை செயலாளர்கள் சாகுல்ஹமீது, களஞ்சியம், பொருளாளர் சகுபர்சாதிக், விழா அமைப்பாளர் அப்துல்மஜீது, அஸ்கர் அலி, அப்துல்ரகீம், தொழிலதிபர் சிங்கம்பசீர் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு முக்கிய தெருக்கள் வழியாக தர்காவை வந்தடைந்தது.
  • வருகிற 17-ந்தேதி இரவு கொடி இறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

  கீழ்வேளூர் அருகே ஆழியூர் மெயின் ரோட்டில் உள்ள செய்யது இனாயத்துல்லா வலியுல்லாஹ் தர்காவில் கந்தூரி விழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

  விழாவையொட்டி சிக்கல் பள்ளிவாசலில் இருந்து சந்தனம் குடம் எடுத்து வரப்பட்டது. பின்னர் ‌‌அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு முக்கிய தெருக்கள் வழியாக தர்காவை வந்தடைந்தது. நேற்று அதிகாலை தர்காவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடந்தது.

  வருகிற 17-ந்தேதி இரவு கொடி இறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. நிகழ்ச்சியில் ஆழியூர் பள்ளிவாசல் நிர்வாகிகள், ஜமாத்தார்கள் மற்றும் திரளான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இன்று (புதன்கிழமை) இரவு மரிபுக்கு பின் துஆ ஓதி நேர்ச்சை வழங்கப்படுகிறது.
  • நிறைவு நாளான நாளை (வியாழக்கிழமை) இரவு கொடி இறக்கப்பட்டு இனிப்பு வழங்கப்படும்.

  ஆளூரில் பக்ரீத் பண்டிகை முடிந்த 2-வது நாள் அஷ்ஷேய்கு கோஜ் முகமது சாகிபு ஒலியுல்லாஹ் தர்கா பெருவிழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான விழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா நாட்களில் மாலையில் தொழுகைக்குப்பின் மவுலூது எனும் வாழ்த்துப்பா பாடப்படுகிறது.

  விழாவில் நேற்று பிறை கொடி தாங்கிய 3 யானைகளின் ஊர்வலம் நடந்தது. ஊர்வலத்தின் போது பாரம்பரிய இசைகள் ஒலிக்கப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

  விழாவில் இன்று (புதன்கிழமை) இரவு மரிபுக்கு பின் துஆ ஓதி நேர்ச்சை வழங்கப்படுகிறது. நிறைவு நாளான நாளை (வியாழக்கிழமை) இரவு கொடி இறக்கப்பட்டு இனிப்பு வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழு நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
  • தமிழகத்தில் நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது

  நாகப்பட்டினம் :

  இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகைகளில் பக்ரீத் பண்டிகை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.

  பக்ரீத் பண்டிகையின் போது ஆடு, ஒட்டகம் உள்ளிட்ட விலங்குகள் பலி கொடுக்கப்பட்டு, அதன் இறைச்சியை மூன்றில் ஒரு பங்காகப் பிரித்து ஏழைகளுக்கும் உறவினர்களுக்கும் கொடுத்து மகிழ்வர்.

  இந்நிலையில் சவுதி அரேபியாவில் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, நாகை மாவட்டம் நாகூர் கடற்கரையில் ஜாக் அமைப்பினர் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். ஏராளமான ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என 1000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பக்ரீத் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர்.

  இதேப்போல் நாகை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சிறப்பு தொழுகை நடைபெற்றது.

  தமிழகத்தில் நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 16-ந்தேதி இரவு முதல் 17-ந்தேதி பகல் வரை சந்தனக்கூடு மற்றும் கந்தூரி விழா நடைபெற உள்ளது.
  • தர்கா பகுதி முழுவதும் மின் விளக்கு அலங்காரத்தில் ஒளிர்ந்தது.

  பெரியபட்டினம் மகான் செய்யது அலி ஒலியுல்லா தர்காவின் 121-வது மதநல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக ஜலால் ஜமால் பள்ளிவாசல் பகுதியில் இருந்து அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூடு தாரை, தப்பட்டை முழங்க, வாணவேடிக்கைகள் மற்றும் நாட்டிய குதிரைகளுடன் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

  சந்தனக்கூடு தர்காவை வலம் வந்த பின்னர் உலக அமைதிக்காக துவா ஓதப்பட்டு கொடி ஏற்றப்பட்டது. கொடி ஏற்ற நிகழ்ச்சியில் பெரியபட்டினம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான அனைத்து சமுதாயத்தினர் கலந்துகொண்டனர். விழாவையொட்டி தர்கா பகுதி முழுவதும் மின் விளக்கு அலங்காரத்தில் ஒளிர்ந்தது. திருவிழா கடைகள், பொழுதுபோக்கு ராட்டினங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.

  வருகிற 16-ந்தேதி இரவு முதல் 17-ந்தேதி பகல் வரை சந்தனக்கூடு மற்றும் கந்தூரி விழா நடைபெற உள்ளது. அன்றைய தினம் ஆயிரக்கணக்கானோருக்கு நெய்சோறு அன்னதானம் வழங்கப்படும். விழா ஏற்பாடுகளை தர்கா கமிட்டி மற்றும் சுல்தானியா சங்கத்தினர் செய்திருந்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சந்தனம் பூசும் நிகழ்ச்சி 14-ந்தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது.
  • 17-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) இரவு கொடி இறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

  கீழ்வேளூர் அருகே ஆழியூர் மெயின் ரோட்டில் உள்ள செய்யது இனாயத்துல்லா வலியுல்லாஹ் தர்கா கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக தர்காவில் இருந்து கொடி ஊர்வலம் புறப்பட்டு முக்கிய தெருக்கள் வழியாக கொண்டு வரப்பட்டது.

  பின்னர் தர்கா முன்பு அமைக்கப்பட்டிருந்த கொடிமரத்தில் பாத்திஹா ஒதி கொடி ஏற்றப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தனம் பூசும் நிகழ்ச்சி 14-ந் தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. 17-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) இரவு கொடி இறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

  கொடி ஏற்றும் நிகழ்ச்சியில் ஆழியூர் பள்ளிவாசல் நிர்வாகிகள், ஜமாத்தார்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • சின்ன ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசும் வைபவம் நடந்தது.
  • ஆண்டவர் சமாதிக்கு தர்கா கலிபா மஸ்தான் சாஹிப். சந்தனம் பூசினார்.

  நாகூரில் உலக பிரசித்தி பெற்ற ஆண்டவர் தர்கா உள்ளது. இந்த தர்காவில் உள்ள சின்ன ஆண்டவர் செய்யது முகமது யூசுப் சாஹிப் ஆண்டவருக்கு ஆண்டு தோறும் 3 நாட்கள் கந்தூரி விழா நடைபெறுவது வழக்கம்.

  இந்த ஆண்டுக்கான கந்தூரி விழா கடந்த 30-ந்தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சின்ன ஆண்டவர் சமாதிக்கு சந்தனம் பூசும் வைபவம் நேற்று நடந்தது.

  ஆண்டவர் சமாதிக்கு தர்கா கலிபா மஸ்தான் சாஹிப். சந்தனம் பூசினார். இதில் திரளானோர் கலந்து கொண்டனர். இதற்கான நிகழ்ச்சி ஏற்பாடுகளை தர்கா போர்டு ஆப் டிரஸ்டிகள் மற்றும் ஆலோசனை குழு தலைவர் முகமது கலிபா சாஹிபு மற்றும் உறுப்பினர்கள் செய்து இருந்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • அனைத்து சமுதாய மக்கள் கலந்து கொண்டு நேர்ச்சைகளை நிறைவேற்றினர்.
  • அனைத்து சமுதாய மக்களுக்கு நெய் சோறு வழங்கப்பட்டு விழா நிறைவடைந்தது.

  ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராகிம் ஷகீது ஒலியுல்லா பாதுஷா நாயகம் தர்காவில் 848-வது ஆண்டு மதநல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா கொடி இறக்கத்துடன் முடிவடைந்தது. விழாவில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங் களில் இருந்து பல்லாயிரக்கணக்கான யாத்ரீகர்கள் மற்றும் அனைத்து சமுதாய மக்கள் கலந்து கொண்டு நேர்ச்சைகளை நிறைவேற்றினர்.

  கடந்த 23-ந்தேதி சந்தனக்கூடு திருவிழா நடந்தது. அதனைத்தொடர்ந்து நேற்று மாலை 5 மணிக்கு ராமநாதபுரம் மாவட்டம் டவுன் காஜி சலாஹுதீன் ஆலிம் தலைமையில் உலமாக்கள் முன்னிலையில் உலக நன்மைக் காகவும் உலக அமைதிக் காகவும் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டு கொடியிறக்கம் நடைபெற்றது. இதில் அனைத்து சமுதாய மக்களுக்கு நெய் சோறு வழங்கப்பட்டு விழா நிறைவடைந்தது.

  விழா ஏற்பாடுகளை ஏர்வாடி தர்கா ஹக்தார் நிர்வாக சபையினர், தலைவர் பக்கீர் சுல்தான், துணைத்தலைவர் சாதிக் பாட்சா, செயலாளர் சிராஜூதீன் ஆகியோர் தலைமையில் தர்கா ஹக்தார் நிர்வாக சபையினர் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உத்தரவின் பேரில் கீழக்கரை துணை போலீஸ் சூப்பிரண்டு சுபாஷ் தலைமையில் ஏராளமான போலீசார் செய்திருந்தனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கடந்த 2 ஆண்டுகளாக சந்தனக்கூடு திருவிழா நடைபெறவில்லை.
  • 30-ந்தேதி கொடியிறக்கப்பட்டு அனைத்து சமுதாய மக்களுக்கும் நேர்ச்சை வழங்கி விழா நிறைவடையும்.

  ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் உள்ள மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராகிம் ஷகீது ஒலியுல்லா பாதுஷா நாயகம் தர்காவில் 848-வது ஆண்டு மதநல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மராட்டியம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கானோர் மற்றும் அனைத்து சமுதாய மக்கள் கலந்துகொள்வது வழக்கம்.

  கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக சந்தனக்கூடு திருவிழா நடைபெறவில்லை. தற்போது கொரோனா தொற்று குறைந்ததால் 2 ஆண்டுக்கு பிறகு இந்த ஆண்டு சந்தனக்கூடு திருவிழா நடைபெற்றது. இதையொட்டி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 1-ந்தேதி மவுலீதுடன் (புகழ்மாலை) தொடங்கப்பட்டு, 11-ந்தேதி மாலை கொடியேற்றப்பட்டது. விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் மாலை சந்தனக்கூடு திருவிழா தொடங்கியது.

  ஏர்வாடி முஜாஹிர் நல்ல இப்ராஹிம் மஹாலில் இருந்து நேற்று அதிகாலை 3 மணி அளவில் சந்தனக்கூடு புறப்பட்டு ஊர்வலமாக சென்று காலை 6 மணி அளவில் தர்காவை வந்தடைந்தது. இந்த சந்தனக்கூடு ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.

  அதன்பின் பாதுஷா நாயகத்தின் மக்பராவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைதொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் டவுன் காஜி சலாஹூத்தீன் ஆலிம் தலைமையில் உலமாக்கள் முன்னிலையில் உலக நன்மைக்காகவும் உலக அமைதிக்காகவும் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டு சந்தனக்கூடு திருவிழா நிறைவடைந்தது.

  வருகிற 30-ந்தேதி கொடியிறக்கப்பட்டு அனைத்து சமுதாய மக்களுக்கும் நேர்ச்சை வழங்கி விழா நிறைவடையும் என்று ஏர்வாடி தர்கா ஹத்தார் நிர்வாக சபையினர் தெரிவித்தனர். விழா ஏற்பாடுகளை ஏர்வாடி தர்கா ஹக்தார் நிர்வாக சபை தலைவர் பக்கீர் சுல்தான், உபதலைவர் சாதிக் பாட்சா, செயலாளர் சிராஜூதீன் ஆகியோர் தலைமையில் தர்கா ஹக்தார் நிர்வாக சபையினர் செய்திருந்தனர்.பாதுகாப்பு பணிகளில் ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உத்தரவின் பேரில் கீழக்கரை துணை சூப்பிரண்டு சுபாஷ் தலைமையில் ஏராளமான போலீசார் ஈடுபட்டு இருந்தனர்.

  ×