திருப்பரங்குன்றம் தர்காவில் அனைத்து நாட்களிலும் தொழுகை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி மறுப்பு

தர்காவில் பக்ரீத், ரலமான் பண்டிகைகள் மட்டுமே தொழுகை நடத்த உயர்நீதிமன்ற அனுமதி உள்ளது.அங்கு விலங்குகளை பலியிட கூடாது என்ற உயர்நீதிமன்ற உத்தரவையும் உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தி உள்ளது.
திருப்பரங்குன்றம் தர்காவில் அனைத்து நாட்களிலும் தொழுகை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி மறுப்பு
Published on

திருப்பரங்குன்றம் முருகன் கோயில் அருகே நெல்லித்தோப்பு பகுதியில் உள்ள தர்காவில் பக்ரீத், ரலமான் பண்டிகைகள் மட்டுமே தொழுகை நடத்த உயர்நீதிமன்ற அனுமதி உள்ளது.

அனைத்து நாள்களிலும் தொழுகை நடத்த அனுமதி கோரி இமாம் உசேன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் பிரஷாந்த் பூஷண், ''நெல்லித்தோப்பு பகுதி இஸ்லாமியர்களுக்குச் சொந்தமானதாக இருக்கும்போது, அங்கு தொழுகை நடத்த அனுமதி மறுப்பது ஏற்புடையதல்ல. தொழுகை நடத்துவதால் அங்கு சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டதில்லை'' என வாதிட்டார்.

ஆனால்,உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு சமநிலையாக உள்ளதாகவும், இதில் தலையிட விரும்பவில்லை எனக் குறிப்பிட்டு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு மனுவை தள்ளுபடி செய்தது.

மேலும், அங்கு விலங்குகளை பலியிட கூடாது என்ற உயர்நீதிமன்ற உத்தரவையும் உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தி உள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com