என் மலர்
நீங்கள் தேடியது "சென்னை உயர் நீதிமன்றம்"
- குடிநீர், கழிவறை வசதிகள், முதலுதவி மற்றும் ஆம்புலன்ஸ் வசதிகளை ஏற்பாட்டாளர்கள் கட்டாயம் உறுதி செய்ய வேண்டும்
- பல்வேறு விதிமுறைகள் அடங்கிய வழிகாட்டு நெறிமுறைகளை ஜன.5ஆம் தேதி அரசு வெளியிட்டது.
தவெக தலைவர் விஜய்யின் கரூர் பரப்புரை கூட்டத்தில் சிக்கி 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதனைத்தொடர்ந்து அரசியல் கட்சி கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு தயாரிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி கூட்டம் தொடங்குவதற்கு 2 மணி நேரத்திற்கு முன்பாக மட்டுமே தொண்டர்களை அனுமதிக்க வேண்டும்; முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குத் தனி இடம் ஒதுக்கப்பட வேண்டும்; அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட 50% மேல் மக்கள் கூடினால் அது விதிமீறலாகக் கருதப்படும்; குடிநீர், கழிவறை வசதிகள், முதலுதவி மற்றும் ஆம்புலன்ஸ் வசதிகளை ஏற்பாட்டாளர்கள் கட்டாயம் உறுதி செய்ய வேண்டும்; அரசு அறிவித்துள்ள குறிப்பிட்ட இடங்களில் கூட்டம் நடத்த 10 நாட்களுக்கு முன்பாக விண்ணப்பிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் அடங்கிய வழிகாட்டு நெறிமுறைகளை ஜன.5ஆம் தேதி அரசு வெளியிட்டது.
இந்நிலையில் அரசியல் கட்சிகளின் சாலைவலங்களை முறைப்படுத்தும் தமிழ்நாடு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை ரத்து செய்ய வேண்டும் என தமிழக வெற்றிக் கழகம் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அக்கட்சியின் இணைப் பொதுச்செயலாளர் நிர்மல்குமார் தாக்கல் செய்துள்ள மனுவில் வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட்டுள்ள நிபந்தனைகள் பின்பற்றுவதற்கு சாத்தியமில்லாத வகையில் உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன எனவும், புதிய வழிகாட்டு நெறிமுறைகளால் பதிவு செய்யப்பட்டு அங்கீகாரம் பெறாத கட்சிகள் பாதிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
- ஆகஸ்ட் 16, 2022-ல் வருமான வரித்துறை உத்தரவிற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
- வருமான வரிச் சட்டத்தின் கீழ் இந்த அபராதம் முறையாகவே விதிக்கப்பட்டுள்ளது
வருமான வரித்துறைக்கு எதிராக நடிகரும், தவெக தலைவருமான விஜய் தாக்கல் செய்த மனுமீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.
2015-16 நிதியாண்டில் 'புலி' படத்திற்காக பெற்ற ரூ.15 கோடி வருமானத்தை மறைத்ததாகக் கூறி, 2022-ல் வருமான வரித்துறை விஜய்க்கு ரூ. 1.5 கோடி அபராதம் விதித்தது. இதனை எதிர்த்து விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட தனி நீதிபதி ஆகஸ்ட் 16, 2022-ல் வருமான வரித்துறை உத்தரவிற்கு இடைக்கால தடைவிதித்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தநிலையில், இந்த அபராத உத்தரவு சட்டப்பூர்வமான காலக்கெடுவுக்குள் பிறப்பிக்கப்படவில்லை என்றும், காலதாமதமாக பிறப்பிக்கப்பட்டதால் இதை ரத்து செய்ய வேண்டும் என்றும் விஜய் தரப்பில் வாதிடப்பட்டது. அதற்கு வருமான வரிச் சட்டத்தின் கீழ் இந்த அபராதம் முறையாகவே விதிக்கப்பட்டுள்ளது என்றும், விஜய்யின் மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் வருமான வரித்துறை வாதிட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளார்.
- ஜனவரி 9 அன்று தனி நீதிபதி பி.டி.ஆஷா இப்படத்திற்கு 'U/A 16+* சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார்.
- காலை 10.30 மணிக்கு முதல் வழக்காக தலைமை நீதிபதி அமர்வு விசாரிக்கிறது.
ஹெச். வினோத் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள படம் ஜன நாயகன். பொங்கலை முன்னிட்டு, ஜன.9ஆம் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தணிக்கை சான்றிதழ் இழுபறியால் தற்போதுவரை வெளியாகவில்லை. முன்னதாக படத்திற்கு விரைந்து சான்றிதழ் வழங்க உத்தரவிடக்கோரி படக்குழு உயர்நீதிமன்றத்தை நாடியது. இதனையடுத்து ஜனவரி 9 அன்று தனி நீதிபதி பி.டி.ஆஷா இப்படத்திற்கு 'U/A 16+* சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார்.
இருப்பினும், இந்த உத்தரவை எதிர்த்து மத்திய தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்ததால், சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு அத்தீர்ப்பிற்கு இடைக்காலத் தடை விதித்தது. இந்த உத்தரவை எதிர்த்து தயாரிப்பு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தை நாடியநிலையில் இது குறித்து சென்னை உயர்நீதிமன்றமே ஜனவரி 20 அன்று இறுதி முடிவெடுக்க வேண்டும் என்று பொங்கலன்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனைத்தொடர்ந்து ஜன.20 அன்று ஜன நாயகன் வழக்கு மீண்டும் உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அன்று தயாரிப்பு நிறுவனம், தணிக்கை வாரியம் என இருதரப்புகளும் மாறி மாறி தங்கள் வாதங்களை முன்வைத்தன. நீதிபதிகளும் பல்வேறு கேள்விகளை இருதரப்பினரிடமும் எழுப்பினர். அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்தநிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளிவைத்தது உயர் நீதிமன்றம். இதனால் ஜன நாயகன் வெளியீடு இன்னும் தள்ளிப்போகும் சூழல் உருவானது.
இந்நிலையில் இந்த வழக்கில் வரும் ஜன.27ஆம் தேதியன்று தீர்ப்பு வழங்குகிறது சென்னை உயர் நீதிமன்றம். காலை 10.30 மணிக்கு முதல் வழக்காக தலைமை நீதிபதி அமர்வு ஜன நாயகன் தணிக்கை வழக்கை விசாரிக்கிறது.
- நீதிபதி பி.டி.ஆஷா ஜனநாயகன் படத்திற்கு 'U/A 16+* சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார்.
- ஜனநாயகன் சென்சார் விவகாரம் தொடர்பாக மோகன் ஜி பேசினார்.
ஹெச். வினோத் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள படம் ஜன நாயகன். பொங்கலை முன்னிட்டு, ஜன.9ஆம் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தணிக்கை சான்றிதழ் இழுபறியால் தற்போதுவரை வெளியாகவில்லை. இதனிடையே படத்திற்கு விரைந்து சான்றிதழ் வழங்க உத்தரவிடக்கோரி படக்குழு உயர்நீதிமன்றத்தை நாடியது. இதனையடுத்து ஜனவரி 9 அன்று தனி நீதிபதி பி.டி.ஆஷா இப்படத்திற்கு 'U/A 16+* சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார்.
இருப்பினும், இந்த உத்தரவை எதிர்த்து மத்திய தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்ததால், சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு அத்தீர்ப்பிற்கு இடைக்காலத் தடை விதித்தது. இந்த உத்தரவை எதிர்த்து தயாரிப்பு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தை நாடியநிலையில் இது குறித்து சென்னை உயர்நீதிமன்றமே ஜனவரி 20 அன்று இறுதி முடிவெடுக்க வேண்டும் என்று பொங்கலன்று உத்தரவிட்டது.
இதனையடுத்து ஜன நாயகன் தணிக்கை விவகார வழக்கு ஜனவரி 20 அன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. தயாரிப்பு நிறுவனம், தணிக்கை வாரியம் என இருதரப்புகளும் மாறி மாறி தங்கள் வாதங்கள் முன்வைத்தன. தொடர்ந்து இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளிவைத்தது உயர் நீதிமன்றம். இதனால் ஜன நாயகன் வெளியீடு இன்னும் தள்ளிப்போகும் சூழல் உருவாகி உள்ளது.
இந்நிலையில், திரௌபதி 2 படம் தொடர்பாக பேட்டி அளித்த மோகன் ஜி, சென்சார் தொடர்பாக பேசினார்.
அந்த பேட்டியில், "சென்சார் போர்டுக்கு என்று சில விதிமுறைகள் உள்ளது. அந்த விதிமுறைகளை பின்பற்றாமல் நீதிமன்றத்துக்கு சென்றால் ஜெயிக்க முடியாது " என்று கூறி விஜய் ரசிகர்களை சீண்டியுள்ளார். .
- நீதிபதி பி.டி.ஆஷா இப்படத்திற்கு 'U/A 16+* சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார்.
- சென்னை உயர்நீதிமன்றமே இறுதி முடிவெடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
ஹெச். வினோத் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள படம் ஜன நாயகன். பொங்கலை முன்னிட்டு, ஜன.9ஆம் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தணிக்கை சான்றிதழ் இழுபறியால் தற்போதுவரை வெளியாகவில்லை. இதனிடையே படத்திற்கு விரைந்து சான்றிதழ் வழங்க உத்தரவிடக்கோரி படக்குழு உயர்நீதிமன்றத்தை நாடியது. இதனையடுத்து ஜனவரி 9 அன்று தனி நீதிபதி பி.டி.ஆஷா இப்படத்திற்கு 'U/A 16+* சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார்.
இருப்பினும், இந்த உத்தரவை எதிர்த்து மத்திய தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்ததால், சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு அத்தீர்ப்பிற்கு இடைக்காலத் தடை விதித்தது. இந்த உத்தரவை எதிர்த்து தயாரிப்பு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தை நாடியநிலையில் இது குறித்து சென்னை உயர்நீதிமன்றமே ஜனவரி 20 அன்று இறுதி முடிவெடுக்க வேண்டும் என்று பொங்கலன்று உத்தரவிட்டது.
இந்நிலையில் ஜன நாயகன் தணிக்கை விவகார வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. காலை 11.30 முதல் நான்கு மணிவரை தயாரிப்பு நிறுவனம், தணிக்கை வாரியம் என இருதரப்புகளும் மாறி மாறி தங்கள் வாதங்கள் முன்வைத்தன. தொடர்ந்து இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை தள்ளிவைத்தது உயர் நீதிமன்றம். இதனால் ஜன நாயகன் வெளியீடு இன்னும் தள்ளிப்போகும் சூழல் உருவாகி உள்ளது.
- 500 கோடி முதலீடு செய்துள்ளதாக கூறி உடனடி நிவாரணம் கோர முடியாது
- படத்துக்கு சான்றிதழ் வழங்குவது குறித்து சென்சார் போர்டு தான் இறுதி முடிவு அறிவிக்கும்
ஹெச். வினோத் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள படம் ஜன நாயகன். பொங்கலை முன்னிட்டு, ஜன.9ஆம் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தணிக்கை சான்றிதழ் இழுபறியால் தற்போதுவரை வெளியாகவில்லை. இதனிடையே படத்திற்கு விரைந்து சான்றிதழ் வழங்க உத்தரவிடக்கோரி படக்குழு உயர்நீதிமன்றத்தை நாடியது. இதனையடுத்து ஜனவரி 9 அன்று தனி நீதிபதி பி.டி.ஆஷா இப்படத்திற்கு 'U/A 16+' சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார்.
இருப்பினும், இந்த உத்தரவை எதிர்த்து மத்திய தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்ததால், சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு அத்தீர்ப்பிற்கு இடைக்காலத் தடை விதித்தது. இந்த உத்தரவை எதிர்த்து தயாரிப்பு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தை நாடியநிலையில் இது குறித்து சென்னை உயர்நீதிமன்றமே ஜனவரி 20 அன்று இறுதி முடிவெடுக்க வேண்டும் என்று பொங்கலன்று உத்தரவிட்டது.
இந்நிலையில் ஜனநாயகன் வழக்கு இன்று மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சினிமாட்டோகிராஃப் விதிகளின்படி, வாரியமே ஒரு படத்தைப் பார்த்து சான்றிதழைப் பரிந்துரைக்கலாம் அல்லது படத்தைப் பார்க்கும் பணியை மறு ஆய்வுக் குழுவுக்கு அனுப்பலாம். ஜனநாயகன் படம் தொடர்பாக புகார் வந்ததால் மறு ஆய்வுக் குழுவுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது என தணிக்கை வாரியம் தெரிவித்தது.
தொடர்ந்து மறு தணிக்கை தொடர்பாக ஜனவரி 5ஆம் தேதியே ஜனநாயகன் பட தயாரிப்பு நிறுவனத்திற்கு தகவல் கொடுத்துவிட்டோம். ஜனவரி 6ம் தேதி தான் சான்றிதழ் கோரி பட தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. மறுஆய்வு முடிவை எதிர்த்து பட தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடரவில்லை. பதில் மனு தாக்கலுக்கு அவகாசம் தராமல், மறு ஆய்வுக் குழுவுக்கு அனுப்பிய உத்தரவு தனி நீதிபதியால் ரத்து செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
மேலும் வழக்கில் தணிக்கை வாரியம் பதிலளிக்க தனி நீதிபதி குறைந்தபட்ச கால அவகாசம் வழங்கியிருக்க வேண்டும். படத்தை 9ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளதாகவும், 500 கோடி முதலீடு செய்துள்ளதாகவும் கூறி உடனடி நிவாரணம் கோர முடியாது என தணிக்கை வாரியம் தெரிவித்தது.
இதனையடுத்து மண்டல வாரியத்தில் யார் படத்தை பார்த்தார்கள்? சட்டப்படி படத்தை பார்த்து ஆய்வு செய்ய யாருக்கு அதிகாரம் உள்ளது? என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். படத்தை பார்த்து ஆய்வு செய்து ஆலோசனை வழங்க குழு உள்ளது. அந்த குழு தான் படத்தை பார்த்தது என தணிக்கை வாரியம் தெரிவித்தது.
தொடர்ந்து மண்டல தணிக்கை வாரிய அதிகாரி ஜனநாயகன் படத்தைப் பார்த்தாரா? என நீதிபதி கேள்வி. அதற்கு அவர் படத்தைப் பார்க்கவில்லை, தணிக்கை குழுவால் மட்டுமே பார்க்கப்பட்டது. படத்துக்கு சான்றிதழ் வழங்குவது குறித்து சென்சார் போர்டு தான் இறுதி முடிவு அறிவிக்கும் என தணிக்கை வாரியம் தெரிவித்தது. தொடர்ந்து பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட தணிக்கை சான்றிதழ் வழங்குவதை நிறுத்த சொன்னது யார் என நீதிபதி வினவினார். அதற்கு, புகாரை அடுத்து சான்றிதழ் வழங்கும் முடிவை நிறுத்திவைத்தோம். தற்போதுவரை இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என தணிக்கை வாரியம் தெரிவித்தது.
தொடர்ந்து உணவு இடைவேளைக்கு பிறகு தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- அண்மையில் நடிகர் விஜய்யின் பெயரைக்கூறி, சிறுவர் ஒருவர் மோசடியில் ஈடுப்பட்டிருந்தார்
- கமல்ஹாசன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
நடிகர் கமல்ஹாசன் தனது பெயர், புகைப்படம், குரல் மற்றும் 'உலகநாயகன்' என்ற பட்டத்தையும் அனுமதி இல்லாமல் வணிக ரீதியாகப் பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
'நீயே விடை' என்ற நிறுவனம் அனுமதியின்றி கமலின் புகைப்படங்களையும், வசனங்களையும் டி-சர்ட்டுகளில் பயன்படுத்துவதை சுட்டிக்காட்டி உரிமையியல் வழக்குத் தொடர்ந்துள்ளார். சிறுவயதிலிருந்தே திரையுலகில் இருந்து வருவதாகவும், பல்வேறு கலை வடிவங்களில் தனக்கிருக்கும் நிபுணத்துவத்தின் மூலம் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கமல்ஹாசனின் பெயர், புகைப்படங்களை அனுமதியின்றி வணிக ரீதியாக பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
சமீப நாட்களாகவே பிரபல நடிகர், நடிகைகளின் பெயரைப் பயன்படுத்தி, சில நிறுவனங்கள் உரிய அனுமதி இன்றி தங்களது உற்பத்தி பொருட்களை விளம்பரம் செய்து வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துவருகிறது. அண்மையில் கூட நடிகர் விஜய்யின் பெயரைக்கூறி, சிறுவர் ஒருவர் மோசடியில் ஈடுப்பட்டிருந்தார். நடிகை ஐஸ்வர்யா ராய் தொடங்கி அபிஷேக் பச்சன், அமிதாப் பச்சன், சல்மான் கான், நடிகர் மாதவன் என பல பிரபலங்களும் நீதிமன்றத்தை நாடி உரிமையியல் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- அண்மையில் நடிகர் விஜய்யின் பெயரைக்கூறி, சிறுவர் ஒருவர் மோசடியில் ஈடுப்பட்டிருந்தார்
- வழக்கு நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது
நடிகர் கமல்ஹாசன் தனது பெயர், புகைப்படம், குரல் மற்றும் 'உலகநாயகன்' என்ற பட்டத்தையும் அனுமதி இல்லாமல் வணிக ரீதியாகப் பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் தாக்கல் செய்துள்ள இந்த வழக்கையும், இடைக்காலத் தடையுத்தரவு கோரும் அவரது மனுவையும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி நாளை (ஜனவரி 12, ) விசாரிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
'நீயே விடை' என்ற நிறுவனம் அனுமதியின்றி கமலின் புகைப்படங்களையும், வசனங்களையும் டி-சர்ட்டுகளில் பயன்படுத்துவதை சுட்டிக்காட்டி உரிமையியல் வழக்குத் தொடர்ந்துள்ளார். சிறுவயதிலிருந்தே திரையுலகில் இருந்து வருவதாகவும், பல்வேறு கலை வடிவங்களில் தனக்கிருக்கும் நிபுணத்துவத்தின் மூலம் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
சமீப நாட்களாகவே பிரபல நடிகர், நடிகைகளின் பெயரைப் பயன்படுத்தி, சில நிறுவனங்கள் உரிய அனுமதி இன்றி தங்களது உற்பத்தி பொருட்களை விளம்பரம் செய்து வருவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துவருகிறது. அண்மையில் கூட நடிகர் விஜய்யின் பெயரைக்கூறி, சிறுவர் ஒருவர் மோசடியில் ஈடுப்பட்டிருந்தார். நடிகை ஐஸ்வர்யா ராய் தொடங்கி அபிஷேக் பச்சன், அமிதாப் பச்சன், சல்மான் கான், நடிகர் மாதவன் என பல பிரபலங்களும் நீதிமன்றத்தை நாடி உரிமையியல் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- சான்றிதழ் பெற இன்னும் கொஞ்ச நாள் காத்திருந்திருக்கலாம்
- உத்தரவின்படி வரும் 21-ம் தேதி வரை படம் வெளியாக வாய்ப்பில்லை.
'ஜனநாயகன்' திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழை விரைவில் வழங்க உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில், படத்திற்கு விரைந்து யுஏ தணிக்கைச் சான்றிதழ் அளிக்க வேண்டும் என தனி நீதிபதி பி.டி.ஆஷா உத்தரவிட்டார்.
இதனைத்தொடர்ந்து இந்த உத்தரவை எதிர்த்து தணிக்கை வாரியம் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது. இந்த மேல்முறையீடு மீதான விசாரணை உயர்நீதிமன்றத்தில் மதியம் 3.30 மணிக்கு தலைமை நீதிபதி தலைமையில் தொடங்கியது. அப்போது, 'இன்றைய தினமே மேல் முறையீடு செய்ய என்ன அவசரம்?' என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அதற்கு தணிக்கை வாரியம் தரப்பில், "எங்களுக்கு உரிய கால அவகாசம் வழங்காமல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தணிக்கை வாரிய தலைவரின் அதிகாரம் குறித்து நீதிபதி முடிவெடுத்துள்ளார். இது குறித்து விரிவாக விவாதித்திருக்க வேண்டும். நியாயமான அவகாசம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். அதன்பின் பரிசீலித்திருக்க வேண்டும். படத்தை மறு ஆய்வு செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய கோராத நிலையில் அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது." என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைக்கேட்ட நீதிபதி பல்வேறு நடைமுறைகள் இருக்கும் போது, பொறுமையாகக் காத்திருக்க வேண்டும். அதை விடுத்து நீதிமன்றத்துக்கு அழுத்தம் கொடுத்தது ஏன்? பதில் மனு தாக்கல் செய்ய வாய்ப்பளிக்காமல் தனி நீதிபதி எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும்? பதிலளிக்க உரிய கால அவகாசம் வழங்காமல் 24 மணிநேரத்தில் உத்தரவு பிறப்பித்ததற்கான அவசியம் என்ன? பதில் அளிக்க 2 அல்லது 3 நாட்கள் அவகாசம் அளிக்க உரிமை இல்லையா? தணிக்கை சான்றிதழ் வழங்குவதற்கு முன்பே தயாரிப்பாளர் எப்படி வெளியீட்டுத் தேதியை நிர்ணயிக்க முடியும்?
நீங்கள் தேதியை அறிவித்துள்ளீர்கள் என்பதற்காக எல்லோரும் உங்கள் விருப்பத்துக்கு ஏற்ப செயல்பட வேண்டுமா? சான்றிதழ் பெற ஏன் இவ்வளவு அவசரம்? சான்றிதழ் பெற இன்னும் கொஞ்ச நாள் காத்திருந்திருக்கலாம் எனக்கூறி படத்திற்கு U/A சான்றிதழ் வழங்க உத்தரவிடக்கோரிய தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடைவிதித்து விசாரணையை ஜன.21க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். உயர் நீதிமன்ற உத்தரவின்படி பார்க்கும்போது வரும் 21-ம் தேதி வரை படம் வெளியாக வாய்ப்பில்லை.
- மேல்முறையீட்டு மனுவை திங்கள்கிழமையன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என தணிக்கை வாரியம் தெரிவித்தது.
- சான்றிதழ் பெற ஏன் இவ்வளவு அவசரம்?
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள திரைப்படம் 'ஜனநாயகன்'. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படம் ஜனவரி 9 அன்று திரைக்கு வரும் என படக்குழு அறிவித்திருந்தது.
ஆனால் தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் எழுந்தது. இதையடுத்து, 'ஜனநாயகன்' திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழை விரைவில் வழங்க உத்தரவிடக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடுத்தது. அப்போது படத்திற்கு எதிராக தணிக்கை வாரியத்தைச் சேர்ந்த ஒருவர் புகார் அளித்திருப்பதாக தணிக்கை வாரியம் தெரிவித்தது. இதனையடுத்து படத்திற்கு எதிராக தொடரப்பட்ட புகாரை தாக்கல் செய்ய மத்திய தணிக்கை வாரியத்திற்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் 'ஜன நாயகன்'-ல் இருக்கும் பிரச்சனைகளை குறிப்பிட்டு, சீலிடப்பட்ட கவரில் தணிக்கை வாரியம் தரப்பு தாக்கல் செய்தது. இதையடுத்து, இருதரப்பு வாதங்களையும் நீதிபதி பி.டி.ஆஷா கேட்டறிந்த நிலையில், இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பளித்தார். அதன்படி படத்திற்கு உடனடியாக தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார்.
இந்நிலையில் நீதிபதி பி.டி.ஆஷாவின் இந்த தீர்ப்பை எதிர்த்து தணிக்கை வாரியம் தலைமை நீதிபதி அமர்வில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது. மேலும் இந்த மனுவை திங்கள்கிழமையன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என தெரிவித்தது. அதற்கு நீங்கள் மனுவை தாக்கல் செய்யுங்கள். எப்போது விசாரிக்கவேண்டும் என்பதை நாங்கள் முடிவுசெய்து கொள்கிறோம் என தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்தது.
இந்நிலையில் மனுவிசாரணை 3.30க்கு தொடங்கியது. அப்போது தனி நீதிபதி உத்தரவு தொடர்பாக கேள்விகளை அடுக்கிய தலைமை நீதிபதி, மறுஆய்வு குழுவுக்கு அனுப்பிய உத்தரவை எதிர்த்து படநிறுவனம் வழக்குத் தொடரவில்லை. ஆனால் தனி நீதிபதி அந்த உத்தரவை ரத்து செய்துள்ளார். தணிக்கை வாரியத்துக்கு உரிய கால அவகாசம் வழங்காமல் 24 மணி நேரத்தில் தனி நீதிபதி எதற்காக உத்தரவு பிறப்பித்தார்? சான்றிதழ் பெற ஏன் இவ்வளவு அவசரம்? சான்றிதழ் பெற இன்னும் கொஞ்ச நாள் காத்திருந்திருக்கலாம் எனக்கூறி படத்திற்கு U/A சான்றிதழ் வழங்க உத்தரவிடக்கோரிய தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடைவிதித்து விசாரணையை ஜன.21க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
- தணிக்கை குழு உறுப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில் மறு ஆய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது
- படத்துக்கு யு/ ஏ சான்று வழங்க முடிவு செய்த பின் மறு ஆய்வுக்கு அனுப்பியது ஏன்? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்தப்படம் ஜன நாயகன். இப்படம் பொங்கலை முன்னிட்டு ஜன.9 திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஆனால், இதுவரை படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதனைத்தொடர்ந்து படத்திற்கு சான்றிதழ் வழங்க மத்திய தணிக்கை வாரியத்திற்கு உத்தரவிடக் கோரி பட தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர்ந்தது.
நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது பட தயாரிப்பு நிர்வாணம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "பரிந்துரைத்த மாற்றங்களை செய்தால், 'U/A சான்றிதழ் வழங்குகிறோம் எனக் கூறினார்கள். அதனடிப்படையில் தணிக்கை வாரியம் கூறிய அனைத்து திருத்தங்களும் செய்யப்பட்டது. அதனை கண்காணிப்பு அதிகாரியும் உறுதி செய்தார். ஆனால் படத்தில் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் காட்சிகள் உள்ளதாக யாரோ ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் இதுவரை சான்றிதழ் வழங்கப்படவில்லை" என்று வாதம் வைத்தார்.
மேலும், "யாருமே இன்னும் படத்தை பார்க்காத நிலையில் சிலர் படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். யார் வேண்டுமானாலும் படத்திற்கு எதிராக புகார் அளிக்கலாம் என்ற பிரிவு நீக்கப்பட்டுள்ளது. ரூ.500 கோடி முதலீடு செய்யபட்டுள்ள நிலையில் யாரோ ஒருவர் அளித்த புகாரின்பேரில் இன்னும் சான்றிதழ் வழங்கமால் இருக்கிறார்கள்." என தயாரிப்பு நிறுவனம் வாதங்களை முன்வைத்தது.
இதனைத்தொடர்ந்து குறிப்பிட்ட காலத்திற்குள் சான்றிதழ் வழங்க வேண்டுமென மனுதாரர் கோரமுடியாது என தணிக்கை வாரியம் தெரிவித்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பி.டி. ஆஷா, ஜனநாயகன் படத்திற்கு எதிராக தொடரப்பட்ட புகாரை நாளை தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய தணிக்கை வாரியத்திற்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து ஏன் படத்தை ஜன.10ஆம் தேதிக்கு ரிலீஸ் செய்யக்கூடாது? தை பிறந்தால் வழி பிறக்குமே? எனக்கூறி வழக்கை நாளை (ஜன.7) ஒத்திவைத்தார்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, படம் பார்த்த தணிக்கை குழு உறுப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில் மறு ஆய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது என்று சென்சார் போர்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. படத்துக்கு யு/ ஏ சான்று வழங்க முடிவு செய்த பின் மறு ஆய்வுக்கு அனுப்பியது ஏன்? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.
நீதிபதி கேள்விக்கு பதில் அளித்த சென்சார் போர்டு வழக்கறிஞர், "ஜனநாயகன் படத்தில் ராணுவப் படைகளின் இலச்சினை பயன்படுத்தப்பட்டுள்ளதால், அத்துறை நிபுணரிடம் ஆலோசனை பெற்றிருக்க வேண்டும்.
சென்சார் பரிசீலனைக் குழுவில் இடம்பெறாத உறுப்பினர்களைக் கொண்ட ஒரு புதிய குழுவால் ஜனநாயகன் படம் மறுபடியும் பார்க்கப்பட வேண்டும்
ஒரு திரைப்படத்தை தணிக்கை குழு பார்வையிட்ட பிறகும், அதனை மறுதணிக்கைக்கு உத்தரவிட தணிக்கை குழு தலைவருக்கு அதிகாரம் உண்டு. மறுதணிக்கை குறித்து தயாரிப்பு நிறுவனத்திற்கு தகவல் அனுப்பினோம். 14 காட்சிகளை நீக்க ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்டது. நாளை மறுதினம் படம் ரிலீஸ் எனக்கூறி சென்சார் சான்று கேட்க முடியாது
பின்னர் பேசிய நீதிபதி, "விதிகளின் அடிப்படையில் பரிசீலித்து முடிவெடுக்க மட்டுமே சென்சார் போர்டுக்கு உத்தரவிட முடியும். தணிக்கை வாரியத்தின் Timeline-ஐ பின்பற்றித்தான் ஆக வேண்டும்" என்று தெரிவித்தார்.
இதனையடுத்து, ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க கோரிய வழக்கின் தீர்ப்பை, நாளை காலை ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம். இதனால் திட்டமிட்டபடி ஜனநாயகன் படம் வெளியாவதில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
- பரிந்துரைத்த மாற்றங்களை செய்தால், 'U/A சான்றிதழ் வழங்குகிறோம் எனக் கூறினார்கள்.
- தை பிறந்தால் வழி பிறக்குமே?
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்தப்படம் ஜன நாயகன். இப்படம் பொங்கலை முன்னிட்டு ஜன.9 திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ஆனால், இதுவரை படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதனைத்தொடர்ந்து படத்திற்கு சான்றிதழ் வழங்க மத்திய தணிக்கை வாரியத்திற்கு உத்தரவிடக் கோரி பட தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர்ந்தது.
இன்று பிற்பகல் வழக்கு விசாரணைக்கு வந்தநிலையில்,
"பரிந்துரைத்த மாற்றங்களை செய்தால், 'U/A சான்றிதழ் வழங்குகிறோம் எனக் கூறினார்கள். அதனடிப்படையில் தணிக்கை வாரியம் கூறிய அனைத்து திருத்தங்களும் செய்யப்பட்டது. அதனை கண்காணிப்பு அதிகாரியும் உறுதி செய்தார்.
ஆனால் படத்தில் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் காட்சிகள் உள்ளதாக யாரோ ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் இதுவரை சான்றிதழ் வழங்கப்படவில்லை.
யாருமே இன்னும் படத்தை பார்க்காத நிலையில் சிலர் படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். யார் வேண்டுமானாலும் படத்திற்கு எதிராக புகார் அளிக்கலாம் என்ற பிரிவு நீக்கப்பட்டுள்ளது. ரூ.500 கோடி முதலீடு செய்யபட்டுள்ள நிலையில் யாரோ ஒருவர் அளித்த புகாரின்பேரில் இன்னும் சான்றிதழ் வழங்கமால் இருக்கிறார்கள்." என தயாரிப்பு நிறுவனம் வாதங்களை முன்வைத்தது.
இதனைத்தொடர்ந்து குறிப்பிட்ட காலத்திற்குள் சான்றிதழ் வழங்க வேண்டுமென மனுதாரர் கோரமுடியாது என தணிக்கை வாரியம் தெரிவித்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பி.டி. ஆஷா, ஜனநாயகன் படத்திற்கு எதிராக தொடரப்பட்ட புகாரை நாளை தாக்கல் செய்ய வேண்டும் என மத்திய தணிக்கை வாரியத்திற்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து ஏன் படத்தை ஜன.10ஆம் தேதிக்கு ரிலீஸ் செய்யக்கூடாது? தை பிறந்தால் வழி பிறக்குமே? எனக்கூறி வழக்கை நாளை (ஜன.7) ஒத்திவைத்து உத்தரவிட்டார். ஜன.10 சிவகார்த்திகேயனின் பராசக்தி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.






