என் மலர்
நீங்கள் தேடியது "Actor kamal haasan"
- அகரம் தொண்டு நிறுவனத்தின் 15வது ஆண்டு விழா நேற்று நடைபெற்றது.
- இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கமல் ஹாசன் எம்.பி. பங்கேற்றார்.
நடிகர் சூர்யாவின் அகரம் தொண்டு நிறுவனத்தின் 15வது ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், கடந்த 15 ஆண்டுகளாக அகரத்தில் படித்து பயன்பெற்ற அனைத்து மாணவர்கள், மாணவிகளும் கலந்து கொண்டனர்.
மேலும், நடிகையும், சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா, சிவக்குமார், இயக்குனர் வெற்றி மாறான் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவையின் எம்.பி.,யுமான கமல் ஹாசன் பங்கேற்றார்.
இந்நிகழ்ச்சியில் சூர்யாவின் அகரம் அறக்கட்டளைக்கு இயக்குநர் த.செ.ஞானவேல் ரூ.50 லட்சம் நன்கொடை வழங்கினார்.
- நடிகர் சூர்யாவை கட்டியணைத்து கமல்ஹாசன் வாழ்த்தினார்.
- நான் ஓரளவுக்கு நல்லா நடிப்பேன். என் நடிப்பு மேல எனக்கே சந்தேகம் வந்திருச்சு.
நடிகர் சூர்யாவின் அகரம் தொண்டு நிறுவனத்தின் 15வது ஆண்டு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், கடந்த 15 ஆண்டுகளாக அகரத்தில் படித்து பயன்பெற்ற அனைத்து மாணவர்கள், மாணவிகளும் கலந்து கொண்டனர்.
மேலும், நடிகையும், சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா, சிவக்குமார், இயக்குனர் வெற்றி மாறான் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவையின் எம்.பி.,யுமான கமல் ஹாசன் பங்கேற்றார்.
அப்போது, சூர்யாவை கட்டியணைத்து கமல்ஹாசன் வாழ்த்தினார்.
பின்னர், நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேசியதாவது:-
டீஸர், ட்ரெய்லர், இசை வெளியீட்டு விழா என எவ்வளவோ விழாக்கள் நடத்துகிறோம். அதிலெல்லாம் கிடைக்காத சந்தோசம் எனக்கு இதில் கிடைக்கிறது.
சனாதன சங்கிலிகளை, சர்வாதிகார சங்கிலிகளை எல்லாம் நொறுக்கித் தள்ளும் ஒரே ஆயுதம் கல்விதான். இதைத் தவிர வேறு எதையும் கையில் எடுக்காதீர்கள்.
நான் ஓரளவுக்கு நல்லா நடிப்பேன். என் நடிப்பு மேல எனக்கே சந்தேகம் வந்திருச்சு. அதனாலதான் இது(டிஷ்யூ பேப்பர்) கொண்டு வந்தேன். பரவால நான் நல்ல நடிகன்தான் அழாம பேசிட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கமல்ஹாசன் இன்று தனது 70-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
- தக் லைஃப் படத்தின் ரீலிஸ் தேதி இன்று காலை 11 மணிக்கு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
கமல்ஹாசன் இன்று தனது 70-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். நடிகர், இயக்குநர், பாடகர், நடனக்கலைஞர், சண்டைப் பயிற்சியாளர், என தனது 5 வயதில் இருந்து திரையுலகிற்கு பங்களித்து வரும் பெரும் கலைஞன். அந்த கலைஞனின் பிறந்தநாளை இன்று உலகம் முழுக்க இருக்கும் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
இந்நிலையில் கமலின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் தற்போது நடித்துள்ள தக் லைஃப் படத்தின் ரீலிஸ் தேதி இன்று காலை 11 மணிக்கு அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி தக் லைஃப் படத்தின் ரிலீஸ் தேதியை ஒரு சின்ன டீசராக படக்குழு வெளியிட்டுள்ளது. அடுத்த வருடம் ஜுன் 5-ந் தேதி படம் திரைக்கு வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னதாக தக் லைஃப் படத்தின் சிறப்பு போஸ்டர் வெளியாகியுள்ளது. அந்த போஸ்டரில் கமல் மற்றும் சிம்புவின் லுக் வெளியிடப்பட்டுள்ளது.
பல வருடங்களுக்கு பிறகு கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் கூட்டணியில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'தக் லைஃப் (Thug Life)'. இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், நாசர், சிலம்பரசன், ஜோஜூ ஜார்ஜ், அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி என பல்வேறு திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.
- வருங்கால தலைமுறையினருக்கு வழிகாட்டும் பல்கலைக்கழகமாய் விளங்கும் கலைத்துறையின் பேராசான்.
- இந்நூற்றாண்டின் ஈடுஇணையற்ற பெருங்கலைஞர்.
நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தனது 70-வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். இவருக்கு திரையுலகத்தினரும் அரசியல் கட்சி தலைவர்களும் பிறந்தநாள் வாழ்த்து கூறி வருகின்றனர்.
இந்நிலையில் வருங்கால தலைமுறையினருக்கு வழிகாட்டும் பல்கலைக்கழகமாய் விளங்கும் கலைத்துறையின் பேராசானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கூறியுள்ளார்.
இது குறித்து சீமான் கூறியதாவது:-
திரைக்கலை மீது கொண்டிருக்கும் அளப்பெரும் காதலால் புதுமையான முயற்சிகளையும், நவீன மாற்றங்களையும் புகுத்தி, தமிழ்த்திரையுலகைப் பன்னாட்டுத்தரத்திற்கு எடுத்துச் சென்ற ஆகச்சிறந்த திரைக்கலைஞர்!
நடிப்பின் பேரிலக்கணமாய் திகழ்ந்து, வருங்கால தலைமுறையினருக்கு வழிகாட்டும் பல்கலைக்கழகமாய் விளங்கும் கலைத்துறையின் பேராசான்!
நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், நடனக்கலைஞர், திரைக்கதை எழுத்தாளர், உரையாடல் ஆசிரியர், பாடலாசிரியர், பாடகர் எனப் பன்முகத்திறன் கொண்ட மகத்தான படைப்பாளி!
இந்நூற்றாண்டின் ஈடுஇணையற்ற பெருங்கலைஞர்! திரைத்துறையின் பேராளுமை!
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் பேரன்பிற்கினிய அண்ணன் கலைஞானி கமல்ஹாசன் அவர்களுக்கு அன்பு நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்! என கூறினார்.






