search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "naam tamilar party"

    • தேர்தலில் பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போடுவது தொடர்கிறது.
    • அதிகாரத்துக்கு வந்தவுடன் மீனவர்களை காக்க நெய்தல் படை அமைப்பேன்.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மயிலாப்பூர் பகுதியில் நேற்று பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    தேர்தலில் பணம் வாங்கிக்கொண்டு ஓட்டு போடுவது தொடர்கிறது. அதனை தகர்த்து புதிய கட்டமைப்பை உருவாக்குவது எவ்வளவு கடினம் என்று வரலாற்றை வாசித்து அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும்.

    40 தொகுதியிலும் நாம் மட்டுமே போட்டியில் உள்ளோம். போட்டியிட ஆள் இருக்கிறதா? என்று கேட்டவர்கள் கட்சியில் போட்டியிட ஆள் இல்லை.

    அதிகாரத்துக்கு வந்தவுடன் மீனவர்களை காக்க நெய்தல் படை அமைப்பேன். தம்பி அண்ணாமலையிடம் கூட நான் சொன்னேன். நீங்கள் எடுத்திருப்பது போலீஸ் பயிற்சி. நான் எடுத்திருப்பது போராளி பயிற்சி. இருவரும் மோதிப் பார்ப்போமா? என் முன்னாடி நீங்கள் ரொம்ப சாதாரணம். உங்களுக்கு பிரதமர் ஓட்டு கேட்டு வருவார். உள்துறை மந்திரி வருவார். எனக்கு எல்லாமே நான்தான். அப்ப நான்தானே கெத்து.

    தமிழர்களுக்கு இந்த ஒரு நிலம்தான் உனக்கும் இருக்கு. அதை எண்ணிப் பார்த்து செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தேர்தல் நடத்தும் உதவி அலுவலரான பாளை தாசில்தார் சரவணன் பாளை போலீசில் புகார் அளித்தார்.
    • வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான கடந்த 27-ந்தேதி நாம் தமிழர் கட்சி சார்பில் வேட்பாளர் சத்யாவும், தி.மு.க. கூட்டணி கட்சியான காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களும் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.

    அப்போது நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளுக்கும், தி.மு.க.வினருக்கும் இடையே கலெக்டர் அலுவலக வளாகத்தில் வைத்து வாக்குவாதம் ஏற்பட்டது.

    நாம் தமிழர் கட்சியினர் தாங்கள் மனுதாக்கல் செய்ய முதலில் வந்ததாகவும், குறைவான ஆதரவாளர்களுடன் மட்டுமே வந்ததாகவும், ஆனால் காங்கிரசார் அதிகமான எண்ணிக்கையில் வந்திருந்ததாகவும் கூறி நாம் தமிழர் கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தேர்தல் நடத்தும் உதவி அலுவலரான பாளை தாசில்தார் சரவணன் பாளை போலீசில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாம் தமிழர் கட்சி 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தது.
    • நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்தது.

    பாராளுமன்ற தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி தமிழகம் மற்றும புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்தது.

    தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது.

    இதை அடுத்து உச்ச நீதிமன்றத்தில் சீமான் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு, மேல்முறையீட்டு மனுவுக்கு ஏப்ரல் 1-ந் தேதிக்குள் பதில் அளிக்க தேர்தல் ஆணையத்திற்கும், பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கும் உத்தரவிட்டு இருந்தது.

    தொடர்ந்து, பாராளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்து அறிவித்தது.

    இந்நிலையில், தங்களுக்கு வேறு சின்னம் ஒதுக்கி தரும்படி நாம் தமிழர் கட்சி தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளது.

    மைக் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில் படகு அல்லது பாய்மரப் படகு சின்னத்தை நாம் தமிழர் கட்சி சார்பில் கேட்கப்பட்டுள்ளது.

    • நாம் தமிழர் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் செந்தில்குமார் வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.
    • சதி திட்டம் நிறைவேறாத காரணத்தால் தனது புகாரை திரும்ப பெற்றுக்கொண்டு பெங்களூருக்கு சென்றுவிட்டார்.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி பாலியல் புகார் தெரிவித்து இருந்தார்.

    இந்த வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும், தனது தற்கொலைக்கு சீமான் தான் காரணம் எனவும் வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

    இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் செந்தில்குமார் வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.

    தற்போது பெங்களூர் நகரில் வசித்து வரும் முன்னாள் நடிகையான விஜயலட்சுமி என்பவர், எங்களின் கட்சித் தலைவர் சீமான் மீது கடந்த 2011-ம் ஆண்டு உண்மைக்கு மாறான பொய்யான குற்றச்சாட்டோடு புகார் கொடுத்திருந்தார். இதனை தொடர்ந்து 2012-ம் ஆண்டு புகாரை திரும்பப்பெற்றுக் கொண்டார்.

    இந்நிலையில் நாம் தமிழர் கட்சி மற்றும் கட்சி தலைவர் சீமானுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருக்கும் அரசியல் கட்சிகள் மற்றும் வீரலட்சுமி என்ற பெண்ணோடு இணைந்து கூட்டு சதியில் ஈடுபடுகின்றனர். விஜயலட்சுமியை தூண்டி விட்டும், அவருக்கு உதவிகள் செய்தும், சீமான் மீது பொய்யான குற்றச் சாட்டுகளை கூறி மீண்டும் ஒரு புகாரை காவல் ஆணையரிடம் விஜயலட்சுமி கடந்த மாதம் கொடுத்தார்.

    சீமானிடம் இருந்து பணம் பறிக்க வேண்டும், நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தோடு கடந்த ஒரு மாதமாக விஜயலட்சுமி செயல்பட்டு வந்தார். இந்த திட்டம் நிறைவேறாத காரணத்தால் தனது புகாரை திரும்ப பெற்றுக்கொண்டு பெங்களூருக்கு சென்றுவிட்டார்.

    தற்போது ஐகோர்ட்டில் இது தொடர்பான வழக்கு விசாரணையில் இருக்கும் நிலையில், சீமானை மிரட்டி பணம் பறிக்கும் வகையில் விஜயலட்சுமி சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த வீடியோவில், நீர் மற்றும் உணவு அருந்தாமல் தானும் தனது அக்காவும் உயிரை மாய்த்துக் கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளார். இதற்கு சீமான் தான் காரணம் என விஜயலட்சுமி மிரட்டல் விடுத்துள்ளார்.

    கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் பலர் மீது குற்றச்சாட்டுகளை கூறிய விஜயலட்சுமி, ஏற்கனவே தற்கொலைக்கு முயன்று உள்ளார். தற்போது பொய்யான குற்றச்சாட்டுகளை கூறி தானும் தனது அக்காவும் உயிரை மாய்த்துக்கொள்ள இருப்பதாக சீமானையும், நாம் தமிழர் கட்சியினரையும் விஜயலட்சுமி மிரட்டுகிறார். எனவே விஜயலட்சுமி மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நாம் தமிழர் கட்சி சார்பில் 13-வது மே 18 தின இன எழுச்சி பொதுக்கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு தூத்துக்குடி புதூர் பாண்டி யாபுரம் விலக்கு பகுதியில் நடைபெற உள்ளது.
    • நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கினைப் பாளர் சீமான் கலந்து கொண்டு பேசுகிறார்.

    தூத்துக்குடி:

    நாம் தமிழர் கட்சி சார்பில் 13-வது மே 18 தின இன எழுச்சி பொதுக் கூட்டம் இன்று மாலை 4 மணிக்கு தூத்துக்குடி புதூர் பாண்டி யாபுரம் விலக்கு பகுதியில் நடைபெற உள்ளது.

    இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கினைப் பாளர் சீமான் கலந்து கொண்டு பேசுகிறார். கட்சி சார்பில் மே 18 தின முதல் மாநாடு பொதுக்கூட்டம் மதுரையில் நடை பெற்றது. 12-வது மாநாடு சென்னையில் நடை பெற்றது.13-வது மாநாடு இன்று மாலை தூத்துக்கு டி-எட்டையாபுரம் சாலை சுங்கச்சாவடி அருகே புதூர் பாண்டியாபுரம் விலக்கு பகுதியில் நடைபெறுகிறது.

    மாநாட்டு விழா ஏற்பாடு களை மாநில ஒருங்கிணைப் பாளர்கள் வக்கீல் சிவக் குமார், இசைமதிவானன், மண்டல ஒருங்கிணைப்பா ளர்கள் மற்றும் தூத்துக்குடி மத்திய மாவட்ட நாம் தமிழர் கட்சி செயலாளர் வேல்ராஜ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகி கள் முன்னிலையில் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

    இதில் மகளிர் அணி மாநில ஒருங்கிணைப்பாளர் கா.வள்ளி தூத்துக்குடி மாவட்டம் இரா. பட்டாணி, ஜெ.ரெஜின் மற்றும் அனைத்து மாவட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்கின்றனர்.

    • கடந்த சில நாட்களாக நாம் தமிழர் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    • ஓட்டுக்கு பணம் பெறக்கூடாது என்பதை வலியுறுத்தி ரூபாய் நோட்டு வடிவிலான விழிப்புணர்வு பிரசுரங்களை பிரச்சாரத்தின் போது பொதுமக்களுக்கு விநியோகம் செய்தனர்.

    ஈரோடு

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெறுகிறது. இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி கட்சி சார்பில் காங்கிரஸ், அ.தி.மு.க, அ.ம.மு.க, தே.மு.தி.க உள்பட பல்வேறு கட்சிகள், சுயேட்சைகள் போட்டியிடுகின்றனர்.

    இதேபோல் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. கடந்த சில நாட்களாக நாம் தமிழர் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று நாம் தமிழர் கட்சியினர் அக்ரஹாரம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டனர். அப்போது நூதனமான முறையில் பிரச்சாரம் மேற்கொண்டனர்.

    அதாவது ஓட்டுக்கு பணம் பெறக்கூடாது என்பதை வலியுறுத்தி ரூபாய் நோட்டு வடிவிலான விழிப்புணர்வு பிரசுரங்களை பிரச்சாரத்தின் போது அக்கட்சியினர் பொதுமக்களுக்கு விநியோகம் செய்தனர்.

    அந்த ரூபாய் நோட்டு பிரசுரத்தில் மகாத்மா காந்தி, விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், சீமான் படங்கள் இடம் பெற்றுள்ளன. லஞ்சம் தவிர், லஞ்சம் தராமல் நெஞ்சம் நிமிர் போன்ற வாசகங்கள் இடம் பெற்றிருந்தன.

    • தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சாம்பவர் வடகரை நகர நாம் தமிழர் கட்சி தலைவர் பத்ரகாளி பெருமாள் தலைமையில் ஒரு மனு கொடுக்கப்பட்டது.
    • சாம்பவர் வடகரை மேலரத வீதி 4-வது வார்டில் இயங்கி வரும் அரசு தொடக்கப்பள்ளியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கன மழையால் பள்ளி வகுப்பு மழை நீரில் மிதக்கிறது.

    சாம்பவர் வடகரை:

    தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சாம்பவர் வடகரை நகர நாம் தமிழர் கட்சி தலைவர் பத்ரகாளி பெருமாள் தலைமையில் ஒரு மனு கொடுக்கப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-

    சாம்பவர்வடகரை மேலரத வீதி 4-வது வார்டில் இயங்கி வரும் அரசு தொடக்கப்பள்ளியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கன மழையால் பள்ளி வகுப்பு மழை நீரில் மிதக்கிறது. மேற்கூரை மழை நீரால் ஒழுகி வகுப்புகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெல்லையில் பள்ளி சுவர் இடிந்து 3 மாணவர்கள் உயிரிழந்தனர். அதன் காரணமாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உத்தரவின் பேரில் தமிழகம் முழுவதும் உள்ள தரம் அற்ற பள்ளிகளை இடிக்க உத்தரவிட்டிருந்தனர். இப்பள்ளியில் ஒரு பகுதி இடிக்கப்பட்டது. அதுவும் இதுவரை கட்டித் தரப்படவில்லை.

    தற்போது உள்ள பள்ளியும் மழையால் நனைந்து மாணவர்களின் படிப்பு தடைப்படுகிறது. இப்பள்ளியில் மாணவர்கள் இடநெருக்கத்தாலும் அவதிப்படுகின்றனர். அதிக இட வசதியும் இல்லை.

    எனவே இப்பகுதி பள்ளி குழந்தைகளில் உயிர் சேதம் ஏதேனும் ஏற்படுவதற்கு முன்பு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பேரூராட்சி கீழூரில், வடக்கே எம்.ஜி.ஆர். காலனியில் சுமார் 120 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இக்காலணியில் வீட்டு கழிவுநீர் சாக்கடை செல்ல வாறுகால் வசதிகளை செய்து கொடுக்கவில்லை. அதனை நிறைவேற்றி தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இஸ்லாமியர்களின் வாக்கு வேண்டாம் என்று சொல்லும் பா.ஜனதா அவர்களுடைய வரி வேண்டாம் என்று சொல்லுமா?.
    • பா.ஜனதா கட்சி தனித்து போட்டியிட தயாரா? உள்ளாட்சி தேர்தலில் 100 கோடி ரூபாய் செலவு செய்த கட்சி பா ஜனதா.

    நெல்லை:

    நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று நெல்லை வந்தார்.

    நீதிமன்றம் எதிரே உள்ள கட்சி நிர்வாகியின் வீட்டில் பெருஞ்சித்திரனார் நினைவு நாளையொட்டி அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் ஜோதியை ஏற்றி வைத்தார்.

    அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    தமிழ் தேசிய அரசியலை விதைத்தவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார். அவரை நினைவு கூறுவதில் பெருமை அடைகிறோம். நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பா.ஜனதா பேசி நாட்டைத் துண்டாடும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

    இஸ்லாமியர்களின் வாக்கு வேண்டாம் என்று சொல்லும் பா.ஜனதா அவர்களுடைய வரி வேண்டாம் என்று சொல்லுமா?.

    இலங்கைக்கு ரூ.7 ஆயிரம் கோடி கடன் எதற்காக கொடுக்க வேண்டும். அவர்கள் நமக்கு விசுவாசமாக இருப்பார்களா? 18 ஆண்டுகள் தொடர்ச்சியாக மத்தியில் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது கச்சதீவை மீட்க தி.மு.க.விற்கு சரியான நாள் வரவில்லையா?

    இங்கு தமிழுக்கும் சமஸ்கிருதத்திற்கும் தான் பகை. இதற்கு இடையில் திராவிடம் என்பது போலி.

    பா. ஜனதா மாநில தலைவர் ஊழல் பட்டியலை வெளியிடுகிறார். ஊழலைப் பற்றி பேசுபவர், எதற்காக ஊழல் கட்சிகளோடு கூட்டணி வைத்து உள்ளார். ஊழல் கட்சிகளின் தலைவர் சிலையை திறந்து வைப்பதற்கு ஏன் துணை குடியரசுத் தலைவர் வரவேண்டும்?

    பா.ஜனதா கட்சி தனித்து போட்டியிட தயாரா? உள்ளாட்சி தேர்தலில் 100 கோடி ரூபாய் செலவு செய்த கட்சி பா ஜனதா.

    அ.தி.மு.க. பஞ்சத்திற்கு திருடர்கள். தி.மு.க. பரம்பரை திருடர்கள். ஆதினங்களை பல்லக்கில் வைத்து தூக்குவது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனாலும் அது காலம் காலமாக உள்ள சம்பிரதாயம் என்பதால் தற்போதைய நவீன காலத்திற்கு ஏற்ப நவீன எந்திரங்கள் கொண்டு இழுக்கலாம். தமிழகத்தில் எதிர்க்கட்சியாக நாம் தமிழர் கட்சி தான் செயல்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார். 

    கேரள அமைச்சர்களின் அடாவடிச் செயலை தடுக்கத்தவறிய தி.மு.க. அரசை கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பாக வருகிற 14-ந்தேதி தேனியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறம் என சீமான் அறிவித்துள்ளார்.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    முல்லைப் பெரியாறு அணை பலவீனமாக உள்ளதென்ற கேரள அரசின் உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுகளுக்கு அடிபணிந்து, உச்சநீதிமன்றம் நிர்ணயித்த குறைந்தபட்ச நீர்மட்டமான 139.5 அடியை எட்டுவதற்கு முன்பாகவே, அணையின் நீர்மட்டம் 136 அடியாக இருந்தபோதே, அத்துமீறி நுழைந்து அணையைத் திறந்த கேரள அமைச்சர்களின் அடாவடிச் செயலில் ஈடுபட்டுள்ளது.

    இதனை தடுக்கத்தவறிய தி.மு.க. அரசை கண்டித்து, நாம் தமிழர் கட்சி சார்பாக வருகிற 14-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணியளவில், தேனி பங்களாமேடு பகுதியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கின்றது.

    முக ஸ்டாலின்

    இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் திரளாகப் பங்கேற்று நமது எதிர்ப்பின் வலிமையை அரசிற்கு உணர்த்திட வேண்டுமாய் அறிவுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    இதையும் படியுங்கள்...ஏரிகளை பகல் நேரத்தில் மட்டும் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பேட்டி

    ஓட்டுப்பதிவு எந்திரத்தில் விவசாயி சின்னத்தை மறைப்பதால் எங்கள் வெற்றியை தடுத்து விட முடியாது என நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கூறியுள்ளார். #Seeman
    சென்னை:

    பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது.

    அ.தி.மு.க-பா.ஜனதா கூட்டணி, தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி ஆகியவற்றுடன் போட்டி போட்டுக் கொண்டு சீமான் பிரசாரம் செய்தார்.

    இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் விவசாயி சின்னத்தை மங்கலாக கண்ணுக்கு தெரியாத வகையில் தேர்தல் ஆணையம் அச்சிட்டுள்ளதாக நாம்தமிழர் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

    இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் நாம் தமிழர் கட்சி வழக்கு தொடர்ந்தது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டு சின்னங்கள் அடங்கிய பட்டியல் அச்சடிக்கப்பட்டு பணிகள் நிறைவடைந்து விட்டதாக கூறி, நாம் தமிழர் கட்சியின் மனுவை கோர்ட்டு தள்ளுபடி செய்து விட்டது.

    இந்த விவகாரம் தொடர்பாக சீமான் அளித்த பேட்டி வருமாறு:-

    தமிழகத்தில் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் கட்சி வளர்ச்சி அடைந்துள்ளது. அனைத்து தேர்தல்களிலும் தனித்தே போட்டியிட்டு களம் கண்டதால் நாம் தமிழர் கட்சியின் பலம் அதிகரித்துள்ளது. இந்த தேர்தலில் நாங்கள் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்துவோம்.



    விவசாயி சின்னத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்த்து விட்டோம். ஆனால் ஓட்டுப்பதிவு எந்திரத்தில் சின்னம் சிறியதாக உள்ளது. இதனால் எங்கள் வெற்றியை தடுத்து விட முடியாது.

    தமிழகம் முழுவதும் மக்கள் எங்களை ஆதரித்து வருகிறார்கள். இதனால் நிச்சயம் நாங்கள் வெற்றி பெறுவோம்.

    இந்த விவகாரத்தை பொறுத்தவரையில், ஆளும் அதிகார வர்க்கத்துக்கு இந்திய தேர்தல் ஆணையம், அடிபணிந்து விட்டது.

    இவ்வாறு சீமான் கூறினார். #Seeman
    ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு பின் திரும்பிய மன்சூர்அலிகான் மீண்டும் தனது வழக்கமான பாணியில் பிரசாரம் செய்தார். #MansoorAliKhan
    பழனி:

    திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் நாம்தமிழர் கட்சி சார்பில் நடிகர் மன்சூர்அலிகான் போட்டியிடுகிறார். இவர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நூதனமான முறையில் பிரசாரம் செய்து மக்களோடு மக்களாக இணைந்து வாக்குசேரித்து வருகிறார். இது பெரும்பாலான பொதுமக்களை மிகவும் கவர்ந்துள்ளது.

    நிலக்கோட்டை பகுதியில் தேர்தல் பிரசாரம் செய்து கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக அவரது கட்சி தொண்டர்கள் மன்சூர்அலிகானை ஆஸ்பத்தரியில் சேர்த்தனர். சிகிச்சை முடிந்து மீண்டும் தனது பழைய பாணியில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார்.

    பழனியை அடுத்துள்ள வண்டிவாய்க்கால் பகுதியில் மீன் சந்தையில் மன்சூர்அலிகான் தனது ஆதரவாளர்களுடன் சென்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.

    அங்குள்ள வாத்துகளை தூக்கி கையாலே எடை பார்த்து விலை நிலவரங்களை கேட்டறிந்தார். அதன்பிறகு மீன் விலை நிலவரங்களை கேட்டறிந்து பொதுமக்களை அழைத்து விற்பனை செய்தார்.

    மீனை அதன் செதில்களை சீவி சுத்தப்படுத்தி கழிவுகளை அகற்றி பொதுமக்களிடம் கொடுத்தார். பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக்கூடாது என்பதற்காக அவர்கள் கொண்டு வந்த பைகளில் மீன்களை வழங்கினார். அனைவரும் எனக்கு ஓட்டு போடுங்கள் நான் வாரம் தோறும் வந்து உங்களுக்கு மீன் வெட்டி தருகிறேன் என்று கூறினார்.

    அதனைத் தொடர்ந்து மீன் வியாபாரிகளிடம் சேர்ந்து செல்பியும் எடுத்துக் கொண்டார். #MansoorAliKhan
    ஓட்டுக்காக காசு கொடுப்பவர்களை துரத்தி அடிக்கும் நிலை வரும் என தஞ்சையில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் சீமான் கூறியுள்ளார். #Seeman
    தஞ்சாவூர்:

    தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் சாலையில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார்.

    தமிழகத்தில் தனித்து மக்களை நம்பி போட்டியிடும் கட்சி நாம் தமிழர் கட்சி தான். எங்களுக்கு என்று தனி பாதை, கொள்கை உண்டு.

    நாட்டில் மக்கள் இரவில் பசியோடு உறங்க மாட்டார்கள் என்று மோடி, ராகுல்காந்தி செல்வார்களா? ஆனால் அந்த உறுதியை நாம் தமிழர் கட்சியால் தான் தர முடியும். நாங்கள் ஏந்தும் புலிக்கொடி பரம்பரைக்கொடி. தமிழகத்தில் காங்கிரஸ் தலைமையில் ஒரு கூட்டணியும், பா.ஜ.க. தலைமையில் ஒரு கூட்டணியும் போட்டியிடுகிறது.

    ஆனால் இப்போது தேர்தலுக்காக ரூ.72 ஆயிரம் தருவோம், ரூ.6 ஆயிரம் தருவோம், தொழில் தொடங்க வட்டியில்லா கடன் தருவோம் என்கிறார்கள். நீங்கள் கொடுப்பது யாருடைய பணம்?. மக்கள் பணம் தான். அவர்கள் பணத்தை எடுத்து, அதில் பாதியை அவர்களிடமே கொடுப்பது சாதனையா?

    காங்கிரஸ், பா.ஜ.க. ஆட்சியில் செய்த சாதனைகளை சொல்லி அவர்களால் ஓட்டு கேட்க முடியுமா? அவர்களிடம் இருந்து நாட்டை பாதுகாக்க எங்களால் தான் முடியும். ஒற்றைக்கட்சி ஆட்சி முறையை ஒழிப்பது தான் எங்கள் நோக்கம். ஓட்டுக்காக காசு கொடுப்பவர்களை துரத்தி அடிக்கும் நிலை வரும்.

    தஞ்சையில் பிரசார பொதுக்கூட்டத்தையொட்டி நடந்த கலைநிகழ்ச்சியை சீமான் கட்சியினருடன் முன்வரிசையில் அமர்ந்து பார்வையிட்டார்.

    சேலத்தில் 8 வழிச்சாலையை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது நாம் தமிழர் கட்சி தான். தமிழகத்தின் கேடு கெட்ட அரசியலுக்கு காரணமே தி.மு.க. தான். தி.மு.க., பிரசவித்த கொடுமை தான் அ.தி.மு.க.. பா.ஜ.க.வை தமிழகத்திற்கு கொண்டு வந்தது தி.மு.க. தான். முதலில் தோளில் சுமந்தவர்கள் தற்போது காலூன்ற விடமாட்டோம் என்கிறார்கள்.

    கச்சத்தீவு, காவிரி, முல்லைப்பெரியாறு பிரச்சினையில் பா.ஜ.க., காங்கிரஸ் நிலைப்பாடு என்ன?. இவர்களுக்கு ஏன் வாக்கு செலுத்த வேண்டும் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். #Seeman
    ×