என் மலர்
நீங்கள் தேடியது "நெல்கொள்முதல்"
- நாள்தோறும் அவதூறுகளை அடித்துவிடுகிறார்கள், எடப்பாடி பழனிசாமி விரக்தியின் உச்சத்திற்கே சென்று அவதூறுகளை பரப்புகிறார்.
- மக்களை காக்க தி.மு.க. அரசிற்கு யாரும் சொல்லி தரவேண்டியதில்லை.
தென்காசி:
தென்காசியில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
* முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் ஆண்டுக்கு சராசரியாக 22,70,293 மெட்ரின் டன் நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டது.
* அ.தி.மு.க. ஆட்சியை போல் இல்லாமல் செப்டர்பர் 1-ந்தேதி முதலே நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.
* தி.மு.க. ஆட்சியில் ஒவ்வொரு கொள்முதல் நிலையத்திலும் தினமும் ஆயிரம் நெல்மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுகிறது.
* கடந்த 4 ஆண்டுகளில் தி.மு.க. ஆட்சியில் 1,70,45,545 மெட்ரின் டன் நெல்கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
* ஞாயிற்றுக்கிழமைகளிலும் கூட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது.
* தி.மு.க. ஆட்சியில் பாசன நிலத்தின் பரப்பளவு அதிகரித்து கொள்முதலும் அதிகரித்துள்ளது.
* மக்களை மகிழ்விக்கவும் மக்களை காக்கவுமே இந்த ஆட்சி நடந்து வருகிறது.
* வேளாண் சட்டங்களுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தேன்.
* 3 வேளாண் சட்டங்களை ஆதரித்து பேசியதுடன் போராட்டங்களை கொச்சைப்படுத்தியவர் எடப்பாடி பழனிசாமி.
* எடப்பாடி பழனிசாமியிடம் பொய்யையும், துரோகத்தையும் தவிர வேறு எதை எதிர்பார்க்க முடியும்.
* நாள்தோறும் அவதூறுகளை அடித்துவிடுகிறார்கள், எடப்பாடி பழனிசாமி விரக்தியின் உச்சத்திற்கே சென்று அவதூறுகளை பரப்புகிறார்.
*தி.மு.க. அரசுக்கு மக்கள் துணையாக இருப்பதால் சிலருக்கு தூக்கம் வருவதில்லை, அதனால் அவதூறு பரப்புகின்றனர்.
* மக்களை காக்க தி.மு.க. அரசிற்கு யாரும் சொல்லி தரவேண்டியதில்லை என்றார்.
- தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு அப்போதைய அரசு பொறுப்பேற்றதா?
- ஒரு நடிகரை பார்க்க போய் செத்ததற்கு ரூ.35 லட்சமா?
கோவை விமான நிலையத்தில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக அரசு மதுபாட்டில்களை பாதுகாப்பான இடங்களில் அடுக்கி வைத்துள்ளது.
விவசாயிகள் விளைவிக்கும் நெல்லை தெருவில் கொட்டி வைத்துள்ளனர்.
தமிழக விவசாயிகளின் நெல்லை தெருவில் போட்டுவிட்டு ஆந்திராவில் இருந்து வாங்குகின்றனர்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டிற்கு அப்போதைய அரசு பொறுப்பேற்றதா?
ஒரு நடிகரை பார்க்க போய் செத்ததற்கு ரூ.35 லட்சமா?
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- சேமிப்பு கிடங்குகளில் நெல்மூட்டைகள் வைக்க இடவசதி உள்ளதா என்று கேட்டறிந்தார்.
- காவிரி டெல்டா மாவட்டங்களை சேர்ந்த கலெக்டர்கள் காணொலி வாயிலாக ஆலோசனையில் இணைந்து இருந்தனர்.
சென்னை:
வடகிழக்கு பருவமழை இந்த மாதம் 20-ந்தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல்கொள்முதல் நிலையங்களில் செய்யப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி வாயிலாக டெல்டா மாவட்டங்களில் உள்ள கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
நெல்கொள்முதல் நிலையங்களில் பாதுகாப்பாக நெல்மூட்டைகள் வைக்கப்பட்டு உள்ளதா? என்று விசாரித்ததுடன் மேற்கொண்டு 'தார்பாய்' தேவைப்படுகிறதா? சேமிப்பு கிடங்குகளில் நெல்மூட்டைகள் வைக்க இடவசதி உள்ளதா என்றும் கேட்டறிந்தார்.
மேட்டூர் அணையில் திறக்கப்பட்டுள்ள தண்ணீர் கடைமடை பகுதி முழுவதும் சென்றடைந்துள்ளதால் குறுவை சாகுபடி விவரங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சருடன் அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், அர.சக்கரபாணி, டி.ஆர்.பி.ராஜா மற்றும் உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
காவிரி டெல்டா மாவட்டங்களை சேர்ந்த தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் உள்ள கலெக்டர்கள் காணொலி வாயிலாக ஆலோசனையில் இணைந்து இருந்தனர்.
- வடகிழக்கு பருவமழை தொடங்கஉள்ள சூழ்நிலையில் இப்பகுதியில் நெல்கொள்முதல் நிலையத்தை தொடங்க வேண்டும் என விவசாயிகள் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தனர்.
- கூடலூர் பொதுப்பணித்துறை அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள பயணியர் விடுதியில் நெல்கொள்முதல் செய்வதற்கான எந்திரங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.
கூடலூர்:
தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கர் இருபோக நெல்விவசாயம் செய்யப்படுகிறது. முல்லைபெரியாறு அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் மூலம் இந்த ஆண்டு கம்பம், சின்னமனூர், உத்தமபாளையம் ஆகிய பகுதிகளில் முன்கூட்டியே நடவு பணிகள் தொடங்கப்பட்டது.
இதனால் அங்கு தற்போது அறுவடை பணிகள் முழுமையாக நிறைவடைந்து நெல்கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் கூடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் தாமதமாக நடவு பணி தொடங்கியதால் தற்போதுதான் அறுவடை நடந்து வருகிறது.
இன்னும் பல வயல்களில் அறுவடை செய்யப்படாமல் உள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்கஉள்ள சூழ்நிலையில் இப்பகுதியில் நெல்கொள்முதல் நிலையத்தை தொடங்க வேண்டும் என விவசாயிகள் மாவட்ட கலெக்டர் முரளிதரனிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதனைதொடர்ந்து கூடலூர் பொதுப்பணித்துறை அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள பயணியர் விடுதியில் நெல்கொள்முதல் செய்வதற்கான எந்திரங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்காக கடந்த 2 நாட்களாகவே சாலையின் இருபுறமும் விவசாயிகள் நெல்லை கொட்டி அதனை பாதுகாத்து வருகின்றனர்.
ஓரிருநாளில் நெல் கொள்முதல் செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் காத்துள்ளனர். இதுகுறித்து பாரதீய கிசான் சங்க மாவட்ட தலைவர் தெரிவிக்கையில், தனியார் வியாபாரிகள் 62 கிலோ நெல்மூட்டை ஒன்றுக்கு ரூ.1050 முதல் ரூ.1100 வரை மட்டுமே கொடுக்கின்றனர்.
ஆனால் அரசு கொள்முதல் நிலையத்தில் ஒரு மூட்டைக்கு ரூ.1300 வரை கிடைக்கும். இதனால் பெரும்பாலான விவசாயிகள் அரசு கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்ய தயார் நிலையில் உள்ளனர் என்றார்.






