என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    நேரடி நெல்கொள்முதல் - முதலமைச்சர் டெல்டா கலெக்டர்களுடன் ஆலோசனை
    X

    நேரடி நெல்கொள்முதல் - முதலமைச்சர் டெல்டா கலெக்டர்களுடன் ஆலோசனை

    • சேமிப்பு கிடங்குகளில் நெல்மூட்டைகள் வைக்க இடவசதி உள்ளதா என்று கேட்டறிந்தார்.
    • காவிரி டெல்டா மாவட்டங்களை சேர்ந்த கலெக்டர்கள் காணொலி வாயிலாக ஆலோசனையில் இணைந்து இருந்தனர்.

    சென்னை:

    வடகிழக்கு பருவமழை இந்த மாதம் 20-ந்தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல்கொள்முதல் நிலையங்களில் செய்யப்பட வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி வாயிலாக டெல்டா மாவட்டங்களில் உள்ள கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

    நெல்கொள்முதல் நிலையங்களில் பாதுகாப்பாக நெல்மூட்டைகள் வைக்கப்பட்டு உள்ளதா? என்று விசாரித்ததுடன் மேற்கொண்டு 'தார்பாய்' தேவைப்படுகிறதா? சேமிப்பு கிடங்குகளில் நெல்மூட்டைகள் வைக்க இடவசதி உள்ளதா என்றும் கேட்டறிந்தார்.

    மேட்டூர் அணையில் திறக்கப்பட்டுள்ள தண்ணீர் கடைமடை பகுதி முழுவதும் சென்றடைந்துள்ளதால் குறுவை சாகுபடி விவரங்கள் குறித்தும் கேட்டறிந்தார்.

    இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதலமைச்சருடன் அமைச்சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், அர.சக்கரபாணி, டி.ஆர்.பி.ராஜா மற்றும் உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    காவிரி டெல்டா மாவட்டங்களை சேர்ந்த தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் உள்ள கலெக்டர்கள் காணொலி வாயிலாக ஆலோசனையில் இணைந்து இருந்தனர்.

    Next Story
    ×