என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீமான்"

    • பாரதியை எங்கு வேண்டுமானாலும் பேசுவேன்.
    • பாரதி என்றால் தமிழ். தமிழ் இருக்கும் இடத்தில் நான் இருப்பேன்.

    ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் 'விஜில்' என்ற பிரிவு நடத்திய விழாவில், பாரதியார் பிறந்த நாள் விழா மற்றும் 'வந்தே மாதரம்' பாடலின் 150-வது ஆண்டு விழா, நேற்று முன்தினம் சென்னையில் நடந்தது. அதில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 'பாரதி கண்ட வந்தே மாதரம்' எனும் தலைப்பில் பேசினார்.

    அப்போது அவர் கூறுகையில், நான் பாரதியின் கொள்கை வாரிசு. பாரதியை நிராகரிக்கும் இடத்தில், என் தமிழ் நிராகரிக்கப்படுகிறது. பாரதியின் புகழைப் பாட, பாகிஸ்தானுக்கு வேண்டுமானாலும் செல்வேன் என்று கூறினார்.

    இந்நிலையில் RSS நிகழ்ச்சியில் கலந்து கொண்டது ஏன்? என்று சீமான் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * பாரதியை எங்கு வேண்டுமானாலும் பேசுவேன்.

    * பாரதி என்றால் தமிழ். தமிழ் இருக்கும் இடத்தில் நான் இருப்பேன்.

    * எங்கு பேசினேன் என பார்க்காதே, என்ன பேசினேன் என பாருங்கள்.

    * பா.ஜ.க. தலைவர்களை தி.மு.க.வினர் புகழ்ந்து பேசியதை சுட்டிக்காட்டி அவர் பதில் அளித்தார்.

    • வழிபாடு செய்யும் தெய்வத்தை வைத்து அரசியல் செய்யக்கூடாது.
    • தமிழகத்தில் உள்ள இஸ்லாமியர்கள் அனைவரும் என் சொந்தம்.

    திருச்சியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    முருகன் சைவக் கடவுளா, இந்து கடவுளா. முருகன் என் ரத்தம், என் இன கடவுள்.

    சிவனும் முருகனும் இந்து கடவுளா என என்னுடன் விவாரம் செய்யத் தயாரா?

    அயோத்தியில் ராமர் கோவில் பிரச்சனை தற்போது தீர்ந்துவிட்டதால் தமிழ்நாட்டில் முருகனை வைத்து அரசியல் செய்கின்றனர்.

    முருகனை கும்பிட வேண்டாம் என யாராவது உங்களை எதிர்த்தார்களா? எதை வைத்து அரசியல் செய்வது என தெரிய வேண்டாமா?

    வழிபாடு செய்யும் தெய்வத்தை வைத்து அரசியல் செய்யக்கூடாது.

    திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபமேற்றும் விவகாரத்தை வைத்து திட்டமிட்டு பிரச்சனை உருவாக்குகிறார்கள்.

    தமிழகத்தில் உள்ள இஸ்லாமியர்கள் அனைவரும் என் சொந்தம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • புதுச்சேரி மாநில அந்தஸ்து குறித்து த.வெ.க. தலைவர் விஜய் பேசியிருப்பது மகிழ்ச்சி.
    • த.வெ.க. தலைவர் விஜய்க்கு முன்னதாக புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரியது நான்தான்.

    புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் நடத்த பொதுக்கூட்டத்தில் பேசிய த.வெ.க. தலைவர் விஜய், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டு பல முறை சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைத்துக்கொண்டே இருக்கிறார்கள். 16 முறை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியும் புதுச்சேரிக்கு இன்னும் மாநில அந்தஸ்தை மத்திய அரசு கொடுக்கவே இல்லை என்று கூறி இருந்தார்.

    இந்நிலையில் சென்னை புழலில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி அளித்தார். அப்போது த.வெ.க. தலைவர் விஜய்க்கு சீமான் பாராட்டு தெரிவித்தார். அவர் கூறியதாவது:

    * புதுச்சேரி மாநில அந்தஸ்து குறித்து த.வெ.க. தலைவர் விஜய் பேசியிருப்பது மகிழ்ச்சி.

    * த.வெ.க. தலைவர் விஜய்க்கு முன்னதாக புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரியது நான்தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பத்திரிகையாளர் சந்தித்தார்.
    • திமுக எதிர்ப்பு தெரிவிப்பதைபோல் தெரிவித்துவிட்டு பூத் ஆபீசரை நியமித்துள்ளது.

    புதுச்சேரியில் இன்று நாம் தமிழர் கட்சியின் ஆய்வு கூட்டம் வில்லியனூரில் நடந்தது. இந்த ஆய்வு கூட்டத்திற்கு பிற்பகல் வருகை தந்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பத்திரிகையாளர் சந்தித்தார்.

    அப்போது, எஸ்ஐஆர் குறித்து பேசிய சீமான்," மேற்குவங்கத்தில் எஸ்ஐஆர் கொண்டு வரும் போது மம்தா பானர்ஜி அதை எதிர்த்து மக்களை திரட்டி ஊர்வலம் நடத்தினார். ஆனால், தமிழ்நாட்டில் மத்திய அரசு எஸ்ஐஆர் செயல்படுத்த போகிறோம் என்று தெரிவித்த உடன் திமுக எதிர்ப்பு தெரிவிப்பதைபோல் தெரிவித்துவிட்டு பூத் ஆபீசரை நியமித்துள்ளது" என்றார்.

    இதற்கு பத்திரிகையாளர் ஒருவர் எஸ்ஐஆரை எதிர்த்துதான் வழக்கு தொடரப்பட்டுள்ளதே என்று கூறினார்.

    இதற்கு உனடியாக ஆதங்கப்பட்ட சீமான் உனக்கு என்ன பிரச்சனை? உன்னை ரொம்ப நாளா பார்த்துக் கொண்டிருக்கிறேன், உனக்கு ஏதோ பைத்தியம் பிடித்துள்ளது. என்று ஒருமையில் மரியாதை இல்லாமல் பேசினார்.

    இதனால், அங்கு சலசலப்பு ஏற்பட்டது. மேலும், சீமானின் பேச்சுக்கு தென்னிந்திய பத்திரிகையாளர் சங்கமும் கண்டன் தெரிவித்துள்ளது.

    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது 3 பிரிவுகளின் கீழ் வில்லியனூர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • மத்திய அரசுக்கு எதிராகவும், தேர்தல் ஆணையத்திற்கு எதிராகவும் கோஷம் எழுப்பப்பட்டது.
    • எழும்பூரில் சாரல் மழை பெய்து வரும் நிலையில் நனைந்தபடி போராட்டம் நடத்தினர்.

    வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி சென்னையில் சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மத்திய அரசுக்கு எதிராகவும், தேர்தல் ஆணையத்திற்கு எதிராகவும் கோஷம் எழுப்பப்பட்டது.

    எழும்பூரில் சாரல் மழை பெய்து வரும் நிலையில் நனைந்தபடி போராட்டம் நடத்தினர்.

    இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய சீமான் கூறியதாவது:-

    வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை அவசர அவசரமாக கொண்டு வருவது ஏன்?

    திடீரென போலி வாக்காளர்களை கண்டு பிடித்தது போல பேசுவது ஏன்?

    ஈரோடு இடைத்தேர்தலில் கள்ள ஓட்டு போட்டது தேர்தல் ஆணையத்திற்கு தெரியாதா?

    ஒரே மாதத்தில் 6 கோடி வாக்காளர்களை எப்படி சரிபார்க்க முடியும். ஓராண்டு கால அவகாசம் எடுத்து எஸ்ஐஆர் பணிகளை செய்திருக்க வேண்டும்.

    ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களுக்கான வாக்காளர்களை தேர்ந்தெடுக்கின்றனர்.

    எங்களை போன்ற வளர்ந்து வரும் கட்சியினர் எஸ்ஐஆர்-ஐ எப்படி எதிர்கொள்ள முடியும்?

    குறைந்தது ஒரு கோடி பேர் தங்களது வாக்குரிமையை இழப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தண்ணீர் என்பது மானுட தேவை மட்டும் இல்லை. பல்லுயிர்களின் தேவை
    • மரத்திடம் எங்கள் உயிர் இருக்கிறது. தண்ணீரிடம் எங்கள் வாழ்க்கை இருக்கிறது

    நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தனது கட்சியின் மாநாடுகளை பல்வேறு தலைப்புகளில் தமிழகமெங்கும் நடத்தி வருகிறார்.

    கடந்த காலங்களில் மலைகள் மாநாடு, ஆடு, மாடுகள் மாநாடு, மரங்களின் மாநாடு என்று நடத்தினார்.

    அதைத்தொடர்ந்து தஞ்சை மாவட்டத்தில் தண்ணீர் மாநாடு நடத்த போவதாக அறிவித்திருந்தார்.

    மாமன்னன் கரிகாலன் கட்டிய கல்லணை அமைந்துள்ள திருவையாறு அருகே பூதலூரில் நேற்று நாம் தமிழர் கட்சி சார்பில் தண்ணீர் மாநாடு நடைபெற்றது.

    தண்ணீர் மாநாட்டில் பேசிய சீமான், "கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரை பார்த்து அரசியல் செய்ய வரவில்லை. மக்களின் வாக்கு தரத்தை மாற்ற நினைக்கிறோம். அதனால்தான் எங்களுக்கு யாரும் போட்டியில்லை.

    தண்ணீர் என்பது மானுட தேவை மட்டும் இல்லை. பல்லுயிர்களின் தேவை. ரத்தநாளம் போன்றது ஆறுகள்; அதில், அணை கட்டுவது ஸ்டோக்குக்கு ஒப்பானது. மரத்திடம் எங்கள் உயிர் இருக்கிறது. தண்ணீரிடம் எங்கள் வாழ்க்கை இருக்கிறது" என்று தெரிவித்தார்.

    • சீமான் டெல்டா மாவட்டங்களில் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசுகிறார்.
    • மாநாட்டு நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்கின்றனர்.

    பூதலூர்:

    நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தனது கட்சியின் மாநாடுகளை பல்வேறு தலைப்புகளில் தமிழகமெங்கும் நடத்தி வருகிறார்.

    கடந்த காலங்களில் மலைகள் மாநாடு, ஆடு, மாடுகள் மாநாடு, மரங்களின் மாநாடு என்று நடத்தினார்.

    அதைத்தொடர்ந்து தஞ்சை மாவட்டத்தில் தண்ணீர் மாநாடு நடத்த போவதாக அறிவித்திருந்தார்.

    மாமன்னன் கரிகாலன் கட்டிய கல்லணை அமைந்துள்ள திருவையாறு அருகே பூதலூரில் நாளை மாலை (15-ந் தேதி) தண்ணீர் மாநாடு நடத்துவதற்கான முன்னேற்பாடு பணியில் நாம் தமிழர் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    இதற்காக பூதலூர்-திருக்காட்டுப்பள்ளி சாலையில் பூதலூர் தாலுகா அலுவலகம் அருகில் அமைந்துள்ள திறந்தவெளி திடல் தேர்ந்தெடுக்கப்பட்டு மாநாட்டிற்கான பணிகள் தீவிரம் நடைபெற்று வருகின்றன.

    திடலின் முகப்பில் மாமன்னன் கரிகாலன், விடுதலைப்புலிகள் கட்சி தலைவர் பிரபாகரன், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், இயற்கை வேளாண் அறிஞர் நம்மாழ்வார் ஆகியோர் படங்கள் வைக்கப்பட்டுள்ளன.

    மாநாட்டு திடலின்முகப்பு பகுதியில் ஒவ்வொரு துளியும் உயிர்த்துளி, பல்லுயி ர்க்கும் பகிர்ந்தளி போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் வைக்கப்பட்டு உள்ளன.

    மேலும் மாநாட்டு திடலில் இருபுறங்களிலும் ஒரு பகுதியில் மாமன்னன் கரிகாலனின் சிறப்புகளை விளக்கும் ஓவியங்கள் வைக்கப்பட்டுள்ளன.

    மற்றொரு பகுதியில் காவிரி ஆறு பாய தொடங்கும் குடகு முதல் பூம்புகார் வரையிலான உருவங்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.

    இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக சீமான் இன்று திருச்சி வருவார் என்று கூறப்படுகிறது.

     

    மாநாட்டு திடலின் முகப்பு தோற்றத்தை காணலாம்.

    நாளை மாலை 4 மணிக்கு பூதலூரில் தொடங்கும் தண்ணீர் மாநாட்டில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் டெல்டா மாவட்டங்களில் 2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசுகிறார்.

    இந்த மாநாட்டு நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொள்கின்றனர்.

    இதற்கான முன்னேற்பாடு பணிகளை கட்சி நிர்வாகிகள் தீவிரமாக செய்து வருகின்றனர்.

    இந்தநிலையில் மாநாட்டு திடல் பகுதியில் திருவையாறு தொகுதி வேட்பாளராக எதிர்பார்க்கப்படும் முதுகலை பட்டதாரி செந்தில்நாதன் மற்றும் நிர்வாகிகள் மாநாட்டு பணிகளை மேற்பார்வையிட்டனர்.

    மாநாட்டு திடலில் வைக்கப்பட்டுள்ள மாமன்னன் கரிகாலன் மற்றும் காவிரி ஆற்றின் வரலாற்று காட்சிகளை பொதுமக்களை மிகவும் கவர்ந்துள்ளன. இவற்றை அங்கு வரும் பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து ரசித்து செல்கின்றனர்.

    உச்ச நீதிமன்றம் மேகதாது அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு தடை விதிக்க மறுத்துவிட்ட நிலையில் காவிரி படுகையின் தலைப்பு பகுதியான பூதலூரில் நடைபெற உள்ள இந்த தண்ணீர் மாநாடு மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.

    • நெல்லை மாவட்டம் கூத்தன்குழியில் 'கடலம்மா மாநாடு' நடத்தப்படும்.
    • நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    நெல்லை மாவட்டம் கூத்தன்குழியில் 'கடலம்மா மாநாடு' நடத்தப்படும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

    நெல்லை மாவட்டம் கூத்தன்குழியில் வரும் 21-ந்தேதி மாலை 4 மணியளவில், 'கடலம்மா மாநாடு' நடத்தப்படும்.

    ஆதி நீயே! ஆழித்தாயே! என்ற முழக்கத்தை முன் வைத்து 'கடலம்மா மாநாடு' நடத்தப்படும்.

    இம்மாபெரும் மாநாட்டில் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




     


    • உயர்ந்த விற்பனை பண்டமாக, நிறைய பொருளீட்டுகிற, லாபம் குவிக்கிற சந்தைப் பண்டமாக தண்ணீர் மாறி இருப்பது ஆபத்தான போக்கு.
    • கட்சியின் அனைத்து கட்ட நிர்வாகிகளும் தவறாமல் பங்கேற்க வேண்டும்.

    சென்னை:

    சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி ஆடு-மாடு மாநாடு, மலைகளின் மாநாடு, மரங்களின் மாநாடு போன்றவற்றை தொடர்ச்சியாக நடத்தி வருகிறது. 2026 தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில், மற்ற அரசியல் கட்சிகள் அரசியல் பரப்புரைக் கூட்டங்கள், மாநாடுகளை நடத்தி வருகின்றன, இந்நிலையில், சீமான் நடத்தும் மாநாடுகள் பேசும் பொருளாகி உள்ளன.

    இதற்கிடையில், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியில் 'தண்ணீர் மாநாட்டை' நடத்த நாம் தமிழர் கட்சி முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது:-

    உயர்ந்த விற்பனை பண்டமாக, நிறைய பொருளீட்டுகிற, லாபம் குவிக்கிற சந்தைப் பண்டமாக தண்ணீர் மாறி இருப்பது ஆபத்தான போக்கு. இவற்றை விளக்கும் வகையில் தண்ணீர் மாநாடு-2025-ஐ நடத்த திட்டமிட்டுள்ளோம். இன்றைய சூழலில் இது அவசியமான மாநாடாகும்.

    "ஒவ்வொரு துளியும் உயிர்த்துளி. பல்லுயிர்க்கும் பகிர்ந்தளி. நீரின்றி அமையாது உலகு. நினைவில் நிறுத்திப் பழகு" என்ற முழக்கத்தை முன்வைத்து தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பூதலூரில் உள்ள கரிகால் பெருவளத்தான் திடலில் வரும் 15-ந் தேதி மாலை 5 மணிக்கு தண்ணீர் மாநாடு நடைபெற உள்ளது. இதில் கட்சியின் அனைத்து கட்ட நிர்வாகிகளும் தவறாமல் பங்கேற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • எப்போதும் அண்மையில் இருக்கும் இளைய சகோதரர் சீமான்.
    • பின்பற்றும் கொள்கையில் இவர் காட்டும் பிடிமானமும் பிடிவாதமும் வியத்தலுக்குரியவை.

    நா.த.க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு மநீம தலைவர் கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்துள்ளார்.

    இதுதொடர்பாக கமல்ஹாசன் வௌயிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    எப்போதும் அண்மையில் இருக்கும் இளைய சகோதரர் சீமான். பிறந்த பிரதேசமானாலும் சரி, தேர்ந்துகொண்ட திரைத்துறையானாலும் சரி பக்கத்திலேயே பயணம் செய்பவர்.

    பின்பற்றும் கொள்கையில் இவர் காட்டும் பிடிமானமும் பிடிவாதமும் வியத்தலுக்குரியவை.

    தான் தோன்றுவது எந்த அரங்காக இருந்தாலும் அதில் புகழொடு தோன்றும் பண்பும் திறனும் மிக்க அன்புத் தம்பி, நாம் தமிழர் இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர், செந்தமிழன் சீமான் அவர்களுக்கு இன்று பிறந்தநாள். இந்நாளில் அவரை அணைத்து வாழ்த்துவது எனக்கு மகிழ்ச்சி.

    நீடு வாழ்க இளவல்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • சீமான் வீட்டில் நாம் தமிழர் கட்சியினருக்கு சுடச்சுட அசைவ விருந்து சமைத்து பரிமாறப்பட்டது.
    • நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சீமான் வீட்டில் குவிந்தனர்.

    சென்னை:

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தனது 59-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சீமான் வீட்டில் நாம் தமிழர் கட்சியினருக்கு சுடச்சுட அசைவ விருந்து சமைத்து பரிமாறப்பட்டது.

    மட்டன் பிரியாணி, மட்டன் சுக்கா, நல்லி எலும்பு குழம்பு, வஞ்சிரம் மீன் வறுவல், மீன் குழம்பு, முட்டை வறுவல் என விதவிதமான அசைவ உணவுகள் சீமான் வீட்டிலேயே தயாரிக்கப்பட்டு கட்சியினருக்கு பரிமாற்றப்பட்டது. இதற்காக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சீமான் வீட்டில் குவிந்தனர். அவர்கள் சீமானுக்கு வாழ்த்து தெரிவித்து விட்டு சூடாக பரிமாறப்பட்ட பிரியாணி உள்பட அசைவ உணவுகளை ருசித்து சாப்பிட்டனர்.

    கைதேர்ந்த சமையல் கலைஞர்களை கொண்டு சீமான் வீட்டு வளாகத்திலேயே அசைவ உணவுகள் சமைக்கப்பட்டன. அதனை கல்யாண வீடுகள் போன்று சேர், டேபிள்கள் போட்டு அசைவ உணவு பரிமாறப்பட்டது.

    • சீமானுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    • நல்ல உடல் நலத்துடன் நூறாண்டு வாழ்ந்து மக்கள் நலப்பணியாற்ற எனது வாழ்த்துகள்!

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று தனது 59வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

    சீமானுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா கலைஞர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், சீமானுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அன்பு சகோதரர் சீமான் இன்று 59-ஆம் பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில், அவருக்கு எனது உளப்பூர்வமான பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நல்ல உடல் நலத்துடன் நூறாண்டு வாழ்ந்து மக்கள் நலப்பணியாற்ற எனது வாழ்த்துகள்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இதேபோல், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பான எக்ஸ் தள பதிவில்," இன்று பிறந்தநாள் காணும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அன்பு இளவல் சீமான் அவர்களுக்கு எமது வாழ்த்துகள்" என குறிப்பிட்டுள்ளார்.

    ×