search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sivakarthikeyan"

    • தமிழ் சினிமாவில் வேற தலைப்பே இல்லையா.
    • ‘பராசக்தி’ பட தலைப்பை மீண்டும் பயன்படுத்த நடிகர் பார்த்திபன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் 'பராசக்தி'.

    படத்தின் தலைப்புக்கு சிவாஜி ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தலைப்பை மாற்றுமாறு அறிக்கை வெளியிட்டதுடன் சென்னை நகரம் முழுவதும் கண்டன போஸ்டரை ஒட்டியிருந்தனர்.

    ஒய்.ஜி.மகேந்திரன் கூறுகையில், சில படங்கள் சரித்திர புகழ் பெற்ற படங்கள். அதை பார்க்கும் போது தார்மீக பாணியில் பார்க்க வேண்டும்.

    ஏன் அந்த தலைப்பை வைக்க வேண்டும். ஒரு சரித்திர படத்தின் தலைப்பை வைக்கிறோமே என அவர்களாகவே தவிர்த்திருக்க வேண்டும்.

    இந்நிலையில் சிவாஜி படத்தின் தலைப்பான 'பராசக்தி' பட தலைப்பை மீண்டும் பயன்படுத்த நடிகர் பார்த்திபன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    இது பற்றி அவர் கூறுகையில், எனக்கு தெரிந்து 'பராசக்தி' படம் என்றால் ஞாபகத்தில் இருப்பது அந்த ஒரு படம் மட்டும் தான். மறுபடியும் பராசக்தி என்பது ஒரு நிழலாக தான் இருக்குமே தவிர நிஜம் என்றால் அந்த பராசக்தி தான். இந்த தலைப்பு மீண்டும் வைத்ததில் எனக்கு உடன்பாடு இல்லை. புதுசா டைட்டில் யோசிக்கலாமே தவிர, இருக்கிற பழைய டைட்டில் வைப்பது முறையல்ல. இதற்கு பலர் எதிர்ப்பு சொல்கிறார்கள். பார்த்தீர்களா?

    இவ்வாறு அவர் கூறினார்.

    இயக்குநர் வெங்கடேஷ் கூறுகையில், தமிழ் சினிமாவின் லெஜெண்ட் என்றால் சிவாஜி கணேசன் தான். அவர் நடித்த முதல் திரைப்படம் 'பராசக்தி'. இந்த படம் தமிழ் சினிமாவின் அடையாளமாக இருக்கிறது. அந்த படத்தின் தலைப்பை மீண்டும் வைப்பது என்பது சிவாஜி கணேசன் ரசிகர்கள் மட்டுமல்லாது, அவரது அபிமானி என்ற முறையில் இந்த கருத்தை பதிவு செய்கிறேன்.

    தமிழ் சினிமாவில் வேற தலைப்பே இல்லையா? விளம்பர நோக்கத்துக்காக இந்த தலைப்பு வைக்கப்பட்டுள்ளதோ என தோன்றுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த ஆண்டு தீபாவளி நாளான அக்டோபர் 31-ந்தேதி வெளியானது அமரன் திரைப்படம்
    • கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல், சோனி பிக்சர்ஸ் பிலிம்ஸ் இந்தியா தயாரித்தது.

    'ரங்கூன்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் ராஜ்குமார் பெரியசாமி. இவருடைய இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வெளிவந்த திரைப்படம் 'அமரன்'. இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல், சோனி பிக்சர்ஸ் பிலிம்ஸ் இந்தியா தயாரித்தது.

    கடந்த ஆண்டு தீபாவளி நாளான அக்டோபர் 31-ந்தேதி வெளியானது. மேலும் தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் இப்படம் வெளியானது. இப்படம் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்த தமிழ் நாட்டை சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது.

    சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்த் வரதராஜனாகவும், இந்து ரெபேக்கா வர்கீஸாக சாய் பல்லவியும், பவண் அரோரா, ராகுல் போஸ், லல்லு, அனுன் பாவ்ரா, அஜே நாக ராமன், மீர் சல்மான், கௌரவ் வெங்கடேசு, ஸ்ரீ குமார் ஆகியோரும் நடித்திருந்தனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த இப்படம் உலகளவில் மாபெரும் வெற்றியடைந்து வசூலிலும் சாதனை படைத்தது. இத்திரைப்படம் சிவகார்த்திகேயன் திரைபயணத்தில் மிக முக்கியமான திரைப்படமாக அமைந்தது. திரைப்படம் இதுவரை 335 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில், 'அமரன்' படம் வெளிவந்து 100 நாட்களை தாண்டிய நிலையில், சிப்பாய் விக்ரம் இல்லாமல் இப்படம் முழுமையடையாது என்று இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். இதனை தொடர்ந்து அமரன் திரைப்படத்தை வெற்றிப்படமாக அமைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து சிவகார்த்திகேயன் எமோஷனலான ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இப்படம் உலகளவில் மாபெரும் வெற்றியடைந்து வசூலிலும் சாதனை படைத்தது.
    • இந்தக் கதையில் இரண்டு துணிச்சலான இதயங்களின் கதையைச் சொல்ல முடிந்திருப்பது பெரும் மகிழ்ச்சி.

    'ரங்கூன்' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் ராஜ்குமார் பெரியசாமி. இவருடைய இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வெளிவந்த திரைப்படம் 'அமரன்'. இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல், சோனி பிக்சர்ஸ் பிலிம்ஸ் இந்தியா தயாரித்தது.

    கடந்த ஆண்டு தீபாவளி நாளான அக்டோபர் 31-ந்தேதி வெளியானது. மேலும் தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் இப்படம் வெளியானது. இப்படம் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்த தமிழ் நாட்டை சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருந்தது.

    சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்த் வரதராஜனாகவும், இந்து ரெபேக்கா வர்கீஸாக சாய் பல்லவியும், பவண் அரோரா, ராகுல் போஸ், லல்லு, அனுன் பாவ்ரா, அஜே நாக ராமன், மீர் சல்மான், கௌரவ் வெங்கடேசு, ஸ்ரீ குமார் ஆகியோரும் நடித்திருந்தனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த இப்படம் உலகளவில் மாபெரும் வெற்றியடைந்து வசூலிலும் சாதனை படைத்தது.

    இந்த நிலையில், 'அமரன்' படம் வெளிவந்து 100 நாட்களை தாண்டிய நிலையில், சிப்பாக் விக்ரம் இல்லாமல் இப்படம் முழுமையடையாது என்று இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:-

    இந்தக் கதையில் இரண்டு துணிச்சலான இதயங்களின் கதையைச் சொல்ல முடிந்திருப்பது பெரும் மகிழ்ச்சி. கடமையால் பிணைக்கப்பட்டு, அவர்களின் மரபால் அழியாத மேஜர் முகுந்த் வரதராஜன் மற்றும் சிப்பாய் விக்ரமின் பிணைப்பு சகோதரத்துவம் மற்றும் தோழமைக்கு சிறந்த எடுத்துக்காட்டு!

    சிப்பாய் விக்ரமை உலகிற்கு அறிமுகப்படுத்தியதற்காக அவரது குடும்பத்தினரின் தாராள மனப்பான்மைக்கு எனது மனமார்ந்த நன்றி. வணக்கங்கள் மற்றும் அன்பு," என்று பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • அமரன் வெளியாகி 100 நாட்கள் ஆக போகிறது.
    • அமரன் திரைப்படத்திற்கு நீங்கள் கொடுத்த அன்பிற்கு நன்றி மணிசார்

    ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் மிகப்பெரும் வெற்றியை பெற்றது. ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பால் இப்படம் உலகளவில் ரூ.300 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.

    மறைந்த முன்னாள் ராணுவ வீரர் மேஜர் முகுந்தின் வாழ்க்கையைத் தழுவி இப்படம் உருவாகியுள்ளது. இதில் சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்தாகவும், முகுந்தின் மனைவி இந்துவாக சாய் பல்லவியும் நடித்துள்ளனர்.

    இந்நிலையில், அமரன் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குனர் மணிரத்னத்தை சந்தித்து பேசியது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

    அவரது பதிவில், "அமரன் வெளியாகி 100 நாட்கள் ஆக போகிறது. நான் சினிமாவிற்கு வர வேண்டும் என ஆசைப்பட்டதற்கு காரணமே நீங்கள்தான் மணிசார். 2005ல் முதல்முதலாக உங்களுடன்தான் புகைப்படம் எடுத்து கொள்ள விரும்பினேன். ஆனால் இந்த புகைப்படத்தை எடுக்க எனக்கு 20 வருடங்கள் தேவைப்பட்டுள்ளது. உங்களின் போஸ்டரை பார்த்து வியந்ததில் இருந்து... உங்களின் அருகில் நிற்கும் வரை... இந்த தருணத்தில் நான் திகைத்துப் போயுள்ளேன். அமரன் திரைப்படத்திற்கு நீங்கள் கொடுத்த அன்பிற்கு நன்றி மணிசார்" என்று பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்

    • ‘பராசக்தி’ பெயரை பயன்படுத்திக்கொள்ள ஏ.வி.எம்.நிறுவனம் அனுமதி வழங்கி வாழ்த்தி இருந்தது.
    • ‘பராஷக்தி’ தலைப்பை கடந்தாண்டே பதிவு செய்துவிட்டதாக நடிகர் விஜய் ஆண்டனி கூறியிருந்தார்.

    சுதா கொங்கரா இயக்கத்தில் டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் தனது 25-வது படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ரவி மோகன் மற்றும் அதர்வா முக்கிய கதாபாத்திரங்களிலும், நாயகியாக ஸ்ரீலீலா நடித்து வருகிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

    இப்படம் சிவகார்த்திகேயனுக்கு 25வது படமாகவும், ஜி.வி.பிரகாஷுக்கு 100வது படமாகவும் அமைகிறது. சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி வருகிறது.

    இதையடுத்து, இப்படத்தின் டைட்டில் வீடியோவை படக்குழு நேற்றுமுன்தினம் வெளியிட்டது. இப்படத்திற்கு 'பராசக்தி' என்று பெயரிட்டுள்ளனர். நடிகர் திலகம் சிவாஜியின் முதல் படமான 'பராசக்தி' பெயரை பயன்படுத்திக்கொள்ள ஏ.வி.எம்.நிறுவனம் அனுமதி வழங்கி வாழ்த்தி இருந்தது.

    இதனிடையே, 'பராஷக்தி' தலைப்பை கடந்தாண்டே பதிவு செய்துவிட்டதாக நடிகர் விஜய் ஆண்டனி கூறியிருந்தார்.

    அருண் பிரபு இயக்கும் படத்திற்கு தமிழில் 'சக்தித் திருமகன்' என்றும் தெலுங்கில் 'பராஷக்தி' எனவும் பெயரிடப்பட்டு பதிவு செய்துள்ளதாக கூறியுள்ள விஜய் ஆண்டனி, பதிவிற்கான ஆவணத்தையும் வெளியிட்டு இருந்தார்.

    இந்த நிலையில், எங்களுக்கு முழு உரியைமான 'பராசக்தி' திரைப்படத்தின் பெயரை வேறு யாரும் தங்களுடைய திரைப்படத் தலைப்பாகப் பயன்படுத்துவதை தவிர்த்திட வேண்டும் என்று நடிகர் திலகம் சிவாஜி கண்சேன் நடிப்பில் 1952-ல் வெளியான 'பராசக்தி' படத்தை தயாரித்த நேஷனல் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது.

    மேலும், வெள்ளிவிழா காண இருக்கும் வேளையில், 'பராசக்தி' படத்தை டிஜிட்டல் வடிவில் மேம்படுத்தி வெளியிட திட்டமிட்டு அதற்கான பணியை தொடங்க இருப்பதாகவும் நேஷனல் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    தலைப்புக்கு தொடர்ந்து சர்ச்சை ஏற்பட்டு வரும் நிலையில், சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'பராசக்தி' படத்தின் புதிய போஸ்டரை நேற்று படக்குழு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்த படத்தில் அதர்வா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
    • சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 25-வது படமாக பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

    ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று சுமார் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.

    இதனையடுத்து, சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 25-வது படமாக பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை Dawn Pictures தயாரிக்கிறது.

    இந்த படத்தில் அதர்வா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நாயகியாக ஸ்ரீலீலா நடிக்கிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். ரவி மோகன் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்.

    இப்படம் சிவகார்த்திகேயனுக்கு 25வது படமாகவும், ஜி.வி.பிரகாஷ்க்கு 100வது படமாகவும் இப்படம் அமைகிறது. சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகிறது.

    இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் வீடியோவை படக்குழு நேற்று வெளியிட்டது. படத்தின் டைட்டில் டீசர் வீடியோ மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இணையத்தில் வைரலானது. இப்படம் இந்தி திணிப்பு போராட்டத்தை மையமாக வைத்து உருவாகிவரும் திரைப்படமாகும்.

    இந்நிலையில் இப்படத்தை குறித்து படத்தின் தயாரிப்பாளரான ஆகாஷ் பாஸ்கரன் சில சுவாரசிய விஷ்யங்களை பகிர்ந்துள்ளார் அதில் " பராசக்தி என்ற படத்தின் தலைப்பிற்கு நியாயம் சேர்க்கும் விஷயமாக இப்படம் அமையும். ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு 5 பாடல்கள் இசையமைத்துள்ளார். அதில் 2 பாடல்களுக்கான படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்தது. 1950-60 களில் நடக்கும் கதைக்களமாக அமைந்துள்ளது. திரைப்படம் சென்னை, புதுச்சேரி மற்றும் சிதம்பரம் ஆகிய பகுதிகளில் படமாக்கப்படவுள்ளது. மொத்த படப்பிடிப்பும் ஜூலை மாத இறுதிக்குள் நிறைவடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது" என கூறியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார்
    • இப்படத்தின் டைட்டில் வீடியோவை படக்குழு நேற்று வெளியிட்டது.

    ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று சுமார் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இதனை தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் தனது 24-வது படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.

    இதனையடுத்து, சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 25-வது படத்தில் நடிக்கிறார் என்று படக்குழு கடந்த மாதம் அதிகாரப்பூரவமாக அறிவித்தது. இப்படத்தை டான் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

    இந்த படத்தில் அதர்வா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நாயகியாக ஸ்ரீலீலா நடிக்கிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். ரவி மோகன் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்.

    இப்படம் சிவகார்த்திகேயனுக்கு 25வது படமாகவும், ஜி.வி.பிரகாஷ்க்கு 100வது படமாகவும் இப்படம் அமைகிறது. சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகிறது.

    இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் வீடியோவை படக்குழு நேற்று வெளியிட்டது. இப்படத்திற்கு பராசக்தி என்று பெயரிட்டுள்ளனர். படத்தின் டைட்டில் டீசர் வீடியோ மற்றும் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இணையத்தில் வைரலானது. இந்நிலையில் படக்குழு மீண்டும் சர்ப்ரைஸை கொடுத்துள்ளனர். தற்பொழுது படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். அதில் தமிழ் தீ பரவட்டும் என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது. இப்படம் இந்தி எதிர்ப்பை பேசும் திரைப்படமாக உருவாகி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.
    • சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகிறது.

    ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'அமரன்' திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று சுமார் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இதனை தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் தனது 24-வது படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.

    இதனையடுத்து, சுதா கொங்கரா இயக்கத்தில் டான் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் தனது 25-வது படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ரவி மோகன் மற்றும் அதர்வா முக்கிய கதாபாத்திரங்களிலும் நாயகியாக ஸ்ரீலீலா நடித்து வருகிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

    இப்படம் சிவகார்த்திகேயனுக்கு 25வது படமாகவும், ஜி.வி.பிரகாஷுக்கு 100வது படமாகவும் அமைகிறது. சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி வருகிறது.

    இதையடுத்து, இப்படத்தின் டைட்டில் வீடியோவை படக்குழு நேற்று வெளியிட்டது. இப்படத்திற்கு 'பராசக்தி' என்று பெயரிட்டுள்ளனர். நடிகர் திலகம் சிவாஜியின் முதல் படமான 'பராசக்தி' பெயரை பயன்படுத்திக்கொள்ள ஏ.வி.எம்.நிறுவனம் அனுமதி வழங்கி வாழ்த்தி இருந்தது.

    இந்த நிலையில், 'பராசக்தி' தலைப்பை கடந்தாண்டே பதிவு செய்துவிட்டதாக நடிகர் விஜய் ஆண்டனி கூறியுள்ளார்.

    அருண் பிரபு இயக்கும் படத்திற்கு தமிழில் 'சக்தித் திருமகன்' என்றும் தெலுங்கில் 'பராஷக்தி' எனவும் பெயரிடப்பட்டு பதிவு செய்துள்ளதாக கூறியுள்ள விஜய் ஆண்டனி, பதிவிற்கான ஆவணத்தையும் வெளியிட்டுள்ளார்.

    இதனால், விஜய் ஆண்டனி- சிவகார்த்திகேயன் இருதரப்பினருக்கும் இடையே 'பராசக்தி' என்ற பெயர் தொடர்பாக சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பராசக்தி படத்தில் சிகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஸ்ரீலீலா நடித்துள்ளார்.
    • பராசக்தி படத்தில் ரவி மோகன் வில்லனாக நடித்துள்ளார்.

    ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று சுமார் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இதனை தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் தனது 24-வது படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.

    இதனையடுத்து, சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 25-வது படத்தில் நடிக்கிறார் என்று படக்குழு கடந்த மாதம் அதிகாரப்பூரவமாக அறிவித்தது. இப்படத்தை டான் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

    இந்த படத்தில் அதர்வா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நாயகியாக ஸ்ரீலீலா நடிக்கிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். ரவி மோகன் இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்.

    இப்படம் சிவகார்த்திகேயனுக்கு 25வது படமாகவும், ஜி.வி.பிரகாஷ்க்கு 100வது படமாகவும் இப்படம் அமைகிறது. சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகிறது.

    இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் வீடியோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இப்படத்திற்கு பராசக்தி என்று பெயரிட்டுள்ளனர். நடிகர் திலகம் சிவாஜியின் முதல் படத்தின் பெயர் பராசக்தி என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 25-வது படத்தில் நடிக்கிறார்
    • இப்படத்தை டான் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

    ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று சுமார் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இதனை தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் தனது 24-வது படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.

    சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 25-வது படத்தில் நடிக்கிறார் என்று படக்குழு கடந்த மாதம் அதிகாரப்பூரவமாக அறிவித்தது. இப்படத்தை டான் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

    இந்த படத்தில் ரவி மோகன் மற்றும் அதர்வா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நாயகியாக ஸ்ரீலீலா நடிக்கிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். ரவி மோகன் இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

    இப்படம் சிவகார்த்திகேயனுக்கு 25வது படமாகவும், ஜி.வி.பிரகாஷ்க்கு 100வது படமாகவும் இப்படம் அமைகிறது. சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகிறது. படத்தின் பூஜை விழா சமீபத்தில் நடைப்பெற்றது. படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோவை படக்குழு இன்று வெளியிட இருந்தது ஆனால் சில சூழ்நிலை காரணமாக வெளியிடவில்லை. படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ நாளை மாலை 4 மணிக்கு வெளியாகும் என படக்குழு புது போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர். அதில் சிவகார்த்திகேயன் கையில் தீ எறி குண்டுடன் இருக்கிறார். தீ பரவட்டும், வைவால ரெவால்யூஷன் என வரிகள் போஸ்டரில் இடம் பெற்றுது.

    திரைப்படத்திற்கு பராசக்தி என தலைப்பாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 25-வது படத்தில் நடிக்கிறார்
    • இந்த படத்தில் ரவி மோகன் மற்றும் அதர்வா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

    ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று சுமார் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இதனை தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் தனது 24-வது படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.

    சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 25-வது படத்தில் நடிக்கிறார் என்று படக்குழு கடந்த மாதம் அதிகாரப்பூரவமாக அறிவித்தது. இப்படத்தை டான் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

    இந்த படத்தில் ரவி மோகன் மற்றும் அதர்வா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நாயகியாக ஸ்ரீலீலா நடிக்கிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

    இப்படம் சிவகார்த்திகேயனுக்கு 25வது படமாகவும், ஜி.வி.பிரகாஷ்க்கு 100வது படமாகவும் இப்படம் அமைகிறது. சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகிறது. படத்தின் பூஜை விழா சமீபத்தில் நடைப்பெற்றது. படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோவை நாளை மாலை 5 மணிக்கும் வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

    இந்த நிலையில் படத்தின் தலைப்பு பராசக்தி என வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 25-வது படத்தில் நடிக்கிறார்
    • ஜி.வி.பிரகாஷ்க்கு 100வது படமாகவும் இப்படம் அமைகிறது.

    ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று சுமார் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இதனை தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் தனது 24-வது படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.

    இந்நிலையில் சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் தனது 25-வது படத்தில் நடிக்கிறார் என்று படக்குழு கடந்த மாதம் அதிகாரப்பூரவமாக அறிவித்தது. இப்படத்தை டான் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

    இந்த படத்தில் ரவி மோகன் மற்றும் அதர்வா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நாயகியாக ஸ்ரீலீலா நடிக்கிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

    இப்படம் சிவகார்த்திகேயனுக்கு 25வது படமாகவும், ஜி.வி.பிரகாஷ்க்கு 100வது படமாகவும் இப்படம் அமைகிறது. சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகிறது. படத்தின் பூஜை விழா சமீபத்தில் நடைப்பெற்றது.

    இந்த நிலையில் படத்தின் தலைப்பு பராசக்தி என வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் டைட்டில் அறிவிப்பு வீடியோ 1 நிமிடம் 50 வினாடிகள் படக்குழு உருவாக்கி இருப்பதாகவும் அந்த வீடியோ விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×