என் மலர்
நீங்கள் தேடியது "Maanaadu"
- இந்த படத்தில் சிம்பு மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு பாராட்டுகளை பெற்றது.
- 'மாநாடு' திரைப்படம் வெளியாகி 3 ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ளது.
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'மாநாடு'. தொடர் தோல்வி படங்களால் துவண்டு இருந்த சிம்புவிற்கு இந்த திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது. இப்படத்தில் சிம்புவுடன் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, மனோஜ் பாரதிராஜா, பிரேம்ஜி, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.
டைம் லூப் கதையம்சம் கொண்ட இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. வசூல் ரீதியாகவும் இந்த படம் மிகப்பெரிய சாதனை படைத்தது. மேலும் இந்த படத்தில் சிம்பு மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு பாராட்டுகளை பெற்றது.
'மாநாடு' திரைப்படம் வெளியாகி 3 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில், இப்படம் மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்படுவதாக நடிகர் எஸ்.ஜே.சூர்யா எக்ஸ் தளத்தில் கூறி இருந்தார்.

இதுதொடர்பாக எக்ஸ் தள பக்கத்தில், 2021-ம் ஆண்டு நடிகர் சிம்பு, படத்திற்காக டப்பிங் பணிகளில் ஈடுபட்டது தொடர்பாக வந்தான்... சுட்டான்.. செத்தான்.. REPEATU என்ற தலைப்பில் வெளியிட்ட வீடியோவை Tag செய்து மீண்டும் மாநாடு விரைவில் வெளியாக உள்ளதாக தெரிவித்தார்.
இதனிடையே, 'மாநாடு' படத்தின் தயாரிப்பாளரான சுரேஷ் காமாட்சி எக்ஸ் தளத்தில், மகிழ்ச்சியான செய்தி... சிம்புவின் பிறந்த நாளைக் கொண்டாட மீண்டும் வருகிறது 'மாநாடு' என்றும் நாளை முதல் திரையரங்குகளில் வெளியாகுவதாக கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் உற்சாக மிகுதியில் உள்ளனர்.
கடந்த சில மாதங்களாகவே, ரசிகர்களின் வரவேற்பை பெற்ற படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
Happy Happy news!! நம்ம ஸ்டார் #STR-ன் பிறந்த நாளைக் கொண்டாட. மீண்டும் வருகிறது #மாநாடு@SilambarasanTR_ in#ReReleaseOfMaanaadu on jan 31st#vp09 #STR @vp_offl @thisisysr @kalyanipriyan @iam_SJSuryah @SAChandrasekher@vagaiyaar #YGMahendran@ACTOR_UDHAYAA @manojkumarb_76… pic.twitter.com/RpQmsI3AGI
— sureshkamatchi (@sureshkamatchi) January 30, 2025
??? again soon maanaadu rerelease https://t.co/Z75RTuWpM9
— S J Suryah (@iam_SJSuryah) January 30, 2025
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.





வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘மாநாடு. வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி அதிக பொருட்செலவில் தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள், பின்னணி வேலைகள் முடிந்து ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இதற்கு முன் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிபோனது. இறுதியாக நவம்பர் 25ம் தேதி (இன்று) ரிலீசாக இருப்பதாக அறிவித்து அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில், மாநாடு திரைப்படம் இன்று வெளியாகாது என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்து இருந்தார். அதன்பிறகு சிம்பு குடும்பத்தினர் சிக்கலை தீர்க்க முடிவு செய்தனர். பல கட்ட பேச்சு வார்த்தைக்கு பிறகு திட்டமிட்டபடி மாநாடு இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால், தியேட்டர்களுக்கு கேடிஎம் கிடைக்காததால் காலை 5 மணி காட்சி ரத்தானது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதன்பின் காலை 8 மணிக்கு கேடிஎம் வழங்கப்பட்டு மாநாடு படம் திரையரங்குகளில் வெளியானது.
பெரும் எதிர்பார்ப்பில் இருந்த மாநாடு படம் வெளியானதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
இதையும் படியுங்கள்.. அமீர்கானுடன் திருமணமா? அதிர்ச்சியில் நடிகை






