என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுரை மாநாடு"

    • ஒவ்வொரு வீட்டிலும், மனதிலும் இடம் பிடித்த பிறகே நான் அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளேன்.
    • பெண்கள் முன்னேற்றத்திற்காகவும், மக்கள் நலன்கருதி தவெக ஆட்சி செயல்படும் என்றார்.

    மதுரையில் நடைபெற்று வரும் தமிழக வெற்றிக்கழகத்தின் 2வது மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் உரையாற்றினார்.

    அப்போது அவர் கொள்கை எதிரி , அரசியல் எதிரி என நேரடியாக திமு.க மற்றும் பா.ஜ.க வை விமர்சித்து பேசினார். பெண்கள் முன்னேற்றத்திற்காகவும், மக்கள் நலன்கருதி அவரது ஆட்சி செயல்படும் என கூறினார்.

    மேலும்," அரசியலுக்கு வருவதற்கு முன்பு அவரே வரவில்லை. இவர் எங்கு வரப்போகிறார் என ஜோசியம் சொன்னார்கள். நான் ஒன்றும் மார்க்கெட் போன பிறகு, ஓய்வு பெற்ற பிறகு, அடைக்கலம் தேடி அரசியலுக்கு வரவில்லை. ஒவ்வொரு வீட்டிலும், மனதிலும் இடம் பிடித்த பிறகே நான் அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளேன்" என கூறினார்.

    இந்த வாக்கியம் அரசியலுக்கு வருவேன் என வராமல் இருந்த நடிகர் ரஜினிகாந்த், மார்கெட் இல்லாமல் அடைக்களம் தேடி வந்தவர் என கூறியது நடிகர் கமல்ஹாசனை குறிப்பிட்டு பேசினாரா? என நெட்டிசன்கள் அவர்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

    இந்நிலையில், இதுதொடர்பாக சென்னை விமான நிலையத்தில் நடிகரும், எம்.பி.,யுமான கமல்ஹாசனிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு பதிலளித்த கமல்," அவர் என் பெயரை சொன்னாரா? அல்லது வேறு யார் பெயரையாவது சொன்னாரா? அட்ரெஸ் இல்லாத லெட்டருக்கு நான் பதில் போடலாமா?" என்றார்.

    • ஆட்சியைப் பிடிப்பதெல்லாம் அவ்வளவு ஈசி கிடையாது என சொல்கிறார்கள்.
    • விஜய் என்ன புதிய திட்டம் வைத்திருக்கிறார்கள் என்கிறார்கள். திட்டங்களை இப்போது அறிவிக்கிறேன்.

    மதுரையில் நடைபெற்று வரும் தமிழக வெற்றிக்கழகத்தின் 2வது மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் உரையாற்றினார்.

    தவெக 2வது மாநில மாநாட்டில் பிற்பகல் 4.50 மணிக்கு தனது உரையை தொடங்கிய விஜய் பிற்பகல் 5.25 மணிக்கு முடித்து, 35 நிமிடங்கள் உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    அரசியலுக்கு வருவதற்கு முன்பு அவரே வரவில்லை. இவர் எங்கு வரப்போகிறார் என ஜோசியம் சொன்னார்கள். கட்சிப் பெயர் அறிவித்தபோது, மக்களிடம் பெயர் வாங்க வேண்டும் என்றனர்.

    மாநாடு நடத்த முடியாது என்றார்கள். தற்போது, ஆட்சியைப் பிடிப்பதெல்லாம் அவ்வளவு ஈசி கிடையாது என சொல்கிறார்கள்.

    கூட்டம் எப்படி ஓட்டாக மாறும் என்கிறார்கள். ஆனால், நம் தொடர்பு எல்லாம் மக்களுடன் தான். அது எதிரிக்கு நல்லாவே தெரியும்.

    விஜய் என்ன புதிய திட்டம் வைத்திருக்கிறார்கள் என்கிறார்கள். திட்டங்களை இப்போது அறிவிக்கிறேன்.

    பெண் குழந்தைகள், பெண்கள், வயதானவர்கள் தான் நமது முதன்மை அக்கறை. இளைஞர்கள், உழவர்கள், உழைப்பாளர்கள், நெசவாளர்கள், ஆதரவற்ற முதியோர்கள், மீனவர்கள், மாற்றுத்திறனாளிகள், மூன்றாம் பாலினத்தவர்கள் என அரசின் சிறப்பு கவனம் தேவைப்படுபவர்களுக்காக அரசு அமைப்பதே நமது நோக்கம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மக்கள் சக்தியே இல்லாத கட்சிகளை மிரட்டி 2029 வரை சொகுசுபயணம் மேற்கொள்ள நினைக்கிறீர்களா?
    • தமிழ்நாட்டிற்கு எதுவும் செய்யாமல் ஓரவஞ்சனை செய்யும் பாஜக ஒன்றிய அரசு.

    மதுரையில் நடைபெற்று வரும் தமிழக வெற்றிக்கழகத்தின் 2வது மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் உரையாற்றினார்.

    தவெக 2வது மாநில மாநாட்டில் பிற்பகல் 4.50 மணிக்கு தனது உரையை தொடங்கிய விஜய் பிற்பகல் 5.25 மணிக்கு முடித்து, 35 நிமிடங்கள் உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    எங்களுக்கு தேவையானதை செய்யாமல் ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்துள்ளீர்கள் பாஜகவின் மோடி அவர்களே.

    மக்கள் சக்தியே இல்லாத கட்சிகளை மிரட்டி 2029 வரை சொகுசுபயணம் மேற்கொள்ள நினைக்கிறீர்களா?

    நேரடி, மறைமுகம் என கூட்டணி போட்டாலும் தாமரை இலையில் தண்ணீர் ஒட்டாது, தமிழக மக்கள் எப்படி ஒட்டுவார்கள்?

    தமிழ்நாட்டிற்கு எதுவும் செய்யாமல் ஓரவஞ்சனை செய்யும் பாஜக ஒன்றிய அரசு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்காமல் பெண்கள் தன்னை அப்பா என்று அழைத்துக் கொள்கிறோர்.
    • ஸ்டாலின் அங்கிள்.. what uncle its very wrong uncle.

    மதுரையில் நடைபெற்று வரும் தமிழக வெற்றிக்கழகத்தின் 2வது மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் உரையாற்றினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அது கபட நாடக மு.க.ஸ்டாலின் அங்கிளாகவே இருந்தாலும் விடமாட்டோம்.

    உங்கள் ஆட்சி ஊழல் இல்லாமல் நேர்மையாக உள்ளதா? பெண்களுக்கு பாதுகாப்பு உள்ளதா? பதில் சொல்லுங்கள் அங்கிள்.

    பாதுகாப்பில்லை என்று பெண்கள் கதறும் குரல் ஸ்டாலின் அங்கிளுக்கு கேட்கவில்லையா?

    பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்காமல் பெண்கள் தன்னை அப்பா என்று அழைக்கிறார். ஸ்டாலின் அங்கிள்.. what uncle its very wrong uncle.

    ஸ்டாலின் Uncle, What Uncle, It's Very Wrong Uncle. தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால், மு.க.ஸ்டாலின் Uncle-ஆக இருந்தாலும் விடமாட்டோம்

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மாநாட்டில் சுமார் 2 லட்சம் தொண்டர்கள் திரண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    • மாநாட்டு விழா மேடைக்கு தவெக தலைவர் விஜயின் தந்தை சந்திரசேகர், தாயார் ஷோபா வருகை தந்தனர்.

    த.வெ.க.வின் 2-வது மாநாடு மதுரை- தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரப்பத்தி என்ற பகுதியில் இன்று நடைபெற்று வருகிறது.

    இந்த மாநாட்டில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்பார்கள் என்பதால் அதற்கான ஏற்பாடுகள் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தடபுடலாக நடந்தன.

    இதுவரை தமிழகத்தில் நடந்த எந்த ஒரு கட்சி மாநாடும் இந்தளவு பிரமாண்டமான மைதானத்தில் நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    மாநாட்டில் பங்கேற்பதற்காக நேற்று நள்ளிரவு முதல் அலை அலையாக குவிந்த லட்சக்கணக்கான தொண்டர்களால் மாநாடு நடைபெறுவது காலையா, மாலையா? என்று கேட்கும் அளவிற்கு இருந்தது.

    தற்போது வரை, மாநாட்டில் சுமார் 2 லட்சம் தொண்டர்கள் திரண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதற்கிடையே, மாநாட்டு விழா மேடைக்கு தவெக தலைவர் விஜயின் தந்தை சந்திரசேகர், தாயார் ஷோபா வருகை தந்தனர். சந்திரசேகர் தவெக நிர்வாகிகளை அறிமுகம் செய்தனர்.

    தொடர்ந்து, த.வெ.க. மாநாடு பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் என கூறப்பட்ட நிலையில், தற்போது மாநாடு இசை நிகழ்ச்சியுடன் தொடங்கியுள்ளது. மேளதாள வாத்தியங்கள் முழங்க தமிழக வெற்றிக்கழகத்தின் 2வது மாநில மாநாடு தொடங்கியது.

    இந்நிலையில், தவெக தலைவர் விஜய் மாநாட்டின் மேடைக்கு வருகை தந்தார்.

    • தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரையில் நாளை நடக்க உள்ளது.
    • மாநாட்டு திடலில் அண்ணா, எம்.ஜி.ஆர். உடன் விஜய் கட் அவுட்டும் வைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் கடந்த ஆண்டு நடந்தது.

    இதனையடுத்து தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரையில் நாளை நடக்க உள்ளது. இதற்காக மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் எலியார்பத்தி சுங்கச்சாவடி அருகே உள்ள பாரபத்தி பகுதியில் 506 ஏக்கரில் இடம் தேர்வு செய்யப்பட்டு மாநாட்டுக்கான ஏற்பாடு பணிகள் நடந்து வருகிறது. இதற்காக சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மாநாட்டில் 100 அடி கொடிக்கம்பத்தில் கட்சி கொடியை விஜய் ஏற்றவுள்ளார்.

    மாநாட்டு திடலில் அண்ணா, எம்.ஜி.ஆர். கட் அவுட்களுடன் விஜய் கட் அவுட்டும் நிறுவப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    மாற்றுக்கட்சி தலைவர்களின் புகைப்படங்களை தமிழக வெற்றிக் கழகம் பயன்படுத்தலாமா என்ற கேள்வி எழுந்தது. இந்த கேள்விக்கு தவெக துணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

    செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "அண்ணாவும், எம்ஜிஆரும் பொதுவான தலைவர்கள் என்பதால் படத்தை பயன்படுத்தியுள்ளோம்" என்று தெரிவித்தார். அப்போது விஜயகாந்த் புகைப்படங்களை பயன்படுத்தக்கூடாது பிரேமலதா தெரிவித்தது குறித்த செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்த அவர், "விஜயகாந்த் புகைப்படங்களை நாங்கள் எங்கும் பயன்படுத்தவில்லை" என்று தெரிவித்தார்.

    • ஆடு மாடுகள் வளர்ப்பதை அரசு வேலையாக மாற்றுவேன் என்று சீமான் வாக்குறுதி அளித்துள்ளார்.
    • ஆடு மாடு மேய்ப்பது அவமானம் அல்ல வெகுமானம் என்று சீமான் தெரிவித்தார்.

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆடு மாடுகள் வளர்ப்பு பற்றியும், இயற்கை விவசாயம் குறித்தும் தொடர்ந்து பேசி வருகிறார். என்னிடம் ஆட்சி அதிகாரத்தை கொடுத்தால் ஆடு மாடுகள் வளர்ப்பதை அரசு வேலையாக மாற்றுவேன் என்று அவர் தேர்தல் வாக்குறுதியையும் அளித்துள்ளார்.

    அதே நேரத்தில் இன்றைய காலகட்டத்தில் ஆடு மாடுகள் வளர்ப்பு என்பது கிராமப்புறங்களில் அரிதாகிவிட்டதையும் அவர் அடிக்கடி சுட்டிக்காட்டி வந்துள்ளார்.

    இதுபோன்ற சூழலில் வனப்பகுதிகளை ஒட்டி உள்ள மேய்ச்சல் நிலங்களில் ஆடு மாடுகளை வளர்ப்பவர்கள் தங்களது கால்நடைகளை மேய்ச்சலுக்காக பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    காடுகளை பாதுகாப்பதாக கூறி வனத்துறையினர் ஆடு மாடுகளை மேய்ச்சல் நிலங்களில் மேய விடுவதற்கு அனுமதிப்பது இல்லை. இதன் காரணமாக ஆடு மாடுகளை வளர்க்கும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    இதைத்தொடர்ந்து ஆடு மாடுகளை பாதுகாக்க வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி மதுரையில் இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் ஆடு மாடுகள் மாநாடு நடைபெற்று வருகிறது.

    இந்த மாநாட்டில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் ஆடு மாடுகளுடன் திரளாக கலந்து கொண்டார்கள்.

    மாநாட்டில் ஆடு மாடுகளுக்கு முன் எழுச்சி உரையாற்றிய சீமான், "ஆடு மாடு மேய்ப்பது அவமானம் அல்ல வெகுமானம். திருமால், பெருமாள், கண்ணன் ஆடு மாடு மேய்தனர். இயேசு, நபிகள் நாயகம் ஆடு மாடு மேய்தனர். கால்நடைகள் நம் உணர்வுடன் கலந்தவை. மாட்டுக்கு பொங்கல் வைத்தவன் தமிழன்"

    இனி யாரையாவது திட்ட வேண்டும் என்றால் எருமை மாடு என்று திட்டாதீர்கள். ஆடு, மாடுகளைப் பற்றி கவலைப்படாத நீங்கள் ஏன் ஆவின் விற்பனை செய்கிறீர்கள்? மாடு வளர்க்க அவமானம் என்று நினைக்கும் நீங்கள் ஏன் பால் குடிக்கிறீர்கள்?" என்று தெரிவித்தார்.

    • ஆடு மாடுகளை வளர்க்கும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
    • நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆடு மாடுகள் மாநாட்டை நடத்துகிறார்.

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆடு மாடுகள் வளர்ப்பு பற்றியும், இயற்கை விவசாயம் குறித்தும் தொடர்ந்து பேசி வருகிறார். என்னிடம் ஆட்சி அதிகாரத்தை கொடுத்தால் ஆடு மாடுகள் வளர்ப்பதை அரசு வேலையாக மாற்றுவேன் என்று அவர் தேர்தல் வாக்குறுதியையும் அளித்துள்ளார்.

    அதே நேரத்தில் இன்றைய காலகட்டத்தில் ஆடு மாடுகள் வளர்ப்பு என்பது கிராமப்புறங்களில் அரிதாகிவிட்டதையும் அவர் அடிக்கடி சுட்டிக்காட்டி வந்துள்ளார்.

    இதுபோன்ற சூழலில் வனப்பகுதிகளை ஒட்டி உள்ள மேய்ச்சல் நிலங்களில் ஆடு மாடுகளை வளர்ப்பவர்கள் தங்களது கால்நடைகளை மேய்ச்சலுக்காக பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    காடுகளை பாதுகாப்பதாக கூறி வனத்துறையினர் ஆடு மாடுகளை மேய்ச்சல் நிலங்களில் மேய விடுவதற்கு அனுமதிப்பது இல்லை. இதன் காரணமாக ஆடு மாடுகளை வளர்க்கும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு

    உள்ளனர்.

    இதைத்தொடர்ந்து ஆடு மாடுகளை பாதுகாக்க வேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி மதுரையில் வருகிற 10ம் தேதி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆடு மாடுகள் மாநாட்டை நடத்துகிறார்.

    இந்த மாநாட்டில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் ஆடு மாடுகளுடன் திரளாக கலந்து கொள்கிறார்கள். இந்த மாநாட்டுக்கு அழைப்புவிடுத்து மாடுகளின் பின்னணியில் சீமான் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அதில் அவர் பேசியிருப்ப தாவது:-

    மதுரை வீராகனூர் கிராமத்தில் வருகிற 10-ந் தேதி மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை என்கிற முழக்கத்தை முன்வைத்து ஆடு, மாடுகளின் மாநாடு நடக்கிறது.

    பேசும் திறனற்ற உயிர்களுக்காக பேசுவோம். அவர்களின் உரிமைக்காகவும் பேசுவோம். ஆடும், மாடும் நமது செல்வங்கள். கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவருக்கு மாடல்ல மற்றயவை என்று வள்ளுவ பெருமகனார் கூறியுள்ளார்.

    கல்விதான் மானுடருக்கு செல்வம். ஆனால் மாடும் செல்வங்கள்தான் என்பதை அவர் வலியுறுத்தி பாடியுள்ளார். அந்த நம் செல்வங்களை பாதுகாக்க நாம் எல்லோரும் மதுரையில் கூடுவோம்.

    ஆடும், மாடும் அற்ப உயிர்கள் அல்ல. நம் அருமை செல்வங்கள். அவர்களின் உரிமைக்காக உரக்க முழங்குவோம். என் அன்பு சொந்தங்கள் இதையே அழைப்பாக ஏற்று மதுரை வீராகனூருக்கு வாருங்கள்.

    இவ்வாறு சீமான் கூறியுள்ளார். 

    • ராணிப்பேட்டை அ.தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் நந்தகோபால் தலைமை தாங்கினார்.

    முன்னாள் எம்.எல்.ஏக்கள் சம்பத், சீனிவாசன், மாவட்ட பொருளாளர் சாபுதீன் உள்பட நிர்வாகிகள் பலர் முன்னிலை வகித்தனர். ராணிப்பேட்டை நகர செயலாளர் கே.பி.சந்தோஷம் வரவேற்று பேசினார்.

    கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக ராணிப்பேட்டை மாவட்ட செயலாளரும், சட்டமன்ற துணை கொறடாவுமான சு.ரவி எம்.எல்.ஏ கலந்து கொண்டு தீர்மானங்கள் குறித்தும் பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கி பேசினார்.

    கூட்டத்தில் வருகின்ற 2024 பாராளுமன்ற தேர்தலில் முன்னிட்டு 19 பேர் கொண்ட பூத் கமிட்டியும் வாக்குச்சா வடிகள் தோறும் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பாசறை மற்றும் மகளிர் குழுக்களை வருகிற ஆகஸ்ட் 1-ந் தேதிக்குள் அமைப்பது.

    வருகிற ஆகஸ்ட் 20-ந் தேதி மதுரையில் நடைபெறும் மாநாட்டில் ராணிப்பேட்டை மாவட்டத்தின் சார்பில் 10 ஆயிரம் பேர் கலந்து கொள்வது, வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் குறிப்பாக அரக்கோணம் நாடாளு மன்ற தொகுதியிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வது என்பது உள்பட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் அ.தி.மு.கவின் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • அ.தி.மு.க. தலைமை திட்டமிட்டு அதற்கான பணிகளை முழு வீச்சில் செய்து வருகிறார்கள்.
    • எடப்பாடி பழனிசாமிக்கு பூரண கும்ப மரியாதையுடன் தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

    அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வானதையடுத்து முதல் முறையாக அ.தி.மு.க. எழுச்சி மாநாட்டை எடப்பாடி பழனிசாமி மதுரையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கூட்டி உள்ளார்.

    அ.தி.மு.க. வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு என்ற தலைப்பில் இந்த மாநாடு மிக பிரமாண்ட முறையில் நடத்தப்படுகிறது. அ.தி.மு.க.வின் பொன்விழா ஆண்டையொட்டி நடத்தப்படும் இந்த மாநாட்டை மிகவும் சிறப்பாக நடத்த அ.தி.மு.க. தலைமை திட்டமிட்டு அதற்கான பணிகளை முழு வீச்சில் செய்து வருகிறார்கள்.

    இந்நிலையில், இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று மாலை மதுரைக்கு வருகை தந்தார்.

    அவருக்கு வழியெங்கும் மலர்கள் தூவி, பூரண கும்ப மரியாதையுடன் தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர்.

    • திருவிழாவில் மதுரை மட்டுமின்றி மாநிலம் முழுவதிலும் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள்.
    • மதுரை நகரின் அனைத்து பகுதிகளிலும் அ.தி.மு.க.வினரின் வாகனங்களாகவே அணி வகுத்து செல்கின்றன.

    மதுரை:

    கோவில் மாநகராக போற்றப்படும் மதுரையில் முத்திரை பதிக்கும் சித்திரை திருவிழா மற்றும் அழகர் ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த திருவிழாவில் மதுரை மட்டுமின்றி மாநிலம் முழுவதிலும் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள்.

    அதனை மிஞ்சும் அளவுக்கு மதுரையில் இன்று நடைபெற்று வரும் அ.தி.மு.க. வீர வராற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டிற்கு தொண்டர்கள் குவிந்துள்ளனர். மதுரை நகரின் அனைத்து பகுதிகளிலும் அ.தி.மு.க.வினரின் வாகனங்களாகவே அணி வகுத்து செல்கின்றன.

    நேற்று காலை முதலே சென்னை மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் ரெயில்கள், பஸ், வேன், கார் மூலமாகவும், அண்டை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் இரு சக்கர வாகனங்கள் மூலமாகவும் மாநாட்டு திடலை நோக்கி படையெடுத்து வந்தனர்.

    அவ்வாறு பகலிலேயே வந்தவர்கள் ஆங்காங்கே பதிவு செய்து வைத்திருந்த தனியார் தங்கும் விடுதிகளில் ஓய்வெடுத்தனர். பலர் மதுரை மீனாட்சி அம்மன் கோவில், அழகர் கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில், பழமுதிர்சோலை முருகன் கோவில் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

    அறை எடுக்காதவர்கள் கிடைத்த இடங்களில் தூங்கி இரவை கழித்து இன்று காலை மாநாட்டு பந்தலுக்கு வந்தனர். காலையிலேயே அவர்களுக்கு சுடச்சுட இட்லி, பொங்கல், சட்னி, சாம்பார் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

    • மதுரை மாநாட்டில் பங்கேற்ற அ.தி.மு.க. நிர்வாகிகள் பரிதாபமாக இறந்தார்.
    • பெருங்குடி போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் வளை யங்குளத்தில் கடந்த 20-ந் தேதி அ.தி.மு.க. மாநாடு நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பெரிய நெகமம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 56). அ.தி.மு.க. தொண்டரான இவர் மதுரை மாநாட்டில் பங்கேற்று விட்டு அன்று இரவு ஊருக்கு புறப்பட்டார்.

    சம்பக்குளம் பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்த போது பழனிச்சாமி திடீரென மயங்கி விழுந்தார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் பழனிச்சாமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து அவரது மகன் ஸ்ரீதர் கொடுத்த புகாரின் பேரில் ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பத்தூர் மாவட்டம் பத்ரிகாணு கிராமத்தைச் சேர்ந்தவர் சென்னையன் (65) அ.தி.மு.க. கிளைச் செயலாளரான இவர் கடந்த 20-ந்தேதி கட்சி பொறுப்பாளர் குப்பையன் தலைமையில் மாநாட்டில் பங்கேற் றார்.

    இந்த நிலையில் திடீரென உடல் நலகுறைவு ஏற்பட்டு மாநாட்டு பந்தல் அருகில் சென்னையன் இறந்தார். இதுகுறித்து அவரது மகன் முருகன் கொடுத்த புகாரின் பேரில் பெருங்குடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×