மதுரை மாநாட்டில் பங்கேற்ற அ.தி.மு.க. நிர்வாகிகள் சாவு

மதுரை மாநாட்டில் பங்கேற்ற அ.தி.மு.க. நிர்வாகிகள் பரிதாபமாக இறந்தார்.பெருங்குடி போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை மாநாட்டில் பங்கேற்ற அ.தி.மு.க. நிர்வாகிகள் சாவு
Published on

திருமங்கலம்

மதுரை மாவட்டம் வளை யங்குளத்தில் கடந்த 20-ந் தேதி அ.தி.மு.க. மாநாடு நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள பெரிய நெகமம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 56). அ.தி.மு.க. தொண்டரான இவர் மதுரை மாநாட்டில் பங்கேற்று விட்டு அன்று இரவு ஊருக்கு புறப்பட்டார்.

சம்பக்குளம் பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்த போது பழனிச்சாமி திடீரென மயங்கி விழுந்தார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் பழனிச்சாமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து அவரது மகன் ஸ்ரீதர் கொடுத்த புகாரின் பேரில் ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் பத்ரிகாணு கிராமத்தைச் சேர்ந்தவர் சென்னையன் (65) அ.தி.மு.க. கிளைச் செயலாளரான இவர் கடந்த 20-ந்தேதி கட்சி பொறுப்பாளர் குப்பையன் தலைமையில் மாநாட்டில் பங்கேற் றார்.

இந்த நிலையில் திடீரென உடல் நலகுறைவு ஏற்பட்டு மாநாட்டு பந்தல் அருகில் சென்னையன் இறந்தார். இதுகுறித்து அவரது மகன் முருகன் கொடுத்த புகாரின் பேரில் பெருங்குடி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com