மதுரை மாநாட்டில் 10 ஆயிரம் பேர் பங்கேற்க வேண்டும்

ராணிப்பேட்டை அ.தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
மதுரை மாநாட்டில் 10 ஆயிரம் பேர் பங்கேற்க வேண்டும்
Published on

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் நந்தகோபால் தலைமை தாங்கினார்.

முன்னாள் எம்.எல்.ஏக்கள் சம்பத், சீனிவாசன், மாவட்ட பொருளாளர் சாபுதீன் உள்பட நிர்வாகிகள் பலர் முன்னிலை வகித்தனர். ராணிப்பேட்டை நகர செயலாளர் கே.பி.சந்தோஷம் வரவேற்று பேசினார்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக ராணிப்பேட்டை மாவட்ட செயலாளரும், சட்டமன்ற துணை கொறடாவுமான சு.ரவி எம்.எல்.ஏ கலந்து கொண்டு தீர்மானங்கள் குறித்தும் பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கி பேசினார்.

கூட்டத்தில் வருகின்ற 2024 பாராளுமன்ற தேர்தலில் முன்னிட்டு 19 பேர் கொண்ட பூத் கமிட்டியும் வாக்குச்சா வடிகள் தோறும் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பாசறை மற்றும் மகளிர் குழுக்களை வருகிற ஆகஸ்ட் 1-ந் தேதிக்குள் அமைப்பது.

வருகிற ஆகஸ்ட் 20-ந் தேதி மதுரையில் நடைபெறும் மாநாட்டில் ராணிப்பேட்டை மாவட்டத்தின் சார்பில் 10 ஆயிரம் பேர் கலந்து கொள்வது, வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் குறிப்பாக அரக்கோணம் நாடாளு மன்ற தொகுதியிலும் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வது என்பது உள்பட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் அ.தி.மு.கவின் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com