என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சூர்யா"

    சூர்யா 46 படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா. இவர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடித்துள்ள 45-வது படமான 'கருப்பு' படத்தின் பணிகள் நிறைவடைந்து வெளியிட தயாராக உள்ளது. இதைத் தொடர்ந்து நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் வெங்கி அட்லூரி கூட்டணியில் புதிய படம் உருவாகி வருகிறது.

    இந்தப் படத்தில் நடிகர் சூர்யாவுக்கு மமிதா பைஜூ ஜோடியாக நடிக்கிறார். இந்தப் படத்திற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், படத்தின் புதிய அப்டேட் விரைவில் வெளியாகும் என இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் தெரிவித்துள்ளார்.

    இது குறித்த X தளப் பதிவில், "S46-க்கான குக்கிங் நடைபெறுகிறது. மிக விரைவில் வருகிறோம், விரைவில் அப்டேட்," என்று ஜி.வி. பிரகாஷ் தெரிவித்துள்ளார். 

     

    • சூர்யாவுக்கு தகுந்த மாதிரி மாற்றங்கள் செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
    • பக்கா கமர்ஷியல் படமாக உருவாக இருக்கிறதாம்.

    ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் 'கருப்பு' படத்தில் நடித்து முடித்திருக்கும் சூர்யா, தற்போது வெங்கி அட்லூரி இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார்.

    ஜீத்து மாதவன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி இருக்கிறார். இதில் சூர்யா போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த 2 படங்களை தொடர்ந்து 'டிராகன்' படத்தை இயக்கி கவனம் ஈர்த்த அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சூர்யா நடிக்கப் போவதாக கூறப்படுகிறது. இது ரஜினிக்கு சொன்ன கதை என்றும், அந்த கதையை தற்போது சூர்யாவுக்கு தகுந்த மாதிரி மாற்றங்கள் செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

    அஷ்வத் மாரிமுத்து தற்போது சிம்புவை வைத்து 'காட் ஆப் லவ்' படத்தை இயக்க இருக்கிறார். இந்த படத்தை தொடர்ந்து அவர் சூர்யாவுடன் கைகோர்பார் என்று தெரியவருகிறது. இது பக்கா கமர்ஷியல் படமாக உருவாக இருக்கிறதாம். 

    • சர்வம் மாயா படம் ரூ.100 கோடி வசூலை குவித்துள்ளது.
    • டெலுலு என்ற கதாபாத்திரத்தில் நடித்த ரியா ஷிபுவின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது.

    நிவின் பாலி நடிப்பில் அண்மையில் வெளியான சர்வம் மாயா படம் ரூ.100 கோடி வசூலை குவித்துள்ளது. இப்படத்தில் டெலுலு என்ற கதாபாத்திரத்தில் நடித்த ரியா ஷிபுவின் நடிப்பு அனைவரையும் கவர்ந்தது.

    இந்நிலையில், 'சர்வம் மாயா' படத்தை பாராட்டி நடிகை ரியா ஷிபுவுக்கு மலர்கொத்துடன் சூர்யா - ஜோதிகா தம்பதி வாழ்த்து செய்து அனுப்பியுள்ளனர்.

    20 வயதே ஆன ரியா ஷியு தயாரிப்பு நிறுவனமான HR பிக்சர்ஸின் உரிமையாளர் ஆவார். விக்ரம் நடிப்பில் வெளியான வீர தீர சூரன் படத்தை ரியா ஷியு தான் தயாரித்தார்.

    ரியா ஷிபு இன்ஸ்டாகிராமில் மிகவும் ஃபேமஸ் மற்றும் வைரலானவர். இவர் செய்யும் ரீல்ஸ்-க்கும் மற்றும் பிரத்யேக எடிட்டுக்கு பல ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மை லார்ட் திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி இருக்கிறது.
    • மை லார்ட் படத்தில் சைத்ரா கதாநாயகியாக நடித்துள்ளார்.

    தமிழ் திரையுலகில் இயக்குநர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டவர் சசிகுமார். கடந்த சில ஆண்டுகளாக நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான "டூரிஸ்ட் ஃபேமிலி" திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றி படமாக மாறியது.

    இந்த வரிசையில், நடிகர் சசிகுமார் நடிப்பில் உருவாகி இருக்கும் "மை லார்ட்" திரைப்படம் நேற்று (பிப். 13) வெளியானது. இயக்குநர் ராஜூமுருகன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் சைத்ரா கதாநாயகியாக நடித்துள்ளார். ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கும் இந்த திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி இருக்கிறது.

    இந்நிலையில், 'MY LORD' படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருவதை ஒட்டி அப்படத்தின் விநியோகஸ்தரான நடிகர் சூர்யா படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

    • காதலர் தினத்தை ஒட்டி நாளை மௌனம் பேசியதே படம் நாளை வெளியாக உள்ளது.
    • மௌனம் பேசியதே படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரிலீஸ் செய்து வருகிறார்கள்.

    ஏற்கனவே ரஜினியின் 'பாட்ஷா', 'பாபா', கமல்ஹாசனின் 'நாயகன்', 'வேட்டையாடு விளையாடு', 'ஆளவந்தான்', விஜயகாந்தின் 'கேப்டன் பிரபாகரன்', விஜய்யின் 'கில்லி', 'சச்சின்', சூர்யாவின் 'வாரணம் ஆயிரம்', 'அஞ்சான்', தனுஷின் 'யாரடி நீ மோகினி', சேரனின் 'ஆட்டோகிராஃப்' உள்ளிட்ட பல படங்கள் மீண்டும் திரையிடப்பட்டன.

    இந்த நிலையில், 24 ஆண்டுகளுக்கு முன் நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற 'மௌனம் பேசியதே' படம் மீண்டும் வெளியாக உள்ளது.

    காதலர் தினத்தை ஒட்டி நாளை மௌனம் பேசியதே படம் நாளை வெளியாக உள்ளது.

    2002-ம் ஆண்டு அமீர் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான படம் 'மௌனம் பேசியதே'. த்ரிஷா, லைலா, நந்தா என பலரும் நடித்துள்ள இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் இன்றும் கூட ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.

    மௌனம் பேசியதே படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், நடிகை திரிஷா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், என்னுடைய முதல் படம் மௌனம் பேசியதே ரீரிலீஸ் ஆகவுள்ளது. காதலர் தினத்தை ஒட்டி வெளியாகும் இப்படத்தை தியேட்டரில் பொய் பாருங்கள். இந்த படம் எனக்கு ரொம்ப ஸ்பெஷல். ஏன் என்றால் இது தான் என்னுடைய முதல் படம். இங்கிருந்து தான் எல்லாமே தொடங்கியது

    இதில் சிறப்பு என்ன என்றால் என்னுடைய அடுத்த ரிலீசுக்கு சூர்யா உடன் நடித்த படம் (கருப்பு) தான். எனவே ஒரு வட்டத்தை நிறைவு செய்ததாக நான் உணர்கிறேன். 'மௌனம் பேசியதே' குழுவுக்கு அன்பையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன். அமீர் சார் என்னுடைய முதல் படத்திலேயே உங்களுடன் பணியாற்றியதால் மகிழ்ச்சி.

    இந்தக் குழுவில் யாரும் என்னை ஒரு அறிமுக நடிகையாக நடத்தவில்லை. குடும்பத்தினருடன் இருந்ததை போல தான் இருந்தது. இப்படத்தின் மூலம் லைலாவை சந்தித்ததும், அவருடன் நடித்ததும் பெரும் மகிழ்ச்சி. யுவனின் இசை இன்றுவரை இப்படத்தை பிரபலமாகவே வைத்துள்ளது" " என்று தெரிவித்தார்.

    முன்னதாக மௌனம் பேசியதே படத்தின் பிரபல வசனத்தை பேசி சூர்யா வீடியோ வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.முன்னதாக மௌனம் பேசியதே படத்தின் பிரபல வசனத்தை பேசி சூர்யா வீடியோ வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சூர்யா - ஜோதிகா இருவரும் 2006ம் ஆண்டு இருவீட்டாரின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டனர்.
    • என்னால் எப்படி மகனின் காதலுக்கு நோ சொல்ல முடியும் என்று சிவகுமார் தெரிவித்தார்.

    சூர்யா - ஜோதிகா 1999ம் ஆண்டு வெளியான 'பூவெல்லாம் கேட்டுப்பார்' திரைப்பத்தில் முதன் முதலாக இணைந்து நடித்தனர். அதை தொடர்ந்து இந்த ஜோடி உயிரிலே கலந்தது, பேரழகன், காக்க காக்க, சில்லுனு ஒரு காதல், மாயாவி உள்ளிட்ட திரைப்படங்களை ஒன்றாக இணைந்து நடித்தனர்.

    இதனையடுத்து சூர்யா - ஜோதிகா இருவரும் 2006ம் ஆண்டு இருவீட்டாரின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டனர்.

    இந்நிலையில், சூர்யா ஜோதிகாவை காதல் திருமணம் செய்து கொண்டதற்கு முக்கிய காரணம் ராதிகா தான் என்று சிவகுமார் பேசியுள்ளார்.

    யூடியூப் சேனல் ஒன்றில் பேசிய சிவகுமார், "உயிரிலே கலந்தது' படப்பிடிப்பில் தனியாகவே இருந்த சூர்யாவை ஜோதிகாவிடம் `பேசு பேசு' என சொன்னவர் ராதிகா தான். திரைப்படங்களில் 150 கதாநாயகிகளை லவ் பண்ணுவது போல நடித்துள்ளேன். என்னால் எப்படி மகனின் காதலுக்கு நோ சொல்ல முடியும்'' என்று தெரிவித்தார்.

    • 2002-ம் ஆண்டு அமீர் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான படம் 'மௌனம் பேசியதே'
    • மௌனம் பேசியதே படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரிலீஸ் செய்து வருகிறார்கள்.

    ஏற்கனவே ரஜினியின் 'பாட்ஷா', 'பாபா', கமல்ஹாசனின் 'நாயகன்', 'வேட்டையாடு விளையாடு', 'ஆளவந்தான்', விஜயகாந்தின் 'கேப்டன் பிரபாகரன்', விஜய்யின் 'கில்லி', 'சச்சின்', சூர்யாவின் 'வாரணம் ஆயிரம்', 'அஞ்சான்', தனுஷின் 'யாரடி நீ மோகினி', சேரனின் 'ஆட்டோகிராஃப்' உள்ளிட்ட பல படங்கள் மீண்டும் திரையிடப்பட்டன.

    இந்த நிலையில், 24 ஆண்டுகளுக்கு முன் நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற 'மௌனம் பேசியதே' படம் மீண்டும் வெளியாக உள்ளது.

    காதலர் தினத்தை ஒட்டி வரும் பிப்ரவரி 13 அன்று மௌனம் பேசியதே படம் வெளியாக உள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

    2002-ம் ஆண்டு அமீர் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான படம் 'மௌனம் பேசியதே'. த்ரிஷா, லைலா, நந்தா, நேஹா பெண்ட்ஸ் என பலரும் நடித்துள்ள இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் இன்றும் கூட ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.

    மௌனம் பேசியதே படம் மீண்டும் வெளியாகவுள்ள நிலையில், நடிகர் சூர்யா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மௌனம் பேசியதே படத்தின் பிரபல வசனத்தை சூர்யா பேசியுள்ளார். 

    • திருமணத்தில் பங்கேற்பதற்காக அவர் சென்னையில் இருக்கிறார்.
    • ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து பேசினர்.

    ஆந்திர பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி கட்சி தலைவருமான ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டி, தனது உறவினரின் மகன் திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக சென்னை வந்துள்ளார். ஒய்.எஸ். சுனில் ரெட்டியின் (ஒய்.எஸ். ஜெகனின் தந்தைவழி மாமா ஒய்.எஸ். ஜார்ஜ் ரெட்டியின் மகன்) மகன் சாஹிலின் திருமணத்தில் பங்கேற்பதற்காக அவர் சென்னையில் இருக்கிறார்.

    சாஹில் மற்றும் வேதிகாவின் திருமணம் இன்று காலை நடைபெற்றது. இந்த திருமண நிகழ்வில் உறவினர்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டனர். இந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் சூர்யா, கார்த்தி ஆந்திர முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து பேசினர்.

    ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வருடன் நடிகர் சூர்யா, கார்த்தி சிரித்து பேசிக் கொண்டிருக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது.

    24 ஆண்டுகளுக்கு முன் நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரிலீஸ் செய்து வருகிறார்கள்.

    ஏற்கனவே ரஜினியின் 'பாட்ஷா', 'பாபா', கமல்ஹாசனின் 'நாயகன்', 'வேட்டையாடு விளையாடு', 'ஆளவந்தான்', விஜயகாந்தின் 'கேப்டன் பிரபாகரன்', விஜய்யின் 'கில்லி', 'சச்சின்', சூர்யாவின் 'வாரணம் ஆயிரம்', 'அஞ்சான்', தனுஷின் 'யாரடி நீ மோகினி', சேரனின் 'ஆட்டோகிராஃப்' உள்ளிட்ட பல படங்கள் மீண்டும் திரையிடப்பட்டன.

    இந்த நிலையில், 24 ஆண்டுகளுக்கு முன் நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற 'மௌனம் பேசியதே' படம் மீண்டும் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

     படத்தின் வெளியீட்டு தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காதலர் தினத்தை ஒட்டி வரும் பிப்ரவரி 13 அன்று வெளியாக உள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

    2002-ம் ஆண்டு அமீர் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான படம் 'மௌனம் பேசியதே'.

    த்ரிஷா, லைலா, நந்தா, நேஹா பெண்ட்ஸ் என பலரும் நடித்துள்ள இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் இன்றும் கூட ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது. 

    • அடுத்தடுத்து புதிய படங்களில் நடித்து வருகிறார்.
    • உண்மை சம்பவங்களை தழுவி இக்கதை எடுக்கப்பட இருப்பதாகவும், இதற்கான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் 'கருப்பு' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.

    அதனைத்தொடர்ந்து வெங்கி அட்லூரி இயக்கத்திலும், ஜீத்து மாதவன் இயக்கத்திலும் அடுத்தடுத்து புதிய படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில் சூர்யாவின் புதிய படம் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது.

     

    அதன்படி எதார்த்தமான படங்களை எடுத்து கவனம் ஈர்த்த மாரி செல்வராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கப் போவதாக கூறப்படுகிறது. உண்மை சம்பவங்களை தழுவி இக்கதை எடுக்கப்பட இருப்பதாகவும், இதற்கான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    • இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
    • இப்படத்தின் பாடல்கள் இன்றும் கூட ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.

    தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரிலீஸ் செய்து வருகிறார்கள். ஏற்கனவே ரஜினியின் 'பாட்ஷா', 'பாபா', கமல்ஹாசனின் 'நாயகன்', 'வேட்டையாடு விளையாடு', 'ஆளவந்தான்', விஜயகாந்தின் 'கேப்டன் பிரபாகரன்', விஜய்யின் 'கில்லி', 'சச்சின்', சூர்யாவின் 'வாரணம் ஆயிரம்', 'அஞ்சான்', தனுஷின் 'யாரடி நீ மோகினி', சேரனின் 'ஆட்டோகிராஃப்' உள்ளிட்ட பல படங்கள் மீண்டும் திரையிடப்பட்டன.

    இந்த நிலையில், 24 ஆண்டுகளுக்கு முன் நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற 'மௌனம் பேசியதே' படம் மீண்டும் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. படம் வெளியீட்டு தேதி குறித்து அறிவிக்கப்படவில்லை என்றாலும் காதல் தினத்தையொட்டி அடுத்த மாதம் படம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    2002-ம் ஆண்டு அமீர் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான படம் 'மௌனம் பேசியதே'. த்ரிஷா, லைலா, நந்தா, நேஹா பெண்ட்ஸ் என பலரும் நடித்துள்ள இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் இன்றும் கூட ரசிகர்களால் ரசிக்கப்பட்டு வருகிறது.

     

    இதற்கிடையே, பொங்கலையொட்டி விஜயின் 'தெறி' படமும் மீண்டும் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

    • சூர்யா நடிப்பில் வெளியான உன்னை நினைத்து படம் வெற்றி பெற்றது.
    • இந்த பாடலை தளபதி விஜய் அவர்களை வைத்து தான் முதலில் படமாக்கி இருந்தேன்..

    ஹெச். வினோத் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள அவரது கடைசி படமான ஜனநாயகன் பொங்கலை ஒட்டி, ஜன.9ஆம் அன்று வெளியாகவுள்ளது

    இந்நிலையில், சூர்யா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற உன்னை நினைத்து படத்தில் முதலில் விஜய் நடித்த காட்சிகளை இயக்குநர் விக்ரமன் தனது இன்ஸ்டா பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில், "உன்னை நினைத்து படத்தில் இடம் பெற்ற "என்னை தாலாட்டும் "பாடல் இலங்கையில் சிங்கள மாணவர்களால் பாடப்பட்டு சமீபத்தில் Social மீடியாவில் வைரல் ஆனது.. இந்த பாடலை தளபதி விஜய் அவர்களை வைத்து தான் முதலில் படமாக்கி இருந்தேன்..

    அந்த நினைவுகள் தோன்ற, அந்த பாடல் சம்மந்தமான பழைய video cassette ஓன்று கிடைத்தது..மிகவும் டேமேஜ் ஆகியிருந்த அந்த வீடியோவை உங்கள் பார்வைக்கு post செய்கிறேன்... PLEASE DONT COMPARE this video with the existing video by Mr.Surya. Both are great performers" என்று தெரிவித்துள்ளார்.

    விக்ரமன் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், "விஜய் சினிமாவை விட்டு விலகுகிறேன் என்று சொல்வது எனக்கு வருத்தமாக தான் இருக்கிறது" என்று அவர் தெரிவித்தார்.

    ×