என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜோதிகா"

    • எஸ். ஜே. சூர்யா இயக்கிய இந்த படத்தில் விஜய், ஜோதிகா உடன் விஜயகுமார், விவேக், மும்தாஜ், ஷில்பா ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
    • 2000 ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் தேதி வெளியான திரைப்படம் வெளியாகி 100 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது.

    தமிழில் வெளியாகி வெற்றி பெற்ற முன்னணி நடிகர்களின் படங்களை டிஜிட்டலில் புதுப்பித்து மீண்டும் ரீ-ரிலீஸ் செய்து வருகிறார்கள்.

    அந்த வகையில் கடந்த 2000-ம் ஆண்டில் விஜய், ஜோதிகா நடிப்பில் வெளியான 'குஷி' திரைப்படம் மீண்டும் ரிலீஸ் ஆக உள்ளது.

    எஸ். ஜே. சூர்யா இயக்கிய இந்த படத்தில் விஜய், ஜோதிகா உடன் விஜயகுமார், விவேக், மும்தாஜ், ஷில்பா ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

    தேவாவின் இசையில் படத்தில் இடம்பெற்ற கட்டிப்புடி; கட்டிப்புடிடா, ரேக்கவீனா, ஒரு பொண்ணு ஒண்ணு, மேகம் கருக்குது உட்பட ஆறு பாடல்களும் ஹிட் ஆகின.

    2000 ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் தேதி வெளியான திரைப்படம் வெளியாகி 100 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடியது. விஜய்யின் சினிமா கேரியரில் முக்கியமான படமாக குஷி அமைந்தது.

    இந்நிலையில் குஷி திரைப்படம் வரும் 25ஆம் தேதி மீண்டும் ரிலீஸ் செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.   

    அஜய்தேவ்கன், ஆர்.மாதவன், ஜோதிகா நடித்த இந்தி படம் 'சைத்தான்

    அஜய்தேவ்கன், ஆர்.மாதவன், ஜோதிகா நடித்த இந்தி படம் 'சைத்தான்'. இப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மக்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றது.

     

    இப்படத்தை விகாஸ் இயக்கினார். பட வெளியீட்டின் போது ஒரு நிகழ்ச்சியில் பேசிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது "அண்மையில் நான் மலையாளத்தில் மம்மூட்டியுடன் இணைந்து நடித்தேன். அவருக்கும் அஜய் தேவ்கனுக்கும் ஒரு ஒற்றுமையை பார்க்கிறேன். படப்பிடிப்பில் இருவரும் மற்றவர்களுக்காக விட்டுக் கொடுத்து போனார்கள். தமிழில் நான் கிட்டதட்ட எல்லா நடிகர்களுடனும் நடித்திருக்கிறேன். ஆனால் நான் நடித்த படத்தில் போஸ்டரில் கூட என் முகம் வராது. ஆனால் அஜய் , மம்மூட்டி போன்ற நடிகர்கள் சினிமாவிற்கு திருப்பி கொடுக்க நினைக்கிறார்கள். நிறைய பேர் சினிமாவில் இருந்து பெற்றுக் கொள்கிறார்கள். ஆனா ஒரு சிலர் தான் திருப்பி தர நினைக்கிறார்கள் " என ஜோதிகா பேசியுள்ளார்.

    இந்த செய்தி, இணையத்தில் வைரலாகி வருகிறது, மேலும் நெட்டிசன்கள் ஜோதிகா கூறுவது தவறு, தமிழ் சினிமாவில் என்றும் பட நாயகிகளை போஸ்டர்களில் போடுவார்கள்,  என தமிழில் ஜோதிகா நடித்த திரைப்படங்ளின் போஸ்டரி பதிவிட்டு கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    • அகரம் தொண்டு நிறுவனத்தின் 15வது ஆண்டு விழா நேற்று நடைபெற்றது.
    • இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக எம்.பி. கமல் ஹாசன் பங்கேற்றார்.

    நடிகர் சூர்யாவின் அகரம் தொண்டு நிறுவனத்தின் 15வது ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், கடந்த 15 ஆண்டுகளாக அகரத்தில் படித்து பயன்பெற்ற அனைத்து மாணவர்கள், மாணவிகளும் கலந்து கொண்டனர்.

    மேலும், நடிகையும், சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா, சிவக்குமார், இயக்குனர் வெற்றி மாறான் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவையின் எம்.பி.,யுமான கமல் ஹாசன் பங்கேற்றார்.

    இந்நிலையில் அகரம் தொண்டு நிறுவனத்தின் 15வது ஆண்டு விழா முடிந்த கையோடு, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சூர்யா - ஜோதிகா தம்பதி சாமி தரிசனம் செய்துள்ளனர்.

    • சூர்யா-ஜோதிகா தற்போது மும்பையில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
    • சுற்றுலா தொடர்பான வீடியோவை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    சூர்யா - ஜோதிகா 1999ம் ஆண்டு வெளியான 'பூவெல்லாம் கேட்டுப்பார்' திரைப்பத்தில் முதன் முதலாக இணைந்து நடித்தனர். அதை தொடர்ந்து இந்த ஜோடி உயிரிலே கலந்தது, பேரழகன், காக்க காக்க, சில்லுனு ஒரு காதல், மாயாவி உள்ளிட்ட திரைப்படங்களை ஒன்றாக இணைந்து நடித்தனர்.

    இதனையடுத்து சூர்யா - ஜோதிகா இருவரும் 2006ம் ஆண்டு இருவீட்டாரின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டனர். நட்சத்திர காதல் தம்பதிகளான சூர்யா-ஜோதிகா தற்போது மும்பையில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில், சீஷெல்ஸ் நாட்டிற்கு சூர்யா, ஜோதிகா சுற்றுலா சென்றுள்ளனர். இது தொடர்பான வீடியோவை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    • சூர்யா-ஜோதிகா மகள் தியா (18), மகன் தேவ் (15) ஆகியோர் மும்பையில் படித்து வருகின்றனர்.
    • சூர்யா-ஜோதிகா மகள் தியா தனது பள்ளிப்படிப்பை முடித்துள்ளார்.

    நட்சத்திர காதல் தம்பதிகளான சூர்யா-ஜோதிகா தற்போது மும்பையில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

    அவர்களின் மகள் தியா (18), மகன் தேவ் (15) ஆகியோர் மும்பையில் உள்ள பிரபல பள்ளியில் படித்து வருகின்றனர்.

    இந்நிலையில் தியா தனது பள்ளிப்படிப்பை முடித்துள்ளார். தியாவின் பட்டமளிப்பு விழாவில் சூர்யா, ஜோதிகா, சிவக்குமார் உள்ளிட்ட குடும்பத்தினர் பங்கேற்றனர். இது தொடர்பான வீடியோவை நடிகை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    • சிமரன் நடிப்பில் சமீபத்தில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
    • சில மாதங்களுக்கு முன் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் அவர் மனம் உடைந்து சில வார்த்தைகளை பேசி இருந்தார்

    சிமரன் நடிப்பில் சமீபத்தில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதற்கு முன் அஜித் நடித்த குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்து இருந்தார். அதில் சிறிது நேரம் வந்தாலும் பார்வையாளர்களின் மனதில் இடம் பெறும் வண்ணம் நடித்திருந்தார்.

    சில மாதங்களுக்கு முன் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் அவர் மனம் உடைந்து சில வார்த்தைகளை பேசி இருந்தார் அதில் " பெயர் குறிப்பிடாத நடிகை ஒருவர் நான் நடிக்கும் கதாப்பாத்திரங்களை கிண்டல் செய்கிறார். ஆனால் அவர்கள் செய்யும் டப்பா ரோல்களும், ஆண்டி ரோல்கள் எவ்வளவோ பரவாயில்லை" என கூறியிருந்தார்.

    இந்த வீடியோ இணையத்தில் மிகவும் வைரலானது. டப்பா கார்டெல் இணைய தொடரில் ஜோதிகா நடித்து இருந்ததால். அந்த பெயர் சொல்லாத நடிகை ஜோதிகா அல்லது லைலா ஆகதான் இருக்கும் என நெட்டிசன்கள் கூறிவந்தனர்.

    சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் இதைப்பற்றி அவர் மீண்டும் பேசியுள்ளார் அதில் " மக்கள் அவர்களுக்கு தோன்றும் வகையில் யூகங்கள் செய்கின்றனர். டப்பா கார்டல் ஒரு நல்ல வெப் தொடர். நான் யாரை குறிப்பிட்டேனோ அவர்கள் எனக்கு மெசெஜ் செய்து நான் அந்த அர்த்தத்தில் கூறவில்லை. உங்களை காயப்படுத்தியதற்கு மன்னிக்கவும் என கூறியுள்ளதாக" கூறினார்.

    • நடிகை ஜோதிகா மலையாள நடிகர் மம்முட்டியுடன் இணைந்து 'காதல் - தி கோர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான ஜோதிகா, திருமணத்துக்கு பிறகு சில வருடங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். பின்னர் 36 வயதினிலே படம் மூலம் மீண்டும் நடிக்க தொடங்கினார். இதை தொடர்ந்து மகளிர் மட்டும், நாச்சியார், காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், பொன்மகள் வந்தாள், உடன் பிறப்பு உள்ளிட்ட கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்தார்.


    காதல் தி கோர்

    தற்போது இவர் நடிகர் மம்முட்டியுடன் 'காதல் - தி கோர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். மம்முட்டி கம்பெனி தயாரிக்கும் இப்படத்தை மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான 'தி கிரேட் இந்தியன் கிட்சன்' படத்தை இயக்கிய ஜியோ பேபி இயக்குகிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.


    படப்பிடிப்பில் இணைந்த ஜோதிகா

    இந்நிலையில், 'காதல் - தி கோர்' திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகை ஜோதிகா படப்பிடிப்பில் இணைந்துள்ளார். இதனை படக்குழு புகைப்படங்களை வெளியிட்டு அறிவித்துள்ளது. 


    • மலையாள நடிகர் மம்முட்டி தற்போது 'காதல் - தி கோர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இந்த படத்தில் நடிகை ஜோதிகா கதாநாயகியாக இணைந்துள்ளார்.

    தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான ஜோதிகா, திருமணத்துக்கு பிறகு சில வருடங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். பின்னர் 36 வயதினிலே படம் மூலம் மீண்டும் நடிக்க தொடங்கினார். இதை தொடர்ந்து மகளிர் மட்டும், நாச்சியார், காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், பொன்மகள் வந்தாள், உடன் பிறப்பு உள்ளிட்ட கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்தார்.


    காதல் தி கோர்

    தற்போது இவர் நடிகர் மம்முட்டியுடன் 'காதல் - தி கோர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். மம்முட்டி கம்பெனி தயாரிக்கும் இப்படத்தை மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான 'தி கிரேட் இந்தியன் கிட்சன்' படத்தை இயக்கிய ஜியோ பேபி இயக்குகிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகை ஜோதிகா கலந்து கொண்டார்.


    சூர்யா-மம்முட்டி-ஜோதிகா

    இந்நிலையில், 'காதல் - தி கோர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு நடிகர் சூர்யா சென்றுள்ளார். இதனை மம்முட்டி தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படம் ஒன்று பகிர்ந்து தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.


    • தென் இந்தியா படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை ஜோதிகா.
    • 21 ஆண்டுகளுக்கு பிறகு ஜோதிகா மீண்டும் ஒரு இந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தமாக இருக்கிறார்.

    தென் இந்தியா படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை ஜோதிகா. இவர் இந்தியில் 1998-ம் ஆண்டு வெளியான 'டோலி சஜா கே ரக்கீனா' என்ற படத்தில் மூலம் அறிமுகமானார். அதன்பின் தமிழ் படங்களில் கவனம் செலுத்திய ஜோதிகா, 2001-ல் 'லிட்டில் ஜான்' என்ற இந்தி படத்தில் மீண்டும் நடித்து இருந்தார். அதன் பிறகு இந்தியில் அவர் படங்கள் எதுவும் நடிக்கவில்லை.

     

    ஜோதிகா

    ஜோதிகா

    தற்போது 21 ஆண்டுகளுக்கு பிறகு ஜோதிகா மீண்டும் ஒரு இந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தமாக இருக்கிறார். இது ஸ்ரீகாந்த் பொல்லா என்ற தொழில் அதிபரின் வாழ்க்கை வரலாறு படம். இதில் தொழில் அதிபர் கதாபாத்திரத்தில் ராஜ்குமார் ராவ் நடிக்க, துஷார் இத்ராணி இயக்குகிறார்.


    ஜோதிகா

    ஜோதிகா


     


    இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க ஜோதிகாவை படக்குழுவினர் அணுக அவரும் சம்மதம் தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நீண்ட இடைவெளிக்கு ஜோதிகா மீண்டும் இந்தி படத்தில் நடிக்கயிருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஜோதிகா தற்போது மலையாளத்தில் தயாராகும் காதல் படத்தில் மம்முட்டியுடன் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஜோதிகா.
    • தற்போது இவர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ள காதல் என்பது பொதுவுடமை படத்தின் போஸ்டரை பகிர்ந்துள்ளார்.

    2016-ம் ஆண்டு வெளியான லென்ஸ் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன். அதன்பின்னர் தி மஸ்கிட்டோ பிலாசபி என்ற படத்தை இயக்கியிருந்தார். சில தினங்களுக்கு முன்பு வெளியான தலைக்கூத்தல் படத்தை இயக்கி பலரின் பாராட்டுக்களையும் பெற்றார். இதில் சமுத்திரகனி, கதிர், வசுந்தரா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

     

    ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் தற்போது காதல் என்பது பொதுவுடமை என்ற படத்தை இயக்கவுள்ளார். இதில் ஜெய் பீம் படத்தில் நடித்து பிரபலமடைந்த லிஜோமோல் நடிக்கிறார். மேலும் ரோகிணி, வினித், அனுஷா மற்றும் தீபா உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர்.

     

    இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரை நடிகை ஜோதிகா சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து, காதல் என்பது இரண்டு பாலினம் சார்ந்தது அல்ல, அது இரண்டு இதயம் சார்ந்தது. காதலையும் அன்பையும் மட்டுமே மதித்து காதலர் தினத்தை கொண்டாடுவோம் என குறிப்பிட்டு காதல் என்பது பொதுவுடமை படத்தின் போஸ்டரை பகிர்ந்துள்ளார். இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

    • சிவகங்கை மாவட்டம் கீழடி அருங்காட்சியகத்தில் தமிழர்கள் நாகரிகத்தை விளக்கும் பல்வேறு பொருட்கள் காட்சிபடுத்தப் பட்டுள்ளது.
    • இதனை தினமும் ஏராளமான பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பார்வையிட்டு வருகின்றனர்.

    சிவகங்கை மாவட்டம் கீழடி அருங்காட்சியகத்தில் தமிழர்கள் நாகரிகத்தை விளக்கும் பல்வேறு பொருட்கள் காட்சிபடுத்தப் பட்டுள்ளது. இதனை தினமும் ஏராளமான பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பார்வையிட்டு வருகின்றனர். கீழடி அருங்காட்சியகத்தை ஏராளமான திரைப்பிரபலங்களும், சமூக ஆர்வலர்களும், ஆராய்ச்சியாளர்களும், வெளிநாட்டு தூதுவர்களும் பார்த்து செல்கின்றனர்.

    இந்நிலையில் இன்று தமிழ் திரை உலகின் முன்னணி நடிகரான சூர்யா தனது மனைவி ஜோதிகா, தந்தை சிவக்குமார் மற்றும் உறவினர்களுடன் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்டார். அப்போது மதுரை எம்.பி. சு.வெங்க டேசன் உடன் இருந்தார். அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பொருட்களை தொல்லியல் துறை அதிகாரிகள் சிவக்குமார், சூர்யா, ஜோதிகா ஆகியோருக்கு விளக்கி கூறினர். அதனை அவர்கள் ஆர்வமுடன் கேட்டு தெரிந்து கொண்டனர்.

    • சில தினங்களுக்கு முன்பு கீழடி அருங்காட்சியகத்தை சிவக்குமார், சூர்யா-ஜோதிகா பார்வையிட்டனர்.
    • அப்பொழுது மாணவ-மாணவிகளை நீண்ட நேரம் வெளியே காத்திருக்க வைத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

    சிவகங்கை மாவட்டம் கீழடி அருங்காட்சியகத்தில் தமிழர்கள் நாகரீகத்தை விளக்கும் பல்வேறு பொருட்கள் காட்சி படுத்தப்பட்டுள்ளது. இதனை தினமும் ஏராளமான பொதுமக்கள், மாணவ-மாணவிகள் பார்வையிட்டு வருகின்றனர். கீழடி அருங்காட்சியகத்தை ஏராளமான திரைபிரபலங்களும், சமூக ஆர்வலர்களும், ஆராய்ச்சியாளர்களும், வெளிநாட்டு தூதுவர்களும் பார்த்து செல்கின்றனர்.

    சில தினங்களுக்கு முன்பு தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சூர்யா தனது மனைவி ஜோதிகா, தந்தை சிவக்குமார் மற்றும் உறவினர்களுடன் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்டார். அப்போது சூர்யாவின் குடும்பத்தினர் அருங்காட்சியத்தின் உள்ளே இருந்ததால் அங்கு வரக்கூடிய மொதுமக்களையும், மாணவர்களையும் வெளியே நீண்ட நேரம் காத்திருக்க வைத்தாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வீடியோக்களும் வைரலானது.


    கீழடியை பார்வையிட்ட சூர்யா குடும்பத்தினர்
    கீழடியை பார்வையிட்ட சூர்யா குடும்பத்தினர்

    இந்நிலையில் பாடலாசிரியர் சினேகன் கீழடி அருங்காட்சியத்தை பார்வையிட்ட பின்னர் இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது, கீழடி அருங்காட்சியத்தை பார்ப்பதற்காக வந்தேன். நம் பெருமைகளையும் தரவுகளையும் மிகவும் அழகாக பராமரித்துள்ளனர். இந்த இடத்தை விட்டு வெளியே செல்வதற்கு எனக்கு மனமில்லை. வரலாற்று புகைப்படங்கள், அதன் வழிமுறைகள் கேட்கும்பொழுது இன்னும் சற்று தமிழ் திமிரு தலைக்கேறி நிற்கிறது, பெருமையாக இருக்கிறது.

    இந்த மண்ணுக்கு துரோகமான செயலை இந்த மண்ணுக்குறியவர்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள். இந்த மண்ணுக்கு எந்த கெடுதல் நடந்தாலும் அதற்கு எதிராகதான் நாங்கள் நிற்போம். அதை எதிர்க்க வேண்டிய பொறுப்பு மக்கள் நீதிமையத்திற்கு இருக்கிறது. மக்கள் நீதி மைய்யத்தின் உறுப்பினராகவும் ஒரு கவிஞனாகவும் எனக்கு அதிகமான பொறுப்பு இருக்கிறது என்றார்.


    செய்தியாளர்களை சந்தித்த சினேகன்
    செய்தியாளர்களை சந்தித்த சினேகன்

    மேலும் கீழடியில் சூர்யா குடும்பத்தினர் வந்திருந்த பொழுது மாணவர்களை வெளியே நிற்க வைத்த சம்பவம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, அங்கு என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது. வெறும் தகவல்களின் அடிப்படையில் வைத்து பேசுவது சரியாக இருக்காது. அவர் வேண்டும் என்று செய்திருக்கமாட்டார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. எதோ தெரியாமல் இது நடந்திருக்கும் என்று நான் தனிப்பட்ட முறையில் நம்புகிறேன். அவர் அப்படி செய்கிறார் ஆள் இல்லை, அப்படி கண்டிப்பாக அவர் செய்திருக்க மாட்டார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

    எனவே இதனை பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். அன்றைக்கு எனக்கும் அந்த காணொலியை பார்க்கும் பொழுது சின்ன குழந்தைகள் வெளியே நிற்கிறார்களே என்று நானும் வருத்தப்பட்டேன். ஆனால் காட்சியில் பார்த்ததற்கும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்பதற்கும் வேறு மாதிரியாக இருக்கிறது. எனவே நான் தெரியாமல் தீர்ப்பு சொல்லிவிடகூடாது. இது எல்லோருக்கும் பொதுவானது எனவே அனைவரும் பார்த்து நம் பெருமைகளை தெரிந்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    ×