'காதல் - தி கோர்' படப்பிடிப்பில் இணைந்த நடிகை ஜோதிகா

நடிகை ஜோதிகா மலையாள நடிகர் மம்முட்டியுடன் இணைந்து 'காதல் - தி கோர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ஜோதிகா
ஜோதிகா
Published on: 

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான ஜோதிகா, திருமணத்துக்கு பிறகு சில வருடங்கள் சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்தார். பின்னர் 36 வயதினிலே படம் மூலம் மீண்டும் நடிக்க தொடங்கினார். இதை தொடர்ந்து மகளிர் மட்டும், நாச்சியார், காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், பொன்மகள் வந்தாள், உடன் பிறப்பு உள்ளிட்ட கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்தார்.

காதல் தி கோர்

தற்போது இவர் நடிகர் மம்முட்டியுடன் 'காதல் - தி கோர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். மம்முட்டி கம்பெனி தயாரிக்கும் இப்படத்தை மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான 'தி கிரேட் இந்தியன் கிட்சன்' படத்தை இயக்கிய ஜியோ பேபி இயக்குகிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

படப்பிடிப்பில் இணைந்த ஜோதிகா

இந்நிலையில், 'காதல் - தி கோர்' திரைப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, நடிகை ஜோதிகா படப்பிடிப்பில் இணைந்துள்ளார். இதனை படக்குழு புகைப்படங்களை வெளியிட்டு அறிவித்துள்ளது. 

X

Maalai Malar
www.maalaimalar.com