என் மலர்

  நீங்கள் தேடியது "mammootty"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரபல மலையாள நடிகர் மம்முட்டி ஹீரோவாக நடிக்கும் ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ திரைப்படம் தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளில் தயாராக உள்ளது.
  மலையாளத்தில் வெளியான அங்கமாலி டைரீஸ், ஈ மா யூ, ஜல்லிக்கட்டு என சிறந்த படங்களை தந்து ரசிகர்கள் மட்டுமல்லாது விமர்சகர்களையும் கவர்ந்தவர் இயக்குனர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி. இந்திய அளவில் கொண்டாடப்படும் இயக்குனரான மணிரத்னத்தின் பேவரைட் இயக்குனரும் லிஜோ ஜோஸ் தான். அவர் இயக்கிய அனைத்து படங்களும் தனக்கு மிகவும் பிடிக்கும் என மணிரத்னம் ஒரு நிகழ்வில் கூறியிருந்தார்.

  லிஜோ ஜோஸ் பெல்லிசேரி, மணிரத்னம்
  லிஜோ ஜோஸ் பெல்லிசேரி, மணிரத்னம்

  இந்நிலையில் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் உருவாகும் புதிய படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி தமிழ், மலையாளம் ஆகிய இரு மொழிகளில் தயாராகும் இப்படத்தில் பிரபல மலையாள நடிகர் மம்முட்டி ஹீரோவாக நடிக்க உள்ளார். இப்படத்திற்கு ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ என பெயரிட்டுள்ளனர். பழனியை மையப்படுத்தி இந்தப் படம் தயாராக உள்ளது. இப்படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்ய உள்ளார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தில் பணிகள் முழுவீச்சில் நடப்பதாக மோகன் ராஜா கூறியிருக்கிறார்.
  கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியாகிய தனி ஒருவன் திரைப்படத்தின் பெரிய வெற்றிக்குப் பிறகு தனி ஒருவன் இரண்டாம் பாகம் எடுக்க உள்ளதாக மோகன் ராஜாவும், நடிகர் ஜெயம் ரவியும் அறிவித்தனர்.

  இந்தப் படத்திலும் ஜெயம் ரவி எஸ்பியாக நடிக்க உள்ளார். தடயவியல் துறை நிபுணராக நயன்தாரா நடிக்கிறார்.

  தனி ஒருவன் திரைப்படத்தின் முக்கியக் கதாபாத்திரமே அரவிந்த்சாமியின் சித்தார்த் அபிமன்யுதான். இரண்டாம் பாகம் எனும்போது, முதல் படத்திலிருந்த மாஸ் வில்லன் இன்னும் பிரமிப்பூட்டும் வகையில் இருக்க வேண்டுமென ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள். அந்த வகையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில் மோகன் ராஜா உள்ளார்.  தனி ஒருவன் 2 படத்திற்கான வேலைகள் சத்தமில்லாமல் நடந்து வருகிறது. இந்த நிலையில், மீண்டும் தனி ஒருவன் படத்தை பார்த்த இயக்குநர் ராம், ராஜா மீண்டும் தனி ஒருவன் படத்தை பார்தேன், மிகப் பெரிய உழைப்பு, அடுத்த பாகத்தை ரொம்ப கவனத்துடன் எடுங்கள் என்று கூறியிருக்கிறார்.

  அதற்கு மோகன் ராஜா அளித்த பதிலில், தனி ஒருவன் 2 படத்திற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. தனது உதவி இயக்குநர்களிடம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து விடலாமல்லவா? என்று கேட்டேன், 200% கண்டிப்பாக என்று கூறினார்கள் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருக்கிறார்.


  ஜெயம் ரவி தற்போது கல்யாண் இயக்கத்தில் தனது 25-வது படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தை முடித்த பிறகு இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தனி ஒருவன் 2 படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராம் இயக்கிய ‘பேரன்பு’ படத்தில் ‘செத்துப்போச்சு மனசு’ பாடலின் மூலம் பிரபலமான பாடலாசிரியர் கருணாகரனை அந்த பாடலுக்காக மம்முட்டி, யுவன் ஷங்கர் ராஜா பாராட்டியிருக்கிறார்கள். #Peranbu #LyricistKarunakaran
  ‘பேரன்பு’ படத்தின் ‘செத்துப்போச்சு மனசு’ பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது. இதில் வரும் `மரமான செடியைத் தோளில் எப்படிச் சுமப்பது?’ என்ற வரி படத்தின் மொத்த கதையையும் தாங்கியுள்ளது என்று மம்முட்டியும், யுவன் சங்கர் ராஜாவும் பாராட்டினார்கள்.

  இந்த பாடலை எழுதிய கருணாகரன் கூறும்போது, ‘7ஜி ரெயின்போ காலனி’ பாடல்கள் என்னை புரட்டிப்போட்டு பாடலாசிரியர் ஆகும் ஆர்வத்தை ஏற்படுத்தின. ஆரம்ப காலகட்டத்துலேயே ராம் சாரிடம் பாடல் வாய்ப்பு கேட்டிருக்கேன். `நா.முத்துக்குமாருக்கும் எனக்கும் சண்டை வரட்டும் கருணா, பின்னர் வாய்ப்பு தருகிறேன்’ என்றார். உடனே, `அப்படி ஒரு வாய்ப்பு எனக்கு வேணாம் சார்’ என்றேன்.  அவ்வப்போது யுவன் சார் ஆபீசில் சந்திப்போம். ஒருநாள் நான் எழுதிய பாடலை அவரிடம் காட்டினேன். `அடுத்த படத்தில் வாய்ப்பு தருகிறேன்’ என்றார். `பேரன்பு’ படத்துக்கு பாட்டு எழுத கூப்பிட்டபோது ரொம்ப மகிழ்ச்சியடைந்தேன்’ என்றார். #Peranbu #LyricistKarunakaran #Mammootty #YuvanShankarRaja

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கேரளாவில் மோகன்லால், மம்முட்டியை விட விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் என்று எம்.எல்.ஏ பேசியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. #Vijay #ThalapathyVijay #Mohanlal #Mammootty
  தமிழ் நடிகரான விஜய்க்கு தமிழ்நாட்டை தாண்டி பிற மாநிலங்களிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள். முக்கியமாக கேரளாவில் மலையாள நடிகர்களான மோகன்லால், மம்முட்டிக்கு இணையான வரவேற்பு விஜய் படங்களுக்கும் உண்டு.

  தீபாவளிக்கு வெளியான விஜய்யின் சர்கார் படத்தின்போது விஜய்க்கு 175 அடி உயரத்தில் கட் அவுட்டை கேரளாவில் உள்ள கொல்லம் நண்பன்ஸ் அமைப்பினர் வைத்தனர்.

  கேரளாவில் உள்ள விஜய் ரசிகர் மன்றங்கள் மூலம், விஜய் படம் வெளிவரும் போதெல்லாம் தொண்டு நிறுவனங்களுக்கு உதவுதல், கட் அவுட்களில் புதுவிதமான அணுகுமுறைகளைச் செய்து வருகின்றனர்.

  பிறமொழி நடிகர் ஒருவருக்கு தொடர்ந்து கேரளாவில் அதிகமான வரவேற்பு இருப்பதை கேரள திரையுலகினர் பலரும் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.  மோகன்லால் நடித்த ஒடியன் படத்தின் இயக்குனர் ஷிரிக்குமார் விஜய் படத்தின் வசூலை மட்டும் இங்கு கொண்டாடுகிறார்கள் என்று விமர்சித்து இருந்தார்.

  இந்த நிலையில் கேரளாவில் பிரபல தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் கேரளாவில் மலையாள நடிகர்களைவிட தமிழ் நாட்டு நடிகர் விஜய்க்கு இருக்கும் வரவேற்பு குறித்து விமர்சிக்கப்பட்டது.

  இதற்கு பதில் அளித்த பூஞ்சார் தொகுதி எம்.எல்.ஏ. பி.சி.ஜார்ஜ், ‘‘மலையாள நடிகர்களைவிட விஜய்க்கு கேரளாவில் கூடுதலான ரசிகர்கள் உள்ளனர். ஆயிரக்கணக்கானோர் திரையரங்குகள் முன் கூடி விஜய் கட் அவுட்டுகளுக்கு ரசிகர்கள் பால் அபிஷேகம் செய்கின்றனர்” என்று தெரிவித்தார்.

  இவரது கருத்துக்கு மலையாள முன்னணி நடிகர்களான மம்முட்டி, மோகன்லால் ஆகியோரது ரசிகர்கள் சமூக வலை தளங்களில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பி.சி.ஜார்ஜ் காங்கிரஸ் கட்சியில் இருந்தவர். கடந்த தேர்தலின் போது கட்சியில் இருந்து விலகி சுயேட்சையாக நின்று வெற்றி பெற்றவர்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  விஷாக் இயக்கத்தில் மம்முட்டி நடிக்கும் மதுர ராஜா படத்தின் மூலம் நடிகர் ஜெய் மலையாளத்தில் அறிமுகமாகிறார். இந்த படத்தில் ஒரு பாடலுக்கு சன்னி லியோன் நடனமாடுகிறார். #MaduraRaja #Mammootty #Jai
  ஜருகண்டி படத்திற்குப் பின் வெங்கட் பிரபு இயக்கத்தில் பார்ட்டி, எல்.சுரேஷ் இயக்கும் நீயா 2 ஆகிய படங்களில் நடித்துள்ள ஜெய் அந்தப் படங்களின் வெளியீட்டை எதிர்பார்த்துள்ளார். அதற்கு முன்பாக அவர் நடித்துள்ள மலையாள திரைப்படம் வெளியாக உள்ளது.

  மலையாளத்தில் மம்முட்டி கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் மதுர ராஜா. மோகன்லால் நடித்த புலி முருகன் படத்தை இயக்கிய விஷாக் இந்தப் படத்தை இயக்குகிறார். ஆக்‌‌ஷன் காட்சிகள் நிறைந்த இப்படத்தில் மம்முட்டியுடன் இணைந்து ஜெய் நடிக்கிறார். மம்முட்டியின் தம்பியாக ஜெய் நடிப்பதாக கூறப்படுகிறது.  2010-ம் ஆண்டு மம்முட்டி, பிரித்வி ராஜ் இணைந்து நடித்த போக்கிரி ராஜா திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக இப்படம் உருவாகிறது. முதல் பாகத்தில் நடித்த பிரித்வி ராஜுக்கு இதில் சிறப்பு தோற்றம் வழங்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சன்னி லியோன் ஒரு பாடலுக்கு நடனமாடுகிறார். கோபி சுந்தர் இசையமைக்க, ஷாஜி குமார் ஒளிப்பதிவு செய்கிறார். #MaduraRaja #Mammootty #Jai

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராம் இயக்கத்தில் மம்முட்டி - அஞ்சலி - சாதனா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பேரன்பு’ படத்தின் முன்னோட்டம். #Peranbu #Ram #Mammootty #Anjali
  ஸ்ரீ ராஜலஷ்மி பிலிம்ஸ் சார்பில் பி.எல்.தேனப்பன் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘பேரன்பு’ .

  மம்முட்டி நாயகனாக அஞ்சலி நாயகியாகவும் நடித்துள்ள இந்த படத்தில் சமுத்திரக்கனி, வடிவுக்கரசி, ‘தங்க மீன்கள்’ சாதனா, லிவிங்ஸ்டன், திருநங்கை அஞ்சலி அமீர், அருள்தாஸ், சுராஜ் வெஞ்சரமூட், சித்திக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

  இசை - யுவன் ஷங்கர் ராஜா, ஒளிப்பதிவு - தேனி ஈஸ்வர், படத்தொகுப்பு - சூர்யா பிரதாமன், கலை இயக்குநர் - குமார் கங்கப்பன், பாடல்கள் - வைரமுத்து, கருணாகரன், சுமதி ராம், தயாரிப்பாளர் - பி.எல்.தேனப்பன், இணை தயாரிப்பு - டி.சரஸ்வதி, தயாரிப்பு நிறுவனம் - ஸ்ரீ ராஜலஷ்மி பிலிம்ஸ், எழுத்து, இயக்கம் - ராம்.  ‘பேரன்பு’ படம் பற்றி இயக்குநர் ராம் பேசும் போது,

  “இந்த படத்தின் நாயகன் மம்முட்டி, எல்லோரையும் போல் சுயநலமுள்ள சாதாரண மனிதர். இவர் எப்படி ‘பேரன்பு’ கொண்டவராக மாறுகிறார்? என்பதே படத்தின் கதை. புதிரான ஒரு கதாபாத்திரத்தில் அஞ்சலி நடித்துள்ளார். படத்துக்காக ஒரு ஏரிக் கரையோரத்தில் வீடு போன்ற அழகான அரங்கு அமைக்கப்பட்டு, அதில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன.” என்றார்.

  பல்வேறு சர்வதேச பட விழாக்களில் கலந்து கொண்டு விருதுகளை வென்றுள்ள இந்த படம் வருகிற பிப்ரவரி 1-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. #Peranbu #Ram #Mammootty #Anjali

  பேரன்பு டிரைலர்:

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உச்ச நட்சத்திரம் ஒருவருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. #ThaniOruvan2 #Mammootty
  தனி ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க உள்ளதாக மோகன் ராஜாவும், நடிகர் ஜெயம் ரவியும் கடந்த வாரம் அறிவித்தனர். இந்தப் படத்திலும் ஜெயம் ரவி எஸ்.பியாக நடிக்க உள்ளார். தடயவியல் துறை நிபுணராக நயன்தாரா நடிக்கிறார். மற்றொரு நாயகியாக சாயிஷாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

  தனி ஒருவன் திரைப்படத்தின் முக்கியக் கதாபாத்திரமே அரவிந்த்சாமியின் சித்தார்த் அபிமன்யுதான். இரண்டாம் பாகம் எனும்போது, முதல் படத்திலிருந்த மாஸ் வில்லன் இன்னும் பிரமிப்பூட்டும் வகையில் இருக்க வேண்டுமென ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள். இப்போது இரண்டாம் பாகத்தில் சித்தார்த் அபிமன்யுவுக்கு நிகரான ஒரு வில்லனை உருவாக்க வேண்டும் என்ற சவால் ஏற்பட்டுள்ளது.   அந்த வகையில், வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள சூப்பர்ஸ்டார் மம்முட்டியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. #ThaniOruvan2 #JayamRavi #Mammootty

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கேரள மக்கள் வெள்ளத்தில் தவிக்கும் போது, நடிகர் மம்முட்டி தன்னுடைய படத்தின் டிரைலரை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. #Mammootty
  கேரளாவில் கன மழை பெய்துள்ளதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஊருக்குள் ஆற்று வெள்ளம் புகுந்ததால் வீடுகள் தண்ணீரில் மிதக்கின்றன. நிலச்சரிவுகளால் உயிரிழப்புகளும் ஏற்பட்டு உள்ளன. அங்குள்ள மக்கள் வீடுகளையும் உடமைகளையும் இழந்து பெரும் கவலையில் இருக்கிறார்கள். 

  இந்த சோகத்துக்கு மத்தியில் நடிகர் மம்முட்டி மலையாளத்தில் நடித்து வரும் தன்னுடைய ‘குட்ட நாடன் பிளாக்’ என்ற படத்தின் டிரைலரை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.   இயற்கை பேரழிவை கேரளா சந்தித்துவரும் இந்த இக்கட்டான நேரத்தில் படத்தின் டிரைலரை வெளியிடலாமா? என்று மம்முட்டியை கண்டித்து கேரள ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவிட்டு வருகிறார்கள். அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்களும் மம்முட்டி செயலை விமர்சித்து உள்ளனர். 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராம் இயக்கத்தில் மம்முட்டி - அஞ்சலி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பேரன்பு’ படத்தில் அஞ்சலியின் கதாபாத்திரம் புதிரானதாக இருக்கும் என்று இயக்குநர் ராம் தெரிவித்துள்ளார். #Peranbu #Mammootty
  ‘தரமணி’ படத்திற்கு பிறகு ராம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பேரன்பு’ படம் வருகிற செப்டம்பர் 7-ந் தேதி ரிலீஸாக இருப்பதாக கூறப்படுகிறது. 

  ‘பேரன்பு’ படம் பற்றி இயக்குநர் ராம் பேசும் போது,

  “இந்த படத்தின் நாயகன் மம்முட்டி, எல்லோரையும் போல் சுயநலமுள்ள சாதாரண மனிதர். இவர் எப்படி ‘பேரன்பு’ கொண்டவராக மாறுகிறார்? என்பதே படத்தின் கதை. புதிரான ஒரு கதாபாத்திரத்தில் அஞ்சலி நடித்துள்ளார். சமுத்திரக்கனி, வடிவுக்கரசி, ‘தங்க மீன்கள்’ புகழ் சாதனா, திருநங்கை அஞ்சலி அமீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.  படத்துக்காக ஒரு ஏரிக் கரையோரத்தில் வீடு போன்ற அழகான அரங்கு அமைக்கப்பட்டு, அதில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன.

  தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். பி.எல்.தேனப்பன் தயாரித்து இருக்கிறார். பல்வேறு சர்வதேச பட விழாக்களில் கலந்து கொண்ட இந்த படத்துக்கு ‘யு ஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளது.” 

  சமீபத்தில் வெளியாகிய படத்தின் பாடல்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #Peranbu #Mammootty #Anjali

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராம் இயக்கத்தில் மம்முட்டி - அஞ்சலி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பேரன்பு’ படத்தை செப்டம்பர் மாதம் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. #Peranbu #Mammootty
  ‘தரமணி’ படத்திற்கு பிறகு ராம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பேரன்பு’ படத்திற்கு உலக அரங்கில் பாராட்டுக்கள் கிடைத்துள்ள நிலையில், யுவன் இசையில் சமீபத்தில் வெளியாகிய பாடல்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதுடன், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் கூட்டியிருக்கிறது.

  தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாகி இருக்கும் இந்த படத்திற்கு தணிக்கைக் குழுவில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ள நிலையில், படத்தை வருகிற செப்டம்பர் 7-ல் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.   படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டி நாயகனாகவும், அஞ்சலி நாயகியாகவும் நடித்திருக்கின்றனர். சரத்குமார், அமீர், சமுத்திரக்கனி, வடிவுக்கரசி, தங்கமீன்கள் சாதனா, லிவிங்ஸ்டன், சுராஜ், சித்திக், அருள்தாஸ் உள்பட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

  ஸ்ரீ ராஜலெக்‌ஷ்மி பிலிம் பிரைவேட் லிமிடெட் சார்பில் பி.எல்.தேனப்பன் இந்த படத்தை தயாரித்துள்ளார். #Peranbu #Mammootty #Anjali
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மலையாளத்தில் மேகா ஸ்டாராக இருக்கும் மம்முட்டியின் அடுத்த படத்தில் அஜித்தின் தீவிர ரசிகர் நடிக்க இருக்கிறார். #Mammootty
  பிரபல தயாரிப்பாளரான ஆர்.கே.சுரேஷ் பாலாவின் ‘தாரை தப்பட்டை’ படம் மூலம் நடிகராக அறிமுகமானார். இதில் இவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. வில்லனாக அசத்திய ஆர்.கே.சுரேஷ் ‘பில்லா பாண்டி’, ‘வேட்டை நாய்’ போன்ற பல படங்களில் கதாநாயகனாக நடித்து வந்தார்.

  இதில் ‘பில்லா பாண்டி’ படத்தில் அஜித்தின் தீவிர ரசிகராக நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அதுபோல் ‘வேட்டை நாய்’ படமும் இறுதி கட்டத்தில் உள்ளது.  இந்நிலையில், ஆர்.கே.சுரேஷ் அடுத்தாக மம்முட்டி நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இந்தப் படத்தை புலிமுருகன் படத்தை இயக்கிய வைசாக் இயக்குகிறார்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பேரன்பு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகை ஆண்ட்ரியா, ராம் மீதோ, அஞ்சலி மீதோ தனக்கு கோபம் இல்லை என்று கூறினார். #Peranbu
  கற்றது தமிழ், தங்க மீன்கள், தரமணி என்று மூன்று தரமான படங்களை ராம் இயக்கி இருக்கிறார். அடுத்ததாக அவரது இயக்கத்தில் ‘பேரன்பு’ படம் உருவாகி இருக்கிறது. மம்முட்டி, அஞ்சலி, சமுத்திரகனி, தங்க மீன்கள் சாதனா, ஆண்ட்ரியா உள்ளிட்டவர்கள் நடித்து இருக்கும் இந்த படத்தின் இசை வெளியீடு நடந்தது.

  இதில் கவிஞர் வைரமுத்து, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, நடிகர்கள் மம்முட்டி, சத்யராஜ், சித்தார்த், வசந்த் ரவி, இயக்குனர்கள் பாரதிராஜா, பாலா, மிஷ்கின், வெற்றிமாறன், அமீர், கே.எஸ்.ரவிகுமார், விஜய், சமுத்திரகனி, கரு.பழனியப்பன், மனோபாலா, கோபி நயினார், சசி, மீரா கதிரவன், ஈ.ராம்தாஸ், நடிகைகள் அஞ்சலி, ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  சத்யராஜ் பேசும்போது ‘நான் முதலில் வில