கைவிட்டு போன ‘தளபதி' படவாய்ப்பு: ஜெயராம் வேதனை

மலையாளத்தில் தொடர்ச்சியாக படங்கள் நடித்து வந்ததால், அந்த வாய்ப்பை ஏற்கமுடியவில்லை.
கைவிட்டு போன ‘தளபதி' படவாய்ப்பு: ஜெயராம் வேதனை
Published on

மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த், மம்முட்டி நடித்த 'தளபதி' படம் 1991-ம் ஆண்டில் வெளியாகி பெரிய வெற்றியை பதிவு செய்தது. கம்பீரமான கலெக்டராக நடித்த அரவிந்தசாமிக்கு இது முதல் படமாகும்.

இந்தநிலையில் கலெக்டர் கதாபாத்திரத்தில் நடிக்க தனக்குத்தான் முதலில் வாய்ப்பு வந்ததாகவும், அதை தவறவிட்டதை நினைத்து இப்போது வரை வருத்தப்படுவதாகவும் முன்னணி நடிகரான ஜெயராம் தெரிவித்துள்ளார்.

அவர் கூறும்போது, 'தளபதி' படத்தில் அரவிந்தசாமி நடிக்க இருந்த கதாபாத்திரம் முதலில் எனக்குத்தான் வந்தது. அந்த கதாபாத்திரம் குறித்து மும்முட்டி என்னிடம் பேசினார்.

அந்த கதாபாத்திரத்துக்கு 3 மாதம் கால்ஷீட் தேவைப்பட்டது. அப்போது மலையாளத்தில் தொடர்ச்சியாக படங்கள் நடித்து வந்ததால், அந்த வாய்ப்பை ஏற்கமுடியவில்லை. அந்த வாய்ப்பை தவறவிட்டது தற்போது வரை வருத்தமாகத்தான் இருக்கிறது என்று தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com