மம்மூட்டியின் 'பத்ம பூஷண்' விருதை கொண்டாடிய 'ஓம்' படக்குழுவினர்!

"எனது அன்பான ரசிகர்கள் இல்லாமல் இது சாத்தியமில்லை."
Om' movie team celebrates Mammootty's 'Padma Bhushan' win
Published on

இந்திய சினிமாவின் முன்னணி நடிகரான மெகாஸ்டார் மம்மூட்டிக்கு, கலைத்துறையில் கடந்த 5 தசாப்தங்களாக ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக இந்திய அரசின் உயரிய விருதான 'பத்ம பூஷண்' கடந்த ஜூன் 23 அன்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை, மம்மூட்டி தற்போது நடித்து வரும் தமிழ் திரைப்படமான 'ஓம்' படப்பிடிப்பு தளத்தில் படக்குழுவினர் மிகவும் உற்சாகமாகக் கொண்டாடியுள்ளனர்.

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடித்து வரும் 'ஓம்' திரைப்படத்தில் மம்மூட்டி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். டெல்லியில் விருது பெற்றுவிட்டு சென்னை திரும்பிய மம்மூட்டியை வரவேற்கும் விதமாக, தனுஷின் 'வொண்டர்பார் ஃபிலிம்ஸ்' தயாரிப்பு நிறுவனம் படப்பிடிப்பு தளத்தில் ஒரு சிறப்பு கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது.

அங்கு தனுஷ், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி மற்றும் படக்குழுவினர் முன்னிலையில் மம்மூட்டி கேக் வெட்டி தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். இதுகுறித்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ள தயாரிப்பு நிறுவனம், "படப்பிடிப்பு தளத்தில் வாழும் ஜாம்பவானுடன் கொண்டாட்டம்! மெகாஸ்டார் மம்மூக்காவுக்கு எங்களது வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளது.

இந்த விருது குறித்து சமூக வலைத்தளத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்ட மம்மூட்டி:

"பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டதில் மிகுந்த பணிவும் பெருமையும் அடைகிறேன். இந்திய அரசிற்கு எனது மனமார்ந்த நன்றிகள். இந்த அங்கீகாரம் எனது 5 தசாப்த கால சினிமா பயணத்தின் பிரதிபலிப்பு. எனது அன்பான ரசிகர்கள் இல்லாமல் இது சாத்தியமில்லை." என்று குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com