என் மலர்
நீங்கள் தேடியது "Filmfare Awards"
- இந்த ஆண்டின் சிறந்த நடிகர் இவர்தான் என்று சொன்னால் அது எந்த அளவுக்கு நியாயமாக இருக்கும்
- நான் மேலே பார்த்து, என் தந்தையிடம் இதையெல்லாம் பார்க்கிறீர்களா என்று கேட்டேன்.
பாலிவுட் மூத்த நடிகர் நசீருதீன் ஷா திரைப்பட விருதுகள் குறித்த தனது பார்வையை வெளிப்படுத்தி உள்ளார்.
பல நடிகர்கள் விருதுகளைத் துரத்திக் கொண்டிருக்கும் வேளையில் அவரின் வெளிப்படையான மற்றும் வேடிக்கையான கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது.
நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நசீருதீன் ஷா, தனக்குக் கிடைத்த சில Filmfare விருதுகள் தனது பண்ணை வீட்டின் கழிவறையில் கைப்பிடிகளாகப் பயன்படுத்தியதாகக் கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது, "ஒரு கதாபாத்திரத்தைச் சித்தரிப்பதற்காகத் தனது வாழ்க்கையையும் முயற்சியையும் அர்ப்பணித்த எந்தவொரு நடிகரும் ஒரு நல்ல நடிகர். நீங்கள் ஒருவரைத் தேர்ந்தெடுத்து, இந்த ஆண்டின் சிறந்த நடிகர் இவர்தான் என்று சொன்னால் அது எந்த அளவுக்கு நியாயமாக இருக்கும்?" என்று கேள்வி எழுப்பினார்.
தான் தற்போதெல்லாம் விருது விழாக்களில் கலந்து கொள்வதை நிறுத்திவிட்டதாகவும், கடைசியாக வழங்கப்பட்ட இரண்டு Filmfare விருதுகளை வாங்க கூட செல்லவில்லை என்றும் ஷா தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் "அந்த விருதுகளைப் பற்றி நான் பெருமைப்படவில்லை. அதனால், நான் ஒரு பண்ணை வீடு கட்டியபோது, இந்த விருதுகள் அனைத்தையும் அங்கே வைக்க முடிவு செய்தேன். கழிப்பறைக்குச் செல்லும் எவருக்கும் தலா இரண்டு விருதுகள் கிடைக்கும், ஏனென்றால் கழிப்பறையில் உள்ள அனைத்து கைப்பிடிகளும் Filmfare விருதுகள் தான்.

இந்த கோப்பைகளில் எனக்கு எந்த மதிப்பும் தெரியவில்லை. நான் முதன்முதலில் கோப்பைகளைப் பெற்றபோது மகிழ்ச்சியாக இருந்தேன். ஆனால் பின்னர் என்னைச் சுற்றி கோப்பைகள் குவிய ஆரம்பித்தன.
இந்த விருதுகள் எல்லாம் பரப்புரையின் விளைவுதான் என்பதை பின்னர் உணர்ந்தேன். ஒருவர் இந்த விருதுகளைப் பெறுவது அவர்களின் தகுதியின் காரணமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அதனால் நான் அவற்றைக் கைவிட ஆரம்பித்தேன்" என்று ஷா கூறினார்.
இருப்பினும், பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் போன்ற சிவில் விருதுகளைப் பெறுவதில் மிகவும் மகிழ்ச்சியடைவதாக அவர் மேலும் கூறினார்.
"நான் பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் விருதுகளைப் பெற்றபோது, என் தொழில் வாழ்க்கையைப் பற்றி எப்போதும் கவலைப்பட்ட என் மறைந்த தந்தையை நினைவு கூர்ந்தேன்.
அந்த மரியாதைகளைப் பெற நான் ராஷ்டிரபதி பவனுக்குச் சென்றபோது, நான் மேலே பார்த்து, என் தந்தையிடம் இதையெல்லாம் பார்க்கிறீர்களா என்று கேட்டேன். அந்த நேரத்தில் அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்திருப்பார் என்று நான் நம்புகிறேன்" என்று நசீருதீன் ஷா கூறினார்.
- நாணி நடிப்பில் வெளிவந்த தசாரா திரைப்படம் 6 பிலிம் ஃபேர் விருதுகளை வென்றது.
- 69வது பிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழா ஐதராபாத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது.
69வது பிலிம்பேர் விருதுகள் வழங்கும் விழா நேற்று முன்தினம் ஐதராபாத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில், தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட சினிமாவில் உள்ள சிறந்த நடிகர், நடிகை, இசையமைப்பாளர், இயக்குனர் உள்ளிட்ட கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த விழாவில் பல்வேறு திரை பிரபலங்கள் கலந்துகொண்டனர். இதில், நானி, கீர்த்தி சுரேஷ் நடித்த தசாரா திரைப்படம் 6 விருதுகளை வென்றது. சிறந்த முன்னணி நடிகர் விருதை இந்த படத்திற்காக நானி பெற்றார்.
அப்போது நானி விருதை வாங்கிக்கொண்டு சில விஷயங்களை பகிர்ந்தார் அதில் " என்னை தசரா படத்திற்கு சிறந்த நடிகராக தேர்வு செய்த நடுவர்களுக்கு மிகவும் நன்றிகள். படத்தின் இயக்குனருக்கும், கடலென் அன்பை பொழியும் மக்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்" என்று கூறினார்.
மேலும் " 2023 ஆம் ஆண்டு தசாராவில் ஆரம்பித்து ஹை நானா திரைப்படத்தில் முடிந்தது. இந்த இரண்டு படமும் மிக முக்கியமான திரைப்படம் . இரண்டு படமுமே ரெண்டு எதிர்வினையான கதாப்பாத்திரங்கள். எனக்கு இந்த விழா ஒரு நண்பர்களின் ரீயூனியன் போல் தோன்றுகிறது, இரண்டு படத்தில் நடித்த இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் இங்கு இருக்கிறார்கள். இந்த விருது இவர்களின் கூட்டு முயற்சியால் கிடைத்தது".
தசரா படத்தின் இயக்குனரான ஸ்ரீகாந்துடன் மீண்டும் மற்றொரு படத்ட்தில் கமிட் ஆகியுள்ளார் நானி. அந்தப் படம் இன்னும் பிரம்மாண்டமாகவும் , பல விருதுகளை வெல்லும்" என்று கூறினார்.
" நான் அறிமுகம் செய்த இயக்குனர் மற்றும் டெக்னிஷியன்ஸ் விருது வெல்வதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்னும் நிறைய என சக நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் இதுப்போல விருதுகளை வெல்ல வேண்டும்" என்று கூறினார்.
தசரா திரைப்படத்திற்கு கிடைத்த விருதுகள்
*சிறந்த முன்னணி நடிகர் - நானி (தசரா)
*சிறந்த முன்னணி நடிகை - கீர்த்தி சுரேஷ் (தசரா)
*சிறந்த அறிமுக இயக்குனர் - ஸ்ரீகாந்த் ஒடேலா (தசரா)
மேலும், இப்படத்திற்காக கோலா அவினாஷ், சத்யன் சூரியன் மற்றும் பிரேம் ரக்ஷித் ஆகியோரும் விருது பெற்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.






