என் மலர்
நீங்கள் தேடியது "Naseeruddin Shah"
- இந்த ஆண்டின் சிறந்த நடிகர் இவர்தான் என்று சொன்னால் அது எந்த அளவுக்கு நியாயமாக இருக்கும்
- நான் மேலே பார்த்து, என் தந்தையிடம் இதையெல்லாம் பார்க்கிறீர்களா என்று கேட்டேன்.
பாலிவுட் மூத்த நடிகர் நசீருதீன் ஷா திரைப்பட விருதுகள் குறித்த தனது பார்வையை வெளிப்படுத்தி உள்ளார்.
பல நடிகர்கள் விருதுகளைத் துரத்திக் கொண்டிருக்கும் வேளையில் அவரின் வெளிப்படையான மற்றும் வேடிக்கையான கருத்து இணையத்தில் வைரலாகி வருகிறது.
நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற நசீருதீன் ஷா, தனக்குக் கிடைத்த சில Filmfare விருதுகள் தனது பண்ணை வீட்டின் கழிவறையில் கைப்பிடிகளாகப் பயன்படுத்தியதாகக் கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது, "ஒரு கதாபாத்திரத்தைச் சித்தரிப்பதற்காகத் தனது வாழ்க்கையையும் முயற்சியையும் அர்ப்பணித்த எந்தவொரு நடிகரும் ஒரு நல்ல நடிகர். நீங்கள் ஒருவரைத் தேர்ந்தெடுத்து, இந்த ஆண்டின் சிறந்த நடிகர் இவர்தான் என்று சொன்னால் அது எந்த அளவுக்கு நியாயமாக இருக்கும்?" என்று கேள்வி எழுப்பினார்.
தான் தற்போதெல்லாம் விருது விழாக்களில் கலந்து கொள்வதை நிறுத்திவிட்டதாகவும், கடைசியாக வழங்கப்பட்ட இரண்டு Filmfare விருதுகளை வாங்க கூட செல்லவில்லை என்றும் ஷா தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் "அந்த விருதுகளைப் பற்றி நான் பெருமைப்படவில்லை. அதனால், நான் ஒரு பண்ணை வீடு கட்டியபோது, இந்த விருதுகள் அனைத்தையும் அங்கே வைக்க முடிவு செய்தேன். கழிப்பறைக்குச் செல்லும் எவருக்கும் தலா இரண்டு விருதுகள் கிடைக்கும், ஏனென்றால் கழிப்பறையில் உள்ள அனைத்து கைப்பிடிகளும் Filmfare விருதுகள் தான்.

இந்த கோப்பைகளில் எனக்கு எந்த மதிப்பும் தெரியவில்லை. நான் முதன்முதலில் கோப்பைகளைப் பெற்றபோது மகிழ்ச்சியாக இருந்தேன். ஆனால் பின்னர் என்னைச் சுற்றி கோப்பைகள் குவிய ஆரம்பித்தன.
இந்த விருதுகள் எல்லாம் பரப்புரையின் விளைவுதான் என்பதை பின்னர் உணர்ந்தேன். ஒருவர் இந்த விருதுகளைப் பெறுவது அவர்களின் தகுதியின் காரணமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அதனால் நான் அவற்றைக் கைவிட ஆரம்பித்தேன்" என்று ஷா கூறினார்.
இருப்பினும், பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் போன்ற சிவில் விருதுகளைப் பெறுவதில் மிகவும் மகிழ்ச்சியடைவதாக அவர் மேலும் கூறினார்.
"நான் பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் விருதுகளைப் பெற்றபோது, என் தொழில் வாழ்க்கையைப் பற்றி எப்போதும் கவலைப்பட்ட என் மறைந்த தந்தையை நினைவு கூர்ந்தேன்.
அந்த மரியாதைகளைப் பெற நான் ராஷ்டிரபதி பவனுக்குச் சென்றபோது, நான் மேலே பார்த்து, என் தந்தையிடம் இதையெல்லாம் பார்க்கிறீர்களா என்று கேட்டேன். அந்த நேரத்தில் அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்திருப்பார் என்று நான் நம்புகிறேன்" என்று நசீருதீன் ஷா கூறினார்.
- கஜோலும், பிரபுதேவாவும், ராஜீவ் மேனன் இயக்கத்தில் 1997-ம் ஆண்டு வெளியான 'மின்சார கனவு' படத்தில் இணைந்து நடித்தனர்
- பாலிவுட்டில் உருவாகும் இப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் சரண் தேஜ் இயக்குகிறார். இது இவர் இயக்கும் முதல் பாலிவுட் படம் ஆகும். இப்படத்திற்கு ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் இசையமைக்கிறார்.
கஜோலும், பிரபுதேவாவும், ராஜீவ் மேனன் இயக்கத்தில் 1997-ம் ஆண்டு வெளியான 'மின்சார கனவு' படத்தில் இணைந்து நடித்தனர். இப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது இருவருக்கும். படத்தில் இவர்களுக்கு இடையேயான கெமிஸ்டிரி மிக அழகாக படத்தில் வொர்க் அவுட் ஆகி இருக்கும்.
ஏ. ஆர் ரஹ்மான் இசையமைத்த இப்படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் மிகப்பெரிய ஹிட்டானது. குறிப்பாக ஸ்ட்ராபெரி பெண்ணே, வெண்ணிலவே வெண்ணிலவே போன்ற பாடல்கள் இன்றும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் வலம் வந்துக் கொண்டுதான் இருக்கிறது.
தற்போது 27 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கஜோல் மற்றும் பிரபுதேவா ஒன்றாக நடிக்கின்றனர்.
பாலிவுட்டில் உருவாகும் இப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் சரண் தேஜ் இயக்குகிறார். இது இவர் இயக்கும் முதல் பாலிவுட் படம் ஆகும். அதிரடி திரில்லர் பாணியில் உருவாகும் இந்த படத்தில் ஜிஷு சென்குப்தா, நசிருதீன் ஷா, சம்யுக்தா மேனன், மற்றும் ஆதித்யா ஷீல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிமல் திரைப்படத்திற்கு இசையமைத்த ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.
இதன் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், படத்தின் டீசரை விரைவில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர். 27 வருடங்களுக்கு பிறகு இருவரும் இணைவதால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
சமீபத்தில் ஒரு ரசிகர் இந்திய வீரர்களின் பேட்டிங்கை விட வெளிநாட்டு வீரர்களின் பேட்டிங்கை ரசிப்பேன் என்று டுவிட்டரில் பதிவு செய்து இருந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த விராட் கோலி இந்திய பேட்ஸ்மேன்களின் ஆட்டத்தை விரும்பாதா, இதுபோன்ற ரசிகர்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள் என்று கோபமாக தெரிவித்தார். இது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தி கோலிக்கு எதிர்ப்பு உருவானது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பெர்த் டெஸ்ட் போட்டியின்போது அவர் வார்த்தை மோதலில் ஈடுபட்டு இருந்தார். இந்த நிலையில் உலகின் மோசமான நடத்தை கொண்ட வீரர் விராட் கோலி என்று பாலிவுட் நடிகரும், டைரக்டருமான நசிருதீன் ஷா சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-
விராட் கோலி உலகின் சிறந்த பேட்ஸ்மேன் மட்டுமல்ல. அவர் உலகின் மோசமான நடத்தை கொண்ட வீரரும் ஆவார். விராட் கோலியின் திறமையான கிரிக்கெட் என்பது அவரது அகந்தை மற்றும் கெட்ட நடத்தையால் மங்குகின்றது. அத்துடன் எனக்கு நாட்டை விட்டு வெளியேறும் எந்த எண்ணமும் இல்லை.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
நசிருதீன் ஷாவின் இந்த கருத்துக்கு விராட் கோலியின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் பலர் ஆதரவாகவும் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.






