27 வருடங்களுக்கு பிறகு இணையும் பிரபல ஜோடி

கஜோலும், பிரபுதேவாவும், ராஜீவ் மேனன் இயக்கத்தில் 1997-ம் ஆண்டு வெளியான 'மின்சார கனவு' படத்தில் இணைந்து நடித்தனர்பாலிவுட்டில் உருவாகும் இப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் சரண் தேஜ் இயக்குகிறார். இது இவர் இயக்கும் முதல் பாலிவுட் படம் ஆகும். இப்படத்திற்கு ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் இசையமைக்கிறார்.
27 வருடங்களுக்கு பிறகு இணையும் பிரபல ஜோடி
Published on

 கஜோலும், பிரபுதேவாவும், ராஜீவ் மேனன் இயக்கத்தில் 1997-ம் ஆண்டு வெளியான 'மின்சார கனவு' படத்தில் இணைந்து நடித்தனர். இப்படம் மிகப் பெரிய வெற்றியை பெற்றுக் கொடுத்தது இருவருக்கும். படத்தில் இவர்களுக்கு இடையேயான கெமிஸ்டிரி மிக அழகாக படத்தில் வொர்க் அவுட் ஆகி இருக்கும்.

ஏ. ஆர் ரஹ்மான் இசையமைத்த இப்படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் மிகப்பெரிய ஹிட்டானது. குறிப்பாக ஸ்ட்ராபெரி பெண்ணே, வெண்ணிலவே வெண்ணிலவே போன்ற பாடல்கள் இன்றும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் வலம் வந்துக் கொண்டுதான் இருக்கிறது.

தற்போது 27 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் கஜோல் மற்றும் பிரபுதேவா ஒன்றாக நடிக்கின்றனர்.

பாலிவுட்டில் உருவாகும் இப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் சரண் தேஜ் இயக்குகிறார். இது இவர் இயக்கும் முதல் பாலிவுட் படம் ஆகும். அதிரடி திரில்லர் பாணியில் உருவாகும் இந்த படத்தில் ஜிஷு சென்குப்தா, நசிருதீன் ஷா, சம்யுக்தா மேனன், மற்றும் ஆதித்யா ஷீல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிமல் திரைப்படத்திற்கு இசையமைத்த ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

இதன் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், படத்தின் டீசரை விரைவில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர். 27 வருடங்களுக்கு பிறகு இருவரும் இணைவதால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com