என் மலர்

  நீங்கள் தேடியது "Kajol"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • 2022-ஆம் ஆண்டிற்கான உறுப்பினர் தேர்வுக்கு ஆஸ்கர் குழு 397 பேருக்கு அழைப்பு விடுத்துள்ளது.
  • இதில் இந்தியாவில் இருந்து நடிகர் சூர்யா மற்றும் நடிகை கஜோல் இடம் பெற்றுள்ளனர்.

  திரையுலகில் மிக உயரிய விருதாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. இந்த விருது வழங்கும் விழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு பல பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆஸ்கர் உறுப்பினர் குழுவில் உலகம் முழுவதும் இருந்து நான்காயிரத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர்.

  ஆண்டு தோறும் ஆஸ்கர் கமிட்டியின் உறுப்பினர் விவரம் மாறுபடும். இதைத்தொடர்ந்து, 2022-ம் ஆண்டிற்கான புதிய உறுப்பினர்களுக்கான அழைப்பு 397 பேருக்கு விடுக்கப்பட்டிருந்தது. இதில் இந்தியாவில் இருந்து நடிகர் சூர்யா, நடிகை கஜோல் ஆகியோர் ஆஸ்கர் குழுவில் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


  சூர்யா - முதல்வர் ஸ்டாலின்

  இதனைத் தொடர்ந்து நடிகர் சூர்யா மற்றும் கஜோலுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும், தென்னிந்தியாவில் இருந்து ஆஸ்கர் பேனலுக்கு செல்லும் முதல் நடிகர் என்ற சிறப்பை சூர்யா பெற்றுள்ளார். நடிகர் சூர்யாவை பாராட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • திரையுலகில் மிகவும் உயரிய விருதாக கருதப்படுவது ஆஸ்கர் விருது.
  • ஆஸ்கர் உறுப்பினர் குழுவில் உலகம் முழுவதும் இருந்து நான்காயிரத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர்.

  திரையுலகில் மிக உயரிய விருதாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. இந்த விருது வழங்கும் விழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு பல பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆஸ்கர் உறுப்பினர் குழுவில் உலகம் முழுவதும் இருந்து நான்காயிரத்திற்கும் அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர்.

  ஆண்டு தோறும் ஆஸ்கர் கமிட்டியின் உறுப்பினர் விவரம் மாறுபடும். இந்நிலையில், ஆஸ்கர் விருது உறுப்பினர் குழுவில் புதிதாக 397 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். நடிகர்கள், இயக்குனர்கள், ஆடை வடிவமைப்பாளர்கள் என பல்வேறு துறைகளில் இருந்து தேர்வு நடைபெற்றுள்ளது.


  கஜோல்

  இதில் இந்தியாவில் இருந்து நடிகர் சூர்யா, நடிகை கஜோல் ஆகியோர் ஆஸ்கர் குழுவில் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த செய்தியானது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

  மேலும், புதிய உறுப்பினர்கள் ஆஸ்கர் பட்டியலுக்கான திரைப்படங்களை தேர்வு செய்ய வாக்களிக்கும் உரிமை பெறுவார்கள். நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று மற்றும் ஜெய்பீம் ஆகிய திரைப்படங்கள் ஆஸ்கர் விருது போட்டியில் பங்கெடுத்தது குறிப்பிடத்தக்கது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க பிரபல நடிகைகள் கஜோல், அமலாபாலிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. #Jayalalithaa
  அ.தி.மு.க. பொதுச்செயலாளராகவும், தமிழக முதல்வராகவும் இருந்தவர் ஜெயலலிதா. அவரது மறைவுக்குப் பிறகு அவரது வாழ்க்கை வரலாற்றை படமாக்க பலரும் முயற்சி செய்து வருகிறார்கள்.

  ஜெயலலிதாவின் பிறந்த நாளான கடந்த பிப்ரவரி 24-ந்தேதி இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கும் ‘தலைவி’ படத்தின் அதிகாரப்பூர்வ பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. இது தவிர இயக்குனர் பிரியதர்ஷினி இயக்கும் ‘தி அயர்ன் லேடி’ படத்தில் ஜெயலலிதாவாக நித்யா மேனன் நடிக்கிறார். இயக்குனர் பாரதிராஜா, ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்க முயற்சித்து வருகிறார்.

  கவுதம் மேனன் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை இணையதொடராக இயக்கி வருகிறார். இந்நிலையில் தமிழ்நாடு தெலுங்கு யுவசக்தியின் தலைவராக இருக்கும் ஜெகதீஸ்வர ரெட்டி ஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக எடுக்க உள்ளதாக அறிவித்துள்ளார். அவரே தயாரித்து இயக்கப் போகும் இந்த படத்துக்கு ‘சசி லலிதா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.  சசி லலிதா படத்தில் சசிகலாவின் பார்வையில் ஜெயலலிதா வாழ்க்கை படமாக்கப்பட இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த படத்தில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க இந்தி நடிகை கஜோலிடம் பேச்சு வார்த்தை நடத்தி இருக்கிறார். மும்பை சென்று கஜோலை சந்தித்து கதையை கூறிவிட்டு வந்துள்ளார்.

  சசிலலிதா படத்தில் சசிகலா வேடத்தில் நடிக்க அமலா பாலிடம் பேச்சு வார்த்தை நடக்கிறது. அமலா பால் சமீபகாலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடித்து வருகிறார். அந்த வரிசையில் இந்த படத்தில் சசிகலா வேடத்தில் நடிப்பாரா என்பது இனிதான் தெரியும்.
  ×