என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழ்நாடு அரசு"

    • சந்தீப் மிட்டல் 'சைபர் கிரைம்' கூடுதல் டி.ஜி.பி.யான இவர், பதவி உயர்வு பெற்று அதே பிரிவில் டி.ஜி.பி. ஆனார்.
    • பிரேம் ஆனந்த் சின்ஹா தெற்கு மண்டல ஐ.ஜி.யான இவர், கூடுதல் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றார்.

    தமிழகம் முழுவதும் பதவி உயர்வு மற்றும் நிர்வாக காரணங்களுக்காக 70 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டனர். டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆயுதப்படை டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார்.

    இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:-

    டேவிட்சன் தேவாசீர்வாதம்- சட்டம் -ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.யாக பணியாற்றி வந்த இவர், பதவி உயர்வு பெற்று, ஆயுதப்படை டி.ஜி.பி.யாக மாற்றப்பட்டார்.

    சந்தீப் மிட்டல்- 'சைபர் கிரைம்' கூடுதல் டி.ஜி.பி.யான இவர், பதவி உயர்வு பெற்று அதே பிரிவில் டி.ஜி.பி. ஆனார்.

    பால நாகதேவி- பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யான இவர், பதவி உயர்வு பெற்று அதே பிரிவில் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். இவர் சிவில் சப்ளை சி.ஐ.டி. பிரிவு டி.ஜி.பி. பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார்.

    அன்பு- சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி.யான இவர் பதவி உயர்வு பெற்று அதே பிரிவில் கூடுதல் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார்.

    பிரேம் ஆனந்த் சின்ஹா- தெற்கு மண்டல ஐ.ஜி.யான இவர், கூடுதல் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றார். ஆவடி கமிஷனராக பதவியேற்பார்.

    செந்தில்குமார்- மேற்கு மண்டல ஐ.ஜி.யான இவர், பதவி உயர்வு பெற்று, சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் தலைமையக கூடுதல் டி.ஜி.பி. யாக பதவியேற்பார்.

    அனிஷா உஷேன்- சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.யாக உள்ள இவர், பதவி உயர்வு பெற்று பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாக மாற்றப்பட்டார்.

    சங்கர்- ஆவடி போலீஸ் கமிஷனரான இவர், சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி. ஆனார்.

    அமல்ராஜ்- அமலாக்கப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி. யான இவர், தாம்பரம் போலீஸ் கமிஷனராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

    மேற்கண்ட அதிகாரிகள் உள்பட 70 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    • கூடி வாழும் மானுட சமூகத்தின் மதிப்பு அறியாமலும், மகத்துவமான மனித வாழ்வின் இலக்கு புரியாமலும் இளைய தலைமுறை உள்ளது
    • சோசியல் மீடியா வழி உருவாக்கப்படும் சாதி, மத, தாதாயிச தனிநபர் பெருமை கோமாளித்தனத்தின் மீதும் பாரபட்சமற்ற முறையில் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்

    திருத்தணி ரயில் நிலையம் அருகே சிறுவர்கள் சிலர் வடமாநில வாலிபர் ஒருவரை சுற்றிவளைத்து அரிவளாால் வெட்டி ரீல்ஸ் எடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் பலரும் இதற்கு கண்டனமும், வருத்தமும் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள இயக்குநர் மாரி செல்வராஜ், 

    "சென்னை மின்சார ரயிலில் புலம்பெயர் தொழிலாளியின் மீது சில இளைஞர்கள் நடத்திய அரக்கத்தனமான, அருவருப்பான செயலும், தாக்குதலும் பேரதிர்ச்சியையும், மன உளைச்சலையும் கொடுக்கிறது. கூடி வாழும் மானுட சமூகத்தின் மதிப்பு அறியாமலும், மகத்துவமான மனித வாழ்வின் இலக்கு புரியாமலும் இம்மாதிரி தடம்புரண்டு அலையும் இளைய தலைமுறையை நேர்படுத்த அரசு கொடூரமான போதை கலாச்சாரத்தின் மீதும்,  சோசியல் மீடியா வழி உருவாக்கப்படும் சாதி, மத, தாதாயிச தனிநபர் பெருமை கோமாளித்தனத்தின் மீதும் பாரபட்சமற்ற முறையில் கடும் நடவடிக்கைகளை எடுத்து அடுத்த தலைமுறையை நெறிப்படுத்த வேண்டுகிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார். 


    • அப்போதைய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியால் அறிமுகம் செய்யப்பட்டது.
    • 3 ஆண்டு காலம் மசோதா நிலுவையில் இருந்தநிலையில் தற்போது திருப்பி அனுப்பியுள்ளார்

    சென்னை பல்கலை. துணைவேந்தர் நியமனம் தொடர்பான மசோதாவை குடியரசுத் தலைவர் திருப்பி அனுப்பினார்.

    சென்னை பல்கலை கழகத்தின் துணை வேந்தரை நீக்கவும், நியமிக்கவும் அரசுக்கு அதிகாரம் அளிக்கும் மசோதா கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழ்நாடு சட்டப்பேரவையில், அப்போது உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடியால் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மசோதாமீது விவாதங்கள் நடத்தப்பட்டு, சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. அவர் ஒப்புதலுக்காக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு அனுப்பினார். 

    இந்நிலையில் சுமார் 3 ஆண்டு காலம் மசோதா நிலுவையில் இருந்தநிலையில் தற்போது திருப்பி அனுப்பியுள்ளார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. 

    ×