search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tamilnadu govt"

    • கல்விக்கடனை வசூலிக்க இயலாத காரணத்தால் தள்ளுபடி செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
    • ரூ.48.95 கோடியை சிறப்பினமாக கருதி முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவிப்பு.

    ஆதிதிராவிடர், பழங்குடியினர், கிறிஸ்துவ ஆதிதிராவிடர் மாணவ- மாணவிகளுக்கு வழங்கப்பட்ட கல்விக்கடன் ரூ.48.95 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, 1972- 1973 முதல் 2002- 2003 வரையிலான காலங்களில் அனைத்து படிப்புகளுக்கும் வழங்கப்பட்ட கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது.

    இதேபோல், 2003- 2004 முதல் 2009-2010 வரையிலான காலங்களில் வழங்கப்பட்ட கல்விக்கடன் நிலுவைத் தொகை தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், மருத்துவம், மருத்துவம் சார்ந்த படிப்புக்கு வழங்கப்பட்ட கல்விக்கடனை வசூலிக்க இயலாத காரணத்தால் தள்ளுபடி செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

    கல்விக்கடன் வழங்கப்பட்ட மாணவர்கள் தொடர்பான ஆவணங்கள் இல்லாததால், நபர்களை அடையாளம் காண முடியாததால் தள்ளுபடி செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

    ரூ.48.95 கோடியை சிறப்பினமாக கருதி முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

    • வழக்கறிஞர் ஜெகன்நாத் உள்ளிட்ட மூவர் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
    • மனுக்களின் செல்லுபடி தன்மை குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பிய நிலையில் மனுதாரர்கள் மனுவை திரும்பப்பெற்றனர்.

    சனாதனம் குறித்த உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 3 மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

    வழக்கறிஞர் ஜெகன்நாத் உள்ளிட்ட மூவர் தாக்கல் செய்த இந்த மனுக்களின் செல்லுபடி தன்மை குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பிய நிலையில் மனுதாரர்கள் மனுவை திரும்பப்பெற்றனர்.

    உதயநிதியின் பேச்சை அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என அறிவிக்கவும், அவர் மீது எப்ஐஆர் பதிவு செய்யவும் மனுக்களில் கோரிக்கை வைக்கப்பட்டது.

    இந்நிலையில், 3 மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

    இதுகுறித்து தமிழக அரசு கூறுகையில், " துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதனம் குறித்த பேச்சுக்கு எதிராக வழக்கு தொடர உச்சநீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது.

    சனாதன பேச்சுக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி கோரிய 3 ரிட் மனுக்களையும் மனுதாரர்கள் திரும்பப் பெற்றனர்.

    இது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு கிடைத்துள்ள மாபெரும் வெற்றி" என்று தெரிவித்துள்ளது.

    • சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற டாவோஸ் உலகப் பொருளாதார மன்றத்தில் தமிழ்நாடு தனி முத்திரை பதித்துள்ளது.
    • சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, ஃபின்லாந்து உள்ளிட்ட பல நாட்டு அதிகாரிகளுடன் தமிழ்நாட்டு அதிகாரிகள் சந்தித்துள்ளனர்.

    இந்திய அளவில் 2வது பெரிய பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு வளர்ச்சி பெற்றிருப்பதை அறியாமல் அற்பத்தனமாக அறிக்கை விடுகிறார் இபிஎஸ் என்று அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தெரிவித்துள்ளார்.

    அப்போது, மாநிலத்தின் மீது எந்த அக்கறையும் இல்லாமல், வெறும் அவதூறுகளை அரைவேக்காட்டுத்தனமாக எங்கேயோ 'கிண்டி'த் தருவதை ஆளுநரும் இ.பி.எஸ்-ம் மென்று கொண்டிருக்கிறார்கள்.

    மேலும், பாவோஸில் தமிழ்நாட்டு பிரதிநிதகள் மேற்கொண்ட தொழில் முயற்சிகளை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பட்டியலிட்டார்.

    அப்போது அவர், சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற டாவோஸ் உலகப் பொருளாதார மன்றத்தில் தமிழ்நாடு தனி முத்திரை பதித்துள்ளது.

    சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, ஃபின்லாந்து உள்ளிட்ட பல நாட்டு அதிகாரிகளுடன் தமிழ்நாட்டு அதிகாரிகள் சந்தித்துள்ளனர்.

    செமி கண்டக்டர் உற்பத்தி, வடிவமைப்பு குறித்து சிங்கப்பூர் துணை பிரதமருடன் கலந்துரையாடியுள்ளோம்.

    மருத்துவ தொழில்நுட்பம், மருந்து, உணவு ஏற்றுமதி பற்றி சிங்கப்பூர் துணை பிரதமருடன் விவாதித்து, சாதக பதிலை பெற்றுள்ளோம்.

    உணவு ஏற்றுமதி, தொழில்நுட்ப துறைகளில் தமிழ்நாட்டில் முதலீடு செய்வது குறித்து ஐக்கிய அரபு நாடுகளுடன் ஆலோசிக்கப்பட்டது என்றார்.

    • டங்ஸ்டன் திட்டத்தை மத்திய அரசு முழுவதுமாக ரத்து செய்வதாக அறிவித்தது.
    • மத்திய அரசின் இந்த அறிவிப்பை தொடர்ந்து, அரிட்டாப்பட்டி கிராம மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

    மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.

    இதையடுத்து, டங்ஸ்டன் திட்டத்தை மத்திய அரசு முழுவதுமாக ரத்து செய்வதாக அறிவித்தது. மத்திய அரசின் இந்த அறிவிப்பை தொடர்ந்து, அரிட்டாப்பட்டி கிராம மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

    இந்நிலையில், டங்ஸ்டன் கனிம சுரங்கம் ரத்து குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    அரிட்டாப்பட்டி டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து வரவேற்கத்தக்கது: பாதுகாக்கப்பட்ட பல்லுயிர் புராதனச் சின்னங்கள் பாதுகாப்பு மண்டலமாக தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும்!

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாப்பட்டியை உள்ளடக்கிய பகுதிகளில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்காக நடத்தப்பட்ட ஏலம் ரத்து செய்யப்பட்டிருப்பதாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. மேலூர் பகுதி மக்களின் போராட்டத்தைத் தொடர்ந்து அவர்களின் உணர்வுகளை மதித்து மத்திய அரசு எடுத்துள்ள இந்த முடிவு வரவேற்கத்தக்கது.

    வேளாண் நிலங்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தும் எந்தத் திட்டத்தையும் தமிழ்நாட்டில் செயல்படுத்தக் கூடாது என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு.

    அந்த அடிப்படையில் தான் மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டி பகுதியில் 2015 ஏக்கரில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க தூத்துக்குடி பகுதியை சீரழித்த வேதாந்தா குழுமத்தின் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்ததற்கு பா.ம.க. முதன்முதலில் எதிர்ப்பு தெரிவித்தது.

    இந்தத் திட்டத்திற்கு தொடக்கத்தில் ஆதரவாக இருந்த திமுக அரசு, மக்களிடம் எதிர்ப்பு எழுந்தவுடன் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததையும் நான் அம்பலப் படுத்தினேன். கடந்த திசம்பர் 26-ஆம் தேதி அங்கு நடைபெற்ற போராட்டத்திலும் நான் கலந்து கொண்டேன்.

    அரிட்டாப்பட்டி பாதுகாக்கப்பட வேண்டிய பகுதி ஆகும். அரிட்டாபட்டி , மீனாட்சிபுரம் ஆகிய கிராமங்களில் இருக்கும் 193.215 ஹெக்டேர் பரப்பளவுள்ள பகுதிகளை பல்லுயிர் பாரம்பரிய தலமாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. ஏழு சிறிய குன்றுகள் இந்தத் தலத்துக்குள் அடங்குகின்றன.இவை 250 வகையான பறவைகளுக்கு வாழ்விடமாக உள்ளன.

    தனித்துவம் மிக்க இந்த மலைப்பரப்பு 72 ஏரிகள், 200 இயற்கை நீரூற்றுக் குளங்களுக்கான ஆதாரமாக திகழ்கிறது. இப்பகுதியில், 2,200 ஆண்டுகள் பழமையான தமிழி எழுத்துக் கல்வெட்டுகள், சமணர் படுக்கைகள் மற்றும் குடைவரை கோவில்கள் ஆகியவையும் உள்ளன. அரிட்டாப்பட்டியின் முக்கியத்துவத்தை உணர்ந்து டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட்டிருப்பது சரியான நடவடிக்கை.

    அதேநேரத்தில் மேலூர் அரிட்டாப்பட்டி பகுதியை இனி வரும் காலங்களிலும் இத்தகைய திட்டங்களில் இருந்து பாதுகாக்க வேண்டும். அதற்காக அந்தப் பகுதியை மேலூர் பல்லுயிர் புராதனச் சின்னங்கள் பாதுகாப்பு மண்டலமாக தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும். அதற்கான சட்டத்தை தமிழக அரசு சட்டப்பேரவையில் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது.
    • அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சுமார் ஒன்றரை மணி நேரம் ஆய்வு மேற்கொண்டார்.

    அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

    இந்த வழக்கில் கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது.

    இந்நிலையில் மாணவி வன்கொடுமை சம்பவம் தொடர்பாக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆய்வு செய்தார். அப்போது, பல்கலைக்கழக பாதுகாப்பு தொடர்பாகவும் ஆளுநர் ஆலோசனை நடத்தினார்.

    அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சுமார் ஒன்றரை மணி நேரம் ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர், அண்ணா பல்கலைக்கழகத்தை சேர்ந்த 25 மாணவர்களின் கருத்துகளை தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி கேட்டறிந்துள்ளார்.

    பல்கலை மாணவர்களின் பாதுகாப்பு, காவலர்களின் பாதுகாப்பு பணி குறித்து ஆய்வு நடத்தினார்.

    உயர்கல்வித்துறை செயலாளர் கோபால், தொழில்நுட்பக் கல்வி ஆணையர் ஆபிரகாம் உள்ளிட்டோர் ஆளுநருடன் இருந்தனர்.

    இந்நிலையில், பாதுகாப்பு குறைபாடு காரணமாக அண்ணா பல்கலைக்கழகத்தின் பதிவாளரை மாற்றுமாறு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

    பதிவாளரை மாற்றுவது தொடர்பான முடிவு மாநில அரசுக்கு உட்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    • திமுக ஆட்சியில் எங்கும், யாருக்கும் பாதுகாப்பு இல்லை.
    • ஒவ்வொரு நிகழ்வின் போதும் அதற்கு ஏதேனும் காரணத்தைக் கூறி சிக்கலை திசை திருப்புவதற்குத் தான் திமுக அரசு முயல்கிறது.

    சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மாணவர் அளித்த புகாரின்பேரில் கோட்டூர்புரம் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் திராவிட மாடல் ஆட்சியில் குற்றவாளிகளைத் தவிர யாருக்கும் பாதுகாப்பு இல்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:-

    சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவரை இரண்டு பேர் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளியாகியுள்ள செய்திகள் பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கின்றன. சென்னையின் மையப்பகுதியில் உள்ள உலகப்புகழ் பெற்ற அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலேயே இப்படி ஒரு கொடுமை நிகழ்ந்திருப்பது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு நிலைமை எந்த அளவுக்கு மோசமடைந்திருக்கிறது என்பதற்கு இந்த நிகழ்வு தான் கொடூரமான எடுத்துக்காட்டு ஆகும்.

    அண்ணா பல்கலைக்கழகத்தில் பல்லாயிரக்கணக்கான மாணவிகள் படிக்கின்றனர். அனைத்து நுழைவு வாயில்களிலும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக அரசு கூறிக் கொள்கிறது. அது உண்மை என்றால், அனைத்து காவலையும் மீறி மனித மிருகங்கள் பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்து ஒரு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது எப்படி?

    தமிழகத்தையும், பிற மாநிலங்களையும் சேர்ந்த பெற்றோர்கள் அண்ணா பல்கலைக்கழகம் மிகவும் பாதுகாப்பானது என்ற நம்பிக்கையில் தான் தங்களின் குழந்தைகளை பல்கலைக்கழகத்திற்கு அனுப்புகிறார்கள். ஆனால், பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு இல்லை, மாணவிகளே பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகின்றனர் என்றால் இனி எந்தப் பெற்றோர் தங்களின் மகள்களை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அனுப்புவார்கள். இது பெண் கல்விக்கு பெருந்தடையாக மாறி விடாதா?

    திமுக ஆட்சியில் எங்கும், யாருக்கும் பாதுகாப்பு இல்லை. மருத்துவமனைக்குள் நுழைந்து மருத்துவரை சரமாரியாக வெட்டியது, பள்ளிக்குள் நுழைந்து ஆசிரியையை கொடூரமாக வெட்டி படுகொலை செய்தது. நீதிமன்றத்திற்குள் நுழைந்து விசாரணைக்கு வந்தவரை படுகொலை செய்தது என கொடூர நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. ஒவ்வொரு நிகழ்வின் போதும் அதற்கு ஏதேனும் காரணத்தைக் கூறி சிக்கலை திசை திருப்புவதற்குத் தான் திமுக அரசு முயல்கிறதே தவிர, சட்டம் - ஒழுங்கை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    கொலை - கொள்ளை நிகழ்வுகளில் ஈடுபடுபவர்கள், திமுகவுக்கு ஆதரவாக இருந்து கொண்டு தெரிந்தே குற்றங்களைச் செய்பவர்கள் போன்றோர் தான் பாதுகாப்பாக நடமாட முடிகிறதே தவிர, அப்பாவிகளுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை. தமிழ்நாட்டில் நடப்பவை அனைத்தையும் மக்கள் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். சரியான நேரத்தில் தக்க தண்டனையை திமுக அரசுக்கு மக்கள் அளிப்பார்கள்.

    • அழகர்மலை அருகே டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்தா நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி ?
    • எந்த அளவுகோலின் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக விளக்கம்.

    மதுரை அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்தா நிறுவனத்திறகு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், இதுதொடர்பாக தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளித்துள்ளது.

    அரிட்டாபட்டி கிராமம், கடந்த 2022ம் ஆண்டு தமிழகத்தின் முதல் பல்லுயிர் தலமாக அறிவிக்கப்பட்டது. 7 மலைகளை கொண்ட இந்த கிராமப்பகுதியில் புராதன சின்னங்கள், அரியவகை பறவைகள் உள்ளன.

    அரிட்டாபட்டி பல்லுயிர் பாராம்பரிய தலம் அழகர்மலை அருகே டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்தா நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக தகவல் வெளியானது.

    இதுதொடர்பாக, மதுரை அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வேதாந்தா நிறுவனம் இதுவரை விண்ணப்பிக்கவில்லை என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது

    மேலும், மத்திய அரசு அனுமதி அளித்துள்ள குறிப்பிட்ட பகுதி எது என்பது குறித்தும் அது எந்த அளவுகோலின் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் ஆராய்ந்து வருவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

    • மாணாக்கர்களின் நலனை கருதில் கொண்டு ஆசிரியர்களுக்கு மறுநியமனம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
    • 2025ம் ஆண்டு மே 31ம் தேதி வரை மறுநியமனத்தை நீட்டித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் உத்தரவிட்டுள்ளார்.

    அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலைக் கல்லூரி ஆசியர்கள் மறுநியமனம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    மாணாக்கர்களின் நலனை கருதில் கொண்டு ஆசிரியர்களுக்கு மறுநியமனம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

    2025ம் ஆண்டு மே 31ம் தேதி வரை மறுநியமனத்தை நீட்டித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் உத்தரவிட்டுள்ளார்.

    இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    அரசு / அரசு உதவி பெறும் கலைக் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஓர் கல்வி ஆண்டின் இடையில் வயது முதிர்வின் காரணமாக ஓய்வு பெறும் நிலை எழும் பொழுது மாணவர்களின் கல்விக்கு இடையூறு ஏற்படும் என்ற காரணத்தால், அவ்வாசிரியர்களை வயது முதிர்வு மாதம் ஓய்வு பெற அனுமதித்து மீண்டும் அக்கல்வி ஆண்டின் இறுதி வரை மறுநியமனம் செய்யும் முறை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.

    இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான வகுப்புகள் ஏப்ரல் முதல் வாரத்துடன் முடிவடைந்து விடுவதாலும், மே மாதத்தில் தேர்வுகள் / விடைத்தாள் திருத்தும் பணிகள் மட்டுமே நடைபெறுவதாலும், கல்வி ஆண்டின் இடையில் வயது முதிர்வின் காரணமாக ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி வரை மறுநியமனம் வழங்கி ஆணையிடப்பட்டது.

    முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களின் நலனை கருதிற்கொண்டு, நிர்வாக பதவிகளான கல்லூரி கல்வி இணை இயக்குநர் / மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் / கல்லூரி முதல்வர் மற்றும் இதர கல்விசார் பணியாளர்களான கல்லூரி நூலகர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் பதவிகள், நீங்கலாக கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு சில நிபந்தனைகளுக்குட்பட்டு 2025 மே மாதம் 31 வரை மறுநியமனம் நீட்டித்து உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி செழியன் தெரிவித்துள்ளார்.

    இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

    • நிர்வாக காரணங்களுக்காக கிராம சபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
    • தமிழகம் முழுவதும் 23-ம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் நவம்பர் 1-ம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டது.

    இந்நிலையில், தமிழகம் முழுவதும் வரும் 23-ம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதுதொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

    அதில், கிராம சபை கூட்டத்தை ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையில் 23-ம் தேதி காலை 11 மணியளவில் நடத்த வேண்டும். கிராம மக்கள் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்க ஏதுவாக, கூட்டம் நடைபெறும் இடம், நேரத்தை கிராம மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

    • முதல் தவணையாக ரூ.209 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • மொத்தம் ரூ.209 கோடி ஒதுக்கீடு செய்து ஊரக வள்ச்சி துறை அரைசாணை வெளியிட்டுள்ளது.

    2024- 2025ம் ஆண்டில் ஊரகப் பகுதிகளில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 68,569 வீடுகள் கட்ட முதல் தவணையாக ரூ.209 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    அதன்படி, ஒரு வீட்டுக்கு ரூ/1.20 லட்சம் ஒன்ற அடிப்படையில் முதல் தவணையாக ரூ.209 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    மத்திய அரசின் பங்கு ரூ.125 கோடி மற்றும் மாநில அரசின் பங்குத் தொகை ரூ.83 கோடி என மொத்தம் ரூ.209 கோடி ஒதுக்கீடு செய்து ஊரக வள்ச்சி துறை அரைசாணை வெளியிட்டுள்ளது.

    பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளுக்கு மத்திய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீதமும் நிதி வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    • மெட்ரோ ரெயில் திட்டம் 2ம் கட்டத்திற்கு மத்திய அரசு ரூ.63000 கோடி நிதி வழங்குவதாக தகவல் வெளியானது.
    • தவறான தவலைப் பரப்பாதீர்கள் என தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு விளக்கம்.

    மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி அளித்தார்.

    அப்போது பேசிய அவர், "சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட திட்டத்திற்கு நிதி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது" என்று தெரிவித்தார்.

    தொடர்ந்து, மெட்ரோ ரெயில் திட்டம் 2ம் கட்டத்திற்கு மத்திய அரசு ரூ.63000 கோடி நிதி வழங்குவதாக தகவல் வெளியானது.

    இந்நிலையில், சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் 2ம் கட்டத்திற்கு, மத்திய அரசு ரூ.63,246 கோடி நிதி வழங்கியுள்ளதாக பரவும் செய்தி தவறானது என தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

    சென்னை மெட்ரோ திட்டத்திற்கு மத்திய அரசின் பங்கு ரூ.7,425 கோடி மட்டுமே. தமிழக அரசின் பங்கு- ரூ.22,228 கோடி, கடன் ரூ.33,593 கோடி பங்கிடப்பட்டுள்ளது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    சென்னை மெட்ரோ ரெயில் திட்டம் 2ம் கட்டத்திற்கு மத்திய அரசு நேற்று ஒப்புதல் அளித்த நிலையில், தவறான தவலைப் பரப்பாதீர்கள் என தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பு குழு விளக்கம் அளித்துள்ளது.

    • சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி முதல்வராக லியூ டேவிட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    • செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி முதல்வராக சிவசங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    தமிழ்நாட்டில் 14 மருத்துவ கல்லூரிகளுக்கு முதல்வர்களை நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி, செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரி முதல்வராக சிவசங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

    கள்ளக்குறிச்சி மருத்துவக் கல்லூரி முதல்வராக பவானி, ஈரோடு மருத்துவக் கல்லூரி முதல்வராக ரவிக்குமார், குமரி மருத்துவக்கல்லூரி டீனாக ராம லட்சுமி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    திருச்சி மருத்துவக் கல்லூரி முதல்வராக குமரவேல், மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வராக அருள் சுந்தரேஷ் குமார், ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரி டீனாக அமுதா ராணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    சேலம் மருத்துவக் கல்லூரி முதல்வராக தேவி மீனாள், சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி முதல்வராக லியூ டேவிட் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி முதல்வராக கலைவாணி, தேனி மருத்துவக் கல்லூரி முதல்வராக சித்ரா, கரூர் மருத்துவக் கல்லூரி முதல்வராக லோகநாயகி, விருதுநகர் மருத்துவக்கல்லூரி முதல்வராக ஜெயசிங் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    வேலூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வராக ரோகிணி தேவியை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    ×