என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DMK Public Meeting"

    • தொடர்ச்சியான பயணங்களில் உங்களைச் சந்திப்பேன்!
    • களம்2026-ல் மகத்தான வெற்றியைப் பெற்று, ஆட்சியைத் தொடர்வோம்!

    மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக்குழுவை புகழ்ந்து எக்ஸ் தளத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    பொதுக்குழுவா கழக மாநாடா என வியக்கும் வகையில் நடந்தேறியிருக்கிறது. திமுகபொதுக்குழு2025!

    கலைஞர்102-ஐ செம்மொழிநாள் எனக் கொண்டாடி மகிழ்ந்து, ஓரணியில் தமிழ்நாடு என கழகத்தின் வலிமையைப் பன்மடங்காக்குவோம்!

    தொடர்ச்சியான பயணங்களில் உங்களைச் சந்திப்பேன்! களம்2026-ல் மகத்தான வெற்றியைப் பெற்று, ஆட்சியைத் தொடர்வோம்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • திமுகதான் இந்த நாட்டிற்கு துரோகம் செய்துள்ளது.
    • 4 ஆண்டுகளாக மக்கள் விரோத ஆட்சி, மோசமான ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது.

    கோவையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    அதிமுக தமிழகத்திற்கு துரோகம் செய்ததாக மதுரை பொதுக்குழுவில் திமுக தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறது

    அதிமுக ஆட்சியில் இருந்தபோதும் சரி, தற்போதும் சரி, யாருக்கும் எப்போதும் துரோகம் இழைத்ததில்லை. திமுகதான் இந்த நாட்டிற்கு துரோகம் செய்துள்ளது.

    4 ஆண்டுகளாக மக்கள் விரோத ஆட்சி, மோசமான ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது.

    16 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்தபேது ஏன் கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றவில்லை.

    மதுரையில் கால்வாயை திரைச்சீலை வைத்து மறைத்துவைக்கும் அளவுக்கு அவல ஆட்சி நடக்கிறது.

    தூர்வாரப்படாததால் பந்தல்குடி கால்வாயை திரைச்சீலை கொண்டு மூடினர். கால்வாய் தூர்வாரப்படாதது அவர்களுக்கே பிடிக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை என்று ஆணவத்தில் சொல்பவன் நான் அல்ல.
    • தி.மு.க. இதுவரை அடைந்த வெற்றிகளுக்கெல்லாம் உடன் பிறப்புகள் தான் காரணம்.

    மதுரையில் நடந்த தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    தடம் மாறாத கொள்கை கொண்ட கூட்டம் நாம். அதனால் எந்த கோமாளி கூட்டமும் நம்மை வெல்ல முடியவில்லை. இனியும் வெல்ல முடியாது. அடுத்தாண்டு இந்த நேரத்தில் தமிழகத்தில் 7-வது முறையாக தி.மு.க. ஆட்சி அமைத்தது என்பது தலைப்பு செய்தியாக இருக்க வேண்டும்.

    கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை என்று ஆணவத்தில் சொல்பவன் நான் அல்ல. ஆணவமோ, மமதையோ எனக்கு எப்போதும் வராது. பணிவு தான் தலைமைத்துவத்தின் அடையாளம்.

    தி.மு.க. இதுவரை அடைந்த வெற்றிகளுக்கெல்லாம் உடன் பிறப்புகள் தான் காரணம். சூரியன் நிரந்தரமானது. அதேபோல் தி.மு.க.வும் நிரந்தரமானது. தி.மு.க. எப்படி நிரந்தரமானதோ, அதேபோல் தி.மு.க. ஆட்சியும் நிரந்தரமானது என்ற நிலையை உருவாக்க வேண்டும். கடந்த அ.தி.மு.க.- பா.ஜ.க. ஆட்சியில் அதலபாதாளத்திற்கு சென்றுள்ள தமிழகத்தை நாங்கள் மீட்டிருக்கிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் பிரமாண்ட கட்-அவுட்.
    • ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை.

    தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று விமானம் மூலம் மதுரை வருகிறார். அவர் இன்றும், நாளையும் மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். ம

    துரை உத்தங்குடியில் உள்ள கலைஞர் திடலில் சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. முற்றிலும் குளிரூட்டப்பட்ட இந்த அரங்கின் முகப்பு தோற்றம் சென்னை அண்ணா அறிவாலயம் வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது.

    அதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் பிரமாண்ட கட்-அவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

    அவர் செல்லும் வழியில் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறுகையில்,"#களம்2026-இல் பெருவெற்றியைப் பெற்றிடப் பொதுக்குழு கூடிடும் மாமதுரை" என்று குறிப்பிட்டிருந்தார். அத்துடன் வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார்.

    • தென்காசி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் கழகங்களில் பொதுக் கூட்டங்கள் மற்றும் தெருமுனை பிரசார கூட்டங்கள் நடத்தப்படும்.
    • 13-ந் தேதி (திங்கட்கிழமை)மேலநீலிதநல்லூர் தெற்கு ஒன்றியத்தில் நெல்லை முத்தையா மற்றும் சங்கரன்கோவில் நகரத்தில் முரசொலி மூர்த்தி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம். எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:-

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70- வது பிறந்த நாளை முன்னிட்டு தென்காசி வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர் கழகங்களில் கீழ் வரும் தேதிகளில் பொதுக் கூட்ட ங்கள் மற்றும் தெருமுனை பிரசார கூட்டங்கள் நடத்த ப்படும்.

    அதன்படி வருகிற மார்ச் 11-ந் தேதி (சனிக்கிழமை) குருவிகுளம் கிழக்கு ஒன்றியத்தில் கழகப் பேச்சா ளர் வேங்கை சந்திரசேகர் மற்றும் வாசுதேவநல்லூர் தெற்கு ஒன்றிய த்தில் கழகப் பேச்சாளர் சரத் பாலா ஆகியோர் பங்கேற்று பேசுகின்றனர்.

    வருகிற 12-ந் தேதி (ஞாயிற்றுக்கி ழமை)குருவிகுளம் மேற்கு ஒன்றியத்தில் கழக பேச்சாளர் வேங்கை சந்திர சேகர், வாசுதேவநல்லூர் பேரூர் கழகத்தில் பேச்சாளர் சரத் பாலா ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள்.

    13-ந் தேதி (திங்கட்கிழமை)மேலநீலிதநல்லூர் தெற்கு ஒன்றியத்தில் நெல்லை முத்தையா மற்றும் சங்கரன்கோவில் நகரத்தில் முரசொலி மூர்த்தி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

    14-ந் தேதி (செவ்வாய்க்கிழமை)ராயகிரி பேரூர் கழகத்தில் முரசொலி மூர்த்தி மற்றும் புளியங்குடி நகரத்தில் கழக பேச்சாளர் சேலம் கோவிந்தன் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகின்றனர்.

    15-ந் தேதி (புதன்கிழமை) திருவேங்கடம் பேரூர் - கழக பேச்சாளர் சேலம் சுஜாதா மற்றும் மேலநீலிதநல்லூர் மேற்கு ஒன்றியத்தில் கழக பேச்சாளர் சேலம் கோவிந்தன் ஆகியோர் கலந்துகொண்டு பேசுகின்றனர்.

    16- ந் தேதி (வியாழக் கிழமை) சிவகிரி பேரூர் கழகத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கழகப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு பேசுகிறார்.

    17-ந் தேதி (வெள்ளிக் கிழமை)குருவிகுளம் தெற்கு ஒன்றியத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கழகப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு பேசுகிறார்.

    19-ந் தேதி (ஞாயிற்று க்கிழமை)சங்கரன்கோவில் வடக்கு ஒன்றியத்தில் கழக பேச்சாளர் ஆயிரப்பேரி முத்துவேல் கலந்துகொண்டு பேசுகிறார்.

    மேல் காணும் தேதி களில் நடைபெறும் பொது கூட்டங்கள் மற்றும் தெருமுனை பிரசார கூட்டங்களில் ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலா ளர்களுடன் அந்தந்த பகுதி வார்டு மற்றும் கிளைக் நிர்வாகிகள் முழு ஒத்துழைப்பு வழங்கி கூட்டங்களை சிறப்பாக நடத்திட வேண்டும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    • ஓட்டப்பிடாரத்தில் வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் சிவன் கோவில் முன்பு நடந்தது.
    • மக்களை தேடி மருத்துவம் மூலம் கிராமங்களில் வீடு தேடி மருத்துவம் பார்க்கும் திட்டத்தால் மாதந்தோறும் பல லட்சம் மக்கள் பயன் அடைந்து வருகின்றனர் என்று அமைச்சர் பேசினார்.

    ஓட்டப்பிடாரம்:

    ஓட்டப்பிடாரத்தில் வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் சிவன் கோவில் முன்பு நடந்தது.

    வடக்கு ஒன்றிய செயலாளர் இளையராஜா தலைமை தாங்கினார். மாநில வர்த்தக அணி இணை செயலாளர் உமரிசங்கர், ஓட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வைத்தனர். வடக்கு ஒன்றிய அவைத் தலைவர் சுப்பிரமணியன் வரவேற்று பேசினார்.

    அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

    கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரித்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ. 4 ஆயிரம் கொடுத்து சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றினார்.

    தாய்மார்கள் மீது அக்கறை கொண்ட முதல்- அமைச்சராக பொறுப்பேற்றவுடன் தாய்மார்களுக்கு நகர பஸ்களில் இலவசமாக பயணம் செய்யலாம் என்று சட்டத்தை நிறைவேற்றி தந்தார்.

    இதன் மூலம் மாதந்தோறும் பெண்களுக்கு ரூ. 1,500 சேமிப்பை ஏற்படுத்தி தந்துள்ளார். கூட்டுறவு சங்கங்களில் விவசாய கடன், மகளிர் சுயஉதவி கடன் மற்றும் நகை கடனை தள்ளுபடி செய்து சொன்ன வாக்கை நிறைவேற்றி உள்ளார்.

    மக்களை தேடி மருத்துவம்

    மக்களை தேடி மருத்துவம் மூலம் கிராமங்களில் வீடு தேடி மருத்துவம் பார்க்கும் திட்டத்தால் மாதந்தோறும் பல லட்சம் மக்கள் பயன் அடைந்து வருகின்றனர். இன்னுயிர் காப்போம், நம்மை காப்போம் திட்ட மூலம் சாலைகளில் விபத்தில் பாதிக்கப்படும் நபர்களை அந்த வழியாக செல்பவர்கள் உடனடியாக அருகிலுள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கும் பட்சத்தில் 48 மணி நேரம் சிகிச்சைக்கு அனைத்து செலவையும் அரசே ஏற்கும். அப்போது ஆஸ்பத்திரியில் சேர்க்கும் நபருக்கு ரூ. 5 ஆயிரம் ஊக்கத்தொகையும் அரசு வழங்கும்.

    கிராமப்புற மாணவர்களை பாதிப்பதாக நீட் தேர்வு இருந்து வருகிறது. இதனால் கிராமப்புற மாணவர்கள் நலம் கருதி மருத்துவ படிப்பை தொடர மருத்துவ ஒதுக்கீட்டில் சிறப்பு ஒதுக்கீடு திட்டத்தை தந்தவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், ஆதிதிராவிட நலக்குழு அமைப்பாளர் ராஜேந்திரன், செயற்குழு உறுப்பினர் செந்தூர்மணி, மாவட்ட வக்கீல் அணி துணை அமைப்பாளர் பூங்குமார், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் முத்துக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முதன் முதலில் காமராஜருக்கு அவர் உயிரோடு இருக்கும் போதே சிலை வைத்து அதை நேருவை வைத்து திறக்க வைத்தார் கலைஞர்.
    • 2024-ம்ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் நாம் வெற்றி பெற ஒற்றுமையாக இருந்து வெற்றியைத் தேடித் தாருங்கள் என்று ஆர்.எஸ். பாரதி பேசினார்.

    திருச்செந்தூர்:

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திருச்செந்தூரில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் நடைபெற்றது.

    தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், மீன்வளம், மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமரிப்புதுறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். திருச்செந்தூர் நகராட்சி தலைவர் சிவ ஆனந்தி, உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங், ஒன்றிய செயலாளர்கள் இளங்கோ, சதீஷ்குமார், காயல்பட்டினம் நகராட்சி தலைவர் முத்துமுகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் செங்குழி ரமேஷ் வரவேற்று பேசினார்.

    விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தலைமைக் கழக வக்கீல் சூர்யா வெற்றி கொண்டான், வர்த்தக அணி இணை செயலாளர் உமரிசங்கர், ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய செயலாளர் சண்முகையா எம்.எல்.ஏ., மாநில மருத்துவ அணி துணைச் செயலாளர் டாக்டர் வெற்றிவேல், தலைமை செயற்குழு உறுப்பினர் பிரம்மசக்தி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

    நிகழ்ச்சியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

    கலைஞர் தமிழ்நாட்டில் 13 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். 5 முறை முதல்-அமைச்சராக இருந்துள்ளார். சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, அருந்ததியின சமுதாய மக்களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீடு கொடுத்து அந்த சமுதாய மாணவர்கள் கல்வி வேலைவாய்ப்பில் சிறந்து விளங்க செய்தவர். இதேபோல் மீனவ மக்களை மிகவும் பிற்ப்படுத்தப்பட்டோர் பட்டியலில் கொண்டு வந்து அந்த மாணவர்களுக்கும் கல்வி வேலைவாய்ப்பில் சிறக்க வைத்தார் . மீனவர்களுக்கு மத்திய அரசிடம் இருந்து மண்எண்ணையை வாங்கி மானிய விலையில் ரூ.25-க்கு வழங்கினார். 3.5 சதவீத இட ஒதுக்கீடு கொடுத்து சிறுபான்மையினரை காப்பாற்றியவர் கலைஞர். மாவட்டம் தோறும் மருத்துவக் கல்லூரி தொடங்கினார்.

    உள்ளாட்சியில் பெண்களுக்கு 33 இட ஒதுக்கீடு செய்தார். ஜனாதிபதி, பிரதமர்களை உருவாக்க காரணமாக இருந்தார். அவர் வழியில் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம், விபத்தில் காயம் அடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்த்தால் அவர்களுக்கு ரு. 10ஆயிரம், புதுமை பெண்கள் திட்ட மூலம் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூபாய் ஆயிரம், முதியோர் பென்ஷனை ரூ.1200 ஆக உயர்த்தியுள்ளார். மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகையை ரூ. 1500 ஆக உயர்த்தியுள்ளார். மேலும் அண்ணா பிறந்தநாளில் குடும்பத் தலைவிக்கு மாதம் ஆயிரம் வழங்க உள்ளார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் ஆர்.எஸ். பாரதி பேசியதாவது:-

    அமைச்சர் அனிதாராதாகி ருஷ்ணனை பழிவாங்க நினைத்தால் அது நடக்காது. அவரை அமலாக்கத்துறை ஒன்றும் செய்ய முடியாது. அவர் பட்டொளி வீசி பறப்பார். கனிமொழியை போன்ற எம்.பி. நாட்டுக்கு தேவை. மக்களுக்கு புரிகின்ற வகையில் பேசு என்றார் அண்ணா. அந்த வகையில் மக்களிடம் எளிதாக பேசி மக்களுக்கு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருபவர்கள் கனிமொழி எம்.பி. அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்க துறை ஒன்றுமே செய்ய முடியாது. அமலாக்கத்துறையே 2026-ல் காணாமல் போய்விடும். அரசியல் அனுபவம் இல்லாத ஆட்டுக்குட்டி அண்ணாமலை. நாகர்கோவிலில் அவர் கருணாநிதியை பற்றி தரகுறைவாக பேசியுள்ளார். அங்கு அவர் கருணாநிதி- காமராஜரை இழிவுபடுத்தி விட்டார் என்று பேசியிருக்கிறார். காங்கிரசை விட தி.மு.க. தான் காமராஜருக்கு அதிகம் செய்துள்ளது என்பது அவருக்கு தெரியாது. முதன் முதலில் காமராஜருக்கு அவர் உயிரோடு இருக்கும் போதே சிலை வைத்து அதை நேருவை வைத்து திறக்க வைத்தார். கள்ளம் கபடம் இல்லாத நல்ல தலைவர் காமராஜர். காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தவர் கலைஞர். இப்படி காமராஜருக்காக காங்கிரசை விட அதிகம் செய்தது தி.மு.க. தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். 2024-ம்ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் நாம் வெற்றி பெற ஒற்றுமையாக இருந்து வெற்றியைத் தேடித் தாருங்கள். ஒரு வளமான திட்டம் மீண்டும் தருவதற்கு 2024 பாராளுமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பு தாருங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து அவர் காணாமல் போன மீனவர் குடும்பத்திற்கு ரூ. 1 லட்சம் மற்றும் பெண்களுக்கு தையல் மிஷின் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் தி.மு.க. மாவட்ட அவைத் தலைவர் அருணாச்சலம், இளைஞர் அணி மாவட்ட அமைப்பாளர் ராமஜெயம், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பார்த்திபன், பொதுக்குழு உறுப்பினர் சாகுல் ஹமீது, நகராட்சி கவுன்சிலர்கள் சுதாகர், ரேவதி கோமதிநாயகம், ஆனந்த ராமச்சந்திரன் உளபட பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் வாள் சுடலை நன்றி கூறினார்.

    ×