search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓட்டப்பிடாரத்தில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்  பங்கேற்பு
    X

    கூட்டத்தில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசிய காட்சி.

    ஓட்டப்பிடாரத்தில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்பு

    • ஓட்டப்பிடாரத்தில் வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் சிவன் கோவில் முன்பு நடந்தது.
    • மக்களை தேடி மருத்துவம் மூலம் கிராமங்களில் வீடு தேடி மருத்துவம் பார்க்கும் திட்டத்தால் மாதந்தோறும் பல லட்சம் மக்கள் பயன் அடைந்து வருகின்றனர் என்று அமைச்சர் பேசினார்.

    ஓட்டப்பிடாரம்:

    ஓட்டப்பிடாரத்தில் வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் சிவன் கோவில் முன்பு நடந்தது.

    வடக்கு ஒன்றிய செயலாளர் இளையராஜா தலைமை தாங்கினார். மாநில வர்த்தக அணி இணை செயலாளர் உமரிசங்கர், ஓட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வைத்தனர். வடக்கு ஒன்றிய அவைத் தலைவர் சுப்பிரமணியன் வரவேற்று பேசினார்.

    அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

    கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரித்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-

    தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ. 4 ஆயிரம் கொடுத்து சொன்ன வாக்குறுதியை நிறைவேற்றினார்.

    தாய்மார்கள் மீது அக்கறை கொண்ட முதல்- அமைச்சராக பொறுப்பேற்றவுடன் தாய்மார்களுக்கு நகர பஸ்களில் இலவசமாக பயணம் செய்யலாம் என்று சட்டத்தை நிறைவேற்றி தந்தார்.

    இதன் மூலம் மாதந்தோறும் பெண்களுக்கு ரூ. 1,500 சேமிப்பை ஏற்படுத்தி தந்துள்ளார். கூட்டுறவு சங்கங்களில் விவசாய கடன், மகளிர் சுயஉதவி கடன் மற்றும் நகை கடனை தள்ளுபடி செய்து சொன்ன வாக்கை நிறைவேற்றி உள்ளார்.

    மக்களை தேடி மருத்துவம்

    மக்களை தேடி மருத்துவம் மூலம் கிராமங்களில் வீடு தேடி மருத்துவம் பார்க்கும் திட்டத்தால் மாதந்தோறும் பல லட்சம் மக்கள் பயன் அடைந்து வருகின்றனர். இன்னுயிர் காப்போம், நம்மை காப்போம் திட்ட மூலம் சாலைகளில் விபத்தில் பாதிக்கப்படும் நபர்களை அந்த வழியாக செல்பவர்கள் உடனடியாக அருகிலுள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கும் பட்சத்தில் 48 மணி நேரம் சிகிச்சைக்கு அனைத்து செலவையும் அரசே ஏற்கும். அப்போது ஆஸ்பத்திரியில் சேர்க்கும் நபருக்கு ரூ. 5 ஆயிரம் ஊக்கத்தொகையும் அரசு வழங்கும்.

    கிராமப்புற மாணவர்களை பாதிப்பதாக நீட் தேர்வு இருந்து வருகிறது. இதனால் கிராமப்புற மாணவர்கள் நலம் கருதி மருத்துவ படிப்பை தொடர மருத்துவ ஒதுக்கீட்டில் சிறப்பு ஒதுக்கீடு திட்டத்தை தந்தவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், ஆதிதிராவிட நலக்குழு அமைப்பாளர் ராஜேந்திரன், செயற்குழு உறுப்பினர் செந்தூர்மணி, மாவட்ட வக்கீல் அணி துணை அமைப்பாளர் பூங்குமார், மாவட்ட வர்த்தக அணி துணை அமைப்பாளர் முத்துக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×