என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தமிழகத்தில் 7-வது முறையாக தி.மு.க. ஆட்சி அமைக்கும்- பொதுக்குழு கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் சூளுரை
- கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை என்று ஆணவத்தில் சொல்பவன் நான் அல்ல.
- தி.மு.க. இதுவரை அடைந்த வெற்றிகளுக்கெல்லாம் உடன் பிறப்புகள் தான் காரணம்.
மதுரையில் நடந்த தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
தடம் மாறாத கொள்கை கொண்ட கூட்டம் நாம். அதனால் எந்த கோமாளி கூட்டமும் நம்மை வெல்ல முடியவில்லை. இனியும் வெல்ல முடியாது. அடுத்தாண்டு இந்த நேரத்தில் தமிழகத்தில் 7-வது முறையாக தி.மு.க. ஆட்சி அமைத்தது என்பது தலைப்பு செய்தியாக இருக்க வேண்டும்.
கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை என்று ஆணவத்தில் சொல்பவன் நான் அல்ல. ஆணவமோ, மமதையோ எனக்கு எப்போதும் வராது. பணிவு தான் தலைமைத்துவத்தின் அடையாளம்.
தி.மு.க. இதுவரை அடைந்த வெற்றிகளுக்கெல்லாம் உடன் பிறப்புகள் தான் காரணம். சூரியன் நிரந்தரமானது. அதேபோல் தி.மு.க.வும் நிரந்தரமானது. தி.மு.க. எப்படி நிரந்தரமானதோ, அதேபோல் தி.மு.க. ஆட்சியும் நிரந்தரமானது என்ற நிலையை உருவாக்க வேண்டும். கடந்த அ.தி.மு.க.- பா.ஜ.க. ஆட்சியில் அதலபாதாளத்திற்கு சென்றுள்ள தமிழகத்தை நாங்கள் மீட்டிருக்கிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.






