என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "general body meeting"

    • கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை என்று ஆணவத்தில் சொல்பவன் நான் அல்ல.
    • தி.மு.க. இதுவரை அடைந்த வெற்றிகளுக்கெல்லாம் உடன் பிறப்புகள் தான் காரணம்.

    மதுரையில் நடந்த தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    தடம் மாறாத கொள்கை கொண்ட கூட்டம் நாம். அதனால் எந்த கோமாளி கூட்டமும் நம்மை வெல்ல முடியவில்லை. இனியும் வெல்ல முடியாது. அடுத்தாண்டு இந்த நேரத்தில் தமிழகத்தில் 7-வது முறையாக தி.மு.க. ஆட்சி அமைத்தது என்பது தலைப்பு செய்தியாக இருக்க வேண்டும்.

    கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை என்று ஆணவத்தில் சொல்பவன் நான் அல்ல. ஆணவமோ, மமதையோ எனக்கு எப்போதும் வராது. பணிவு தான் தலைமைத்துவத்தின் அடையாளம்.

    தி.மு.க. இதுவரை அடைந்த வெற்றிகளுக்கெல்லாம் உடன் பிறப்புகள் தான் காரணம். சூரியன் நிரந்தரமானது. அதேபோல் தி.மு.க.வும் நிரந்தரமானது. தி.மு.க. எப்படி நிரந்தரமானதோ, அதேபோல் தி.மு.க. ஆட்சியும் நிரந்தரமானது என்ற நிலையை உருவாக்க வேண்டும். கடந்த அ.தி.மு.க.- பா.ஜ.க. ஆட்சியில் அதலபாதாளத்திற்கு சென்றுள்ள தமிழகத்தை நாங்கள் மீட்டிருக்கிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரோடு-ஷோக்கள் மூலம் மக்களை நேரடியாக சந்தித்து வருகிறார்.
    • புது ஜெயில் ரோடு, மதுரா கோட்ஸ் வழியாக நடந்தும், வாகனத்தில் சென்றும் பொதுமக்களை சந்திக்கிறார்.

    2026 சட்டமன்ற தேர்தலில் ஆளுங்கட்சியான தி.மு.க. மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைக்கும் வகையிலான களப்பணிகளில் முன்வரிசையில் நின்று தீவிரம் காட்டி வருகிறது.

    தமிழக அரசின் திட்டங்கள் பொதுமக்களை சென்றடையும் நோக்கில் கள ஆய்வு செய்யும் வகையில் மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரோடு-ஷோக்கள் மூலம் மக்களை நேரடியாக சந்தித்து வருகிறார்.

    அந்த வகையில் நாளை (31-ந்தேதி) மதுரையில் பிரமாண்ட ரோடு-ஷோ நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை நடந்திராத வண்ணம் மாநகர பகுதியில் சுமார் 25 கி.மீ. தூரத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரோடு-ஷோ நடத்துகிறார். இதில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட 1 லட்சம் பேரை பங்கேற்க செய்வதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் பி.மூர்த்தி செய்துள்ளார்.

    அதைத்தொடர்ந்து நாளை மறுநாள் (ஜூன் 1-ந்தேதி) மதுரை உத்தங்குடி பகுதியில் நடக்கும் தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்புகளை வெளிட உள்ளார்.

    இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நாளை காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரை வருகிறார்.

    விமான நிலையத்தில் மதுரை வடக்கு, மதுரை மாநகர் மற்றும் மதுரை தெற்கு ஆகிய ஒருங்கிணைந்த மாவட்ட தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து அவர் தனியார் ஓட்டலுக்கு சென்று ஓய்வெடுக்கிறார்.

    பின்னர் மாலையில் 25 கி.மீ. தூரத்திற்கு நடைபெறும் பிரமாண்ட ரோடு ஷோவில் அவர் பங்கேற்கிறார். முதலாவதாக அவனியாபுரத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு ரோடு-ஷோவை தொடங்குகிறார்.

    அங்கிருந்து ஜீவா நகர், ஜெய்ஹிந்த்புரம் வழியாக பழங்காநத்தம் பகுதியை சென்றடைகிறார். பின்னர் அங்கிருந்து பை-பாஸ் ரோடு வழியாக காளவாசல், குரு தியேட்டர் பகுதிக்கு வந்து அங்கிருந்து ஆரப்பாளையம் கிராசில் அமைந்துள்ள திருமலை நாயக்கர் சிலை வரை ரோடு-ஷோ நிகழ்ச்சி நடக்கிறது.

    இதைத் தொடர்ந்து புது ஜெயில் ரோடு, மதுரா கோட்ஸ் வழியாக நடந்தும், வாகனத்தில் சென்றும் பொதுமக்களை சந்திக்கிறார்.

    அப்போது புது ஜெயில் ரோடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தி.மு.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மதுரை மாநகராட்சியின் முதல் மேயருமான முத்துப்பிள்ளை சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

    இந்த பிரமாண்ட ரோடு-ஷோ நிகழ்ச்சியில் மதுரை வடக்கு, மதுரை மாநகர், மற்றும் தெற்கு மாவட்ட தி.மு.க.வைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொள்கிறார்கள்.

    குறிப்பாக இதில் அதிக அளவில் பெண்களை பங்கேற்க செய்யும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

    சட்டமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும் முதலமைச்சரின் இந்த ரோடு-ஷோ திருப்பரங்குன்றம், மதுரை மத்தி, மதுரை மேற்கு ஆகிய 3 தொகுதிகளை இணைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    • பொதுசெயலாளர் பதவிக்கு அமைச்சர் துரைமுருகன் ஒருமனதாக தேர்வு செய்யப்படுகிறார்.
    • தி.மு.க. துணை பொதுச் செயலாளர் பதவிக்கு புதிய நிர்வாகி இன்று தேர்வாகிறார்.

    சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் இன்று காலை 10 மணிக்கு திமுக பொதுக்குழு கூட்டம் தொடங்குகிறது. முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த கூட்டம் மதியம் 1.30 மணி வரை நடைபெற உள்ளது. தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் 2,600 பேர், கட்சியின் பல்வேறு அணிகளை சேர்ந்த நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள் என மொத்தம் 4 ஆயிரம் பேர் இதில் பங்கேற்கின்றனர். இதற்காக பள்ளி வளாகத்தில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் திமுக தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகிய பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதில் திமுக தலைவர் பதவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொது செயலாளர் பதவிக்கு அமைச்சர் துரைமுருகன், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு எம்.பி. ஆகியோர் மீண்டும் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

    அவர்களை எதிர்த்து வேறு யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை. எனவே இன்றைய பொதுக்குழு கூட்டத்தில் 3 பேரும் ஒருமனதாக இந்த பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதையடுத்து திமுக தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது முறையாக போட்டியின்றி தேர்வாகிறார். தி.மு.க. துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சுப்புலட்சுமி ஜெகதீசன் விலகி உள்ள நிலையில் அந்த இடத்துக்கு புதிய நிர்வாகி இன்றைய பொதுக்குழு கூட்டத்தில் நியமிக்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அதிமுக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.
    • உயர்நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வில் சண்முகன் மனு விசாரணைக்கு வர வாய்ப்பு.

    அதிமுக பொதுக்குழுவை எதிர்த்த வழக்கில் 23 தீர்மானங்களை மட்டுமே நிறைவேற்ற வேண்டும் என்று இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்ட நிலையில் அது மீறப்பட்டதாக சண்முகம் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    அதிமுக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கான மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அந்த மனுவில், உயர்நீதிமன்றம் அனுமதித்த தீர்மானங்களை நிராகரித்து அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்றும் ஜூலை 11-ல் பொதுக்குழு கூடும் என அறிவித்தும் நீதிமன்ற அவமதிப்பு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும், 23-ம் தேதி நடந்த பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை வேண்டும் என கையெழுத்திட்டு ஒப்படைத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

    இந்நிலையில், அதிமுக பொதுக்குழு, இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ்க்கு எதிரான மனு விரைவில் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உயர்நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வில் சண்முகன் மனு விசாரணைக்கு வர வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

    • ஜூலை 11-ம் தேதி மீண்டும் நடைபெறும் என அவைத்தலைவர் அறிவித்தார்.
    • அரங்கம் அமைக்கும் பணி தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது.

    ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக ஆதிமுக சார்பில் கடந்த 23-ம் தேதி அன்று பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்காக, வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரி மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.

    ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர்கள் ஒருவருக்கொருவரை எதிர்த்து கோஷங்கள் எழுப்பி முழக்கமிட்டனர். இதற்கு மத்தியில் தொடங்கிய பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டது.

    இதையடுத்து, பொதுக்குழு கூட்டம் வரும் ஜூலை 11-ம் தேதி மீண்டும் நடைபெறும் என அவைத்தலைவர் அறிவித்தார்.

    இந்நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டம் ஈசிஆரில் உள்ள விஜிபி அரங்கில் நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதற்காக, அரங்கம் அமைக்கும் பணி தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அவைத்தலைவராக தமிழ் மகன் உசேனை பொதுக்குழு தேர்வு செய்தது செல்லும்.
    • உரிமை அனுமதி பெறாமலேயே ஓபிஎஸ் காரில் வந்து வைத்திலிங்கம் பொதுக்குழுவில் பங்கேற்றார்.

    ஒற்றை தலைமை விவ காரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி யுடன் ஆலோசனை நடத்தி விட்டு வெளியே வந்த சி.வி. சண்முகம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அபோது அவர் கூறியதாவது:-

    ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான தஞ்சை மாவட்ட செயலாளர் வைத்திலிங்கம் சில கருத்துக்களை கூறி இருக்கிறார். முதலாவதாக அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் முறையாக கூட்டப்படவில்லை. அதற்கு சட்டப்பூர்வமான அங்கீகாரம் இல்லை என்று கூறியிருக்கிறார்.

    2-வதாக இந்த பொதுக்குழு கூட்டம் பொதுக்குழு உறுப்பினர்களை வைத்து நடத்தப்படவில்லை. கூலி யாட்களை வைத்து அடியாட்களை வைத்து நடத்தப்பட்டதாக சொல்லி இருக்கிறார். 3-வதாக கழக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் முறைப்படி தேர்வு செய்யப்படவில்லை என்று கூறி இருக்கிறார்.

    4-வதாக இந்த பொதுக்குழுவில் கழக அமைப்பு தேர்தலை அங்கீகரிக்காததால் தேர்வு செய்யப்பட்டவர்களின் பதவி செல்லாது. எனவே பொதுக்குழு உறுப்பினர்களின் பதவி செல்லாது என்று கூறி இருக்கிறார்.

    கடைசியாக மீண்டும் பொதுக்குழுவை கூட்டுவதற்கு பொதுக்குழுவுக்கு அதிகாரம் இல்லை என்று சொல்லி இருக்கிறார். இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

    பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் யாருக்கு உள்ளது என்று விதி 19-ல் சொல்லப்பட்டு உள்ளது. பொதுக்குழுவை பொதுச்செயலாளர், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் ஆண்டுக்கு ஒரு முறை கூட்ட வேண்டும். பிறகு தேவைக்கு ஏற்ப கூட்டலாம்.

    மேலும் பொதுக்குழு உறுப்பினர்களில் 5-ல் ஒருபங்கு உறுப்பினர்கள் கையெழுத்து போட்டாலே பொதுக்குழு கூட்டத்தை கூட்டலாம். இதற்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் தேவையில்லை. 2,665 பொதுக்குழு உறுப் பினர்களில் 5-ல் ஒரு பங்கு உறுப்பினர்கள் ஆதரவு இருந்தாலே பொதுக் குழுவை கூட்ட முடியும்.

    மேலும் அவைத்தலை வராக தமிழ்மகன் உசேனை தேர்வு செய்வதில் விதி மீறல் இருப்பதாக கூறி உள்ளார். ஓ.பன்னீர் செல்வம் முன்மொழிந்து, எடப்பாடி பழனிசாமி வழி மொழிந்துதான் அவைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எனவே இதில் எந்த விதிமீறலும் இல்லை.

    கழக அமைப்பு தேர்தலை நடத்தி தேர்தல் ஆணையத் துக்கு முடிவு தான் தெரிவிக்க வேண்டும். அதற்கு அங்கீகாரம் பெற தேவையில்லை. மேலும் அமைப்பு தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் களை பொதுக்குழு அங்கீகரிக்க வேண்டும் என்று விதி இல்லை. அவைத்தலைவர் பதவியை மட்டுமே பொதுக்குழு அங்கீகரிக்க வேண்டும்.

    அ.தி.மு.க. பொதுக்குழு வில் 23 தீர்மானங்களை தவிர புதிய தீர்மானங் களை நிறைவேற்றக் கூடாது என்று தான் கோர்ட்டு கூறியுள்ளது. நாங்கள் 23 தீர்மானங்களை நிராகரித்தது கோர்ட்டு அவமதிப்பு என்று அவர்கள் கூறி வழக்கு தொடர்ந்தால் அதை சந்திக்க தயார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதற்கு எதிராக ஓபிஎஸ் மனுதாக்கல் செய்துள்ளார்.
    • ஈபிஎஸ் தரப்பு நடத்தவுள்ள பொதுக்குழுவுக்கு அனுமதி அளிக்க கூடாது என மனு.

    சென்னை:

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ.பன்னீர் செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து அ.தி.மு.க.வை வழி நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகள் கடந்த வாரம் ஒற்றை தலைமை கோஷத்தை திடீரென முன் வைத்தனர்.

    எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க. தலைமை பதவிக்கு கொண்டு வரும் நோக்கத்தில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் அணி திரண்டனர். சென்னையில் நேற்று நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமாக வெடித்தது.

    பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட நிலையில் ஓ.பன்னீர் செல்வத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. அவர் அனுமதி அளித்திருந்த 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டன. இதனால் பாதியிலேயே ஓ.பன்னீர் செல்வம் வெளியேறினார்.

    இந்த நிலையில் ஓ.பன்னீர் செல்வம் தனது ஒருங்கிணைப்பாளர் பதவியை காப்பாற்றிக் கொள்ள களம் இறங்கி உள்ளார். ஜனாதிபதி தேர்தல் தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக டெல்லி சென்றிருந்த அவர் தலைமை தேர்தல் ஆணையத்தில் இன்று திடீரென மனு அளித்தார்.

    ஓ.பன்னீர்செல்வம் ஆதரவு எம்.எல்.ஏ.வான வக்கீல் மனோஜ்பாண்டியன் தலைமையிலான வக்கீல்கள் குழுவினர் இந்த மனுவை அளித்துள்ளனர். அதில் இடம் பெற்றுள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல்கள் வருமாறு:-

    நான் ஒருங்கிணைப்பாளராக இருந்து அ.தி.மு.க.வை வழி நடத்தி வருகிறேன். இந்த நிலையில் அடுத்த மாதம் (ஜூலை) 11-ந்தேதி அ.தி.மு.க. பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தை நடத்தப் போவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. விதிகளில் திருத்தம் செய்து பொதுச்செயலாளர் பதவியை கொண்டு வரும் நோக்கத்தில் இந்த பொதுக்குழு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    எனவே 11-ந்தேதி நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்துக்கு அனுமதி அளிக்கக்கூடாது. அதற்கு தடை விதிக்க வேண்டும்.

    பொதுக்குழு கூட்டத்தை கூட்டுவதற்கான அறிவிப்பை கட்சியின் அவைத் தலைவர் வெளியிட்டு உள்ளார். இதனை செல்லாது என்றும் அறிவிக்க வேண்டும்.

    மேலும் அ.தி.மு.க.வின் சட்ட விதிகளில் எந்தவித மாற்றத்தையும் செய்ய தலைமை தேர்தல் ஆணையம் அனுமதி வழங்க கூடாது. அ.தி.மு.க. சட்ட விதிகளில் ஒருங்கிணைப்பாளர் அனுமதியின்றி திருத்தங்கள் செய்வது ஏற்கத்தக்கதல்ல என்பதையும் தேர்தல் ஆணையம் தெளிவுப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு ஓ.பன்னீர் செல்வம் தனது மனுவில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

    தனக்கு எதிராக அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் நடந்து முடிந்த மறுநாளே ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்று தேர்தல் ஆணையத்தில் அவசரம் அவசரமாக மனுதாக்கல் செய்திருப்பது அ.தி.மு.க. வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அ.தி.மு.க. தலைமை பதவியான ஒருங்கிணைப்பாளர் பதவியை எந்த சூழ்நிலையிலும் விட்டுக்கொடுத்து விடக்கூடாது என்பதில் ஓ.பன்னீர்செல்வம் உறுதியாக இருப்பது தெரியவந்துள்ளது. தனது வக்கீல்கள் மூலமாக மனுவை அளித்துள்ள ஓ.பன்னீர் செல்வம் தலைமை தேர்தல் ஆணையத்துக்கு நேரில் சென்றும் முறையிட முடிவு செய்துள்ளார்.

    அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் பதவியில் அமர்வதற்கு காய் நகர்த்தி வரும் நிலையில் அதற்கு தடை போடும் விதமாக ஓ.பன்னீர்செல்வம் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளார்.

    நேற்று நடந்த பொதுக்குழு கூட்டத்தில் நடைபெற்ற சம்பவங்களை சுட்டிக்காட்டி சென்னை ஐகோர்ட்டிலும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் விரைவில் மனு தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தூக்கியுள்ள இந்த 2 கவசங்களும் கட்சிக்குள் கூடுதல் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் ஜூலை 11-ம் தேதி மீண்டும் நடைபெறும்.
    • அதிமுக பொதுக்குழு கூட்ட மேடையிலிருந்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வெளியேறினர்.

    அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்று வந்த நிலையில், அனைத்து தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டது. பொதுக்குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவராக தீர்மானம் நிராகரிப்பை அறிவித்தனர்.

    பின்னர், பேசிய அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் ஜூலை 11-ம் தேதி மீண்டும் நடைபெறும் என அறிவித்தார்.

    இதையடுத்து, அதிமுக பொதுக்குழு கூட்ட மேடையிலிருந்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வெளியேறினர். ஈபிஎஸ் ஆதரவாளர்கள் ஓபிஎஸ்க்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அப்போது ஓபிஎஸ் மீது தண்ணீர் பாட்டில் வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களின் பொதுக்குழு கூட்டம் நாளை டெல்லியில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா ஆகியோர் உரையாற்றுகின்றனர். #CongressParliamentaryParty #ParliamentaryPartymeet
    புதுடெல்லி:

    இந்திய பாராளுமன்றத்தின் 16-வது மக்களவையின் ஆயுட்காலம் வரும் மே மாதத்துடன் நிறைவடைகிறது. 17-வது மக்களவைக்கான உறுப்பினர்களை தேர்வு செய்வதற்காக விரைவில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது.

    16-வது மக்களவையின் இறுதி (இடைக்கால) பட்ஜெட் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்டு, ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் உரையாற்றி வருகின்றனர். இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் (நாளை) 13-ம் தேதியுடன் முடிவடைகிறது.



    மீண்டும் பாராளுமன்ற தேர்தல் முடிந்து முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் 17-வது மக்களவை கூட்டம் வரும் மே அல்லது ஜூன் மாதவாக்கில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களின் பொதுக்குழு கூட்டம் நாளை டெல்லியில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் தலைவர் சோனியா ஆகியோர் உரையாற்றுகின்றனர்.

    ஒவ்வொரு மக்களவை காலம் முடியும் தருவாயில் எம்.பி.க்களுக்கு வழியனுப்பு விழாபோல் இதுபோன்ற கூட்டங்கள் நடத்தப்படுவது மரபாக உள்ளது குறிப்பிடத்தக்கது. #CongressParliamentaryParty #ParliamentaryPartymeet
    ×