search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இன்று தி.மு.க. பொதுக்குழு கூட்டம்-  கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் 2வது முறையாக தேர்வாகிறார்
    X

    (கோப்பு படம்)

    இன்று தி.மு.க. பொதுக்குழு கூட்டம்- கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் 2வது முறையாக தேர்வாகிறார்

    • பொதுசெயலாளர் பதவிக்கு அமைச்சர் துரைமுருகன் ஒருமனதாக தேர்வு செய்யப்படுகிறார்.
    • தி.மு.க. துணை பொதுச் செயலாளர் பதவிக்கு புதிய நிர்வாகி இன்று தேர்வாகிறார்.

    சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் இன்று காலை 10 மணிக்கு திமுக பொதுக்குழு கூட்டம் தொடங்குகிறது. முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த கூட்டம் மதியம் 1.30 மணி வரை நடைபெற உள்ளது. தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள் 2,600 பேர், கட்சியின் பல்வேறு அணிகளை சேர்ந்த நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள் என மொத்தம் 4 ஆயிரம் பேர் இதில் பங்கேற்கின்றனர். இதற்காக பள்ளி வளாகத்தில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில் திமுக தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகிய பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இதில் திமுக தலைவர் பதவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொது செயலாளர் பதவிக்கு அமைச்சர் துரைமுருகன், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு எம்.பி. ஆகியோர் மீண்டும் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

    அவர்களை எதிர்த்து வேறு யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை. எனவே இன்றைய பொதுக்குழு கூட்டத்தில் 3 பேரும் ஒருமனதாக இந்த பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதையடுத்து திமுக தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது முறையாக போட்டியின்றி தேர்வாகிறார். தி.மு.க. துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சுப்புலட்சுமி ஜெகதீசன் விலகி உள்ள நிலையில் அந்த இடத்துக்கு புதிய நிர்வாகி இன்றைய பொதுக்குழு கூட்டத்தில் நியமிக்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×