என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "cv shanmugam"
- புகார் அளித்தும் இதுவரை தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை.
- திமுக மாவட்ட நிர்வாகத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு தொகுதியில் பல்வேறு அராஜகங்களை செய்து வருகிறது.
டெல்லியில் அதிமுக எம்.பி சிவி சண்முகம் கூறியதாவது:
ஈரோடு தொகுதி இடைத் தேர்தல் தொடர்பான முறைகேடுகள் குறித்து கடந்த 3ம் தேதி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்திருந்தோம். ஈரோடு கிழக்கு தொகுதியில் மொத்தம் 2,26,876 வாக்களர்கள் உள்ளதாக பட்டியல் கொடுக்கப்பட்டிருந்தது. இறந்தவர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது. புகார் அளித்தும் இதுவரை தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை.
வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறது ஆனால் அந்த வாக்காளர்கள் அங்கு குடியிருக்கவில்லை. வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறது ஆனால் சரிபார்க்கும் போது அவர் இறந்திருக்கிறார், பெயர் நீக்கப்படவில்லை. வாக்காளர் பட்டியலில் ஒரு இடத்தில் இருக்கும் வாக்காளர் மற்றொரு இடத்திலும் இருக்கிறார். இப்படி குளறுபடி ஏற்பட்டிருக்கிறது. ஒரு குடும்பத்தில் 5 வாக்குகள் இருந்தால் அந்த 5 வாக்குகளும் ஒரே விலாசத்தில் இல்லை. இந்த வாக்காளர் பட்டியல் முழுமையாக திருத்தப்படவில்லை. ஒரு மோசடியான வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் ஒவ்வொரு பூத் வாரியாக முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும். அந்த வாக்காளர் பட்டியலை நீக்கி முழுமையான தகுதியுள்ள வாக்காளர் பட்டியலை வெளியிடவேண்டும் என்று நாங்கள் குறிப்பிட்டிருக்கிறோம்.
திமுக மாவட்ட நிர்வாகத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு தொகுதியில் பல்வேறு அராஜகங்களை செய்து வருகிறது. காவல் துறை திமுகவின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறது. தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முறையாக செயல்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
- சட்டமன்ற உறுப்பினர் இறந்த 15 நாட்களில் அவசரம் அவசரமாக இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
- முறைகேடுகளை சுட்டிக்காட்டி தேர்தல் அதிகாரிகளிடம் புகார் மனு அளித்துள்ளதாக சிவி சண்முகம் தகவல்
புதுடெல்லி:
எடப்பாடி பழனிசாமியின் ஆதரவு எம்.பி.யான சி.வி.சண்முகம் டெல்லியில் தலைமை தேர்தல் அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்துள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-
இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி வாக்காளர் பட்டியலில் மிகப்பெரிய மோசடி நடைபெற்றுள்ளது. வாக்காளர் பட்டியலில் உள்ள மொத்த வாக்காளர்களில், நான்கில் ஒரு பகுதி வாக்காளர்கள் அந்த தொகுதியில் இல்லை.
தொகுதியில் உள்ள 238 பூத்களுக்கும் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியலை சரிபார்த்ததில் மிகப்பெரிய மோசடி நடைபெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முறைகேடுகளை சுட்டிக்காட்டி தேர்தல் அதிகாரிகளிடம் புகார் மனு அளித்துள்ளோம். குறிப்பாக 6 பூத்களில் உள்ள முறைகேடுகளை தொகுத்து கொடுத்துள்ளோம்.
சட்டமன்ற உறுப்பினர் மறைந்த பின் 6 மாதத்தில் இடைத்தேர்தல் நடத்தலாம் என கால அவகாசம் இருந்தும் அவர் இறந்த 15 நாட்களில் அவசரம் அவசரமாக இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலை முறையாக பார்க்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
- கே.பி.முனுசாமி மறுத்தாலும் பத்து நாட்களுக்கும் மேலாக ஒதுங்கி இருக்கிறார் என்பது மட்டும் உண்மை.
- சீனியர் என்பதால் கொஞ்சம் முரண்டு பிடித்தால் தேடி வருவார்கள் என்று முனுசாமி நினைத்திருக்கிறார்.
அரசியல் களத்தில் கடந்த சில நாட்களாக புகைந்து கொண்டிருப்பது கே.பி.முனுசாமி அந்தப் பக்கத்தில் இருந்து இந்தப் பக்கம் (ஓ.பி.எஸ்) பக்கம் வரப்போகிறார் என்பதுதான்.
உண்மையில்லை என்று கே.பி.முனுசாமி மறுத்தாலும் பத்து நாட்களுக்கும் மேலாக ஒதுங்கி இருக்கிறார் என்பது மட்டும் உண்மை.
இப்படி திடீரென்று புகைவதற்கு காரணம் சி.வி.சண்முகத்துடன் ஏற்பட்ட புகைச்சல் தானாம். பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வத்தை நீக்குவதற்கான தீர்மானத்தை சி.வி.சண்முகம் வாசிக்க தயாராக இருந்த நிலையில் கே.பி.முனுசாமி வாசித்து விட்டார். அன்று தொடங்கிய பிரச்சினைதான். இதுவரை அவர்கள் ராசியாகவில்லை.
அதன்பிறகு அடுத்தடுத்து நடந்த சில நிகழ்ச்சிகளிலும் எடப்பாடி பழனிசாமி சி.வி.சண்முகத்துக்கு முக்கியத்துவம் கொடுத்தது முனுசாமியை முணுமுணுக்க வைத்திருக்கிறது.
சீனியர் என்பதால் கொஞ்சம் முரண்டு பிடித்தால் தேடி வருவார்கள் என்று முனுசாமி நினைத்திருக்கிறார். ஆனால் 'கொஞ்சம் விட்டுப்பிடிப்போம்' என்று எடப்பாடி பழனிசாமியும் இருந்து விட்டார்.
சி.வி.சண்முகம் தாராளமாக மடியை அவிழ்க்கிறார். ஆனால் கே.பி.முனுசாமி துட்டு அவிழ்க்க யோசிக்கிறார். அப்போ இ.பி.எஸ். இப்படித்தானே இருப்பார் என்று கட்சிக்காரர்கள் வெளிப்படையாகவே கமெண்ட் அடிக்கிறார்கள்.
- விழுப்புரம் மாவட்டம், வானூர் சட்டமன்ற தொகுதி திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடந்தது.
- ஆரம்ப காலத்தில் இந்தியாவில் இருந்தவர்கள் எல்லாம் இந்துக்கள்தான். அப்படி இருக்கும்போது தவறாக ஆ.ராசா பேசி உள்ளார்.
ஆவேசமாக பேசுவதில் அ.தி.மு.க.வின் சி.வி.சண்முகத்தை அடிச்சிக்க ஆளே இல்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த விசயம்தான்.
விழுப்புரம் மாவட்டம், வானூர் சட்டமன்ற தொகுதி திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் சி.வி.சண்முகம் சிறப்புரையாற்றினார். பேச்சும் சிறப்பாகத்தான் போய் கொண்டிருந்தது. அப்போது ஆ. ராசா இந்துக்களை பற்றி செய்த விமர்சனத்தை ஒருபிடி பிடித்தார்.
ஆரம்ப காலத்தில் இந்தியாவில் இருந்தவர்கள் எல்லாம் இந்துக்கள்தான். அப்படி இருக்கும்போது தவறாக ஆ.ராசா பேசி உள்ளார். அப்படியானால் இந்துகள் ஓட்டு மட்டும் இனிக்கிறதா? என்று இவர் ஒரு கேள்வி எழுப்ப... மேடைக்கு பின்புறத்தில் இருந்து சில தி.மு.க.வினர் பதிலுக்கு ஆவேச குரல் எழுப்ப, மேடையில் பேசிக்கொண்டிருந்த சி.வி. சண்முகமும் ஆவேசத்தின் உச்சக்கட்டத்திற்கு சென்று விட்டார்.
மிரட்டல் விடுக்கும் தி.மு.க.வுக்கு அஞ்சுபவன் நான் அல்ல. ஆம்பளையா இருந்தா நேருக்கு நேர் வாடா பார்ப்போம் என்று சவாலை தெறிக்க விட, மேடையின் பின்புறத்தில் நின்று பேசியவர்கள் ஓடி விட்டனர். தொடர்ந்து பேசிய சண்முகம் என்னை மிரட்டலாம், உருட்டலாம்... ஆனால் அசைக்கலாம் என்று மட்டும் நினைக்க வேண்டாம்.
காவல் துறையினரும் நேர்மை, நியாயத்துடன் இருக்க வேண்டும். ஆட்சி மாறும்போது தெரியும் என்று பேச்சு திசை மாறி உச்சத்தில் செல்லவே பொதுக்கூட்டமே பரபரப்பானது.
- அ.தி.மு.க. அலுவலக மோதல் வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது.
- முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஐகோர்ட்டில் இன்று கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை:
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கடந்த ஜூலை 11-ம் தேதி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டனர். ஒரு தரப்பினர் மீது மற்றொரு தரப்பினர் உருட்டுக்கட்டை, கற்களால் தாக்கினர். இந்த மோதலில் 2 போலீசார் உள்பட 47 பேர் காயமடைந்தனர். காவல்துறையைச் சேர்ந்த 4 வாகனம் உள்பட 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தன. அலுவலகத்தில் இருந்த கோப்புகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை ஓ.பனனீர்செல்வம் ஆதரவாளர்கள் திருடிச்சென்றதாக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அ.தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்ற மோதல் தொடர்பான 4- வழக்குகளையும் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு அண்மையில் தெரிவித்தது.
இந்நிலையில், அ.தி.மு.க. அலுவலகம் சூறை தொடர்பாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னை ஐகோர்ட்டில் கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், அ.தி.மு.க. அலுவலக மோதல் வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றிய பிறகும் இதுவரை விசாரணை தொடங்காதது அதிர்ச்சி தருகிறது. அலுவலகத்தில் இருந்து திருடப்பட்ட பொருட்களை மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை. அ.தி.மு.க. அலுவலகம் சூறை தொடர்பாக உரிய விசாரணை நடத்த சிபிசிஐடிக்கு தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும். டிஜிபி உத்தரவிட தவறினால் வழக்குகளை வேறு தன்னிச்சையான விசாரணை அமைப்பு விசாரிக்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
- அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
- பீரோவை உடைத்து, கட்சியின் தலைமை அலுவலக அசல் பத்திரம் கொள்ளையடிக்கப்பட்டதாக சி.வி.சண்முகம் புகார்
சென்னை:
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கடந்த 11ம் தேதி எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது. வன்முறையின்போது அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்டது. கட்சி அலுவலகத்தை உடைத்து உள்ளே புகுந்த ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரை போலீசார் வெளியேற்றி, அலுவலகத்திற்கு சீல் வைத்தனர். பின்னர், தலைமை அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், அதிமுக தலைமை அலுவலகம் சூறையாடப்பட்டது தொடர்பாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் தனது புகாரில், கட்சி தலைமை அலுவலகத்தின் பீரோவை உடைத்து தலைமை அலுவலக இடத்தின் அசல் பத்திரம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததாக கூறி உள்ளார்.
கோவை, திருச்சி, புதுவை அதிமுக அலுவலக இடத்திற்கான அசல் பத்திரம், 31 ஆயிரம் ரொக்கப்பணம், 2 கம்ப்யூட்டர், வெள்ளி வேல், முத்துராமலிங்கத் தேவர் தங்க கவசம் சம்பந்தப்பட்ட ஆவணங்கள், கட்சிக்கு வாங்கப்பட்ட 37 வாகனங்களின் அசல் பதிவு சான்றிதழ்கள், அதிமுக - பேரறிஞர் அண்ணா அறக்கட்டளை அசல் பத்திரம், அதிமுக பதிவு செய்யப்பட்டதற்கான சான்றிதழ் என பல்வேறு ஆவணங்களை ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் கொள்ளையடித்துச் சென்றுவிட்டதாக சி.வி.சண்முகம் தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
- இருவரும் இல்லாத பட்சத்தில் அவர்களால் நியமிக்கப்பட்டவர்கள் கட்சியை வழி நடத்தலாம்.
- திமுகவில் உதயநிதிக்கு பட்டாபிஷேகம் நடக்கும்போது என்ன நடக்கிறது என நாங்களும் பார்ப்போம்.
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் நடந்தது பற்றி முதல்வர் ஸ்டாலின் விமர்சித்த நிலையில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியதாவது:-
அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர் பதவியும், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியும் தற்போது இல்லை. இரண்டு பதவிகளும் பொதுக்குழுவில் அங்கீகாரம் பெறாததால் அவைகள் காலாவதி ஆகிவிட்டன. இதனால் ஓ.பன்னீர்செல்வம் இனி அ.தி.மு.க. பொருலாளர் மட்டுமே.
எடப்பாடி பழனிசாமி தலைமை நிலைய செயலாளராக மட்டுமே உள்ளார். இருவரும் இல்லாத பட்சத்தில் அவர்களால் நியமிக்கப்பட்டவர்கள் கட்சியை வழி நடத்தலாம் என்று கட்சியின் சட்ட விதி கூறுகிறது.
மேலும், அதிமுகவில் நடப்பதை கண்டு திமுக சந்தோஷப்பட்டுக் கொள்ள வேண்டாம். திமுகவில் உதயநிதிக்கு பட்டாபிஷேகம் நடக்கும்போது என்ன நடக்கிறது என நாங்களும் பார்ப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அவைத்தலைவராக தமிழ் மகன் உசேனை பொதுக்குழு தேர்வு செய்தது செல்லும்.
- உரிமை அனுமதி பெறாமலேயே ஓபிஎஸ் காரில் வந்து வைத்திலிங்கம் பொதுக்குழுவில் பங்கேற்றார்.
ஒற்றை தலைமை விவ காரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி யுடன் ஆலோசனை நடத்தி விட்டு வெளியே வந்த சி.வி. சண்முகம் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அபோது அவர் கூறியதாவது:-
ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரான தஞ்சை மாவட்ட செயலாளர் வைத்திலிங்கம் சில கருத்துக்களை கூறி இருக்கிறார். முதலாவதாக அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் முறையாக கூட்டப்படவில்லை. அதற்கு சட்டப்பூர்வமான அங்கீகாரம் இல்லை என்று கூறியிருக்கிறார்.
2-வதாக இந்த பொதுக்குழு கூட்டம் பொதுக்குழு உறுப்பினர்களை வைத்து நடத்தப்படவில்லை. கூலி யாட்களை வைத்து அடியாட்களை வைத்து நடத்தப்பட்டதாக சொல்லி இருக்கிறார். 3-வதாக கழக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் முறைப்படி தேர்வு செய்யப்படவில்லை என்று கூறி இருக்கிறார்.
4-வதாக இந்த பொதுக்குழுவில் கழக அமைப்பு தேர்தலை அங்கீகரிக்காததால் தேர்வு செய்யப்பட்டவர்களின் பதவி செல்லாது. எனவே பொதுக்குழு உறுப்பினர்களின் பதவி செல்லாது என்று கூறி இருக்கிறார்.
கடைசியாக மீண்டும் பொதுக்குழுவை கூட்டுவதற்கு பொதுக்குழுவுக்கு அதிகாரம் இல்லை என்று சொல்லி இருக்கிறார். இந்த கேள்விகளுக்கு பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.
பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் யாருக்கு உள்ளது என்று விதி 19-ல் சொல்லப்பட்டு உள்ளது. பொதுக்குழுவை பொதுச்செயலாளர், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் ஆண்டுக்கு ஒரு முறை கூட்ட வேண்டும். பிறகு தேவைக்கு ஏற்ப கூட்டலாம்.
மேலும் பொதுக்குழு உறுப்பினர்களில் 5-ல் ஒருபங்கு உறுப்பினர்கள் கையெழுத்து போட்டாலே பொதுக்குழு கூட்டத்தை கூட்டலாம். இதற்கு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதல் தேவையில்லை. 2,665 பொதுக்குழு உறுப் பினர்களில் 5-ல் ஒரு பங்கு உறுப்பினர்கள் ஆதரவு இருந்தாலே பொதுக் குழுவை கூட்ட முடியும்.
மேலும் அவைத்தலை வராக தமிழ்மகன் உசேனை தேர்வு செய்வதில் விதி மீறல் இருப்பதாக கூறி உள்ளார். ஓ.பன்னீர் செல்வம் முன்மொழிந்து, எடப்பாடி பழனிசாமி வழி மொழிந்துதான் அவைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். எனவே இதில் எந்த விதிமீறலும் இல்லை.
கழக அமைப்பு தேர்தலை நடத்தி தேர்தல் ஆணையத் துக்கு முடிவு தான் தெரிவிக்க வேண்டும். அதற்கு அங்கீகாரம் பெற தேவையில்லை. மேலும் அமைப்பு தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் களை பொதுக்குழு அங்கீகரிக்க வேண்டும் என்று விதி இல்லை. அவைத்தலைவர் பதவியை மட்டுமே பொதுக்குழு அங்கீகரிக்க வேண்டும்.
அ.தி.மு.க. பொதுக்குழு வில் 23 தீர்மானங்களை தவிர புதிய தீர்மானங் களை நிறைவேற்றக் கூடாது என்று தான் கோர்ட்டு கூறியுள்ளது. நாங்கள் 23 தீர்மானங்களை நிராகரித்தது கோர்ட்டு அவமதிப்பு என்று அவர்கள் கூறி வழக்கு தொடர்ந்தால் அதை சந்திக்க தயார்.
இவ்வாறு அவர் கூறினார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பது உறுதி என்றும், சிறப்பு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்றும் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நேற்று முன்தினம் பேட்டி அளித்தார். இந்த கருத்தை மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமாரும் ஆதரித்தார்.
இந்த நிலையில் கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த துணை முதல்-அமைச்சரும், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் விமானநிலையத்தில் பேட்டியளித்தார். அப்போது அவரிடம், அமைச்சர் சி.வி.சண்முகம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக தெரிவித்த கருத்து குறித்து கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த ஓ.பன்னீர்செல்வம், ‘அமைச்சர் சி.வி.சண்முகம் கூறியதை அவரது சொந்த கருத்தாக பார்க்கிறேன் என்று தெரிவித்தார். மேலும், திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட்டாலும், கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெறும்’ என்றும் அவர் தெரிவித்தார். #OPanneerselvam#cvshanmugam
அமைச்சர் என்ற முறையில் சி.வி.சண்முகம் தெரிவித்த கருத்து நல்ல விஷயம் தான். அதனை நான் வரவேற்கிறேன். அந்த கருத்தில் விசாரணைக்கு உட்பட்டு நடத்தவேண்டும் என்றுதான் கூறியிருக்கிறார். விசாரணைக்குழு அமைக்க வேண்டும் என்பது தனி. மாநில அமைப்பு இதனை நடத்தலாம்.
சி.வி.சண்முகம் தெரிவித்த கருத்தை, ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் விசாரணை ஆணையம் பரிசீலனைக்கு எடுத்து விசாரிக்கட்டும். அதில் தவறு இல்லை.
ஜெயலலிதா மரணம் தொடர்பான விவகாரத்தை திசை திருப்பவேண்டும் என்பதற்காக சி.வி.சண்முகம் இந்த கருத்தை தெரிவிக்கவில்லை. ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது சசிகலா குடும்பம் 75 நாட்கள் ஆஸ்பத்திரியில் 5 நட்சத்திர ஓட்டல் போன்று பல அறைகளை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்து, சாப்பிட்டதால் தான் ரூ.1¼ கோடி கட்டணம் வந்தது.
ஜெயலலிதா சாப்பிட்டது கிடையாது. இதுதான் சட்டத்துறை அமைச்சரின் கருத்து. அமைச்சர்களுக்குள் யார் பிளவு ஏற்படுத்த முயன்றாலும் நடக்காது. நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம்.

விசாரணை ஆணையம் அழைத்து கேட்டாலும், ஆஞ்சியோ செய்திருந்தால் ஜெயலலிதா பிழைத்திருப்பார் என்ற கருத்தை சி.வி.சண்முகம் தெரிவிப்பார். சி.வி.சண்முகம் தெரிவித்த கருத்தை ஆணைய தலைவர் கருத்தில்கொண்டு விசாரிக்கட்டும். அப்பல்லோ ஆஸ்பத்திரியில் போட்ட அறைகளில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட செயலாளர் மற்றும் கட்சி நிர்வாகிகள் என நாங்கள் யாருமே தங்கவில்லை. சி.வி.சண்முகம் கூறியது போல அங்கு தங்கியது சசிகலா மற்றும் அவருடைய குடும்பம் தான்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஜெயின் கமிஷன் அமைக்கபட்டதால் சி.பி.ஐ. விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாமல் இல்லையே. அதன்படி பார்த்தால் சி.வி.சண்முகம் தெரிவித்த கருத்தில் தவறு இல்லை. இதுதொடர்பாக தமிழக அரசு முடிவு செய்யும். ஒரு நாள் அதிகாரம் கொடுத்தால் மீனவர் பிரச்சினைகளை தீர்த்துவிடுவேன் என்று சீமான் கூறியிருப்பது 2018-ம் ஆண்டின் தலைசிறந்த ‘ஜோக்’.
இவ்வாறு அவர் கூறினார். #jayalalithaadeath #jayalalithaa #Jayakumar #CVShanmugam