என் மலர்
நீங்கள் தேடியது "ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்"
- சீமான் பிரசாரம் மேற்கொள்ளும் இடங்கள், அவர் பங்கேற்கும் பொதுக்கூட்டங்களிலும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- தாய்மார்களை மாதம் ஆயிரம் ரூபாய்க்கு கையேந்த வைத்த ஆட்சி இது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமிக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் சீமான் பெரியார் குறித்து கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து ஈரோடு இடைத்தேர்தலில் சீமான் பிரசாரம் மேற்கொள்ள தடை விதிக்க கோரி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தலைவர் அமைப்பினர் மனு அளித்தனர். சீமான் உருவ பொம்மையை எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சி வேட்பாளருக்கு வாக்கு சேகரிக்க சீமான் நேற்று மாலை ஈரோடு வந்தார். சீமானுக்கு ஈரோட்டில் கடும் எதிர்ப்பு நிலவி வந்ததால் அவருக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி குமலன்குட்டையில் அவர் தங்கி இருக்கும் ஓட்டலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சீமான் பிரசாரம் மேற்கொள்ளும் இடங்கள், அவர் பங்கேற்கும் பொதுக்கூட்டங்களிலும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மாறுவேடத்திலும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
நேற்று குமலன் குட்டையில் சீமானுக்கு எதிர்ப்பை தெரிவித்து அவர் தங்கி இருக்கும் ஓட்டலுக்கு ஆதிதமிழர் கட்சியினர் 7 பேர் வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணைக்காக அழைத்து சென்றனர். இதேபோல் கிருஷ்ணா தியேட்டர் பகுதியில் சீமான் பிரசாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த கொங்கு விடுதலை புலிகள் கட்சியை சேர்ந்த 2 நிர்வாகிகளை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ஏ.டி.எஸ்.பி வேலுமணி தலைமையில் சீமானுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
நேற்று இரவு கருங்கல்பாளையத்தில் நடந்தபோது கூட்டத்தில் சீமான் பேசியதாவது:-
ஈரோடு கிழக்கு தொகுதியில் திராவிடம்-தமிழ்தேசிய சித்தாந்தங்கள் மோதுகின்றன. இதில் மாற்றத்திற்கான ஒரு புரட்சிகர விதை ஊன்றப்படும். நாட்டில் ஊழல், லஞ்சம் தேசியமயமாக்கப்பட்டுள்ளது. இதை ஒழிக்க ஒரு நேர்மையாளன் ஆட்சிக்கு வந்தால் போதுமானது. ஆனால் மலை, மணல் போன்ற இயற்கை வளங்கள் சூறையாடப்பட்டால், அவற்றை திரும்பக் கொண்டு வர முடியாது.
ரூ.8½ லட்சம் கோடி கடனாக பெற்ற தமிழகத்தில் எந்த நலத்திட்டமும் நிறைவேற்றவில்லை. அனைவருக்கும் சமமான, தரமான கல்வியை, தரமான போக்குவரத்து, குடிநீர், சாலை வசதிகளை அரசால் வழங்க முடியவில்லை. அரசு தரமாக இல்லாததால், அரசின் சேவைகள் தரமானதாக இல்லை.
தாய்மார்களை மாதம் ஆயிரம் ரூபாய்க்கு கையேந்த வைத்த ஆட்சி இது. அடுத்த ஆண்டு பொதுத்தேர்தல் வரும்போது இதனை ரூ.2000 வழங்குவதாகச் சொல்வார்கள். கடனை ரூ.10 லட்சம் கோடியாக உயர்த்தி, நம்மை கடன்காரர்களாக்கி விடுவார்கள். 90 சதவீத குற்றங்கள் போதையின் காரணமாகவே நடைபெறுகின்றன. ஒருபுறம் போதைக்கு அடிமையாகாதீர்கள் என்று சொல்லி விட்டு, மது விற்பனை ஏன் குறைந்தது என்று ஆய்வு மேற்கொள்கிறார்கள்.
ஈரோடு கிழக்கில் நாம் தமிழர் கட்சிக்கு கிடைக்கும் வெற்றி, தமிழகத்தின் அரசியல் வரலாற்றை மாற்றி எழுதும். எளிதானதை செய்யாமல் சரியானதைச் செய்யுங்கள். ஜெயிக்கிற பக்கம் நிற்காமல், நிற்கிற பக்கத்தை ஜெயிக்க வையுங்கள்.
இவர் அவர் பேசினார்.
இதைத்தொடர்ந்து இன்று காலை 2-வது நாளாக மரப்பாலம் பகுதியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து மாலை 6 மணி அளவில் சூரம்பட்டி பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- வேட்பு மனுக்கள் வாபஸ் பெற இன்று மதியம் 3 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டது.
- ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மொத்தம் 47 பேர் போட்டியிடுகின்றனர் என தெரிவிக்கப்பட்டது.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி. கே.எஸ்.இளங்கோவன் கடந்த டிசம்பர் மாதம் 14ம் தேதி உடல் நலக்குறைவால் திடீரென இறந்தார். இதை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 5-ந் தேதி இடை த்தேர்தல் நடைபெறுகிறது.
இதில், இடைத்தேர்தலில் போட்டியிட 58 பேர் வேட்புமனு தாக்கல் செய்ததில் 3 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு தி.மு.க, நாம் தமிழர் கட்சி, சுயேட்சை என 55 மனுக்கள் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
பின்னர், வேட்பு மனுக்கள் வாபஸ் பெற இன்று மதியம் 3 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டது.
அதன்படி, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கான அவகாசம் 3 மணியுடன் நிறைவு பெற்று, இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது.
இதில், சுயேச்சை வேட்பாளர்கள் 8 பேர் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர். இதன்மூலம். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மொத்தம் 47 பேர் போட்டியிடுகின்றனர் என தெரிவிக்கப்பட்டது.
மேலும், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சிக்கு 'மைக்' சீன்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. கட்சித் தரப்பில் கரும்பு விவசாயி சின்னம் கோரப்பட்ட நிலையில், அது வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலர் மறுத்துள்ளார்.
- வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கான கால அவகாசம் நிறைவடைந்த நிலையில் இறுதிப் பட்டியல் வெளியீடு.
- ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மொத்தம் 47 பேர் போட்டியிடுகின்றனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி. கே.எஸ்.இளங்கோவன் கடந்த டிசம்பர் மாதம் 14-ந் தேதி உடல் நலக்குறைவால் திடீரென இறந்தார். இதை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வருகிற பிப்ரவரி 5-ந் தேதி இடை த்தேர்தல் நடைபெறுகிறது.
இதற்கான அறிவிப்பு கடந்த 7-ந்தேதி வந்தவுடன் உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. இந்த இடை த்தேர்தலில் தி.மு.க நேரடியாக களம் இறங்கி வி.சி.சந்திரகுமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். நாம் தமிழர் கட்சி சார்பில் சீதா லட்சுமி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
அ.தி.மு.க, பா.ஜ.க தலைமையிலான கூட்டணி கட்சிகள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தன. இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க-நாம் தமிழர் கட்சிக்கு இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.
கடந்த 10-ம் தேதி முதல் 17-ந்தேதி வரை இடை த்தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் செய்ய ப்பட்டன. 58 பேர் வேட்புமனு தாக்கல் செய்ததில் 3 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு தி.மு.க, நாம் தமிழர் கட்சி, சுயேட்சை என 55 மனுக்கள் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வேட்பு மனுக்கள் வாபஸ் பெற இன்று மதியம் 3 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கான அவகாசம் 3 மணியுடன் நிறைவு பெற்றுள்ளது.
மதியம் 3 மணியுடன் வேட்பு மனுக்களை வாபஸ் பெறுவதற்கான கால அவகாசம் நிறைவடைந்த நிலையில் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில், சுயேச்சை வேட்பாளர்கள் 8 பேர் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றுள்ளனர். இதன்மூலம். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மொத்தம் 47 பேர் போட்டியிடுகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக அ.தி.மு.க. நிர்வாகி செந்தில் முருகன் போட்டியிட இருந்தார்.
- செந்தில் முருகனை கட்சியில் இருந்து நீக்கி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி நடைபெறுகிறது.
இந்த இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிடாது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார்.
ஆனால் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக அ.தி.மு.க. நிர்வாகி செந்தில் முருகன் போட்டியிட இருந்தார்.
இதைத்தொடர்ந்து செந்தில் முருகனை கட்சியில் இருந்து நீக்கி அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டார். தலைமை எடுத்த முடிவுக்கு மாறாக தேர்தலில் போட்டியிட முடிவு செய்ததால் கட்சியில் இருந்து செந்தில் முருகன் நீக்கம் செய்யப்படுவதாக தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் வேட்புமனுக்கள் வாபஸ் பெற இன்று கடைசி நாள் என்ற நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இருந்து அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகி செந்தில் முருகன் விலகி உள்ளார்.
- 58 வேட்பாளர்கள் மொத்தம் 65 வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
- இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல், சின்னத்துடன் ஒதுக்கீடு செய்யப்பட்டு வெளியிடப்படும்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 10-ந் தேதி தொடங்கி 18-ந்தேதி வரை நடைபெற்றது. 58 வேட்பாளர்கள் மொத்தம் 65 வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். இதில் தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் 4 மனுக்களும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 3 மனுக்களும் தாக்கல் செய்திருந்தனர். வேட்புமனுவில் தி.மு.க. வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரின் சொத்து மதிப்பு ரூ.2 கோடியே 56 லட்சம் என குறிப்பிடப்பட்டு இருந்தது.
நேற்று முன்தினம் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையாளருமான மனிஷ், கிழக்கு தொகுதி பொது பார்வையாளர் அஜய்குமார் குப்தா ஆகியோர் தலைமையில் வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன.
தி.மு.க. மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 55 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்காததால் 3 வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்நிலையில் வேட்புமனுக்கள் வாபஸ் பெற இன்று கடைசி நாளாகும். இன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல், சின்னத்துடன் ஒதுக்கீடு செய்யப்பட்டு வெளியிடப்படும்.
- செந்தில் முருகனை கட்சியில் இருந்து நீக்கி வைப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் அறிவித்துள்ளார்.
- ஈரோடு மாநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி இணை செயலாளராக இருந்தவர் செந்தில் முருகன்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக அதிமுக நிர்வாகி செந்தில் முருகன் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், செந்தில் முருகனை கட்சியில் இருந்து நீக்கி வைப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் அறிவித்துள்ளார்.
ஈரோடு மாநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி இணை செயலாளராக இருந்தவர் செந்தில் முருகன்.
அதிமுக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடாது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.
ஆனால், தலைமை எடுத்த முடிவுக்கு மாறாக தேர்தலில் போட்டியிட முடிவு செய்ததால் கட்சியில் இருந்து செந்தில் முருகன் நீக்கம் செய்யப்படுவதாக இபிஎஸ் அறிவித்துள்ளார்.
- பெரியார் என்பது தனி மனிதனல்ல. சமூக இழுவுகளை எதிர்த்த பெரிய போராட்டம் ஒரு இயக்கம்.
- இன்றும் சமூக இழிவுகளை எதிர்ப்பது தான் பெரியார் கொள்கை.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மரணம் அடைந்ததை தொடர்ந்து அங்கு பிப்ரவரி 5-ந்தேதி இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் போட்டியிடுகிறார்.
பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. தேர்தலை புறக்கணித்து உள்ளது. பா.ஜ.க,, தே.மு.தி.க. ஆகிய கட்சிகளும் போட்டியிடாமல் விலகி உள்ளன. நாம் தமிழர் சார்பில் மா.கி. சீதாலட்சுமி (முதுகலை ஆய்வியல் திறைஞர் (M.A, M.Phil.,) போட்டியிடுகிறார்.
இதனால் தற்போது முதல் முறையாக நாம் தமிழர் கட்சி ஆளும் கட்சியான தி.மு.க.வை நேரடியாக தேர்தல் களத்தில் சந்திக்கிறது.
இந்நிலையில், "ஈரோடு கிழக்கில் பெரியாரை விமர்சித்து வாக்கு கேட்டால் தெரியும்.. பெரியார் யார் என தெரியும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "பெரியார் காலத்தில் இப்போது இருக்கக்கூடிய மத்திய அரசின் விதிகள் இருந்தால், இன்று காவல்துறை நடந்து கொள்வது போல அன்று நடந்திருந்தால் காலம் முழுவதும் பெரியார் சிறையில் இருந்திருப்பார்.
பெரியார் என்பது தனி மனிதனல்ல. சமூக இழுவுகளை எதிர்த்த பெரிய போராட்டம் ஒரு இயக்கம். அப்படிப்பட்ட ஒரு இயக்கத்தை நாம் இப்போது களங்கப்படுத்த வேண்டுமா? பெரியார் சமூக இழிவுகளை எதிர்த்து வெற்றி கண்டார். இன்றும் சமூக இழிவுகளை எதிர்ப்பது தான் பெரியார் கொள்கை.
பெரியார் பிறந்த ஊரில் ஈரோடு கிழக்கில் பெரியாரை விமர்சித்து வாக்கு கேட்டு பாருங்கள். எத்தனை மக்கள் அவருக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்று தெரிந்து விடும். திராவிடர்கள் என்பது ஆரியர்கள் அல்லாதவர்களை குறிக்கிறது. திராவிடம் என்பது தமிழ்நாடு அல்ல தென்னிந்திய மாநிலங்களை குறிப்பது தான் திராவிடம்" என்று பேசியுள்ளார்.
- ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
- வரும் பிப்ரவரி 5-ந் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5-ந் தேதி நடைபெறுகிறது. இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 10-ந் தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது.
இறுதி நாளான நேற்று தி.மு.க வேட்பாளர் சந்திரகுமார், தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவருக்கு மாற்றாக அவரது மனைவி அமுதா மனு தாக்கல் செய்தார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியும் மனு தாக்கல் செய்தார். இதேபோல் சிறிய அரசியல் கட்சிகள், சுயேட்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். மொத்தத்தில் 58 வேட்பாளர்கள் 65 வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.
இதில் தி.மு.க வேட்பாளர் சந்திரகுமார் 4 மனுக்கள், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி 3 மனுக்கள் என கூடுதலாக வேட்பு மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். இதில் தி.மு.க வேட்பாளர் சந்திரகுமார் சொத்து மதிப்பு ரூ.2.56 கோடி ரூபாய் என காண்பிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் இன்று காலை வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை தொடங்கியது. இதற்காக ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மணிஷ், கிழக்கு தொகுதி பொது பார்வையாளர் அஜய் குமார் குப்தா ஆகியோர் தலைமையில் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது.
இதையொட்டி தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்கள் தங்களது பிரதிநிதிகள் உடன் மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்திருந்தனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி தனது பிரதிநிதிகள் உடன் வந்திருந்தார்.
தி.மு.க சார்பில் சந்திரகுமார் வரவில்லை. அவர்களது பிரதிநிதிகள் வந்திருந்தனர். வேட்பு மனுக்கள் பரிசீலனையில் தி.மு.க வேட்பாளர் சந்திரகுமார் மனு, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி மனுக்கள் ஏற்கப்பட்டதாக தேர்தல் நடத்தும் அலுவலர் மனிஷ் தெரிவித்தார். மதியம் 12.30 நிலவரப்படி மேலும் 20 சுயேச்சை வேட்பாளர்களில் மனுக்கள் ஏற்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து மதியம் 2 மணிக்கு பிறகு எவ்வளவு மனுக்கள் ஏற்கப்பட்டது என்ற முழுமையான விபரம் தெரியவரும் என்ற அதிகாரிகள் தெரிவித்தனர். தகுதியில்லாத சில மனுக்களை அலுவலர் நிராகரித்தார். இதைத்தொடர்ந்து வரும் 20-ந் தேதி வேட்பு மனுக்கள் திரும்ப கடைசி நாளாகும். அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் சின்னத்துடன் ஒதுக்கீடு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஒரே சின்னத்தை ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் கேட்டால் அவர்களுக்கு குலுக்கல் முறையில் சின்னம் ஒதுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து வரும் பிப்ரவரி 5-ந் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இதற்காக 237 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. பதற்றமான 9 வாக்குச்சாவடி மையங்களில் கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு போடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து வருகிற பிப்ரவரி 8-ந் தேதி (சனிக்கிழமை) சித்தோட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடைபெறுகிறது. அன்று மதியம் முடிவுகள் தெரிந்துவிடும்.
- கடந்த 10-ந்தேதி வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது.
- வேட்புமனு மீதான பரிசீலனை நாளை நடைபெறுகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.-வாக இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கடந்த டிசம்பர் மாதம் 14-ந்தேதி காலமானார். அதனைத்தொடர்ந்து, டெல்லி மாநில சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படும்போது, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டது.
பிப்ரவரி 5-ந்தேதி வாக்குப்பதிவும், 8-ந்தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி கடந்த 10-ந்தேதி வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது. இன்று மதியம் 3 மணியுடன் வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைந்தது. திமுக சார்பில் போட்டியிடும் சந்திர குமார், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் சீதாலட்சுமி ஆகியோர் கடைசி நாளான இன்று வேட்பு மனுத்தாக்கல் செய்தனர்.
நாளை வேட்புமனு மீதான பரிசீலனை நடைபெறும், வேட்புமனுவை திரும்பப்பெற 20-ந்தேதி கடைசி நாளாகும். அன்றைய தினம் இறுதிக்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
அதிமுக, பாஜக உள்ளிட்ட முன்னணி கட்சிகள் தேர்தலை புறக்கணித்துள்ளன.
- பல்வேறு தேர்தலில் போட்டியிட்டு வருகிறேன்.
- ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் ஏராளமான சுயேட்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருந்தனர்.
அப்போது அகில இந்திய ஊழல் தடுப்பு கூட்டமைப்பின் தேசிய தலைவராக இருக்கும் அபி ஆழ்வார் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருந்தார்.
அப்போது அவரது கழுத்தில் 50, 100, 200, 500 ரூபாய் நோட்டுகளை மாலையாக அணிந்து வந்தார். ஈரோடு மாநகராட்சி அலுவலக நுழைவு வாயில் அருகே வந்த போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை தடுத்து கழுத்தில் பணம் மாலையுடன் உள்ளே செல்ல அனுமதி இல்லை என்றனர். இதனால் அந்த நபர் ஆத்திரமடைந்து போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது அபி ஆழ்வார் கூறும்போது, இந்தியா முழுவதும் ஊழலுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு இருக்கிறேன். அதிகாரிகள் லஞ்சம் வாங்க கூடாது. பொதுமக்களும் லஞ்சம் கொடுத்து காரியங்களை சாதிக்கக்கூடாது. இதன் தொடர்ச்சியாக பல்வேறு தேர்தலில் போட்டியிட்டு வருகிறேன்.
தற்போது 52-வது முறையாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதற்காக வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருக்கிறேன். ஆனால் போலீசார் என்னை அனுமதிக்கவில்லை என்றார்.
பின்னர் சிறிது நேரத்தில் அவர் கழுத்தில் அணிந்திருந்த பண மாலையை கழற்றி கையில் வைத்துக் கொண்டார். அதன் பின்னர் அவர் வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்பட்டார். இதனால் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
- முன்னதாக திருவள்ளுவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய அமைச்சர் தி.மு.க. கழகத்தின் கொடியையும் ஏற்றி வைத்தார்.
- சிறுவர், சிறுமிகள் அமைச்சர் முன்பு சிலம்பம் சுற்றியும், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை நடத்தி காட்டினர்.
சென்னை:
சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள சானிக் குளம் திருவள்ளுவர் மன்றம் அருகில் துறைமுகம் மேற்கு பகுதி 54-வது வட்டம் சார்பில் 400 மங்கையர்கள் ஒன்றுகூடி தைத்திருநாள் மற்றும் சமத்துவ பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடை பெற்றது.
சென்னை கிழக்கு மாவட்ட செயலாளரும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருமான பி.கே.சேகர் பாபு கலந்து கொண்டு சிறப்பித்தார்.
முன்னதாக திருவள்ளுவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்திய அமைச்சர் தி.மு.க. கழகத்தின் கொடியையும் ஏற்றி வைத்தார்.
தொடர்ந்து உரி அடித்தும் சிலம்பம் சுற்றியும் அப்பகுதி மக்களுடன் சமத்துவ பொங்கலை கொண்டாடினார். மேலும் அப்பகுதி சிறுவர், சிறுமிகள் அமைச்சர் முன்பு சிலம்பம் சுற்றியும், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை நடத்தி காட்டினர்.
சிலம்பம் சுழற்றிய சிறுவர் சிறுமிகளுக்கு ரொக்கமாக பரிசுத்தொகையையும் வழங்கி பாராட்டினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபுவிடம் ஐ.ஐ.டி. மாணவி பாலியல் குற்ற சம்பவம் தொடர்பான கேள்விக்கு, நடைபெறுகின்ற குற்றச் சம்பவங்களை தடுப்பது ஒரு புறம், நடந்து முடிந்த பிறகு அதன் மீது நடவடிக்கை எடுப்பது மறுபுறம்.
இந்த ஆட்சியில் இன்னார் இனியவர் என்று பாகுபாடு கிடையாது. தவறு யார் செய்திருந்தாலும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுகின்ற சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது.
ஐ.ஐ.டி. சம்பவம் தொடர்பாக உரிய குற்றவாளி கைது செய்து கடுமையானப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார் என்றார்.
ஈரோடு இடைத்தேர்தல் குறித்த கேள்விக்கு, 'யானை வரும் பின்னே மணி ஓசை வரும் முன்னே' என்பார்கள். அதுபோல 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு வெற்றிக்கு உண்டான அறிகுறியாக வெற்றிக்குரிய வெளிச்சமாக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் இருக்கும்.
பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் ஈரோடு இடைத்தேர்தலில் வெற்றிக்கொள்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஈரோடு குமலன்குட்டை பகுதியில் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனா்.
- இருவரிடம் உரிய ஆவணங்கள் சமர்பித்து பெற்று செல்லலாம் என பறக்கும் படையினர் அறிவுறுத்தினர்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி, வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் 3 பறக்கும் படை, 3 நிலை கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டு தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இக்குழுவினர் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் உரிய ஆவணங்களின்றி கொண்டு வரும் பணம் மற்றும் பரிசு பொருட்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், ஈரோடு கருங்கல்பாளையம் சோதனை சாவடி அருகே தேர்தல் பறக்கும் படையினர் இன்று அதிகாலை வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அவ்வழியாக வந்த காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். இதில், காரை ஓட்டி வந்தவரிடம் ரூ.2 லட்சம் ரொக்கம் இருந்தது. அவரிடம் விசாரணை நடத்தியதில், அந்த நபர் கேரளா மாநிலத்தை சேர்ந்த மாட்டு வியாபாரி ரபீக் என்பதும், கருங்கல்பாளையம் மாட்டு சந்தைக்கு மாடுகள் வாங்க பணத்தை எடுத்து வந்ததாக கூறியுள்ளார்.
இருப்பினும், அந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் தேர்தல் பறக்கும் படையினர் ரூ.2 லட்சத்தையும் பறிமுதல் செய்து, ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் கட்டுப்பாட்டு அலுவலரிடம் ஒப்படைத்தனர்.
இதேபோல், ஈரோடு குமலன்குட்டை பகுதியில் பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனா். அப்போது, அங்கு வந்த காரில் சோதனை செய்தபோது, காரில் ரூ.2.20 லட்சம் ரொக்கம் இருந்தது. இதையடுத்து காரை ஓட்டி வந்தவரிடம் நடத்திய விசாரணையில், அவர் கேரளாவை சேர்ந்த முனீர் என்பதும், கருங்கல்பாளையம் மாட்டு சந்தைக்கு மாடு வாங்க பணத்தை எடுத்து வந்ததும் தெரியவந்தது.
ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாததால் தேர்தல் பறக்கும் படையினர் பணத்தை பறிமுதல் செய்து, தேர்தல் பிரிவு கட்டுப்பாட்டு அலுவலரிடம் ஒப்படைத்தனர். இருவரிடம் உரிய ஆவணங்கள் சமர்பித்து பெற்று செல்லலாம் என பறக்கும் படையினர் அறிவுறுத்தினர். ஒரே நாளில் 2 வியாபாரிகளிடம் பறக்கும் படையினர் ரூ.4.20 லட்சம் பறிமுதல் செய்திருப்பது வெளிமாநில மாட்டு வியாபாரிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.