search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Erode east byelection"

    • இளங்கோவனின் மகன் திருமகன் காலமானதால் ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற்றது.
    • திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 1,10,156 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

    காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன். இவரது மகன் திருமகன் ஈ.வெ.ரா. ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.-வாக இருந்தார். உடல்நலக்குறைவால் அவர் ஜனவரி மாதம் 4-ந்தேதி காலமானார்.

    இதனால் பிப்ரவரி 27-ந்தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் 1,10,156 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

    அதிமுக சார்பில் போட்டியிட்ட தென்னரசு 43,923 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட மேனகா 10,827 வாக்குகளும், தேமுதிக சார்பில் போட்டியிட்ட ஆனந்த் 1432 வாக்குகளும் பெற்றனர்.

    2019-ல் நடந்த மக்களை தேர்தலில் தேனி தொகுதியில் ஓ. பன்னீர் செல்வம் மகனை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்தார். அந்த மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் தோல்வியை சந்தித்த ஒரு வேட்பாளர் இவர் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வாக்குகள் சிதறக்கூடாது என்பதற்காகவே கூட்டணி வைக்கிறோம்.
    • மாநில உரிமையை பெறுவதில் ஒருபோதும் விட்டுக்கொடுத்ததில்லை.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் வில்லரசம்பட்டியில் அதிமுக வேட்பாளர் தென்னரசுவுக்கு ஆதரவு கோரி, சிறுபான்மையினர் அமைப்பினருடனான கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி  பேசியதாவது:-

    கூட்டணி சேர்ந்து விட்டால் அவர்களுடைய கட்சியின் கொள்கைகளை கேட்பார்கள் என்பது இல்லை, எந்த கட்சியுடன் கூட்டணி வைத்தாலும் எங்கள் கொள்கையை மட்டும் விட்டுக்கொடுக்கவே மாட்டோம். ஒவ்வொரு தேர்தலிலும் கூட்டணி அமையும். வாக்குகள் சிதறக்கூடாது என்பதற்காகவே கூட்டணி வைக்கிறோம்.

    தமிழக மக்களின் நலனுக்காக நாங்கள் பாடுபடுவோம். மாநில உரிமையை பெறுவதில் ஒருபோதும் விட்டுக்கொடுத்ததில்லை. எந்த மதத்தை சார்ந்தவர்கள் பாதிக்கப்பட்டாலும் முதலில் குரல் கொடுப்பது அதிமுக.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • 21 மாத கால தி.மு.க. ஆட்சியில் எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை.
    • ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அதற்கான விடை தெரியும் என்றார் எடப்ப்பாடி பழனிசாமி.

    ஈரோடு:

    அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. மக்கள் தான் வாக்களிக்கிறார்கள். மக்கள் கொந்தளிப்போடு இருக்கிறார்கள். 21 மாத கால தி.மு.க. ஆட்சியில் எந்த திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் அதற்கான விடை தெரியும்.

    தி.மு.க. எந்த முன்னேற்றத்தையும் வைத்து ஓட்டு கேட்கவில்லை. பணத்தை வைத்து ஓட்டு கேட்கிறார்கள். தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. மிகப் பெரிய ஜனநாயக படுகொலை ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த தேர்தலில் எந்த அளவு விதிமீறல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதை ஊடகம், பத்திரிக்கை நண்பர்கள் மக்கள் முன்பு வெளிச்சம் போட்டு காட்ட வேண்டும்.

    எங்களைப் பற்றி விமர்சிக்க தி.மு.க.விற்கு அருகதை இல்லை. தி.மு.க.வுடன் கூட்டணியில் இருக்கக்கூடிய கட்சிகள் சொத்து வரி உயர்வு, விலைவாசி உயர்வு, போதைப்பொருள் நடமாட்டம், மின்சார கட்டண உயர்வு உள்ளிட்ட மக்கள் பாதிக்கப்படும் பிரச்னைகளுக்கு குரல் கொடுக்கவில்லை.

    8 வழிச்சாலை திட்டத்திற்கு அ.தி.மு.க. ஆட்சியில் இருக்கும்போது எதிர்ப்பு தெரிவித்த கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தற்போது மவுனம் சாதிக்கின்றன. மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்காத கட்சிகள் அனைத்தும் அடிமை கட்சிகள் தானே?

    தி.மு.க. வெற்றி பெற்றதும் முதல் கையெழுத்தாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று கூறினார்கள். இதுவரை அதற்காக மத்திய அரசிடம் குரல் கொடுத்திருக்கிறார்களா? தி.மு.க.வுடன் அங்கம் வகிக்கிற கூட்டணி கட்சிகள் அனைத்தும் அடிமை சாசனம் எழுதி கொடுத்துவிட்டு தி.மு.க.விற்கு ஒத்தூதி கொண்டிருக்கின்றன என குற்றம்சாட்டினார்.

    • சாயப்பட்டறைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படும் கழிவு நீரால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள்.
    • தமிழகத்திற்கு வேலைக்காக வந்துள்ள வடமாநிலத்தவர்களால் ஒரு பயம் எல்லோருக்கும் இருக்கிறது

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன், மாலை மலருக்கு அளித்த சிறப்பு பேட்டி வருமாறு:-

    இது ஈ.வே.ரா.வின் மண் என்றும், பெண்ணியம் பேசக்கூடிய மண் என்றும் சொல்கிறார்கள். ஆனால் அந்த மாதிரி ஒரு சூழ்நிலையை, திராவிட கட்சிகள் மற்றும் காங்கிரஸ் கட்சிகளில் பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்ததில்லை. இந்த கட்சிகள் தேர்தல்களில் பெண்களுக்கு வாய்ப்புகள் வழங்கவில்லை. ஆனால், நாம் தமிழர் கட்சியில் பெண்களுக்கு சம வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள்.

    பண பலமும் பதவி பலமும் இருக்கக் கூடிய இந்த அரசியல் களத்தில் தைரியமாக இருக்க வேண்டும் என்று என்னை இந்த தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கியிருக்கிறார்கள். இது எனக்கு பெருமையாக இருக்கிறது.

    ஈரோடு கிழக்கு தொகுதியில் தீர்க்க முடியாத பிரச்சனைகள் பல இருக்கின்றன. குறிப்பாக குடிநீரே இப்போது நஞ்சாக மாறியிருக்கிறது. சாயப்பட்டறைகளில் இருந்து சுத்திகரிக்கப்படாமல் வெளியேற்றப்படும் கழிவு நீரால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். புற்றுநோய் பாதிப்பு விகிதம் அதிகரித்து வருகிறது. மஞ்சள் மாநகரம் இப்போது கேன்சர் சிட்டியாக மாறி வருகிறது. இதையெல்லாம் முதலில் மாற்ற வேண்டும். அதேபோல் எங்களுக்கு அதிகாரம் வந்தால், மக்களுக்கு பாதகம் விளைவிக்கக்கூடிய அனைத்து தொழிற்சாலைகளையும் இழுத்து மூடுவோம்.

    தமிழகத்திற்குள் நுழைந்துள்ள வடமாநிலத்தவர்கள் தமிழர்களை அடிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். காவல்துறை மீதே கைவைக்க ஆரம்பித்துவிட்டார்கள். அவர்கள் இங்கே வந்து ஏதோ தொழில் செய்கிறார்கள் என்றுதான் நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால் அவர்கள் தொழிலை மீறி தவறான வேலைகளை செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்களால் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள், பெண்கள் சுதந்திரமாக இருக்க முடியவில்லை. அவர்களால் ஒரு பயம் எல்லோருக்கும் இருக்கிறது. இதை நிச்சயம் தடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் அண்ணன் (சீமான்) சொல்வது சரிதான்.

    ஒரு பேனாவைக் கொண்டு கடலுக்கு நடுவில் வைப்பதால் மக்களுக்கு என்ன பயன்? கலைஞரின் நினைவாக, மக்களுக்காக அனைத்து வசதிகளையும் கொண்ட உலகத்தரம் வாய்ந்த ஒரு மருத்துவமனை அமைத்து கொடுங்கள். அது மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஐயா கலைஞரை மக்களும் சந்தோஷமாக நினைப்பார்கள். அல்லது, ஐயாவின் நினைவாக பள்ளிக்கூடம் அமைத்துகொடுக்கலாம். இதையெல்லாம் மீறி பேனாவைத்தான் வைப்பேன், அதையும் கடலில்தான் வைப்பேன் என்று சொன்னால் கோபம் வரத்தான் செய்யும். இந்த விஷயத்தில் அண்ணன் சொல்வது சரிதான். பள்ளிகளை சீரமைக்க பணம் இல்லாதபோது, பேனா வைக்க எங்கிருந்து பணம் வரும்? என்று அண்ணன் கேட்பது நியாயம்தானே? பேனா சின்னம் வைப்பதற்கு எதிராக போராட்டங்கள் நடத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இடைத்தேர்தலில் புதிய சின்னத்தில் போட்டியிடுவது தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தக் கூடும்.
    • அமமுகவின் ஆதரவு யாருக்கு? என்பது குறித்து நாளை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் போட்டியிடவில்லை என அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தலில் கழக வேட்பாளர் அறிவிக்கப்பட்டு களத்தில் பரப்புரை பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இந்த சூழலில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு கடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் ஒதுக்கப்பட்ட பிரஷர் குக்கர் சின்னத்தை, இடைத்தேர்தல் காலங்களில் ஒதுக்கிட இயலாது என தலைமை தேர்தல் ஆணையம் எழுத்துப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

    பாராளுமன்ற பொதுத்தேர்தல் ஓராண்டு காலத்திற்குள் வரவிருக்கும் சூழலில், புதியதோர் சின்னத்தில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடுவது தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்தக் கூடும். ஆகவே வரவிருக்கிற பாராளுமன்றம் மற்றும் சட்டமன்ற பொதுத்தேர்தல்களில் குக்கர் சின்னத்தோடு தேர்தல்களை சந்திப்போம்.

    இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுவதை தவிர்ப்பதே சரியாக இருக்கும் என்ற தலைமைக்கழக நிர்வாகிகளின் ஆலோசனையை கருத்தில் கொண்டு, இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் போட்டியிடவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு டிடிவி தினகரன் கூறி உள்ளார்.

    மேலும், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அமமுகவின் ஆதரவு யாருக்கு? என்பது குறித்து நாளை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    • என்னுடைய பிரசாரத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது.
    • மக்களின் தேவைகளை நான் பூர்த்தி செய்வேன் என்ற நம்பிக்கை மக்களுக்கு வந்திருக்கிறது.

    ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், மாலை மலர் யூடியூப் சேனலுக்கு அளித்த சிறப்பு பேட்டி வருமாறு:-

    என் மகன் மறைந்த திருமகன் ஈவெரா, சட்டமன்ற உறுப்பினராக இருந்து தொகுதி மக்களுக்கு நல்ல காரியங்களை செய்துள்ளார். அதற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருக்கிறது. அந்த பணிகளை நான் தொடர்ந்து செய்ய வேண்டும் என்ற முனைப்பில் போட்டியிடுகிறேன். என்னுடைய பிரசாரத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது.

    இங்கே மக்களுக்கு ஆற்ற வேண்டிய பணிகள் இன்னும் இங்கே இருக்கின்றன. அந்த பணிகளை செய்வதற்கு வாய்ப்பை தாருங்கள் என்று மக்களோடுதான் பேசிக்கொண்டிருக்கிறேனே தவிர, சீமான் போன்றவர்கள் சொல்லும் கருத்துக்கெல்லாம் நான் முக்கியத்துவம் தருவதில்லை.

    என்னைப் பொருத்தவரை அதிமுவில் அவர்கள் பிரிந்து இருந்தாலும் சரி, இணைந்து இருந்தாலும் சரி ஒன்றுதான். ஈரோடு மக்களின் தேவைகளை நான் பூர்த்தி செய்வேன் என்ற நம்பிக்கை மக்களுக்கு வந்திருக்கிறது. எனவே, எதிரணியில் எப்படி போட்டியிட்டாலும் எனக்கு வெற்றிவாய்ப்பு இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பொதுக்குழு உறுப்பினர்கள் கையொப்பமிட்ட படிவங்களை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்ப உள்ளனர்.
    • அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் நடுநிலை தவறி உள்ளதாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் குற்றம்சாட்டினர்

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை பொதுக்குழு தேர்ந்தெடுக்கவேண்டும் என்றும், எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணியினர் இணைந்து வேட்பாளரை தேர்ந்தெடுத்து அனுப்ப வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொதுக்குழுவை கூட்டி வேட்பாளர் தேர்வு நடைமுறைகளை மேற்கொள்ளும் பணியை அவைத்தலைவர் தமிழ்மகன் உசேனிடம் உச்ச நீதிமன்றம் ஒப்படைத்தது.

    அதன்படி வேட்பாளர் தேர்வு தொடர்பான படிவங்கள் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்டு, கையொப்பம் பெறப்பட்டு வருகிறது. ஓ.பன்னீர்செல்வம் தரப்பினருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அந்த படிவத்தில் எடப்பாடி தரப்பினர் அறிவித்த வேட்பாளர் தென்னரசுவை வேட்பாளராக ஏற்கிறீர்களா? மறுக்கிறீர்களா? என்று கேட்கப்பட்டு பதில் அளிக்கும்படி கூறப்பட்டிருந்தது. பொதுக்குழு உறுப்பினர்கள் வழங்கும் கருத்துக்களை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்ப உள்ளனர்.

    இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வத்துடன் இன்று அவரது ஆதரவாளர்கள் ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது வைத்திலிங்கம் கூறியதாவது:-

    வேட்பாளர் தேர்வு தொடர்பாக தமிழ் மகன் உசேன் அனுப்பியு கடிதம் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. எந்த நோக்கத்திற்காக உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை வழங்கியதோ அதை அவைத்தலைவர் நிராகரித்துள்ளார். அவரது செயல் உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணாக உள்ளது.

    பொதுக்குழுவை கூட்டி வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியது. ஆனால், அவர்கள் அறிவித்த வேடப்ளர் தென்னரசு பெயரை மட்டும் அதிகாரப்பூர்வ வேட்பாளர் என்று கூறியிருப்பது சரியல்ல. வேட்பாளரை பொதுக்குழுதான் முடிவு செய்ய வேண்டும். அப்படியிருக்கையில், முன்கூட்டியே ஒருவரை அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கிறார் என்றால், அவர்கள் முன்கூட்டியே வந்துவிட்டு கருத்து கேட்டிருக்கிறார்கள். இது வேட்பாளர் தேர்வு கிடையாது, பொது வாக்கெடுப்பு முறையாகும்.

    அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் நடுநிலை தவறி உள்ளார். தேர்தல் முறை நேர்மையாகவும் சுதந்திரமாகவும் நடைபெறவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சட்டவிரோத செயலுக்கு தங்களின் ஆதரவு இருக்காது என்றும், இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் முறையிட உள்ளதாகவும் பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்.

    • எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த இடையீட்டு மனு மீது இன்று நீதிபதிகள் உத்தரவு வழங்கினர்.
    • ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கும் வாக்களிக்க வாய்ப்பு வழங்கவேண்டும் என்று உத்தரவு

    அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு வராமல் உள்ளது. இதனால், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் தங்கள் அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிடக் கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் இன்று தீர்ப்பு வழங்கினர். அப்போது, அதிமுக பொதுக்குழுவை கூட்டி வேட்பாளரை தேர்ந்தெடுத்து ஒப்புதல் வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கும் வாக்களிக்க வாய்ப்பு வழங்கவேண்டும் என்றும் கூறினர்.

    ஆனால் குறைந்த கால அவசாசமே உள்ளதால் பொதுக்குழுவை கூட்டாமலேயே பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஒப்புதல் பெற்று வேட்பாளரை தேர்ந்தெடுக்க எடப்பாடி பழனிசாமி தரப்பு திட்டமிட்டுள்ளது. அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் சுற்றறிக்கை மூலம் பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஒப்புதல் பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் இடையீட்டு மனு தாக்கல்
    • நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் இன்று தீர்ப்பு வழங்கினர்.

    புதுடெல்லி:

    அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு முடிந்து தீர்ப்பு வராமல் உள்ளது. இதனால் இரட்டை இலை சின்னம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால் தங்கள் அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிடக்கோரி எடப்பாடி பழனிசாமி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் இன்று தீர்ப்பு வழங்கினர். அப்போது, அதிமுக பொதுக்குழுவை கூட்டி வேட்பாளரை தேர்ந்தெடுத்து ஒப்புதல் வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர். ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோருக்கும் பொதுக்குழுவில் வாக்களிக்க வாய்ப்பு வழங்கவேண்டும் என்றும் கூறினர்.

    இந்த தீர்ப்பு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு மட்டுமே என்றும், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்பாளரை நிறுத்துவதற்கான இடைக்கால ஏற்பாடாக இந்த தீர்ப்பை வழங்குவதாகவும் நீதிபதிகள் கூறினர். 

    • முதலமைச்சரும் பிரதமரும் பத்திரிகையாளர்களை சந்திப்பதில்லை என சீமான் விமர்சனம்
    • ஈவிகேஎஸ் இளங்கோவன் சட்டமன்றத்திற்கு போனாலும் மக்கள் பிரச்சனைகளை பேசமாட்டார்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் போட்டியிடுகிறார். இன்று வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:-

    கொடுத்த வாக்குறுதிகளில் 90 விழுக்காட்டை நிறைவேற்றிவிட்டோம் என்று சொல்கிறார்கள். 90 வேண்டாம், 9 சதவீதம் நிறைவேற்றியதை சொல்லுங்கள் பார்க்கலாம்.

    தமிழக முதலமைச்சர் பத்திரிகையாளர்களை சந்திப்பதில்லை. அதேபோல் 10 வருடம் ஆட்சியை நிறைவு செய்ய உள்ள பிரதமர் மோடியும் பத்திரிகையாளர்களை சந்திப்பதில்லை. ஏன்? கேள்வி கேட்பார்கள்... அவர்களிடம் பதில் இல்லை. நம்மிடம் கேள்வி கேட்பார்கள். அப்போது நாம் அவர்களிடம் திருப்பி கேள்வி கேட்போம். அவர்களிடம் பதில் இல்லை.

    தம்பி திருமகனை எனக்கு ரொம்ப பிடிக்கும். திருமகன் முதலில் நமது கட்சியில்தான் இணைவதற்கு வந்தார். பின்னர் அவரது தந்தை என்ன சொன்னார் என்று தெரியவில்லை. என்னிடம் கேட்டான். நான் அங்கேயே இருந்துவிடு என்று கூறினேன். ஒன்றரை ஆண்டுகாலம் சட்டமன்றத்தில் இருந்தார் திருமகன். எதாவது மக்கள் பிரச்சனையை சட்டமன்றத்தில் பேசியதை பார்த்ததுண்டா? அய்யா (இளங்கோவன்) போனாலும் பேசமாட்டார். எனவே மக்களின் பிரச்சனைகளை துணிந்து தெளிந்து பேசக்கூடிய ஒருவரை சட்டமன்றத்திற்கு அனுப்ப வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • கோவிலை இடிப்பதை பெருமையாக எம்.பி. டிஆர் பாலு பேசியிருப்பதாக அண்ணாமலை குற்றச்சாட்டு
    • பாஜக தலைவர்கள் மாநில தேர்தல் ஆணையத்திடம் வீடியோவை கொடுக்க உள்ளனர்.

    கோவை:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஒன்றில் அமைச்சர் கே.என்.நேரு பேசும் வீடியோ ஒன்றை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், "திமுக என்பது பணத்தை மட்டுமே நம்பி தேர்தலை சந்திக்கும் ஒரு கட்சி. பணத்தை வைத்து எதையும் வாங்கி விடலாம் என்று நம்பும் ஒரு கட்சி. சந்தேகம் இருப்பின், இந்த காணொளியை பார்க்கவும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    அந்த வீடியோவில் அமைச்சர் கே.என்.நேருவும், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனும் பேசிக்கொள்வது போல் இருக்கிறது. ஒருபுறம் அமைச்சர் எ.வ.வேலு மைக்கில் ஏதோ பேசிக்கொண்டிருக்க, பின்னணியில் நேருவின் குரல் மெதுவாக கேட்கிறது. தொகுதியில் பணப்பட்டுவாடா பற்றி பேசுவதுபோல் அந்த வீடியோவில் இருப்பதால் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது. பாஜக, திமுக தொண்டர்கள் சமூக வலைதளங்களில் கருத்து மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

    அண்ணாமலையின் இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ள அமைச்சர் எ.வ.வேலு, சில விஷமிகளால் வீடியோ திரித்து எடிட் செய்யப்பட்டுள்ளதாக கூறி உள்ளார்

    இந்நிலையில் கோவையில் பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மூன்று நாட்களுக்கு முன்பு ஒரு அமைச்சர், சேர் வருவதற்கு தாமதம் ஆனதால் தொண்டர்கள் மீது கல் எடுத்து எறிகிறார். அவர் இன்னும் பதவியில் இருக்கிறார். இரண்டு நாள் கழித்து மற்றொரு அமைச்சர் மேடையில் தொண்டரை அடிக்கிறார். இதை தமிழ்நாடே பார்த்தது. அதன்பிறகு தமிழக பாஜக நேற்று 2 வீடியோக்களை வெளியிட்டது.

    அதில், ஒரு வீடியோ அண்ணன் டி.ஆர்.பாலு அவர்கள் சேதுசமுத்திர திட்டம் தொடர்பான திமுக விளக்கக் கூட்டத்தில் பேசும்போது எடுக்கப்பட்டது. அந்த வீடியோயை டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தேன். இது தொடர்பாக இளங்கோவன் சில கருத்துக்களை கூறியிருக்கிறார். அவர் ஒரு விஷயத்தை புரிந்துகொள்ளவேண்டும். அந்த வீடியோ கட் செய்து எடிட் செய்யப்படாத வீடியோ, இடையில் எதுவும் எடிட் செய்யப்படவில்லை.

    அந்த வீடியோவில், ஒரு கோவிலை இடிப்பதை பெருமையாக எம்.பி. டிஆர் பாலு பேசினார். கோவிலை இடித்தால் ஓட்டு போடமாட்டார்கள் என்று சொன்னார்கள், எப்படி ஓட்டு வாங்குவது என்பது எனக்கு தெரியும் என அவர் பேசியிருக்கிறார். தனது பேச்சு தவறு என உணர்ந்து, கடைசியில் பேச்சை முடிக்கும்போது நான் பெரிய கோவிலை கட்டியும் கொடுத்தேன் என்கிறார்.

    அவர் கோவிலை கட்டி கொடுத்தது முக்கிய அம்சம் கிடையாது. ஒரு கட்சியின் மூத்த தலைவர், எம்.பி.யாக இருப்பவர் கோவிலை இடிப்பதை பெருமையாக பேசியதை மக்கள் பார்த்தார்கள்.

    நேற்று ஈரோட்டில் காங்கிரஸ் வேட்பாளருக்கு வேலை செய்வதற்காக சென்ற அமைச்சர்கள் பேசியதை வீடியோவில் பார்த்தோம். மார்பிங் செய்து எடிட் பண்ணி வீடியோவை போட்டதாக அமைச்சர் எ.வ.வேலு சொல்லியிருக்கிறார். அவருக்கு சவால் விடுகிறேன்.

    ஒரிஜினல் வீடியோவை அமைச்சர் எ.வ.வேலு எங்கே கொடுக்க சொல்கிறாரோ அங்கே கொடுக்கிறோம். அவர் சொல்லும் தமிழ்நாடு காவல்துறையிடமே கொடுக்கிறோம். அந்த வீடியோவை தடயவியல் ஆய்வுக்கு முதலமைச்சர் உட்படுத்தவேண்டும். அதற்கு பாஜக தயாராக இருக்கிறது.

    அந்த வீடியோவில், 31ம் தேதிக்குள் பணம் கொடுக்க வேண்டும் என அமைச்சர் பேசுகிறார். எந்தெந்த அமைச்சரால் பணம் கொடுக்க முடியும், எந்தெந்த அமைச்சரால் பணம் கொடுக்க முடியாது என பேசுகிறார். நீலகிரியின் பொறுப்பு அமைச்சரை மிகமிக தவறாக ஒரு கீழ்த்தரமான வார்த்தையில் அமைச்சர் கே.என்.நேரு பேசியிருக்கிறார்.

    இது தேர்தலுக்கு பணம் கொடுக்கிறார்கள் என்பது பற்றிய விஷயம் மட்டுமல்லாமல், திமுக தனது சகாக்களை எப்படி பார்க்கிறது?, ஒரு தாழ்த்தப்பட்ட வகுப்பில் இருந்து அமைச்சராக ஒருவர் வந்தால் கே.என்.நேரு எப்படிப்பட்ட வார்த்தையால் அந்த அமைச்சரை பேசுகிறார்? என்பதை காட்டுகிறது. இவர்கள் சமூக நீதியைப்பற்றி நமக்கு பாடம் எடுக்கிறார்கள்.

    நாளை காலை பாஜக தலைவர்கள் மாநில தேர்தல் ஆணையத்திடம் இந்த வீடியோவை கொடுக்க உள்ளனர். அதை தேர்தல் ஆணையம் பார்த்துவிட்டு, மாநில டிஜிபிக்கு அதை அனுப்பலாம், தமிழ்நாடு தடயவியல் ஆய்வகத்தில் ஆய்வு செய்யலாம். எ.வ.வேலு அவர்கள் அந்த டேப்பை நான் எடிட் செய்ததாக நிரூபித்தால் அரசியலை விட்டு விலக நான் தயார்.

    கே.என்.நேரு பேசியதை அப்படியே போட்டிருக்கிறேன். அது உண்மையான ஆடியோ என்பது உறுதி செய்யப்ட்டால் முதலமைச்சர், தமிழக மக்களிடம் பகிரங்கமாக பொதுமன்னிப்பு கேட்கவேண்டும்.

    இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

    • அமமுக சார்பில் ஈரோடு மாநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் சிவபிரசாத் போட்டியிடுவார்
    • 290க்கும் மேற்பட்டோர் தேர்தல் பணிக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

    சென்னை:

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழக அலுவலகத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக நிர்வாகிகளுடன், கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆலோசனை நடத்தினார். அப்போது தேர்தல் பணிகள் குறித்து நிர்வாகிகள் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.

    கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமமுக சார்பில் ஈரோடு மாநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் சிவ பிரசாத் போட்டியிடுவார் என்று அறிவித்தார்.

    'தேர்தல் பணிகளை கவனிப்பதற்கு 290க்கும் மேற்பட்டோர் தேர்தல் பணிக்குழுவில் இடம்பெற்றுள்ளனர். இந்த தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. கூட்டணி தொடர்பாக சில கட்சிகளுடன் பேசிவருகிறோம். அதுகுறித்து விரைவில் அறிவிப்போம்' என்றும் டிடிவி தினகரன் கூறினார்.

    ×