search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "AC Shanmugam"

    • புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்துக்கு, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அழைப்பு விடுத்தார்.
    • தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் ஏ.சி.சண்முகம் பங்கேற்கிறார்.

    சென்னை:

    தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டம் டெல்லியில் இன்று மாலை நடக்கிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்க வருமாறு புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்துக்கு, பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அழைப்பு விடுத்தார்.

    இந்த அழைப்பை ஏற்று தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் ஏ.சி.சண்முகம் பங்கேற்கிறார். இதற்காக அவர் இன்று காலை டெல்லி புறப்பட்டு சென்றார்.

    • ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27-ம் தேதி நடைபெறுகிறது.
    • தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 2ம் தேதி எண்ணப்படுகிறது.

    சென்னை:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27-ம் தேதி நடைபெற உள்ளது. இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஜனவரி 31-ம் தேதி தொடங்குகிறது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 2ம் தேதி எண்ணப்படுகிறது.

    இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடும் வாய்ப்பு காங்கிரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர் தொடர்பாக ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.

    இதன்படி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. போட்டியிட த.மா.கா. ஆதரவு தெரிவித்தது. வேட்பாளர் தொடர்பாக அ.தி.மு.க. சார்பில் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே, சென்னையில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் தமிழக மாநிலத் தலைவர் அண்ணாமலையை எடப்பாடி பழனிசாமி அணியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் சந்தித்தனர்.

    இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளரை நிறுத்தினால் ஆதரிப்போம் என புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் அறிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஏ.சி.சண்முகம், தமிழக அரசியலில், தேசிய ஜனநாயக கூட்டணியில் தற்போது இக்கட்டான சூழ்நிலை உருவாகி உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளரை நிறுத்தினால், புதிய நீதிக் கட்சி அதனை வரவேற்கும் என தெரிவித்தார்.

    வேலூர் தொகுதி தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி தேர்தல் ஆணையத்தில் ஏ.சி.சண்முகம் மனு ஒன்றை அளித்துள்ளார். #VelloreLSPolls #ACShanmugam
    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் தி.மு.க. சார்பில் துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த், அ.தி.மு.க. கூட்டணி சார்பில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் ஆகியோர் போட்டியிட்டனர்.

    அங்கு தீவிர பிரசாரம் செய்யப்பட்டு வந்த நிலையில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த்தின் நண்பர்கள் வீடு மற்றும் கல்லூரியில் நடந்த சோதனையில் ரூ.11 கோடி சிக்கியது.

    இதையடுத்து வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    தமிழகத்தில் கடந்த 18-ந்தேதி நடந்த ஓட்டுப்பதிவில் வேலூரை தவிர 38 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது.



    வேலூர் தொகுதிக்கு எப்போது தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அந்த தொகுதி தேர்தலை மே 19-ந்தேதி தமிழகத்தில் நடக்கும் 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலோடு சேர்த்து நடத்த வேண்டும் என்று அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் வலியுறுத்தி வருகிறார்.

    இந்த நிலையில் ஏ.சி. சண்முகம் இன்று டெல்லி சென்று தலைமை தேர்தல் ஆணையத்தில் மனு ஒன்றை கொடுத்தார். அதில், வேலூர் தொகுதி தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளார். #VelloreLSPolls #ACShanmugam
    சட்டசபை இடைத்தேர்தல் நடைபெறும் மே 19-ந் தேதி வேலூர் தேர்தலையும் நடத்த வேண்டும் என்று ஏ.சி.சண்முகம் கூறியுள்ளார். #acshanmugam #admk #parliamentelection

    வேலூர்:

    வேலூர் தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளராக போட்டியிட்ட புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நாடு முழுவதும் பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் நடக்கிறது. ஆனால் இன்று நடக்க இருந்த வேலூர் தொகுதி தேர்தல் மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இங்குள்ள மக்கள் மட்டும் ஓட்டுப்போட முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது. இது அவமானம்தான். மக்கள் ஓட்டுப்போடாமல் போனது துரதிஷ்டவசமானது.

    தேர்தல் நடத்துவது குறித்து எங்கள் வக்கீல் குழுவினருடன் ஆலோசனை நடத்தி சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்துவிட்டது. தேர்தல் கமி‌ஷனுக்கு என்னுடைய அன்பு வேண்டுகோள். வரும் மே மாதம் 19-ந் தேதி தமிழகத்தில் 4 சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடக்கிறது. அந்த தேர்தலுடன் நிறுத்தப்பட்ட இந்த பாராளுமன்ற தொகுதி தேர்தலையும் நடத்த வேண்டும்.

    ஐகோர்ட்டு தள்ளுபடி செய்த மனுவை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்து அங்கேயும் இதுபோன்ற தீர்ப்பு வந்தால் தேவையில்லாமல் வருமான வரித்துறையினருடன் உரசல் ஏற்படும். வருமான வரித்துறை இந்த வழக்கை துரிதமாக முடிக்க வேண்டும். அப்போதுதான் தேர்தல் விரைவில் நடக்கும். தி.மு.க. வேட்பாளர் செய்த தவறால் இந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    தேர்தல் கமி‌ஷன் தன்னிச்சையாக முடிவு எடுக்ககூடியது. அவர்களின் முடிவுக்கு பிரதமர் மோடியை குறை கூறுவது தவறு. இந்த தேர்தலை ரத்து செய்தது ஒரு வகையில் தி.மு.க.வுக்கு சாதகமானதுதான்.

    பெரிய தோல்வியில் இருந்து அவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர். எனவே தாமதம் செய்யாமல் தேர்தல் நடத்த வேண்டும். இல்லையென்றால் சுப்ரீம் கோர்ட்டுக்கு செல்வேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இன்று காலை ஆரணி நாடாளுமன்ற தொகுதி ஆரணி கொசப்பாளையத்தில் ஏ.சி.சண்முகம் ஓட்டு போட்டார். அப்போது நிருபர்களிடம் பேட்டி அளித்த அவர் பேச முடியாமல் கண்கலங்கினார். பின்னர் நிறுத்தபட்ட வேலூர் நாடாளுமன்ற தேர்தலை 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெறும் மே 19-ந் தேதி நடத்த வேண்டும் என்றார். #acshanmugam #admk #parliamentelection

    வேட்பாளர் தவறு செய்தால் ஒட்டுமொத்தமாக தேர்தலை ரத்து செய்யக்கூடாது என வேலூர் பாராளுமன்றத் தொகுதி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் வழக்கறிஞர் ஐகோர்ட்டில் வாதாடினார். #LokSabhaElections2019 #VelloreConstituency
    சென்னை:

    வேலூர் பாராளுமன்றத் தொகுதியில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையின்போது, திமுக வேட்பாளர் கதிர் ஆனந்தின் வீடு, அவரது கல்வி நிறுவனம் மற்றும் திமுக பிரமுகர் சீனிவாசன் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அதிக அளவிலான பணம் பறிமுதல் செய்யப்பட்டதால், அந்த தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    ஆனால், தனது வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கு சரியாக கணக்கு காண்பிக்கப்பட்டதாக கூறியுள்ள கதிர் ஆனந்த், அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை வெற்றி பெற வைப்பதற்காக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதாக குற்றம்சாட்டினார். திட்டமிட்டபடி தேர்தலை நடத்தக்கோரி தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதி உள்ளார்.



    இந்நிலையில், வேலூர் தொகுதியில் தேர்தலை நடத்தக் கோரி அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது மனு இன்று அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. தேர்தல் ரத்து செய்யப்படுவதால் மக்களின் வரிப்பணம் தான் வீணாகிறது என்று மனுதாரர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

    ஏ.சி.சண்முகம் சார்பில் மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன் ஆஜராகி வாதாடினார். ஒரு கட்சியோ அல்லது வேட்பாளரோ தவறு செய்தால் தவறு செய்த வேட்பாளர் மற்றும் அவர் சார்ந்த கட்சி மீதுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒட்டுமொத்தமாக தேர்தலை ரத்து செய்யக்கூடாது என வலியுறுத்தினார். சட்டம்-ஒழுங்கு பிரச்சனை, இயற்கை பேரிடர் போன்ற காரணங்களால் மட்டுமே தேர்தலை ரத்து செய்யவோ ஒத்திவைக்கவோ முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். #LokSabhaElections2019 #VelloreConstituency
    வேலூரில் துரைமுருகன் வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனைக்கு என் மீது பழி போடுவதா? என்று ஏ.சி. சண்முகம் ஆவேசமாக கூறினார். #ITRaid #DuraiMurugan #ACShanmugam
    வேலூர்:

    வேலூர் தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    துரைமுருகன் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்று உள்ளது. இதற்கு நானும் பா.ஜனதா கட்சியும் தான் காரணம் என்று துரைமுருகன் கூறியுள்ளார். இது அப்பட்டமான பொய். சென்ற மாதம் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் ரெய்டு நடந்தது. நாங்கள் யார் மேலேயும் பழி போடவில்லை.


    அண்ணன் துரைமுருகன் மீது மிகுந்த மரியாதை கொண்டவன் நான். அரசியல் நாகரிகம் கருதி நான் இதுவரை எதுவும் பேசவில்லை. நான் பேச ஆரம்பித்தால் துரைமுருகன் ஒரு மாதம் தூங்க மாட்டார்.

    இவர்களுக்கு எந்த நாட்டில் என்ன உள்ளது என்பதை நான் சொல்ல வேண்டியதாக இருக்கும்.

    பொதுவாக இந்த ரெய்டு எல்லாம் ஒருவர் போனில் பேசுவதை வைத்து தான் உளவுத்துறை மூலம் அறிந்து சோதனை நடைபெறும். இது கூட தெரியாமல் அடுத்தவர் மீது பழிபோடுவது மிக தவறு.

    இவ்வாறு அவர் கூறினார். #ITRaid #DuraiMurugan #ACShanmugam
    கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக முதல்வரிடம் திருமாவளவன், ஏ.சி.சண்முகம் நிதிஉதவி வழங்கினர். #gajacyclone #thirumavalavan #acshanmugam
    சென்னை:

    ‘கஜா’ புயலால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நிவாரணம் மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கு பணம் வழங்கலாம் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்திருந்தார்.

    இதையடுத்து முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு அதிகமானோர் பணம் அனுப்பி வருகின்றனர். அந்த வகையில் சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் வேந்தர் ஏ.சி.சண்முகம் தனது மகன் ஏ.சி.எஸ்.அருண்குமாருடன் சேர்ந்து சந்தித்து ரூ.20 லட்சத்துக்கான காசோலை வழங்கினார். 

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் ரூ.10 லட்சத்துக்கான காசோலையும், மதுரை புறநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ரூ.10 லட்சத்துக்கான காசோலையும் வழங்கினர்.

    நடிகர் விவேக் ரூ.5 லட்சத்துக்கான காசோலை வழங்கினார். #gajacyclone  #thirumavalavan #acshanmugam
    அண்ணா, எம்.ஜி.ஆருக்குப்பின் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய தலைவராக ரஜினிகாந்த் இருக்கிறார் என புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் கூறியுள்ளார்.
    சென்னை:

    புதிய நீதிக்கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகம் நேற்று தனது பிறந்தநாளையொட்டி சென்னை அண்ணா மேம்பாலம் அருகில் உள்ள சிறுமலர் கண் பார்வையற்றோர், காது கேளாதோர் பள்ளி குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கு உடைகள், இனிப்பு வழங்கினார்.

    புதிய நீதிக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகம் தலைமையில் ராணிசீதை அரங்கில் நேற்று மாலை நடைபெற்றது. செயல் தலைவர் ஏ.ரவிக்குமார் முன்னிலை வகித்தார். இதில் இணை பொதுச்செயலாளர் ஆர்.டி.சேதுராமன், இளைஞரணி செயலாளர் எஸ்.ஏ.ராஜாராம், தலைமை நிலைய செய்தி தொடர்பாளர் ஆர்.முரளி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

    இதில் பல்வேறு அரசியல் விவகாரங்கள் பற்றியும், கட்சியின் செயல்பாடுகள் பற்றியும் ஆலோசிக்கப்பட்டது.

    கூட்டத்தில், ராஜீவ்காந்தி கொலை கைதிகள் 7 பேரை கவர்னர் விடுதலை செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அண்ணாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும். நூற்றாண்டு நினைவாக சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர். பெயரை சூட்டவேண்டும். முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த சட்டரீதியான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்பது உள்பட 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    பெட்ரோல்-டீசல் விலை உயர்வை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும். புதிய நீதிக்கட்சி தற்போதுவரை பா.ஜ.க. கூட்டணியில் தான் இருக்கிறது. நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்கள் வரும்போது பொதுக்குழு கூடி கூட்டணி குறித்து முடிவு செய்யும்.

    அண்ணா, எம்.ஜி.ஆர்., கருணாநிதிக்கு பிறகு சிறந்த அரசியல் தலைவர்கள் இல்லை. எல்லோரையும் மதிக்கக்கூடியவர், மக்களிடம் செல்வாக்கு பெற்றவர் என்றால் அது ரஜினிகாந்த் தான். நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க வேண்டும். அவர் கட்சி தொடங்கியதும் புதிய நீதிக்கட்சி அவரோடு இணைந்து பயணிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஏ.சி.சண்முகம் பிறந்தநாளையொட்டி அமைச்சர் கே.பாண்டியராஜன், பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன், பா.ம.க. துணைப் பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.
    ரஜினிகாந்த் கட்சி தொடங்குவது உறுதி என்றும் டிசம்பர் மாதம் அது பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் என்றும் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார். #Rajinikanth #RajiniMakkalMandram #ACShanmugam
    சென்னை:

    புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கேட்கப்பட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

    கேள்வி:- நடிகர் ரஜினிகாந்த் புதிய கட்சி தொடங்குவதாக கூறினார். அவர் உங்கள் நண்பர். அறிவிப்பு எப்போது வரும் என்று கூற முடியுமா?

    பதில்:- ரஜினி கட்சி தொடங்குவது உறுதி. டிசம்பர் மாதம் அது பற்றிய அறிவிப்பை வெளியிட இருக்கிறார்.


    கேள்வி:- உங்கள் புதிய நீதி கட்சி அவருடன் இணைந்து செயல்படுமா?

    பதில்:- ரஜினி தொடங்கும் புதிய கட்சியுடன் புதிய நீதி கட்சியும் கரம் கோர்த்து செயல்படும்.

    இவ்வாறு ஏ.சி.சண்முகம் கூறினார். #Rajinikanth #RajiniMakkalMandram #ACShanmugam
    ஏ.சி.சண்முகத்தின் பாராட்டு விழாவில் கலந்துக் கொண்ட நடிகர் ரஜினிகாந்த், உழைப்பவர்கள் மட்டும் வாழ்க்கையில் முன்னேற முடியாது என்று கூறியிருக்கிறார். #Rajini
    கல்வி நிறுவன அதிபரான ஏ.சி.சண்முகம் டாக்டர் பட்டம் பெற்றதை தொடர்ந்து அவருக்கு பாராட்டு விழா சென்னையில் நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த ஏ.சி.சண்முகத்தின் உழைப்பு தன்னை மிகவும் கவர்ந்த ஒன்று என்றும் அதைவிட அவரின் தலை அலங்காரம் தன்னை மிகவும் கவர்ந்த ஒன்றும் என்றும் தானும் அவரை போல முடியை வைத்திருக்கலாம் என்று தோன்றும் என நகைச்சுவையாக குறிப்பிட்டார். 

    பரமஹம்சர் காசிக்கு போக ஆசைப்பட்டார். சேர்த்து வைத்த பணத்தை கொண்டு போகும் வழியில், மக்கள் பட்ட கஷ்டத்தை கண்டு எல்லோருக்கும் உணவளித்து விட்டு அவர்களின் முகத்தில் தெரியும் மகிழ்ச்சியை கண்டு இவர்கள் வாயிலாக இறைவனை தரிசித்து விட்டதாக கூறி சென்று விட்டார்.



    உழைப்பவர்கள் மட்டும் வாழ்க்கையில் முன்னேற முடியாது. எல்லோரும் உழைத்தாலும் கடவுளின் அருளும் நல்லமனமும் இருந்தால் தான் முன்னேற முடியும். நம் உடம்பை நாம் பிஸியாக வைத்துக்கொண்டால் உடல் நன்றாக இருக்கும்’ என்றார்.
    ×