என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Maharashtra Election Results"

    • மகாராஷ்டிராவில் 288 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த 20-ந்தேதி தேர்தல் நடைபெற்றது.
    • ஜார்க்கண்ட் மாநிலதில் 81 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.

    மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தல், ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல், வயநாடு இடைத்தேர்தல், பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதி தேர்தலுக்கான வாக்குகள் எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    • சிக்கிம் மாநிலத்தில் உள்ள 2 தொகுதிகளில் போட்டியின்றி ஆளும் கட்சி வெற்றிபெற்றது.
    • கேரளாவில் உள்ள 2 தொகுதியில் பா.ஜ.க. ஒரு இடத்தில் முன்னிலையில் உள்ளது.

    புதுடெல்லி:

    மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மாநில சட்டசபை இடைத்தேர்தலோடு 14 மாநிலங்களில் உள்ள 48 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது.

    இதில் சிக்கிம் மாநிலத்தில் உள்ள 2 தொகுதிகளில் போட்டியின்றி ஆளும் கட்சி வெற்றிபெற்றது. இதனால் 13 மாநிலங்களில் உள்ள 46 தொகுதிகளில் மட்டும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

    உத்தரபிரதேசம் (9 தொகுதி), ராஜஸ்தான் (7), மேற்கு வங்காளம் (16), அசாம் (5), பீகார், பஞ்சாப் (தலா 4 இடம்) உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 46 தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

    இதில் பா.ஜ.க. 17 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் 7 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ்-6, சமாஜ்வாதி-22, ஆம் ஆத்மி-2, பகுஜன் சமாஜ்-1, ஐக்கிய ஜனதா தளம்-1, மத சார்பற்ற ஜனதா தளம்-1, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு-1, அசாம் தன பரிஷத்-1, மற்றவை-6, சுயேட்சை-1 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளனர்.

    உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள 9 தொகுதிகளில் பா.ஜ.க. 6 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காசியாபாத், குண்டார்த்தி, தைர், புல்பூர், கதேரி, மஜாவன் ஆகிய தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர்கள் கூடுதல் வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளனர். பா.ஜ.க. கூட்டணியில் உள்ள ராஷ்டிரிய லோத்தளம் மிர்பூர் தொகுதியில் முன்னிலையில் இருக்கிறது.

    சமாஜ்வாதி கட்சி 2 இடங்களில் (கர்ஹல், சிசா மாவு) வெற்றி முகத்துடன் இருக்கிறது.

    மம்தா பானர்ஜி ஆளும் மேற்கு வங்காள மாநிலத்தில் 6 இடங்களில் சட்டசபை இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்தது.

    ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள 7 இடங்களில் ஆளும் பா.ஜ.க. 16 தொகுதிகளில் முன்னிலை வகித்தது. காங்கிரஸ் ஒரு இடத்தில் மட்டுமே முன்னிலை வகித்தது.

    பஞ்சாபில் உள்ள 4 தொகுதிகளில் ஆம் ஆத்மி 2 இடத்திலும், காங்கிரஸ் 2 இடத்திலும் முன்னிலையில் உள்ளது.

    பீகாரில் பா.ஜ.க.-1, ஐக்கிய ஜனதாதளம்-1, பகுஜன் சமாஜ்-1, இந்துஸ் தான் அவாமி மோர்ச்சா 1 இடத்திலும் முன்னிலையில் உள்ளன.

    அசாமில் பா.ஜ.க. 2 இடத்திலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும், அசாம் கனபரிஷத் ஒரு தொகுதியிலும் முன்னிலையில் உள்ளது.

    கேரளாவில் உள்ள 2 தொகுதியில் பா.ஜ.க. ஒரு இடத்தில் முன்னிலையில் உள்ளது. பாலக்காடு தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் கிருஷ்ணகுமார் 464 ஓட்டுகள் கூடுதலாக பெற்று முன்னிலையில் உள்ளார்.

    சேலக்கரை தொகுதியில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு முன்னிலையில் இருக்கிறது.

    கர்நாடகாவில் 3 சட்டசபை தொகுகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில் சண்டூர் தொகுதியில் காங்கிரஸ்-பா.ஜ.க. வேட்பாளர் இடையே கடும் போட்டி நிலவியது. 8-வது சுற்று முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் 33 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார்.

    ஷிகான் தொகுதியில் பா.ஜ.க. முன்னிலையில் இருந்தது. சென்ன பட்னா தொகுதியில் மதசார்பற்ற ஜனதா தளம் முன்னிலை பெற்றது.

    மத்திய பிரதேசத்தில் 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில் விஜயப்பூர் தொகுதியில் பா.ஜ.க.வும், புத்தினி தொகுதியில் காங்கிரசும் முன்னிலை பெற்றது.

    குஜராத்தின் வி.ஏ.வி. தொகுதியில் காங்கிரசும், சத்தீஸ்கர் மாநிலம் தெற்கு ராய்ப்பூர் நகர் தொகுதியில் பா.ஜ.க.வும் முன்னிலையில் இருந்தன. மேகாலயா மாநிலம் காம்பேக்ரே தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. இதில் தேசிய மக்கள் கட்சி சார்பில் முதல்-மந்திரி கான்ராட் கே.சங்மாலின் மனைவி மெஹ்தாப் பூண்டி சங்மா போட்டியிட்டார். மேலும் காங்கிரஸ், பா.ஜ.க., திரிணாமுல் காங்கிரஸ் களத்தில் குதித்தன.

    இன்று நடந்த வாக்கு எண்ணிக்கையில் மெஹ்தாப் தொடக்கத்தில் இருந்தே முன்னிலையில் இருந்தார். மொத்தம் 4 சுற்றுகள் உள்ள நிலையில் 3 சுற்று முடிவில் மெஹ்தாப் 3817 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார்.

    உத்தரகாண்டின் கேதார்நாத் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளர் முன்னிலை பெற்றார்.

    • ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரன் மீது அப்பட்டமான ஊழல் குற்றச்சாட்டு உள்ளது.
    • மகாராஷ்டிராவை பொறுத்தவரை, ராகுல் காந்தி, சரத் பவார் பிரசாரம் கொஞ்சம் கூட எடுபடவில்லை.

    மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க தேவையான தொகுதிகளையும் தாண்டி பாஜக முன்னிலை பெற்றதால் சென்னையில் உள்ள பாஜக அலுவலகத்தில் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

    இந்நிலையில் தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    இந்தியாவில் பலம் பொருந்திய மாநிலம் மகாராஷ்டிரா. சின்ன இந்தியா என்றே சொல்லலாம். பலதரப்பட்ட மக்களும், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலத்தில் உள்ள மக்களும் கணிசமான மக்கள்தொகையோடு வாழக்கூடிய மாநிலம் மகாராஷ்டிரா. அதனால் பரவலாக பாஜகவிற்கு வெற்றி கிடைத்துள்ளது. இதை ஒட்டுமொத்த பாரதத்தின் குரலாக பார்க்கிறேன்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக பெற்றுள்ள வெற்றி சரித்திர வெற்றி.

    ஜார்க்கண்டில் ஹேமந்த் சோரன் மீது அப்பட்டமான ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. அது நிருபிக்கப்பட்டு உள்ளது. சில நேரங்களில் ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்படும்போது கூட அது ஒரு அனுதாபத்தை ஏற்படுத்தி விடுகிறது. அப்படிதான் அந்த மக்களிடம் எடுபட்டு இருக்கும்.

    ஹேமந்த் சோரன் ஏதோ தேர்தலுக்காக கைது செய்யப்பட்டது போல கூறுவது தவறு. அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு இருக்கிறது. குற்றம் நிருபிக்கப்பட்டு உள்ளது. அதனால் அவர் கைது செய்யப்பட்டார்.

    ஆனாலும் மக்கள் தீர்ப்பை மதிக்கிறேன். குறைத்து மதிப்பிடவில்லை.

    உண்மையிலேயே பாஜக கட்சி போன தடவை இருந்ததைவிட தற்போது ஜார்க்கண்டில் அதிக வாக்குகள் பெற்று இருக்கிறது. 2 மாநிலங்களிலுமே மக்கள் எங்களுக்கு ஆதரவு அளித்து வருகிறார்கள்.

    மகாராஷ்டிராவை பொறுத்தவரை, ராகுல் காந்தி, சரத் பவார் பிரசாரம் கொஞ்சம் கூட எடுபடவில்லை.

    இன்று யாராலும் வெல்ல முடியாதவராக பாரத பிரதமர் இருக்கிறார் என்பதையும் தேர்தல் முடிவுகள் மூலம் தெரிகிறது என்று கூறினார்.

    • மகாராஷ்டிராவில் ஒட்டுமொத்தமாக பாஜக கூட்டணி 228 இடங்களில் முன்னிலையில் உள்ளது.
    • மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் இல்லத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் ஆலோசனை.

    மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளதை தொடர்ந்து, பாஜக கூட்டணி தலைவர்கள் அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    மகாராஷ்டிராவில் ஒட்டுமொத்தமாக பாஜக கூட்டணி 228 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

    இதையடுத்து, மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் இல்லத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    மேலும், பாஜக மூத்த தலைவரும், துணை முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸ், தேசிய வாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவார் உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    அங்கு, மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் யார் ? அமைச்சரவையில் கூட்டணி கட்சிகளுக்கான பிரதிநிதித்துவம் குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.

    • பிரதமர் மோடி மீது தொடர்ந்து மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.
    • புதிய நீதிக் கட்சியின் சார்பில் வாழ்த்துக்கள்.

    சென்னை:

    புதிய நீதிக் கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர் ஏ.சி.சண்முகம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

    மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநிலங்களுக்கு நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில், மகாராஷ்டிராவில் பா.ஜ.க தலைமையிலான கூட்டணி மிக பெரிய வெற்றியை பெற்று இருக்கிறது. ஜார்கண்ட் மாநிலத்தில் பா.ஜ.க மூன்றில் ஒரு பங்கு இடங்களில் முன்னிலையில் உள்ளது.

    மகாராஷ்டிரா தேர்தல் பிரச்சாரத்தின் போது, எதிர்கட்சிகள் பிரதமர் மோடி மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை அம்மாநில மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

    பிரதமர் மோடி மீது தொடர்ந்து மக்கள் நம்பிக்கை வைத்து உள்ளனர் என்பது உண்மையாகி உள்ளது. ஜார்கண்ட் மாநில மக்கள் பாரதீய ஜனதா கட்சிக்கு கணிசமான வாக்குகளை அளித்துள்ளனர் என்பதும் உண்மை.

    மகாராஷ்டிராவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ள பா.ஜ.க தலமையிலான கூட்டணியின் ஆதர்ஷய நாயகன் பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு புதிய நீதிக் கட்சியின் சார்பில் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மகாராஷ்டிராவின் சட்டசபை காலம் நாளையுடன் முடிவடைகிறது.
    • அதற்குள் புதிய முதல்வர் பதவி ஏற்க வேண்டும். அதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 20-ந்தேதி 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. நேற்று முன்தினம் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் பா.ஜ.க.,சிவ சேனா (ஏக்நாத் ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) கட்சிகளை கொண்ட மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றது.

    முதல்வர் யார் என்பதில் இந்த கூட்டணிக்குள் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. முதல்வர் யார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இதற்கிடையே நாளையுடன் மகாராஷ்டிரா மாநிலத்தின் சட்டமன்ற காலம் முடிவடைகிறது. அதற்குள் புதிய அரசு அமைக்கப்பட வேண்டும். முதல்வர் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதால் நாளைக்குள் புதிய அரசு அமைக்கப்பட வாய்ப்பு இல்லை.

    நாளைக்குள் ஒருவேளை முதல்வர் பதவி ஏற்கவில்லை என்றால் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்படுமா? என அனுமானம் எழுந்துள்ளது.

    ஆனால் 26-ந்தேதிக்குள் புதிய ஆட்சி அமைக்க வேண்டும் என அரசியலமைப்பு தேவை இல்லை எனச் சொல்லப்படுகிறது.

    மகாராஷ்டிராவில் இதற்கு முன்னதாக சட்டசபை காலம் காலாவதியான நிலையிலும் சில நாட்கள் கழித்து புதிய அரசு அமைக்கப்பட்டுள்ளதற்கு உதாரணம் உள்ளது.

    10-வது சட்டமன்ற காலம் 2004-ம் ஆண்டு நவம்பர் 3-ந்தேதி முடிவடைந்துள்ளது. 12-வது சட்டமன்றத்திற்காக முதல்வர் நம்வபர் 7-ந்தேதி பதவி ஏற்றுள்ளார்.

    அதேபோல் 12-வது சட்டசபை காலம் 2014-ம் ஆண்டு நவம்பர் 8-ந்தேதியுடன் முடிவடைந்தது. 13-வது சட்டமன்றத்திற்கான புதிய முதல்வர் சில நாட்கள் கழித்துதான் பதவி ஏற்றுள்ளார்.

    13-வது சட்டமன்ற காலம் 2019 நவம்பர் 19-ந்தேதி முடிவடைந்தது. 14-வது சட்டமன்ற காலத்திற்கான புதிய முதல்வர் நவம்பர் 28-ந்தேதிதான் பதிவு ஏற்றார்.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல்வர்கள் பதவி ஏற்க சில நாட்கள் எடுத்துக் கொள்ளப்பட்டது பல முறை நடந்துள்ளது எனச் சொல்லப்படுகிறத.

    மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. 132 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. சிவசேனா 57 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சி 41 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

    உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா 20 இடங்களிலும், காங்கிரஸ் 16 இடங்களிலும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 10 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

    • EVM-ல் பதிவான வாக்குகளையும், VVPAT ரசீதுகளையும் ஒப்பிட்டு பார்க்கப்பட்டது.
    • இந்த முரண்பாடும் அதாவது வாக்கு எண்ணிக்கையில் வேறுபாடு இல்லை என தெரிவிப்பு.

    மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. வாக்கு இயந்திரத்தில் முறைகேடு செய்து பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்றதாக மகா விகாஸ் அகாடி கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டினர். மகாயுதி கூட்டணி 235 இடங்களில் வெற்றி பெற்றது. மகா விகாஸ் அகாடி 46 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

    இந்த நிலையில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற கடந்த 23-ந்தேதி தேர்தல் ஆணையம் ஒவ்வொரு தொகுதியில் இருந்தும ஐந்து வாக்கு மையங்களின் VVPAT ரசீதுகளை எண்ணியுள்ளது.

    VVPAT ரசீதுகளின் மொத்த எண்ணிக்கையும், EVM-ல் பதிவான வாக்குகளையும் ஒப்பிட்டு பார்க்கப்பட்டது. இரு வாக்குகள் சரியாக இருந்தது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    தேர்தல் ஆணையத்தின் பார்வையாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் பிரதிநிதிகள் ஆகியவர்களுடன் சரிபார்த்ததற்கான ஆவணங்களில் கையெழுத்து வாங்கப்பட்டது.

    இந்த எண்ணிக்கை கடும் பாதுகாப்பு நடவடிக்கையுடன் தனி அறைகளில், சிசிடிவி மேற்பார்வையில் நடைபெற்றது. இந்த தகவலை தேர்தல் ஆணையம் தற்போது வெளியிட்டுள்ளது.

    ×