என் மலர்

  நீங்கள் தேடியது "BJP alliance"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மத்தியில் ஆட்சியமைக்க தேவையான மேஜிக் நம்பரைத் தாண்டி, பாஜக மட்டும் தனித்து 300 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருப்பதால், மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்க உள்ளார்.
  சென்னை:

  பாராளுமன்ற மக்களவையில் மொத்தம் 545 இடங்கள் உள்ளன. இதில் 2 இடங்கள் ஜனாதிபதியால் நேரடியாக நியமனம் செய்யப்படும். மீதமுள்ள 543 இடங்களுக்கு தேர்தல் மூலம் எம்.பி.க்கள் தேர்ந்து எடுக்கப்படுவார்கள்.

  91 கோடி வாக்காளர்களைக் கொண்ட இந்தியாவில் 5 ஆண்டுகளுக்கு ஒரு தடவை நடத்தப்படும் தேர்தல்தான், உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழா என்று வர்ணிக்கப்படுகிறது. அதை பிரதிபலிக்கும் வகையில் பாராளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 11-ந்தேதி தொடங்கி மே 19-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடந்தன. பணப் பட்டுவாடா புகார் காரணமாக வேலூர் தொகுதி தேர்தல் மட்டும் நிறுத்தப்பட்ட நிலையில் மீதமுள்ள 542 தொகுதிகளில் தேர்தல் நடந்தது.

  இந்த தேர்தலில் பாரதிய ஜனதா, காங்கிரஸ் மற்றும் மாநில கட்சிகளுக்கு இடையே மிகக் கடுமையான பலப்பரீட்சை நடந்தது. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 40 கட்சிகளும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் 25 கட்சிகளும் இடம் பெற்றிருந்தன. பாரதிய ஜனதா அதிகபட்சமாக 437 தொகுதிகளிலும் காங்கிரஸ் 421 தொகுதிகளிலும் போட்டியிட்டன.

  273 தொகுதிகளில் பாரதிய ஜனதா, காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே நேரடி போட்டி ஏற்பட்டது. கடந்த 2 மாத தீவிர பிரசாரத்தைத் தொடர்ந்து 7 கட்ட ஓட்டுப்பதிவு நடந்து முடிந்தது. இந்த தடவை தேர்தலில் இதுவரை இல்லாத சாதனையாக 67.11 சதவீதம் வாக்குகள் பதிவானது.

  ஓட்டுப்பதிவு நிறைவு பெற்று 3 நாட்கள் இடைவெளி விட்டு, இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று தகவல்கள் வெளியாகி இருந்தது. இன்று காலை 8.15 மணிக்கு முன்னணி நிலவரம் தெரிய வந்தபோது பா.ஜனதா அதிக தொகுதிகளில் முன்னிலைப் பெற்று கருத்துக் கணிப்பை உறுதிப்படுத்தியது.

  காலை 8.30 மணிக்கு அதாவது ஓட்டு எண்ணிக்கை தொடங்கிய 30 நிமிடங்களில் பாரதிய ஜனதா கட்சி 160 இடங்களில் முன்னிலை பெற்றது. காங்கிரஸ் கட்சி 60 இடங்களில் மட்டுமே முன்னிலை இருந்தது.

  9 மணி அளவில் 403 தொகுதிகளின் முன்னிலை நிலவரம் தெரிய வந்தது. அப்போது பாரதிய ஜனதா கட்சி 236 தொகுதிகளில் முன்னிலை பெற்று இருந்தது. காங்கிரஸ் கட்சி 96 இடங்களிலும் மாநில கட்சிகள் 73 இடங்களிலும் முன்னிலை பெற்று இருந்தன.

  10 மணி அளவில் 542 தொகுதிகளின் முன்னிலை நிலவரம் அறிவிக்கப்பட்டது. அதில் பாரதிய ஜனதா கூட்டணி 330 தொகுதிகளில் வெற்றி வாய்ப்புடன் முன்னிலைப் பெற்றது.  காங்கிரஸ் கூட்டணி சுமார் 110 இடங்களுடன் பின் தங்கி விட்டது. மாநில கட்சிகளும் சுமார் 102 தொகுதிகளுடன் தத்தளித்தப்படி இருந்தன.

  காங்கிரஸ் கட்சியும் மாநில கட்சிகளும் சேர்ந்து ஆட்சி அமைக்க நேற்று மாலை வரை ரகசிய பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டு வந்தன. ஆனால் இன்று வெளியான தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்களுக்கும், மாநில கட்சிகளின் தலைவர்களுக்கும் மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக இருந்தன.

  காங்கிரசும், மாநில கட்சிகளும் வெற்றி பெற்ற தொகுதிகளை சேர்த்தால் 212 இடங்களில்தான் முன்னிலையில் இருந்தன.

  பிற்பகல் தெளிவான முன்னிலை நிலவரம் அறிவிக்கப்பட்ட போது பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 345 தொகுதிகளை கைப்பற்றும் வகையில் இமாலய வெற்றியை நோக்கி முன்னேறிக் கொண்டு இருந்தது. பாஜக மட்டும் 300 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது.

  பாரதிய ஜனதா கட்சி கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் அதிகப்படியான வெற்றியை பெறும் சூழ்நிலை உள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு தனிப்பட்ட முறையில் 282 இடங்களில் வெற்றி கிடைத்து இருந்தது.

  இந்த தடவை பாரதிய ஜனதா தனிப்பட்ட முறையில் 289 தொகுதிகளை கைப்பற்றும் நிலையில் உள்ளது. இதன் மூலம் பா.ஜனதா கூட்டணி மீண்டும் இமாலய பலத்துடன் மத்தியில் ஆட்சி அமைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

  காங்கிரஸ் கட்சி கடந்த பாராளுமன்ற தேர்தலின்போது 44 இடங்களில் வெற்றி பெற்று இருந்தது. இந்த தடவை அந்த எண்ணிக்கை இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. சில கருத்து கணிப்புகளில் 100-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி கிடைக்கும் என்று கூறியிருந்தது.

  ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி கிடைக்கவில்லை. 51 தொகுதிகளில்தான் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் நிலையில் உள்ளது.

  421 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 100 இடங்களில் கூட வெற்றி பெற முடியாதது காங்கிரஸ் மூத்த தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. குறிப்பாக ராகுலும், பிரியங்காவும் தீவிர பிரசாரம் செய்தும் காங்கிரஸ் கட்சியை தூக்கி நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

  கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் காங்கிரஸ் கட்சிக்கு கூடுதலாக வெறும் 6 அல்லது 7 இடங்களே கிடைக்கும் சூழ்நிலை உள்ளது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு 95 முதல் 100 இடங்கள் கிடைக்கும் நிலை உள்ளது.

  பாரதிய ஜனதா கூட்டணி சுமார் 350 இடங்களில் முன்னிலை பெற்றதன் மூலம் மத்தியில் மீண்டும் பாரதிய ஜனதா ஆட்சி அமைப்பது உறுதியாகி விட்டது. பாராளுமன்றத்தில் ஆட்சி அமைக்க 272 இடங்கள் தேவை. இந்த மேஜிக் நம்பரை பா.ஜனதா கூட்டணி மிக எளிதாக எட்டிப்பிடித்தது.

  எனவே நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆகிறார். பதவி ஏற்பு விழா அடுத்த வாரம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆட்சியமைக்கத் தேவையான எண்ணிக்கையை விட அதிக தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்றதால், இந்திய பங்குச்சந்தைகள் இன்று எழுச்சி பெற்றன.
  புதுடெல்லி:

  பாராளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. துவக்கம் முதலே பாஜக கூட்டணி அதிக தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இரண்டாவது இடத்தில் காங்கிரஸ் கூட்டணி இருந்தது. காலை 10 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 321 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது. காங்கிரஸ் கூட்டணி 110 தொகுதிகளிலும், மற்ற கட்சிகள் 110 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றிருந்தன.

  ஆட்சியமைக்க தேவையான மேஜிக் நம்பரைத் தாண்டி பாஜக கூட்டணி அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்றிருப்பதால் பாஜக தலைவர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.


  பாஜக அதிக தொகுதிகளில் முன்னிலை பெற்று வெற்றியை நோக்கி பயணிப்பதால், பங்குச்சந்தைகளும் எழுச்சி பெற்றன. இன்று காலை முதலே விறுவிறுப்பாக வர்த்தகம் நடைபெற்றது. காலை 10.30 மணி நிலவரப்படி மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 886.56 புள்ளிகள் உயர்ந்து 39,996 புள்ளிகளாக இருந்தது. இதேபோல் தேசிய பங்குச்சந்தையில் நிப்டி 257.95 புள்ளிகள் உயர்ந்து, 11,995.85 என்ற நிலையில் வர்த்தகம் நடைபெற்றது.

  சுமார் 1240 நிறுவனங்களின் பங்குகள் விலை உயர்ந்தன. 370 நிறுவனங்களின் பங்குகள் சரிந்தன. 68 நிறுவனங்களின் பங்குகளில் எந்த மாற்றமும் இல்லை. 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாராளுமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி, ஆட்சியமைக்க தேவையான 272 தொகுதிகளுக்கும் அதிகமான தொகுதிகளில் முன்னிலை பெற்றிருப்பதால், ஆட்சியை தக்க வைக்க அதிக வாய்ப்பு உள்ளது.
  புதுடெல்லி:

  பாராளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. துவக்கம் முதலே பாஜக கூட்டணி அதிக தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. இரண்டாவது இடத்தில் காங்கிரஸ் கூட்டணி இருந்தது. காலை 9.45 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 325 தொகுதிகளில் முன்னிலை பெற்றிருந்தது. காங்கிரஸ் கூட்டணி 107 தொகுதிகளிலும், மற்றவை 92 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றிருந்தன.

  தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பாஜகவுக்கு சாதகமாக இருந்தது. இந்த கருத்துக் கணிப்புகளை உறுதி செய்யும் வகையில், தற்போது பாஜக கூட்டணி பெருவாரியான தொகுதிகளில் முந்துகிறது.  இந்த முன்னிலை நிலவரத்தில் சற்று மாற்றம் ஏற்பட்டு சில தொகுதிகள் குறைந்தாலும், ஆட்சியமைக்க தேவையான 272 தொகுதிகளை பாஜக கூட்டணி பெற்றுவிடும் என தெரிகிறது. தற்போதைய முன்னிலை நிலவரத்தில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டால் மட்டுமே பாஜக கூட்டணிக்கு சிக்கல் உருவாகும்.

  அதேசமயம் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆறுதல் அளிக்கும் ஒரே விஷயம், அவர்களின் கூட்டணியில் இடம்பெறாத மற்ற கட்சிகளும் கிட்டத்தட்ட 90 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளன. பாஜகவுக்கு சற்று சறுக்கல் ஏற்படும் பட்சத்தில், இந்த கட்சிகளின் ஆதரவைப் பெற்று காங்கிரஸ் கூட்டணி ஆட்சியமைக்க அதிக வாய்ப்பு உள்ளது. 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாஜக-அதிமுக கூட்டணி அமையும் என மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே கூறியிருப்பது, பாஜகவின் கருத்து அல்ல என அமைச்சர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். #LSPolls #Jayakumar #RamdasAthawale
  சென்னை:

  பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் பரவி வரும் நிலையில், கடந்த சில தினங்களாக அதற்கு எதிர்மாறான சம்பவங்கள் நடைபெறுகின்றன. சில நாட்களுக்கு முன்பு அதிமுக எம்பியும் மக்களவைத் துணை சபாநாயகருமான தம்பிதுரை, செய்தியாளர்களை சந்தித்தபோது, பாஜகவுடன் கூட்டணி குறித்து அதிமுக தலைமை முடிவு செய்யும் என கூறினார்.

  ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணைக்கு நேற்று ஆஜரான தம்பிதுரை, பாஜகவை விமர்சித்தார். அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக மூக்கை நுழைப்பது தவறானது என்றும் பாஜக தலைவர்கள் தமிழக அரசை விமர்சிக்கும்போது மவுனமாக இருக்க முடியாது என்றும் கூறினார்.  இது ஒருபுறமிருக்க, பாஜக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் இந்திய குடியரசுக் கட்சியின் தலைவரும், மத்திய மந்திரியுமான ராம்தாஸ் அத்வாலே கூறும்போது, பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் பாஜக - அதிமுக கூட்டணி அமைய வேண்டும் என்றார்.

  இந்த நிலையில், தமிழக அமைச்சர் ஜெயக்குமார் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது கூட்டணி தொடர்பாக மத்திய மந்திரி அத்வாலே மற்றும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோரின் கருத்துக்கள் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்து ஜெயக்குமார் கூறியதாவது:-

  அனைத்துக்கும் அதிமுக ஜால்ரா அடிக்காது, அன்னப்பறவை போல் பிரித்து பார்க்கும். எதிர்க்க வேண்டியதை எதிர்க்கும், ஆதரிக்க வேண்டியதை ஆதரிக்கும்.

  மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே பாஜகவைச் சேர்ந்தவர் அல்ல; பாஜக கூட்டணியில் உள்ளவர். எனவே, கூட்டணி தொடர்பாக, தனிப்பட்ட முறையில்தான் அத்வாலே கருத்து கூறியுள்ளார்; அது பாஜக தலைமையின் கருத்து அல்ல.

  பாஜவை விமர்சிக்கும் தம்பிதுரையின் கருத்து அவரது தனிப்பட்ட கருத்தே; அது அதிமுகவின் கருத்து அல்ல. தேர்தல் வரும்போதுதான் கூட்டணி பற்றி முடிவெடுக்க முடியும்.

  தமிழகத்திற்கு நல்லது செய்பவர்களுடன் தான் அதிமுக கூட்டணி அமைக்கும். தற்போதைக்கு யாருடனும் கூட்டணி இல்லை.

  இவ்வாறு அவர் கூறினார். #LSPolls #Jayakumar #RamdasAthawale
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மக்களவைத் தேர்தலில் தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், இரு கட்சிகளும் அரசியல் என்ற முறையில் நட்புடன் இருப்பதாகவும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார்.
  திருச்சி:

  மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை திருச்சியில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

  சென்னையில் கருணாநிதி நினைவிடம் நோக்கி மு.க.அழகிரி பேரணி நடத்தியது தொடர்பான செய்தி வெளியே வரக்கூடாது என்பதற்காக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் வீடுகளில் திடீரென சோதனை நடத்தப்பட்டுள்ளது. அமைச்சர் விஜயபாஸ்கர் சிறப்பாக செயல்படுகிறார். அவர் மீது வேண்டுமென்றே புகார் கூறுகின்றனர். அமைச்சரின் செயல்பாடுகளை முடக்க எதிர்க்கட்சிகள் சதி செய்கின்றன.

  ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பதில் அரசு நல்ல முடிவை எடுக்கும்.

  மக்களவைத் தேர்தலில் தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி ஏற்பட வாய்ப்பு உண்டு. அரசியல் என்ற முறையில் பா.ஜ.க.வுடன் தி.மு.க. நட்புடன் இருக்கிறது. ஆனால், அரசு என்ற முறையில் பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. நட்புடன் இருக்கிறது.
   
  இவ்வாறு அவர் கூறினார். #ThambiDurai #LSPolls
  ×