என் மலர்
நீங்கள் தேடியது "மேட்ச் பிக்சிங்"
- வாக்காளர் பட்டியலை இயந்திரத்தால் படிக்கக்கூடிய வடிவத்தில் வழங்க மாட்டார்கள்
- வாக்காளர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலானது என்று தெரிவித்துள்ளது.
வாக்குச்சாவடிகளில் பதிவு செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகளை, வாக்குப்பதிவு முடிந்த 45 நாட்களில் அழித்துவிட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தது.
இந்நிலையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் ஆணையம் தேர்தல் தொடர்பான தரவுகளை வேண்டுமென்றே அழிக்க முயற்சிப்பதாக மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார்.
ராகுல் காந்தி தனது எக்ஸ் பதிவில், "வாக்காளர் பட்டியல்? இயந்திரத்தால் படிக்கக்கூடிய வடிவத்தில் வழங்க மாட்டார்கள். சிசிடிவி காட்சிகள்? சட்டத்தை மாற்றி மறைத்துவிட்டார்கள்.
தேர்தலின் புகைப்படம்-வீடியோ? இப்போது, 1 வருடத்தில் அல்ல, 45 நாட்களில் அழித்துவிடுவோம். யார் பதில் சொல்ல வேண்டுமோ அவர்களே ஆதாரங்களை அழிக்கிறார்கள். இது தெளிவாகிறது - மேட்ச் பிக்சிங் செய்யப்படுகிறது. மேலும் ஒரு சமரசம் செய்யப்பட்ட தேர்தல் ஜனநாயகத்திற்கு விஷம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், வாக்குச்சாவடிகளின் வெப்காஸ்டிங் காட்சிகளை பொதுவெளியில் வெளியிடுவது வாக்காளர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலானது என்று தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணைய அதிகாரிகள், இத்தகைய கோரிக்கைகள் வாக்காளர்களின் தனியுரிமை, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டங்கள் 1950 மற்றும் 1951 இன் கீழ் உள்ள சட்ட விதிகள், மற்றும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு நேர் முரணானது என்று தெரிவித்தனர்.
காட்சிகளைப் பகிர்வது வாக்காளர்களை அடையாளம் காணவும், வாக்களிக்காதவர்களைக் கண்டறியவும் வழிவகுக்கும். இது சமூக விரோத சக்திகளால் வாக்காளர்கள் அழுத்தம், பாகுபாடு அல்லது அச்சுறுத்தலுக்கு ஆளாக நேரிடலாம்.
ஒரு குறிப்பிட்ட பூத்தில் ஒரு அரசியல் கட்சிக்கு குறைவான வாக்குகள் கிடைத்திருந்தால், சிசிடிவி காட்சிகளைப் பயன்படுத்தி யார் வாக்களித்தார்கள், யார் வாக்களிக்கவில்லை என்பதைக் கண்டறிந்து, அவர்களைக் குறிவைத்து துன்புறுத்துதல் அல்லது மிரட்டுதல் போன்றவற்றுக்கு வழிவகுக்கும் என்று அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
- வெறும் 5 மாதங்களுக்குப் பின் நடந்த சட்டமன்றத் தேர்தலில் இது 9.70 கோடியாக அதிரடியாக அதிகரித்தது.
- மக்களவைத் தேர்தலில் 32% வெற்றி பெற்ற பாஜக, இந்த 85 தொகுதிகளின் அசாதாரண வாக்குப்பதிவால் சட்டமன்றத் தேர்தலில் 89% வெற்றி பெற்றது.
கடந்த ஆண்டு நடந்த மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில், ஆளும் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. ஆனால், இந்த தேர்தல் முடிவுகளில் பெரும் மோசடி நடந்திருப்பதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.
முன்னதாக நடந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியை பின்னுக்கு தள்ளி காங்கிரஸ் கூட்டணி அதிக வெற்றியை பெற்றது. ஆனால் சில மாதங்களுக்கு பின் நடந்த சட்டமன்றத் தேர்தலில் நிலைமை தலைகீழாக மாறியது. இதன் பின்னணியில் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு முக்கியத்துவம் பெற்றது.
இது குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் நீண்ட கட்டுரை எழுதியுள்ள ராகுல் காந்தி, "மேட்ச் பிக்சிங் மகாராஷ்டிரா" என்ற தலைப்பில் அடுக்கடுக்கான ஆதாரங்களை முன்வைத்துள்ளார்.

ராகுல் காந்தி கட்டுரையின் சுருக்கம்:
தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில் குளறுபடி: தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் குழுவில் எதிர்க்கட்சித் தலைவரின் பரிந்துரையை நிராகரித்து, பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் தங்கள் விருப்பப்படி ஆட்களை நியமித்தனர். இது நீதித்துறைத் தலைவரை நீக்கி முறைகேடு செய்ய வழிவகுத்தது.
போலி வாக்காளர்கள் அதிகரிப்பு: 2019-ல் 8.98 கோடியாக இருந்த வாக்காளர்கள், 2024 மக்களவைத் தேர்தலில் 9.29 கோடியாக உயர்ந்தனர். ஆனால், வெறும் 5 மாதங்களுக்குப் பின் நடந்த சட்டமன்றத் தேர்தலில் இது 9.70 கோடியாக அதிரடியாக அதிகரித்தது.
மகாராஷ்டிராவின் மொத்த வயதுவந்தோர் மக்கள் தொகையே 9.54 கோடிதான் இருக்கும் நிலையில், இந்த 41 லட்சம் வாக்காளர் அதிகரிப்பு பெரும் சந்தேகத்தை எழுப்புகிறது.
வாக்குப் பதிவில் வினோத மாற்றம்: மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்த பின்னரும், 7.83% (சுமார் 76 லட்சம்) வாக்காளர்கள் வாக்களித்ததாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இது முந்தைய தேர்தல்களை விட மிக மிக அதிகம். குறிப்பாக, 85 தொகுதிகளில் உள்ள 12,000 வாக்குச்சாவடிகளில் மட்டும், மாலை 5 மணிக்குப் பிறகு சராசரியாக 600க்கும் மேற்பட்டோர் வாக்களித்துள்ளனர். ஒரு வாக்குக்கு ஒரு நிமிடம் என்றாலும், 10 மணி நேரம் வாக்குப்பதிவு நடந்திருக்க வேண்டும்!
பாஜக வெற்றிஅதிகரிப்பு: மக்களவைத் தேர்தலில் 32% வெற்றி பெற்ற பாஜக, இந்த 85 தொகுதிகளின் அசாதாரண வாக்குப்பதிவால் சட்டமன்றத் தேர்தலில் 89% வெற்றி பெற்று 149 இடங்களில் 132 இடங்களை வென்றது.
ஆதாரங்களை அழிக்கும் முயற்சி: முறைகேடுகள் குறித்து எதிர்க்கட்சிகள் புகார் அளித்த போதும், தேர்தல் ஆணையம் அமைதி காக்கிறது.
மேலும், வாக்காளர் பட்டியல்கள் மற்றும் சிசிடிவி காட்சிகளை பொதுவெளியில் வெளியிடும் கோரிக்கையை நிராகரித்து, விதிகளைத் திருத்தி அணுகலைக் கட்டுப்படுத்தி, ஆதாரங்களை அழிப்பதாகவும் ராகுல் காந்தி குற்றம் சாட்டுகிறார்.
ராகுல் காந்தி தனது கட்டுரையில், "இது கிரிக்கெட்டில் நடக்கும் மேட்ச் பிக்சிங் போன்றது. இப்படிப்பட்ட முறைகேடுகள் ஜனநாயக நிறுவனங்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தும்" என்று கடுமையாக எச்சரித்துள்ளார். இந்த குற்றச்சாட்டுகள் மகாராஷ்டிர அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன.
- சூரத் தொகுதியில் முகேஷ தலால் உள்பட 8 பேர் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர்.
- இதில் காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானி வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.
புதுடெல்லி:
குஜராத் மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 7-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இங்குள்ள சூரத் தொகுதிக்கான தேர்தலில் பா.ஜ.க, காங்கிரஸ் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் என பலர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானியின் வேட்புமனு நேற்று முன்தினம் நிராகரிக்கப்பட்டது. அவருக்கு போலியான சாட்சி கையெழுத்திடப்பட்டுள்ளது. இதேபோல், அவருக்கு பதிலாக காங்கிரஸ் சார்பில் மாற்று வேட்பாளராக அறிவிக்கப்பட்ட சுரேஷ் பத்ஷாலாவின் வேட்பு மனுவும் தகுதியற்றது என அறிவிக்கப்பட்டது. அவரது வேட்பு மனுவிலும் போலியான சாட்சி கையெழுத்துகள் இடம்பெற்றிருந்தன என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, இந்த வேட்பு மனு கலெக்டரால் ரத்து செய்யப்பட்டது. இதனால், போட்டியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறியது.
இந்நிலையில், சூரத் தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளார் என தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக, குஜராத் பா.ஜ.க. தலைவர் சி.ஆர்.பாட்டீல் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், சூரத் தொகுதியில் போட்டியின்றி வெற்றி பெற்ற முகேஷ் தலாலுக்கு வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் என பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில், சூரத் பாராளுமன்ற தேர்தலை மேட்ச் ஃபிக்ஸ் செய்ய பா.ஜ.க. முயற்சி செய்கிறது. ஏனெனில், மக்கள் மத்தியில் உள்ள கோபத்தைக் கண்டு அக்கட்சி பயந்துள்ளது என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ஜெய்ராம் ரமேஷ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
- முகமது ஷமியின் திருமண வாழ்க்கை சோகத்தில் முடிந்தது.
- முகமது ஷமி மேட்ச் பிக்சிங் செய்யவில்லை என்று போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.
இந்திய அணியின் மிக முக்கிய பந்துவீச்சாளராக முகமது ஷமி திகழ்ந்து வருகிறார். ஒருநாள் உலகக்கோப்பை போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக விக்கெட் வீழ்த்தியர்களின் பட்டியலில் முகமது ஷமி முதலிடத்தில் உள்ளார்.
ஒருநாள் உலகக்கோப்பையில் வெறும் 18 போட்டிகளில் மட்டுமே விளையாடி 55 விக்கெட்களை முகமது ஷமி வீழ்த்தியுள்ளார். ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட்களை வீழ்த்தியவர்கள் பட்டியலில் தற்போது 5 ஆவது இடத்தில் அவர் உள்ளார்.
கிரிக்கெட்டில் பல சாதனைகளை நிகழ்த்தி வரும் முகமது ஷமியின் திருமண வாழ்க்கை சோகத்தில் முடிந்தது.
வரதட்சனை கேட்டு தன்னை தொடர்ந்து துன்புறுத்துவதாகவும், குடும்ப தகராறில் தன்னை தாக்கியதாகவும் ஷமி மீது அவரது மனைவி ஹசின் ஜஹான் புகார் கோரி விவாகரத்து கோரியிருந்தார். அப்போது பாகிஸ்தான் பெண்ணிடம் பணம் வாங்கி மேட்ச் பிக்சிங் செய்ததாக முகமது ஷமி மீது அவரது மனைவி குற்றம் சாட்டியிருந்தார்.
ஆனால் முகமது ஷமி மேட்ச் பிக்சிங் செய்யவில்லை என்று போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. ஆனால் அந்த சமயத்தில் இந்த புகாரால் மன உளைச்சலுக்கு உள்ளான முகமது ஷமி தற்கொலைக்கு முயன்றதாக அவரின் நண்பர் உமேஷ் குமார் அதிர்ச்சி தகவல் ஒன்றை தற்போது தெரிவித்துள்ளார்.
சுபங்கர் மிஸ்ராவுடன் பாட்காஸ்ட்டில் பேசிய போது இந்த தகவலை அவர் பகிர்ந்துள்ளார்.
"அந்த சமயத்தில் முகமது ஷமி என்னுடன் என் வீட்டில் வசித்து வந்தார். அவர் மீது மேட்ச் பிக்சிங் புகாரை அவரது முன்னாள் மனைவி கூறிய போது அவர் உடைந்துவிட்டார். 'என்னால் எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்ள முடியும், ஆனால் என் நாட்டிற்கு துரோகம் செய்கிறேன் என்ற குற்றசாட்டை பொறுத்துக்கொள்ள முடியாது' என்று அவர் கூறினார்.
நாங்கள் வசித்த 19வது மாடியில், அதிகாலை 4 மணியளவில் முகமது ஷமி பால்கனியில் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று நின்று கொண்டிருந்தார். அந்த இரவு ஷமியின் நீண்ட இரவாக இருந்தது. முகமது ஷமி மேட்ச் பிக்சிங் செய்யவில்லை என்று போலீசாரின் விசாரணை அறிக்கை வெளிவந்த பொது ஷமி மிகவும் சந்தோஷப்பட்டார். உலக கோப்பையை வேன்றபோது கூட ஷமி இவ்வளவு சந்தோசப்பட்டிருக்கமாட்டார்" என்று அவர் தெரிவித்தார்.
- லோன்வாபோ சோட்சோபே ஒருகாலத்தில் உலகின் நம்பர் ஒன் ஒருநாள் பந்து வீச்சாளராக இருந்தவர்.
- டி20 சேலஞ் தொடரில் மேட்ச் பிக்சிங் செய்ததாக இவர்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் லோன்வாபோ சோட்சோபே, தமி சோல்கிலே மற்றும் எதி எம்பலாட்டி ஆகியோர் மேட்ச் பிக்சிங் செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.
2015-16 ஆண்டு நடைபெற்ற டி20 சேலஞ் தொடரில் மேட்ச் பிக்சிங் செய்ததாக இவர்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட லோன்வாபோ சோட்சோபே ஒருகாலத்தில் உலகின் நம்பர் ஒன் ஒருநாள் பந்து வீச்சாளராக இருந்தவர்.
2016 மற்றும் 2017 க்கு இடையில் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக தென்னாப்பிரிக்க அணியால் தடை விதிக்கப்பட்ட 7 வீரர்களில் இந்த மூவரும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.






