என் மலர்tooltip icon

    தென் ஆப்பிரிக்கா

    • பேரிடர் மீள்தன்மைக்கான நமது அணுகுமுறை வளர்ச்சி மையமாக இருக்க வேண்டும்.
    • இந்தியா உலகின் மிகப்பெரிய சுகாதார காப்பீட்டுத் திட்டத்தையும் மிகப்பெரிய பயிர் காப்பீட்டுத் திட்டத்தையும் நடத்துகிறது.

    ஜி-20 அமைப்பின் உச்சி மாநாடு தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்கஸ்பர்க் நகரில் நேற்று தொடங்கியது. இதில் பிரதமர் மோடி உள்பட பல்வேறு நாட்டு தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

    மாநாட்டில் யாரையும் பின்தங்க வைக்காத வகையில் உள்ளடக்கிய மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சி என்ற தலைப்பில் நடந்த முதல் அமர்வில் பிரதமர் மோடி பேசினார்.

    பின்னர் நடந்த 2-வது அமர்வில் பிரதமர் மோடி பேசியதாவது:-

    இயற்கை பேரழிவுகள் மனிதகுலத்திற்கு தொடர்ந்து குறிப்பிடத்தக்க சவாலாக உள்ளன. இந்த ஆண்டும், இயற்கை பேரழிவுகள் உலகம் முழுவதும் பெரும் மக்களை பாதித்துள்ளன. இது இயற்கை பேரழிவுகளை நிவர்த்தி செய்ய உலகளாவிய ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டிய அவசியத்தை தெளிவாக காட்டுகிறது.

    பேரிடர் மீள்தன்மைக்கான நமது அணுகுமுறை வளர்ச்சி மையமாக இருக்க வேண்டும். எனவே பேரிடர் மீள்தன்மை உள்கட்டமைப்புக்கான கூட்டணியை நிறுவ வேண்டும். இதனுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம் ஜி-20 நாடுகள் நிதி, தொழில்நுட்பம் மற்றும் திறன்களைத் திரட்டி, மீள் தன்மை கொண்ட எதிர்காலத்தை உறுதி செய்ய முடியும்.

    விண்வெளி தொழில்நுட்பம் அனைத்து மனிதகுலத்திற்கும் பயனளிக்க வேண்டும் என்று இந்தியாவும் நம்புகிறது. எனவே இந்தியா ஜி-20 திறந்த செயற்கைக்கோள் தரவு கூட்டாண்மையை முன்மொழிகிறது.

    காலநிலை மாற்றம் மற்றும் பிற சவால்கள் காரணமாக, நமது விவசாயத்துறை, உணவுப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் மிகவும் கடுமையாகி வருகிறது. எனவே இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பல நாடுகளில் விவசாயிகள் உரங்கள், தொழில்நுட்பம், கடன், காப்பீடு மற்றும் சந்தை அணுகல் ஆகியவற்றில் அதிகரித்து வரும் சவால்களை எதிர்கொள்கின்றனர்.

    இந்த சவால்களை எதிர்கொள்ள இந்தியா தனது சொந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவில் உலகின் மிகப்பெரிய உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து ஆதரவு திட்டத்தை நாங்கள் நடத்துகிறோம்.

    இந்தியா உலகின் மிகப்பெரிய சுகாதார காப்பீட்டுத் திட்டத்தையும் மிகப்பெரிய பயிர் காப்பீட்டுத் திட்டத்தையும் நடத்துகிறது.

    வலுவான உலகளாவிய பாதுகாப்பு அமைப்பை உருவாக்க ஜி20 நாடுகள் ஊட்டச்சத்து, பொது சுகாதாரம், நிலையான விவசாயம் மற்றும் பேரிடர் தயார்நிலையை ஒருங்கிணைக்கும் விரிவான உத்திகளை ஊக்குவிக்க வேண்டும்.

    இவ்வாறு மோடி பேசினார்.

    • ஜோகன்னஸ்பர்க் நகரில் ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு நடந்தது.
    • அமெரிக்க அதிபர் டிரம்ப்​, ரஷிய அதிபர் புதின்​ ஆகியோர் இதில் பங்​கேற்​க​வில்​லை.

    ஜோகன்னஸ்பர்க்:

    தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் ஜி 20 அமைப்பின் உச்சி மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் ஜி20 உறுப்பு நாடுகள் மற்றும் நட்பு நாடுகள் என 42 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். அவர்களில் பலருடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.

    இத்தாலி அதிபர் ஜார்ஜியா மெலோனியுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். உக்ரைன் போர் உள்ளிட்ட சர்வதேச விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.

    பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா, மாநாட்டின்போது பிரதமர் மோடியை ஆரத்தழுவி வாழ்த்து தெரிவித்தார். இருவரும் சிறிது நேரம் கலந்துரையாடினர். இரு நாடுகள் இடையிலான பொருளாதார உறவை வலுப்படுத்த இரு தலைவர்களும் உறுதியேற்றனர்.

    ஐ.நா.சபையின் பொதுச்செயலாளர் அந்தோணியோ குட்டரெஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி தனித்தனியாக பேசினார்.

    பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்போன்ஸ், கனடா பிரதமர் மார்க் கார்னி, தென்கொரிய அதிபர் லீ ஜே மியூங் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்களை பிரதமர் மோடி தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

    அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங்ஜி ஆகியோர் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்கவில்லை.

    • ஜி20 உறுப்பு நாடுகள் உட்பட 42 நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.
    • ஆப்பிரிக்க இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு உள்ளிட்ட புதிய முன்னெடுப்புகளை பிரதமர் மோடி முன்மொழிந்தார்.

    ஆப்பிரிக்க கண்டத்தில் முதல்முறையாக நடைபெறும் G20 உச்சி மாநாட்டில், குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கான கடன் நிவாரணம், காலநிலை மாற்றம், எரிசக்தி உள்ளிட்ட விவகாரங்கள் பிரதானம் பெறுகின்றன.

    ஜி20 உறுப்பு நாடுகள் உட்பட 42 நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.

    இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் G20 மாநாட்டில் போதைப்பொருள்-பயங்கரவாத தொடர்பை தடுத்தல், சுகாதாரப் பாதுகாப்பு, ஆப்பிரிக்க இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு உள்ளிட்ட புதிய முன்னெடுப்புகளை பிரதமர் மோடி முன்மொழிந்தார்.

    மேலும், அனைவரையும் உள்ளடக்கிய, நிலையான வளர்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் என்றும், இந்தியா எப்போதும் ஆப்பிரிக்காவுடன் ஒற்றுமையாக துணை நிற்கும் என்றும் பிரதமர் மோடி உறுதி தெரிவித்தார்.

    • ஜி20 உறுப்பு நாடுகள் உட்பட 42 நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.
    • பிரதமர் மோடிக்கு கலை நிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    ஆப்பிரிக்க கண்டத்தில் முதல்முறையாக நடைபெறும் G20 உச்சி மாநாட்டில், குறைந்த வருமானம் கொண்ட நாடுகளுக்கான கடன் நிவாரணம், காலநிலை மாற்றம், எரிசக்தி உள்ளிட்ட விவகாரங்கள் பிரதானம் பெறுகின்றன.

    ஜி20 உறுப்பு நாடுகள் உட்பட 42 நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர்.

    முன்னதாக, தென் ஆப்ரிக்காவில் நடக்கும் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று விமானம் மூலம் கிளம்பினார். மாலையில் ஜோகன்னஸ்பர்க் நகரம் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு கலை நிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    ஜோகன்னஸ்பர்க்கில் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். அப்போது இரு நாட்டு தலைவர்களும் இருதரப்பு உறவு குறித்து ஆலோசனை நடத்தினர்.

    ஜொகன்னஸ்பர்க் நகரில் நடைபெற்று வரும் G20 உச்சி மாநாட்டில் ஜார்ஜியா இத்தாலி பிரதமர் மெலோனியுடன் பிரதமர் மோடி சந்தித்துள்ளார்.

    • ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு ஜோகன்னஸ்பர்க்கில் இன்று தொடங்குகிறது.
    • ஜி20 மாநாட்டை அமெரிக்கா புறக்கணிப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்தார்.

    ஜோகன்னஸ்பர்க்:

    தென் ஆப்ரிக்காவில் நடக்கும் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று விமானம் மூலம் கிளம்பினார். மாலையில் ஜோகன்னஸ்பர்க் நகரம் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு கலை நிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்நிலையில், ஜோகன்னஸ்பர்க்கில் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். அப்போது இரு நாட்டு தலைவர்களும் இருதரப்பு உறவு குறித்து ஆலோசனை நடத்தினர்.

    அப்போது, டெல்லி செங்கோட்டையில் நடந்த பயங்கரவாத தாக்குதல் மற்றும் சவுதி அரேபியாவில் நடந்த பஸ் விபத்தில் பல இந்திய உம்ரா யாத்ரீகர்கள் உயிரிழந்ததற்கு ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இரங்கல் தெரிவித்தார்.

    ஜி20 உச்சி மாநாட்டை அமெரிக்கா புறக்கணிப்பதாக அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.

    • இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையேயான முதல் ஒருநாள் போட்டி 30-ம் தேதி நடைபெறுகிறது.
    • இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி டிசம்பர் 9ம் தேதி நடக்கிறது.

    கேப்டவுன்:

    தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.

    டெஸ்ட் தொடர் முடிந்த உடன் இவ்விரு அணிகள் இடையே ஒருநாள் போட்டிகளும், இறுதியாக டி20 தொடரும் நடைபெற உள்ளது. அதன்படி இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் ஒருநாள் போட்டி 30-ம் தேதி ராஞ்சியில் நடைபெற உள்ளது.

    இந்நிலையில். இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஒருநாள் போட்டிகளுக்கான தென் ஆப்பிரிக்க அணி கேப்டனாக பவுமாவும், டி20 போட்டிகளுக்கான அணியின் கேப்டனாக மார்க்ரமும் நியமிக்கப்பட்டுள்ளனர். தென் ஆப்பிரிக்க அணி விவரம் பின்வருமாறு:

    ஒருநாள் அணி:

    டெம்பா பவுமா (கேப்டன்), ஒட்னீல் பார்ட்மேன், கார்பின் போஷ், மேத்யூ பிரீட்ஸ்கே, டெவால்ட் பிரெவிஸ், நான்ட்ரே பர்கர், குயின்டன் டி காக், டோனி டி ஜோர்ஜி, ரூபின் ஹெர்மன், கேசவ் மகராஜ், மார்கோ ஜான்சன், ஐடன் மார்க்ரம், லுங்கி நிகிடி, ரியான் ரிக்கல்டன், பிரெனெலன் சுப்ரயன்.

    டி20 அணி:

    மார்க்ரம் (கேப்டன்), ஒட்னீல் பார்ட்மேன், கார்பின் போஷ், டெவால்ட் பிரெவிஸ், குயின்டன் டி காக், டோனி டி சோர்ஜி, டொனோவன் பெரீரா, ரீசா ஹென்ட்ரிக்ஸ், மார்கோ ஜான்சன், ஜார்ஜ் லிண்டே, குவேனா மபாகா, டேவிட் மில்லர், லுங்கி நிகிடி, ஆன்ரிச் நோர்ஜே, டிரிஸ்டன் ஸ்டப்ஸ்.

    • ஜி20 நிகழ்ச்சி நிரலில் இந்தியாவின் கருத்துகளை பிரதமர் மோடி முன்வைப்பார்.
    • மாநாட்டுக்கு இடையே பல்வேறு உலக தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளையும் நடத்துகிறார்.

    ஜி20 நாட்டு தலைவர்களின் 20-வது உச்சி மாநாடு தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நாளை மற்றும் நாளை மறுநாள் என இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.

    இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று தென்னாப்பிரிக்கா புறப்பட்டு சென்றார்.

    இந்நிலையில், தென்னாப்பிரிக்காவிற்கு சென்றடைந்த பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் அங்கு பாரம்பரிய முறைப்படி நிகழ்ச்சிக் குழுவினர் வரவேற்பு அளித்தனர். அந்நாட்டில் வெண்டா மொழி பேசும் மக்களின் பாரம்பரியத்தின் படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    உச்சி மாநாட்டின் 3 அமர்வுகளிலும் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார். குறிப்பாக ஜி20 நிகழ்ச்சி நிரலில் இந்தியாவின் கருத்துகளை பிரதமர் மோடி முன்வைப்பார் என வெளியுறவு அமைச்சகம் செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்து உள்ளது.

    மேலும் இந்த மாநாட்டுக்கு இடையே பல்வேறு உலக தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளையும் நடத்துகிறார்.

    அத்துடன் இந்தியா-பிரேசில்-தென்னாப்பிரிக்கா தலைவர்களின் கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்பார் என வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

    • தனி விமானம் மூலம் 153 பாலஸ்தீனர்கள் ஜோகன்னஸ்பர்க் விமான நிலையம் வந்தடைந்தனர்.
    • அதிகாரிகள் அவர்களை தரையிறங்க அனுமதிக்காமல் விமானத்திலேயே காத்திருக்க வைத்தனர்.

    150-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்களுடன் ஜோகன்னஸ்பர்க் சர்வதேச விமானம நிலையம் வந்த தனி விமானத்தில் (charter plane) இருந்து, அவர்களை இறங்க அனுமதிக்காததால் 12 மணி நேரம் உள்ளேயே இருக்கும் அவல நிலை ஏற்பட்டது.

    தென்ஆப்பிரிக்கா மாநிலத்தில் உள்ள ஜோகன்னஸ்பர்க் ஓ.ஆர். டாம்போ சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று காலை தனி விமானம் ஒன்று தரையிறங்கியது.

    இந்த விமானத்தில் 9 மாத கர்ப்பிணி உள்பட 153 பாலஸ்தீனர்கள் இருந்தனர். அவர்களிடம் இஸ்ரேல் முத்திரை கொண்ட ஆவணங்கள் இல்லை எனக் கூறப்படுகிறது. மேலும், தென்ஆப்பிரிக்காவில் எங்கு தங்குவார்கள் உள்ளிட்ட எந்த தகவலும் இல்லை.

    இதனால் அதிகாரிகள் அவர்களை விமானத்தில் இருந்து இறக்க அனுமதிக்கவில்லை. சுமார் 12 மணி நேரம் விமானத்திலேயே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். விமானத்தில் இருந்து இறக்கப்பட்டு, விமான நிலைய ஓய்வறையில் கூட தங்கவைக்கப்படவில்லை.

    சுமார் 12 மணி நேரம் கழித்து தென்ஆப்பிரிக்க மந்திரி தலையிட, அவர்கள் தரையிறக்கப்பட்டுள்ளனர். பின்னர் தொண்டு நிறுவனம் ஒன்று அவர்களுக்கு தங்க இடம் கொடுக்க முன்வந்ததால், அவர்கள் தென்ஆப்பிரிக்கா தங்க அனுமதிக்கப்பட்டனர்.

    இஸ்ரேல்- காசா இடையிலான சண்டையில் காசா மக்களுக்காக தென்ஆப்பிரிக்கா குரல் கொடுத்தது. அப்படி குரல் கொடுத்த தென்ஆப்பிரிக்கா, இவ்வாறு செயல்பட்டது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த இரண்டு வாரங்களில் இரண்டு விமானங்களில் இதுபோன்று பாலஸ்தீனர்கள் வந்துள்ளனர். அவர்கள் காசாவில் இருந்து வந்தவர்களாக இருக்கும் என நம்பப்படுகிறது. ஆனால், இவர்களுக்கான தனி விமானம் ஏற்பாடு செய்தது யார் என்பது தெரியவில்லை.

    இந்த விமானம் கென்யாவின் நைரோபியில் தரையிறங்கிய பின்னர், ஜோகன்னஸ்பர்க் வந்துள்ளது.

    • ஜிம்பாப்வே நோக்கி பேருந்து சென்றுகொண்டிருந்தது.
    • உயிரிழந்தவர்களில் 7 குழந்தைகள், 17 ஆண்கள் மற்றும் 18 பெண்கள் அடங்குவர் என்று போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    தென்னாப்பிரிக்காவில் செங்குத்தான மலைப் பாதையில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்த கோர விபத்தில் குறைந்தது 42 பேர் உயிரிழந்தனர். மேலும் 49 பேர் காயமடைந்துள்ளனர்.

    உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில், தலைநகர் பிரிட்டோரியாவுக்கு வடக்கே சுமார் 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லூயிஸ் டிரைகார்ட் நகரத்திற்கு அருகிலுள்ள நெடுஞ்சாலையில் இந்த விபத்து நடந்தது.

    ஜிம்பாப்வே நோக்கிச் சென்று கொண்டிருந்த இந்த பேருந்தில் ஜிம்பாப்வே மற்றும் மாலாவியைச் சேர்ந்த நாட்டவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர் என்று அரசு தெரிவித்துள்ளது.

    உயிரிழந்தவர்களில் 7 குழந்தைகள், 17 ஆண்கள் மற்றும் 18 பெண்கள் அடங்குவர் என்றும் அரசு தெரிவித்துள்ளது.

    காயமடைந்த 49 பேரில் ஆறு பேர் உயிருக்கு ஆபத்தான நிலையிலும், 31 பேர் தீவிர காயங்களுடனும் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.    

    • பலத்த மழை காரணமாக போக்குவரத்து, மின்சார நெட்வொர்க்குகள் பாதிக்கப்பட்டுள்ளன.
    • வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    கேப் டவுன்:

    தென் ஆப்பிரிக்காவின் கிழக்கு கேப் மாகாணத்தில் பெய்த கனமழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    பலத்த மழை காரணமாக தென் ஆப்பிரிக்காவின் போக்குவரத்து மற்றும் மின்சார நெட்வொர்க்குகள் பாதிக்கப்பட்டுள்ளன.

    காலநிலை மாற்றத்தின் காரணமாக தென் ஆப்பிரிக்காவில் கடுமையான மழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டு வருகிறது. ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.

    இந்நிலையில், கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளது. மீட்புப் பணிகள் முடங்கி உள்ளன என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • தென் ஆப்பிரிக்காவின் போக்குவரத்து மற்றும் மின்சார நெட்வொர்க்குகள் பாதிக்கப்பட்டுள்ளன
    • ஒரு பள்ளிப் பேருந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் 8 பேர் உயிரிழந்தனர்.

    தென்னாப்பிரிக்காவின் கிழக்கு கேப் மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49 ஆக உயர்ந்துள்ளது.

    பலத்த மழை காரணமாக தென் ஆப்பிரிக்காவின் போக்குவரத்து மற்றும் மின்சார நெட்வொர்க்குகள் பாதிக்கப்பட்டுள்ளன. முன்னதாக ஒரு பள்ளிப் பேருந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் 8 பேர் உயிரிழந்தனர்.

    காலநிலை மாற்றத்தின் காரணமாக தென்னாப்பிரிக்காவில் கடுமையான மழை மற்றும் வெள்ளம் ஏற்பட்டு வருகிறது.

    அந்நாட்டில் ஏப்ரல் 2022 இல் கிழக்கு கடற்கரையில் ஏற்பட்ட புயலில் சுமார் 400 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திக் கொண்டிருந்தனர்.
    • விமானியை மருத்துவமனை அழுத்து செல்ல முற்பட்டனர்.

    தென் ஆப்பிரிக்காவின் சால்தானா பகுதியில் விமான சாகச நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த நிகழ்ச்சியில் அனுபவம் மிக்க, திறமையான விமானிகள் விமானங்களில் அபாயகரமான சாகசங்களில் ஈடுபட்டு, நிகழ்ச்சியை காண வந்திருந்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திக் கொண்டிருந்தனர்.

    அந்த வகையில், விமான சாகச நிகழ்ச்சியில் சாகசம் நிகழ்த்திக் கொண்டிருந்த ஜேம்ஸ் கானெல் என்ற விமானி இம்பாலா மார்க் 1 ரக விமானத்தில் உயர பறந்து விமானத்தை சுழற்றினார். அப்போது நிலை தடுமாறிய விமானம் வேகவேகமாக கீழே விழுந்து நொறுங்கியது. இதை கண்ட பார்வையாளர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

    விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து நிகழ்ச்சி நடந்த இடத்தில் இருந்த மீட்பு படையினர் விபத்துக் களத்திற்கு விரைந்து சென்றனர். பிறகு, விமானத்தில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்தினர். இதைத் தொடர்ந்து விமானியை மருத்துவமனை அழுத்து செல்ல முற்பட்டனர். எனினும், விமானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக மீட்பு படையினர் தெரிவித்தனர்.



    ×