என் மலர்
நீங்கள் தேடியது "ஜி20 உச்சி மாநாடு"
- ஜோகன்னஸ்பர்க் நகரில் ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு நடந்தது.
- அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷிய அதிபர் புதின் ஆகியோர் இதில் பங்கேற்கவில்லை.
ஜோகன்னஸ்பர்க்:
தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் ஜி 20 அமைப்பின் உச்சி மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் ஜி20 உறுப்பு நாடுகள் மற்றும் நட்பு நாடுகள் என 42 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர். அவர்களில் பலருடன் பிரதமர் நரேந்திர மோடி கலந்துரையாடினார்.
இத்தாலி அதிபர் ஜார்ஜியா மெலோனியுடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார். உக்ரைன் போர் உள்ளிட்ட சர்வதேச விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர்.
பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டா சில்வா, மாநாட்டின்போது பிரதமர் மோடியை ஆரத்தழுவி வாழ்த்து தெரிவித்தார். இருவரும் சிறிது நேரம் கலந்துரையாடினர். இரு நாடுகள் இடையிலான பொருளாதார உறவை வலுப்படுத்த இரு தலைவர்களும் உறுதியேற்றனர்.
ஐ.நா.சபையின் பொதுச்செயலாளர் அந்தோணியோ குட்டரெஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி தனித்தனியாக பேசினார்.
பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்போன்ஸ், கனடா பிரதமர் மார்க் கார்னி, தென்கொரிய அதிபர் லீ ஜே மியூங் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்களை பிரதமர் மோடி தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷிய அதிபர் புதின், சீன அதிபர் ஜின்பிங்ஜி ஆகியோர் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்கவில்லை.
- ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு ஜோகன்னஸ்பர்க்கில் இன்று தொடங்குகிறது.
- ஜி20 மாநாட்டை அமெரிக்கா புறக்கணிப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
ஜோகன்னஸ்பர்க்:
தென் ஆப்ரிக்காவில் நடக்கும் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி நேற்று விமானம் மூலம் கிளம்பினார். மாலையில் ஜோகன்னஸ்பர்க் நகரம் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு கலை நிகழ்ச்சிகளுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், ஜோகன்னஸ்பர்க்கில் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸை பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். அப்போது இரு நாட்டு தலைவர்களும் இருதரப்பு உறவு குறித்து ஆலோசனை நடத்தினர்.
அப்போது, டெல்லி செங்கோட்டையில் நடந்த பயங்கரவாத தாக்குதல் மற்றும் சவுதி அரேபியாவில் நடந்த பஸ் விபத்தில் பல இந்திய உம்ரா யாத்ரீகர்கள் உயிரிழந்ததற்கு ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ் இரங்கல் தெரிவித்தார்.
ஜி20 உச்சி மாநாட்டை அமெரிக்கா புறக்கணிப்பதாக அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
- உச்சி மாநாட்டின் 3 அமர்வுகளிலும் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார்.
- பல்வேறு உலக தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளையும் நடத்துகிறார்.
ஜி20 நாட்டு தலைவர்களின் 20-வது உச்சி மாநாடு தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நாளை மற்றும் நாளை மறுநாள் என இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.
இந்த உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று தென்னாப்பிரிக்கா புறப்பட்டு சென்றார்.
உச்சி மாநாட்டின் 3 அமர்வுகளிலும் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார். குறிப்பாக ஜி20 நிகழ்ச்சி நிரலில் இந்தியாவின் கருத்துகளை பிரதமர் மோடி முன்வைப்பார் என வெளியுறவு அமைச்சகம் செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்து உள்ளது.
மேலும் இந்த மாநாட்டுக்கு இடையே பல்வேறு உலக தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளையும் நடத்துகிறார்.
அத்துடன் இந்தியா-பிரேசில்-தென்னாப்பிரிக்கா தலைவர்களின் கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்பார் என வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
- ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு தென் ஆப்பிரிக்காவில் நடைபெறுகிறது.
- ஜி20 மாநாட்டை அமெரிக்கா புறக்கணிக்கும் என அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
வாஷிங்டன்:
ஜி20 அமைப்பின் உச்சி மாநாடு தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் வரும் 22, 23 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் ஜி20 மாநாட்டை அமெரிக்கா புறக்கணிப்பதாக அதிபர் டிரம்ப் அறிவித்தார். தென் ஆப்பிரிக்காவில் வெள்ளை நிற விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு துன்புறுத்தப்படுவதாக டிரம்ப் குற்றம் சாட்டி வரும் நிலையில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
அதிபர் டிரம்பின் இந்தக் குற்றச்சாட்டை தென் ஆப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இந்நிலையில், ஜி20 உச்சி மாநாட்டின் நிறைவு விழாவில் அமெரிக்கா பங்கேற்கும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
ஜி20 மாநாடு அடுத்து ஆண்டு அமெரிக்காவில் நடக்க உள்ளதால் அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வதற்காக இந்த மாநாட்டில் பங்கேற்கும் என தெரிவித்துள்ளது
- தென் ஆப்பிரிக்காவில் ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற உள்ளது.
- இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி தென் ஆப்பிரிக்கா செல்கிறார்.
புதுடெல்லி:
தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் நவம்பர் 21 முதல் 23ம் தேதி வரை ஜி20 நாட்டு தலைவர்கள் பங்கேற்கும் உச்சி மாநாடு நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார், அதற்காக அவர் ஜோகன்னஸ்பர்க் செல்கிறார் என மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மாநாட்டில் 3 முக்கிய அமர்வுகளில் பிரதமர் மோடி பேசுகிறார்.
இந்த அமர்வில் காலநிலை மாற்றம், எரிசக்தி மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து அவர் உரையாற்ற உள்ளார்.
உச்சி மாநாட்டின் ஒரு பகுதியாக, பல உலக நாடுகளின் தலைவர்களுடனும் பிரதமர் மோடி சந்தித்துப் பேச உள்ளார்.
இந்தியா, பிரேசில் மற்றும் தென் ஆப்பிரிக்கா தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்திலும் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
- மாநாட்டின் நிறைவு அமர்வில் இந்தோனேசிய அதிபரிடம் இருந்து பிரதமர் மோடி தலைமை பொறுப்பை பெற்றுக் கொள்வார்.
- இந்திய வம்சாவளியினர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்ற உள்ளார்.
ஜி-20 கூட்டமைப்பின் உச்சி மாநாடு நாளையும் (15ம் தேதி), நாளை மறுநாளும் (16ம் தேதி) இந்தோனேசியாவின் பாலி நகரில் நடக்கிறது.
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து இன்று பிற்பகல் இந்தோனேசியாவுக்கு 3 நாள் அரசு முறை பயணமாக செல்கிறார்.
ஜி-20 உச்சி மாநாட்டில் உலக பொருளாதாரம், எரிசக்தி, சுற்றுச்சூழல், டிஜிட்டல் மாற்றம், உக்ரைன் விவகாரம் மற்றும் அதன் தாக்கம் குறித்து மோடி மற்றும் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் முக்கியமாக விவாதிக்க உள்ளனர்.
உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, டிஜிட்டல் மாற்றும், சுகாதாரம் தொடர்பான 3 முக்கிய அமர்வுகளில் மோடி பங்கேற்க உள்ளார்.
ஜி20 கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை டிசம்பர் 1 முதல் அடுத்த ஓராண்டுக்கு இந்தியா வகிக்க இருக்கிறது. எனவே பாலி மாநாட்டில் தலைமை பொறுப்பை இந்தியாவிடம் ஒப்படைக்கும் நிகழ்வும் நடைபெறும். மாநாட்டின் நிறைவு அமர்வில் இந்தோனேசிய அதிபரிடம் இருந்து பிரதமர் மோடி தலைமை பொறுப்பை பெற்றுக் கொள்வார்.
அடுத்த ஆண்டு செப்டம்பரில் இந்தியாவில் ஜி-20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க இதர நாடுகளின் தலைவர்களுக்கு மோடி இந்த மாநாட்டின்போது அழைப்பு விடுப்பார்.
அமெரிக்க அதிபர் ஜோபைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக், பிரான்ஸ் அதிபபர் இமானு வேல் மேக்ரான், ஜெர்மனி அதிபர் ஒலாப் ஷோல்ஸ், சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்டோர் மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். இதையொட்டி பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் மோடி இருதரப்பு பேச்சு வார்த்தை நடத்த இருக்கிறார்.
நாளை மறுநாள் பிரதமர் நரேந்திர மோடி இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்கை நேரடியாக சந்தித்து பேசுகிறார். இதுதவிர பிரான்ஸ் அதிபரை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாலியில் பிரதமர் மோடி 45 மணி நேரம் செலவிட இருக்கிறார். அங்கு அவர் சுமார் 20 நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். இந்திய வம்சாவளியினர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்ற உள்ளார்.
மாநாடு நிகழ்வுகள் முடிந்து 16ம் தேதி பாலியில் இருந்து மோடி நாடு திரும்புகிறார்.
3 நாள் பயணத்துக்குமுன் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஜி-20 தலைவர்களுடன் வளர்ந்து வரும் உலகளாவிய வளர்ச்சி, உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, சுற்றுச்சூழல், சுகாதாரம், டிஜிட்டல் உருமாற்றம் உள்ளிட்ட பல முக்கிய சர்வதேச விவகாரங்கள் பற்றி விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்படும்.
இந்த மாநாட்டின் ஒரு பகுதியாக இதில் கலந்து கொள்ளும் பல நாட்டு தலைவர்களையும் நேரில் சந்திக்க உள்ளேன். இந்தியாவுடனான இரு தரப்பு உறவுகளின் வளர்ச்சிகள் பற்றி அவர்களுடன் மறு ஆய்வு செய்யப்படும்.
இவ்வாறு பிரதமர் மோடி இந்தோனேசியா புறப்படும் முன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
உலகின் முக்கியமான வளர்ந்த நாடுகள் மற்றும் வளரும் நாடுகளின் கூட்ட மைப்பு ஜி-20 ஆகும். இதில் அர்ஜென்டினா, ஆஸ்தி ரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென்கொரியா, மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென்ஆப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
- எந்தவொரு சந்தர்ப்பத்திலும், ரஷிய அதிபர்தான் முடிவு செய்ய வேண்டும்.
- நாங்கள் எந்த ஒரு நிகழ்வையும் தவறவிட மாட்டோம்.
மாஸ்கோ:
உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் காரணமாக அந்நாட்டுடனான அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக இந்தோனேசியாவில் அண்டையில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் ரஷிய அதிபர் புதின் பங்கேற்கவில்லை.
இந்நிலையில் இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் புதின் பங்கேற்க அதிக வாய்ப்பு உள்ளதாக ரஷிய அதிபர் மாளிகையின் துணை தலைமை அதிகாரி ஸ்வெட்லானா லுகாஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ரஷிய அரசு செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:
(ரஷிய அதிபர்) நிச்சயமாக ஜி20 உச்சி மாநாட்டிற்கு செல்வார் என்று நான் நம்புகிறேன். ஆனால் இது குறித்து எந்தவொரு சந்தர்ப்பத்திலும், அவர்தான் முடிவு செய்ய வேண்டும். அடுத்த உச்சி மாநாடு நடைபெற ஒரு வருடம் இருக்கும் போது, இது குறித்த கேள்விக்கு பதில் சொல்ல முடியாது.
நான் பார்க்கும் விதம் என்னவென்றால் இதற்கான வாய்ப்புகள் அனைத்தும் உள்ளன. நாங்கள் எந்த ஒரு நிகழ்வையும் தவறவிட மாட்டோம் என்று நான் நம்புகிறேன். அது ஒரு கருத்தரங்கு அல்லது மாநாடாக இருந்தாலும் ரஷியா தனது நிலைப்பாட்டை நிரூபிக்க, தனது கருத்துக்களை வெளிப்படுத்த எந்த நிகழ்விலும் பங்கேற்பது முக்கியம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- சென்னையில் இரண்டு நாட்கள் ஜி20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் கலந்தாய்வு நடக்கிறது
- 12 பேர் கொண்ட மத்திய குழுவினர் மாமல்லபுரம் வந்து ஆய்வுகள் மேற்கொண்டனர்.
மாமல்லபுரம்:
ஜி20 உச்சி மாநாட்டை நடத்தும் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இதையொட்டி நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சுமார் 200 நிகழ்வுகள் நடைபெற உள்ளன. இதில் ஜி20 கூட்டமைப்பில் உள்ள நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
இதில் சென்னையில் நட்சத்திர ஹோட்டல் மற்றும் ஐ.ஐ.டி வளாகத்தில் இரண்டு நாட்கள் வெவ்வேறு துறைசார் கலந்தாய்வு நடைபெறுகிறது.
கலந்தாய்வுக்கு பிறகு தலைவர்கள் சுற்றுலாவாக சென்னை அடுத்த மாமல்லபுரத்திற்கு வருகின்றனர். மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்கள் பகுதிகளான கடற்கரை கோயில், ஐந்து ரதம், அர்சுனன்தபசு போன்ற பகுதிகளை பார்வையிடவும், அதன்முன் நின்று புகைப்படம் எடுக்கவும் உள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
இந்த ஏற்பாடுகள் தொடர்பாக மத்திய கல்வித்துறை அமைச்சக தலைவர் சைதன்ய பிரசாத் மற்றும் மத்திய கல்வித்துறை இணை செயலாளர் நீதா பிரசாத் தலைமையில் 12 பேர் கொண்ட மத்திய குழுவினர் மாமல்லபுரம் வந்து ஆய்வுகள் மேற்கொண்டனர். ஆய்வில், தலைவர்களை பாதுகாப்புடன் அழைத்து வருவது, உணவருந்தும் இடம், எவ்வாறு வரவேற்பது, எங்கே நின்று புகைப்படம் எடுக்கவைப்பது போன்ற விஷயங்களை திட்டமிட்டனர்.
இந்த ஆய்வின்போது செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை எஸ்.பி பிரதீப், மாமல்லபுரம் டி.எஸ்.பி ஜெகதீஸ்வரன், மாமல்லபுரம் சுற்றுலாத்துறை அதிகாரி சக்திவேல், தாசில்தார் பிரபாகரன், தொல்லியல்துறை அலுவலர் இஸ்மாயில் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- சென்னை வரும் 20 நாட்டு பிரதிநிதிகள் 100க்கும் மேற்பட்டோர் மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை சுற்றிப்பார்க்க வருகிறார்கள்.
- பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய குழுவினர், செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் எஸ்.பி. பிரதீப், கலெக்டர் ராகுல்நாத், டி.எஸ்.பி. ஜெகதீஸ்வரன் மற்றும் தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
மாமல்லபுரம்:
ஜி-20 உச்சி மாநாட்டிற்கு சென்னை வரும் 20 நாட்டு பிரதிநிதிகள் 100க்கும் மேற்பட்டோர், பிப்ரவரி 1ம் தேதி மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை சுற்றிப்பார்க்க வருகிறார்கள்.
இவர்களின் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அப்பகுதிகளை இன்று மத்திய குழுவினர், செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் எஸ்.பி. பிரதீப், கலெக்டர் ராகுல்நாத், டி.எஸ்.பி. ஜெகதீஸ்வரன் மற்றும் தொல்லியல் துறை, வருவாய் துறை, தீயணைப்பு படை, கடலோர பாதுகாப்பு படை உயர் அதிகாரிகள் அப்பகுதிகளை ஆய்வு செய்தனர்.
- ஜி20 மாநாட்டில் பங்கேற்க ரஷிய அதிபர் புதின் இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
- உக்ரைன் மீதான போருக்கு மத்தியில் ரஷிய அதிபர் புதின் ஜி20 மாநாட்டில் பங்கேற்றால் அது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும்.
மாஸ்கோ:
இந்தியாவில் வருகிற செப்டம்பர் 9, 10-ந்தேதிகளில் ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற உள்ளது.
இதில் உலக தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். தற்போது இந்தியாவின் பல்வேறு இடங்களில் ஜி20 அமைப்பின் கூட்டங்கள் நடந்து வருகிறது.
இந்த நிலையில் ஜி20 மாநாட்டில் பங்கேற்க ரஷிய அதிபர் புதின் இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இது தொடர்பாக ரஷியாவின் கிரெம்ளின் மாளிகை செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் செப்டம்பர் மாதம் இந்தியாவில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டில் புதின் பங்கேற்பது பரிசீலிக்கப்படுகிறதா என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு அவர் பதில் அளித்து கூறும்போது, அதை நிராகரிக்க முடியாது. ஆனால் இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. ஜி20 வடிவத்தில் ரஷியா அதன் முழு பங்கேற்பை தொடர்கிறது. நாங்கள் அதை தொடர விரும்புகிறோம் என்றார்.
ரஷிய அதிபர் புதினின் இந்திய வருகை குறித்து அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. உக்ரைன் மீதான போருக்கு மத்தியில் ரஷிய அதிபர் புதின் ஜி20 மாநாட்டில் பங்கேற்றால் அது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும்.
கடந்த ஆண்டு இந்தோனேசியாவின் பாலியில் நடந்த ஜி 20 மாநாட்டில் ரஷிய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தலைமையிலான குழு பங்கேற்றது 2020 மற்றும் 2021-ம் ஆண்டு நடந்த மாநாட்டில் புதின் வீடியோ கான்பரன்ஸ் மூலம் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
- டெல்லியில் செப்டம்பர் மாதம் ஜி20 உச்சி மாநாடு நடைபெறுகிறது.
- ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அதை அகற்றுவது தொடர் நடவடிக்கையாகும்.
ஜி20 மாநாட்டிற்காக நகரை அழகுபடுத்துவதற்காக டெல்லி மேம்பாட்டு ஆணையத்தால் (டிடிஏ) எந்த வீடும் இடிக்கப்படவில்லை என்று மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களாக தலைநகரில் ஆக்கிரமிப்பு தடுப்பு நடவடிக்கையாக, பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகள், மத ஸ்தலங்கள் இடிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, டெல்லியில் செப்டம்பர் மாதம் ஜி20 உச்சி மாநாடு நடைபெறுகிறது.
ராஷ்டிரிய ஜனதா தள மாநிலங்களவை எம்பி மனோஜ் குமார் ஜா கேட்ட கேள்விக்கு மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் கவுசல் கிஷோர் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.
அதில், "ஜி20 மாநாட்டிற்காக நகரை அழகுபடுத்த டெல்லி மேம்பாட்டு ஆணையத்தால் எந்த வீடும் இடிக்கப்படவில்லை.
எவ்வாறாயினும், அரசு அல்லது டெல்லி மேம்பாட்டு ஆணையத்தின் நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து அதை அகற்றுவது தொடர் நடவடிக்கையாகும்.
டெல்லி 2021க்கான மாஸ்டர் பிளான் மற்றும் டெல்லிக்கான ஒருங்கிணைந்த கட்டிட விதிகளின் விதிகளை அமல்படுத்துவதை மேற்பார்வையிட, டிடிஏ துணைத் தலைவரின் தலைமையில் ஒரு சிறப்பு பணிக்குழு ஏப்ரல் 25, 2018 அன்று அமைக்கப்பட்டது.
சிறப்பு பணிக்குழுவினர் அங்கீகரிக்கப்படாத ஆக்கிரமிப்புகள், சட்டவிரோத கட்டுமானங்கள் மற்றும் கட்டிட விதிகளை மீறுதல் பற்றிய புகார்களை கண்டறிகிறது. அதன்பிறகு சம்பந்தப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இந்த விஷயத்தில் தொடர்ந்து நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்துகிறது" இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்தில், ஜி-20 உச்சி மாநாட்டிற்காக நடந்து வரும் சாலைகள், பூங்காக்கள், மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகள் ஆகியவற்றின் சீரமைப்புப் பணிகளை முடிக்க ஏஜென்சிகளுக்கு ஜூலை 31-ஆம் தேதிக்குள் டெல்லி அரசு காலக்கெடு விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
- ஜி 20 உச்சி மாநாடு செப்டம்பர் 8 முதல் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது.
- இதனால் டெல்லியில் 3 நாட்கள் பொது விடுமுறைவிட கெஜ்ரிவால் ஒப்புதல் அளித்துள்ளார்.
புதுடெல்லி:
தலைநகர் டெல்லியில் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் ஜி 20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு 3 நாட்கள் பொது விடுமுறை அறிவிக்கும்படி டெல்லி தலைமை செயலாளரிடம் டெல்லி போலீசார் வேண்டுகோளாக கேட்டு கொண்டனர்.
இதேபோல், கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு உட்பட்ட வர்த்தக மற்றும் தொழில் நிறுவனங்களை மூடும்படி உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டிருந்தது.
இந்நிலையில், போலீசாரின் கோரிக்கையை ஏற்று ஜி 20 உச்சி மாநாட்டை முன்னிட்டு செப்டம்பர் 8-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை 3 நாட்கள் டெல்லியில் பொது விடுமுறை என அறிவிக்க முதல் மந்திரி கெஜ்ரிவால் ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்த நாட்களில் அனைத்துப் பள்ளிகள் மற்றும் மாநகராட்சி அலுவலகங்கள் உள்பட அரசு அலுவலகங்கள் மூடப்பட்டு இருக்கும்.






