என் மலர்
நீங்கள் தேடியது "தென் ஆப்பிரிக்கா"
- தென் ஆப்பிரிக்கா தரப்பில் கேப்டன் மார்க்ரம் 82 ரன்கள் குவித்தார்.
- டி காக் 44 ரன்னில் ஆட்டமிழந்தார்.
டி20 கிரிக்கெட் தொடரில் சுப்பர் 8 சுற்றுகள் நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடியது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி தொடக்கத்தில் 83 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து திணறியது. இதனையடுத்து ஹோல்டர் மற்றும் ஷெப்பர்ட் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இறுதி ஓவரில் ஹோல்டர் 49 ரன்னில் ரன் அவுட் ஆனார். ஷெப்பர்ட் 52 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் லுங்கி இங்கிடி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக மார்க்ரம்- டி காக் களமிறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினர். இதில் டி காக் 27 பந்தில் 44 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 4 பவுண்டரி 4 சிக்சர் அடங்கும்.
இதனை தொடர்ந்து மார்க்ரம் உடன் ரிக்கல்டன் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய மார்க்ரம் 27 பந்தில் அரை சதம் விளாசினார். கடைசி வரை விளையாடிய ரிக்கல்டன் 45 ரன்னிலும் மார்க்ரம் 82 ரன்னிலும் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 16.1 ஓவரில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 177 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
- வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஷெப்பர்ட் 52 ரன்கள் விளாசினார்.
- ஒரு கட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி 83 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
டி20 கிரிக்கெட் தொடரில் சுப்பர் 8 சுற்றுகள் நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்களாக கிங்- ஹோப் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் முதல் ஓவரில் இருந்தே அதிரடியாக விளையாடினர். இதனால் 2 ஓவரில் 29 ரன்கள் குவித்தது.
இவர்களின் அதிரடி ஆட்டத்தை ரபாடா நிறுத்தினார். அதன்படி ஹோப் 6 பந்தில் 16 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹெட்மயர் 2 ரன்னில் வெளியேறினார். அதனை தொடர்ந்து இங்கிடி ஓவரில் கிங் 21 ரன்னில் வெளியேறினார். அதே ஓவரில் ரோஸ்டன் சேஸ் 2 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அடுத்த வந்த ரதர்போர்ட் 12, ரோவ்மன் பவல் 9, மேத்யூ ஃபோர்டு 11 ரன்கள் எடுத்து வெளியேறினர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 83 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
இதனையடுத்து ஹோல்டர் மற்றும் ஷெப்பர்ட் ஜோடி சேர்ந்து பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இறுதி ஓவரில் ஹோல்டர் 49 ரன்னில் ரன் அவுட் ஆனார். ஷெப்பர்ட் 52 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் எடுத்தது. தென் ஆப்பிரிக்கா தரப்பில் லுங்கி இங்கிடி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- 76 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அதிர்ச்சி தோல்வியடைந்தது.
- சிறிய பார்ட்னர்ஷிப் கூட அமைக்க முடியவில்லை.
சென்னை:
தென் ஆப்பிரிக்காவுடனான தோல்விக்கு பவர்பிளே விக்கெட்டுகளே காரணம் என இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் நேற்று இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணியுடன் மோதியது. அகமதாபாத்தில் நடந்த இந்த போட்டியில் இந்திய அணி 111 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 76 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அதிர்ச்சி தோல்வியடைந்தது.
போட்டிக்குப் பிறகு பேசிய சூர்யகுமார், "180-185 ரன்களை துரத்தும்போது பவர்பிளே ஓவர்களிலேயே போட்டியை வெல்ல முடியாது, ஆனால் அதே பவர்பிளே ஓவர்களிலேயே போட்டியை இழக்கலாம்.
நாங்கள் பவர்பிளேயில் அதிக விக்கெட்டுகளை இழந்தோம். அதனால் சிறிய பார்ட்னர்ஷிப் கூட அமைக்க முடியவில்லை. இது விளையாட்டின் ஒரு பகுதி. இதிலிருந்து பாடம் கற்று பலமாக திரும்புவோம்," என்றார்.
அடுத்து இந்திய அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்ள உள்ளது.
- நியூசிலாந்து, பாகிஸ்தான் இடையிலான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.
- நடப்பு சாம்பியனான இந்திய அணி லீக் சுற்றில் 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது.
அகமதாபாத்:
டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் சூப்பர் 8 சுற்று நேற்று தொடங்கியது.
முதல் போட்டியில் நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகள் மோத இருந்த நிலையில் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.
சூப்பர் 8 சுற்றில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி குரூப் 1 பிரிவில் இடம் பெற்றுள்ளது. ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ், தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளும் அந்தப் பிரிவில் உள்ளன.
இந்நிலையில், இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் மார்கிராம் தலைமையிலான தென் ஆப்பிரிக்காவை இன்று (22-ம் தேதி) சந்திக்கிறது. அகமதாபாத்தில் இரவு 7 மணிக்கு இந்தப் போட்டி நடைபெறுகிறது.
இந்தத் தொடரில் நடப்பு சாம்பியனான இந்திய அணி லீக் சுற்றில் 4 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றது. அமெரிக்காவை 29 ரன் வித்தியாசத்திலும், நமீபியாவை 93 ரன் வித்தியாசத்திலும், பாகிஸ்தானை 61 ரன் வித்தியாசத்திலும், நெதர்லாந்தை 17 ரன் வித்தியாசத்திலும் வீழ்த்தியது.
தென் ஆப்பிரிக்க அணியும் இந்தத் தொடரில் தோல்வியை தழுவாமல் 4 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளதால், இந்திய அணி மிகவும் கவனமுடன் விளையாட வேண்டும்.
தொடக்க வீரர் அபிஷேக் சர்மா 3 ஆட்டத்தில் ஒரு ரன் கூட எடுக்கவில்லை. அவர் நல்ல நிலைக்கு திரும்புவது அவசியம். அபிஷேக் சர்மா 2 முறை சுழற்பந்து வீரருக்கு டக் அவுட் ஆனார். எனவே தென் ஆப்பிரிக்காவும் அவரை உடனே வெளியேற்ற சுழற்பந்து வீச்சாளரை தொடக்கத்தில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.
பேட்டிங்கில் இஷான் கிஷன் (176 ரன்), கேப்டன் சூர்யகுமார் யாதவ் (162), ஷிவம் துபே (116), திலக் வர்மா (106) ஆகியோரும், பந்து வீச்சில் வருண் சக்கரவர்த்தி (9 விக்கெட்), அக்சர் படேல் (6), பும்ரா (4) ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். ஆல்-ரவுண்டர் பணியில் ஹர்திக் பாண்ட்யா சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக பந்துவீச்சில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கூடுதலாக சுழற்பந்து வீரருக்கு வாய்ப்பா அல்லது 3 வேகப்பந்து வீரரா என்பது ஆடுகள தன்மையை பொறுத்த முடிவாகும்.
பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் தென் ஆப்பிரிக்கா சமநிலையுடன் இருக்கிறது. பேட்டிங்கில் கேப்டன் மார்கிராம் (178 ரன்), ரிக்கெல்டன் (145), குயின்டன் டி காக் (118) ஆகியோரும், பந்துவீச்சில் நிகிடி (8 விக்கெட்), மார்கோ யான்சென் (7 விக்கெட்), ரபாடா ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.
இரு அணிகளும் வெற்றிக்காக போராடுவார்கள் என்பதால் இன்றைய ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
- ஹாட்ரிக் வெற்றியை பெறப்போவது தென் ஆப்பிரிக்காவா? நியூசிலாந்தா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
- 2-வது போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்சை 10 விக்கெட் வித்தியாசத்திலும் வீழ்த்தியது.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நாளை (14-ந்தேதி) இரவு 7 மணிக்கு அகமதாபாத்தில் நடைபெறும் ஆட்டத்தில் டி பிரிவில் உள்ள தென் ஆப்பிரிக்கா-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
இரு அணிகளும் இரண்டு ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன. இதனால் ஹாட்ரிக் வெற்றியை பெறப்போவது தென் ஆப்பிரிக்காவா? நியூசிலாந்தா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
மர்க்ராம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி முதல் போட்டியில் கனடாவை 57 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. 2-வது ஆட்டத்தில் கடும் போராட்டத்துக்கு பிறகு ஆப்கானிஸ்தானை தோற் கடித்தது. 2-வது சூப்பர் ஓவரில் தான் வெற்றி பெற முடிந்தது.
சான்ட்னெர் தலைமையிலான நியூசிலாந்து அணி முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்சை 10 விக்கெட் வித்தியாசத்திலும் வீழ்த்தியது.
இரு அணிகளும் சம பலம் வாய்ந்தவை என்பதால் இந்தப் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
நாளை நடைபெறும் மற்ற ஆட்டங்களில் அயர்லாந்து- ஓமன் (கொழும்பு, காலை 11 மணி), இங்கிலாந்து-ஸ்காட்லாந்து (கொல்காத்தா, மாலை 3 மணி) அணிகள் மோதுகின்றன.
அயர்லாந்து, ஓமன் அணிகள் முதல் 2 ஆட்டங்களில் தோற்றன. இதனால் முதல் வெற்றி யாருக்கு என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து, ஸ்காட்லாந்து அணிகள் தலா 2 புள்ளிகளுடன் உள்ளன. இதனால் 2-வது வெற்றி யாருக்கு ? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- 2வது சூப்பர் ஓவரில் ஆப்கானிஸ்தான் வீரர் குர்பாஸ் ஹாட் ட்ரிக் சிக்ஸர்களை விளாசினார்.
- கடைசி வரை போராடிய குர்பாஸ்-க்கு கிரிக்கெட் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
10-வது டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் கடந்த 7-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக டிகாக் 59 ரன்களும் ரிங்கல்டன் 61 ரன்களும் அடித்து ஆட்டமிழந்தனர். ஆப்கானிஸ்தான் தரப்பில் ஓமர்சாய் 3 விக்கெட்டும் ரஷித்கான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி ஒருபுறம் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்தாலும் மறுபுறம்அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்து. அதிரடியாக விளையாடிய ரஹ்மானுல்லா குர்பாஸ் 42 பந்துகளில் 84 ரன்கள் அடித்து அவுட்டனார்.
ஆப்கானிஸ்தான் அணி 19.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் அடித்தது. இதனால் போட்டி சமனில் முடிந்தது.
இதையடுத்து சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. அதில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 17 ரன்களை குவித்தது.
இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 1 விக்கெட் இழப்பிற்கு 17 ரன்கள் அடித்தது. இதனால் சூப்பர் ஓவரும் டை ஆனது.
இதையடுத்து 2 ஆவது சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. 2 ஆவது சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி விக்கெட் இழப்பின்றி 23 ரன்கள் அடித்தது.
இதையடுத்து 24 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 18 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வி அடைந்தது.
இப்போட்டியில் கேசவ் மஹாராஜ் வீசிய 2வது சூப்பர் ஓவரில் ஆப்கானிஸ்தான் வீரர் குர்பாஸ் ஹாட் ட்ரிக் சிக்ஸர்களை விளாசினார். கடைசி பந்தில் 4 ரன்கள் எடுத்தால் டிரா என்ற நிலையில் இருந்தபோது கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
இந்த போட்டியில் தோல்வி அடைந்த பிறகு குர்பாஸ் முகத்தை மூடி அழுத்த காட்சிகள் அனைவரையும் கலங்கவைத்தது. கடைசி வரை களத்தில் நின்ற அவரின் விடாமுயற்சிக்கு கிரிக்கெட் ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
- முதல் சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 17 ரன்களை குவித்தது.
- முதல் சூப்பர் ஓவரில் தென் ஆப்பிரிக்காஅணியும் 17 ரன்கள் அடித்தது
10-வது டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் கடந்த 7-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக டிகாக் 59 ரன்களும் ரிங்கல்டன் 61 ரன்களும் அடித்து ஆட்டமிழந்தனர். ஆப்கானிஸ்தான் தரப்பில் ஓமர்சாய் 3 விக்கெட்டும் ரஷித்கான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி ஒருபுறம் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்தாலும் மறுபுறம்அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்து. அதிரடியாக விளையாடிய ரஹ்மானுல்லா குர்பாஸ் 42 பந்துகளில் 84 ரன்கள் அடித்து அவுட்டனார்.
ஆப்கானிஸ்தான் அணி 19.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் அடித்தது. இதனால் போட்டி சமனில் முடிந்தது.
இதையடுத்து சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. அதில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 17 ரன்களை குவித்தது.
இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 1 விக்கெட் இழப்பிற்கு 17 ரன்கள் அடித்தது. இதனால் சூப்பர் ஓவரும் டை ஆனது.
இதையடுத்து 2 ஆவது சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. 2 ஆவது சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி விக்கெட் இழப்பின்றி 23 ரன்கள் அடித்தது.
இதையடுத்து 24 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 18 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வி அடைந்தது.
- சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 17 ரன்களை குவித்தது.
- தென் ஆப்பிரிக்கா 1 விக்கெட் இழப்பிற்கு 17 ரன்கள் அடித்தது.
10-வது டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் கடந்த 7-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக டிகாக் 59 ரன்களும் ரிங்கல்டன் 61 ரன்களும் அடித்து ஆட்டமிழந்தனர். ஆப்கானிஸ்தான் தரப்பில் ஓமர்சாய் 3 விக்கெட்டும் ரஷித்கான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி ஒருபுறம் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்தாலும் மறுபுறம்அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்து. அதிரடியாக விளையாடிய ரஹ்மானுல்லா குர்பாஸ் 42 பந்துகளில் 84 ரன்கள் அடித்து அவுட்டனார்.
ஆப்கானிஸ்தான் அணி 19.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் அடித்தது. இதனால் போட்டி சமனில் முடிந்தது.
இதையடுத்து சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. அதில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி விக்கெட் இழப்பின்றி 17 ரன்களை குவித்தது.
இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 1 விக்கெட் இழப்பிற்கு 17 ரன்கள் அடித்தது. இதனால் சூப்பர் ஓவரும் டை ஆனது. இதையடுத்து 2 ஆவது சூப்பர் ஓவர் நடத்தப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.
- தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்தது.
- அதிரடியாக விளையாடிய ரஹ்மானுல்லா குர்பாஸ் 42 பந்துகளில் 84 ரன்கள் அடித்து அவுட்டனார்.
10-வது டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் கடந்த 7-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக டிகாக் 59 ரன்களும் ரிங்கல்டன் 61 ரன்களும் அடித்து ஆட்டமிழந்தனர். ஆப்கானிஸ்தான் தரப்பில் ஓமர்சாய் 3 விக்கெட்டும் ரஷித்கான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி ஒருபுறம் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்தாலும் மறுபுறம்அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்து. அதிரடியாக விளையாடிய ரஹ்மானுல்லா குர்பாஸ் 42 பந்துகளில் 84 ரன்கள் அடித்து அவுட்டனார்.
ஆப்கானிஸ்தான் அணி 19.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் அடித்தது. இதனால் போட்டி சமனில் முடிந்தது. இதனால் சூப்பர் ஓவர் நடத்தப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.
- ஆப்கானிஸ்தான் தரப்பில் ஓமர்சாய் 3 விக்கெட்டும் ரஷித்கான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- டிகாக் 59 ரன்னிலும் ரிக்கல்டன் 61 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
10-வது டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் கடந்த 7-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதி வருகிறது.
இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்களாக மார்க்ரம்- டிகாக் களமிறங்கினர். இதில் மார்கரம் 5 ரன்னில் வெளியேறினார்.
இதனையடுத்து டிகாக்குடன் ரிக்கல்டன் ஜோடி சேர்ந்து ஆப்கானிஸ்தான் அணியின் பந்து வீச்சை பறக்க விட்டனர். அதிரடியாக விளையாடிய இருவரும் அரை சதம் கடந்தனர். இந்த ஜோடி 2-வது விக்கெட்டுக்கு 114 ரன்கள் சேர்த்தது. டிகாக் 59 ரன்னிலும் ரிங்கல்டன் 61 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
13 ஓவரில் 127 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்த தென் ஆப்பிரிக்கா அணி, அதன் பிறகு தடுமாறியது. அடுத்து வந்த ப்ரெவிஸ் 19 பந்துகள் சந்தித்து 23 ரன்களிலும் ஸ்டெப்ஸ் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இறுதியில் டேவிட் மில்லர், யான்சென் ஜோடி அதிரடியாக விளையாடினர். இதனால் தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் ஓமர்சாய் 3 விக்கெட்டும் ரஷித்கான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
- முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 240 ரன்கள் குவித்தது.
நவி மும்பை:
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் 7-ம் தேதி தொடங்க உள்ளது.
இந்நிலையில், இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான பயிற்சி ஆட்டம் நவி மும்பையில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 240 ரன்கள் குவித்தது. இஷான் கிஷன் 20 பந்தில் 53 ரன்னும், திலக் வர்மா 19 பந்தில் 45 ரன்னும், அக்சர் படேல் 23 பந்தில் 35 ரன்னும் எடுத்தனர்.
இதையடுத்து, 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி களமிறங்கியது. ரியான் ரிக்கல்டன் 21 பந்தில் 44 ரன்னும், மார்க்ரம் 19 பந்தில் 38 ரன்னும், ஜேசன் ஸ்மித் 35 ரன்னும், மார்கோ யான்சென் 31 ரன்னும் எடுத்தனர்.
கடைசி கட்டத்தில் டிரிஸ்டன் ஸ்டப்ஸ் அதிரடியாக ஆடி 21 பந்தில் 45 ரன் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இறுதியில், தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 210 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 30 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
- சாலையில் சென்றவர்கள் மீதும் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டு கொண்டே சென்றனர்.
- தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடியவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரின் மேற்கே உள்ள பெக்கர் ஸ்டால் பகுதியில் ஒரு மதுபான விடுதியில் இன்று அதிகாலை ஏராளமானோர் திரண்டிருந்தனர்.
அப்போது அங்கு மர்ம நபர்கள் துப்பாக்கிகளுடன் வந்தனர். 2 வாகனங்களில் வந்த அக்கும்பல் மதுபான விடுதி முன்பு இருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினார்கள். இதனால் பொதுமக்கள் அலறியடித்து கொண்டு ஓடினார்கள். பலர் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்தனர்.
பின்னர் அக்கும்பல் தப்பி சென்றபோது சாலையில் சென்றவர்கள் மீதும் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டு கொண்டே சென்றனர்.
இந்த தாக்குதலில் 9 பேர் பலியானார்கள். 10 பேர் காயம் அடைந்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடியவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். இதற்கிடையே 12 மர்ம நபர்கள் இந்த துப்பாக்கி சூடு தாக்குதலில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட மதுபான விடுதி சட்ட விரோதமாக நடந்து வந்ததாக தெரிகிறது.
கடந்த 6-ந்தேதி தலை நகர் பிரிட்டோரியாவுக்கு அருகிலுள்ள ஒரு தங்குமிடத்திற்குள் மர்ம நபர்கள் நுழைந்து 12 பேரை சுட்டுக் கொன்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.