டி20 உலகக்கோப்பை: சமனில் முடிந்த தென் ஆப்பிரிக்கா Vs ஆப்கானிஸ்தான் போட்டி

தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்தது. அதிரடியாக விளையாடிய ரஹ்மானுல்லா குர்பாஸ் 42 பந்துகளில் 84 ரன்கள் அடித்து அவுட்டனார்.
டி20 உலகக்கோப்பை: சமனில் முடிந்த தென் ஆப்பிரிக்கா Vs ஆப்கானிஸ்தான் போட்டி
Published on

10-வது டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் கடந்த 7-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக டிகாக் 59 ரன்களும் ரிங்கல்டன் 61 ரன்களும் அடித்து ஆட்டமிழந்தனர். ஆப்கானிஸ்தான் தரப்பில் ஓமர்சாய் 3 விக்கெட்டும் ரஷித்கான் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதையடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி ஒருபுறம் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்தாலும் மறுபுறம்அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்து. அதிரடியாக விளையாடிய ரஹ்மானுல்லா குர்பாஸ் 42 பந்துகளில் 84 ரன்கள் அடித்து அவுட்டனார்.

ஆப்கானிஸ்தான் அணி 19.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் அடித்தது. இதனால் போட்டி சமனில் முடிந்தது. இதனால் சூப்பர் ஓவர் நடத்தப்பட்டு முடிவு அறிவிக்கப்படும். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com