என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "T20 World Cup 2026"

    • இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி இன்று நடக்கிறது.
    • டி20 உலக கோப்பை தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்குகிறது.

    இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ராஞ்சியில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனை தொடர்ந்து இரு அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி ராய்பூரில் இன்று நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணிக்கான புதிய ஜெர்சி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மைதானத்தில் ரோகித் சர்மா மற்றும் திலக் வர்மா ஆகியோர் சேர்ந்து ஜெர்சியை அறிமுகப்படுத்தினர்.

    டி20 உலக கோப்பை தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி நாளை நடக்கிறது.
    • இந்திய அணிக்கான புதிய ஜெர்சி அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ராஞ்சியில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனை தொடர்ந்து இரு அணிகள் மோதும் 2-வது ஒருநாள் போட்டி ராய்பூரில் நாளை நடக்க உள்ளது. இதற்காக இந்திய அணி வீரர்கள் ராய்பூருக்கு சென்றனர்.

    இந்நிலையில் நாளை நடக்கும் 2-வது ஒருநாள் போட்டியின் போது டி20 உலகக் கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணிக்கான புதிய ஜெர்சி அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய ஜெர்சி போல பல புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    டி20 உலக கோப்பை தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    • அமெரிக்காவில் கடந்த 2024-ம் ஆண்டு நடந்த 20 ஓவர் உலக கோப்பையில் இரு அணிகளும் ஒரே பிரிவில் இடம்பெற்று இருந்தன.
    • இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பிப்ரவரி 15-ந்தேதி கொழும்பில் மோதலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    துபாய்:

    10-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி 7-ந் தேதி முதல் மார்ச் 8-ந் தேதி வரை இந்தியா, இலங்கையில் நடைபெறுகிறது.

    இதில் 20 நாடுகள் பங்கேற்கின்றன. போட்டியை நடத்தும் இந்தியா, இலங்கை மற்றும் கடந்த உலக கோப்பையில் முதல் 7 இடங்களை பிடித்த அணிகள், 20 ஓவர் தர வரிசையில் உள்ள 3 நாடுகள் ஆகிய 12 அணிகள் நேரடியாக இடம் பெற்றன. மீதியுள்ள 8 நாடுகள் தகுதி சுற்று மூலம் தேர்வானது.

    இவை 4 பிரிவுகள் பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 5 நாடுகள் இடம் பெற்றுள்ளன. 'லீக்' முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும். அணிகள் 'சூப்பர்-8' சுற்றுக்கு தகுதி பெறும். இந்த சுற்றில் ஆடும் 8 நாடுகளும் 2 பிரிவாக பிரிக்கப்படும். இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.

    40 லீக் ஆட்டம், 'சூப்பர் 8' சுற்றில் 12 போட்டி உள்பட மொத்தம் 55 ஆட்டங்கள் நடக்கிறது. இந்தியாவில் அகமதாபாத், கொல்கத்தா, மும்பை, சென்னை, புதுடெல்லி ஆகிய இடங்களிலும் இலங்கையில் கொழும்பு கண்டியிலும் போட்டி நடைபெறுகிறது.

    இதற்கிடையே 20 ஓவர் உலக கோப்பையில் ஒவ்வொரு பிரிவிலும் இடம் பெறும் அணிகள் விவரம் வெளியாகியுள்ளது. தரவரிசை அடிப்படையில் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே பிரிவில் இடம்பெற்று உள்ளதாக அந்த தகவல் தெரிவிக்கிறது.

    இரு அணிகளும் ஆசிய கோப்பை போட்டியில் சமீபத்தில் மோதின. துபாயில் 3 முறை மோதிய ஆட்டத்திலும் இந்தியாவே வெற்றி பெற்றது. இந்த தொடரின் போது பகல்காம் சம்பவம் எதிரொலித்தது. இந்திய அணி பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்க மறுத்தது, பாகிஸ்தான் மந்திரியிடம் இருந்து ஆசிய கோப்பையை வாங்க மறுத்தது போன்றவற்றால் சர்ச்சை வெடித்தது.

    தற்போது இரு அணிகளும் 20 ஓவர் உலக கோப்பையில் மீண்டும் மோத உள்ளன. அமெரிக்காவில் கடந்த 2024-ம் ஆண்டு நடந்த 20 ஓவர் உலக கோப்பையில் இரு அணிகளும் ஒரே பிரிவில் இடம்பெற்று இருந்தன.

    நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான் இடம் பெற்றுள்ள பிரிவில் நெதர்லாந்து, நமீபியா, அமெரிக்கா ஆகிய அணிகள் உள்ளன. தரவரிசையில் முதல் இடத்தில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பிப்ரவரி 15-ந்தேதி கொழும்பில் மோதலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    இதற்கு முன்னதாக அமெரிக்கா, நமீபியா அணிகளுடன் இந்தியா விளையாடும். இறுதி 'லீக்' ஆட்டத்தில் நெதர்லாந்தை சந்திக்கும்.

    இலங்கை, ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே, அயர்லாந்து, ஓமன் அணிகள் மற்றொரு பிரிவிலும், இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்காள தேசம், நேபாளம், இத்தாலி இன்னொரு பிரிவிலும் உள்ளன. தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆப்கானிஸ் தான் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கனடா ஆகிய அணிகள் ஒரு பிரிவிலும் இடம்பெற்றுள்ளன.

    இறுதிப்போட்டி அகமதாபாத்தில் நடைபெறும். ஒரு வேளை பாகிஸ்தான் தகுதி பெற்றால் கொழும்புக்கு மாற்றப்படும். மும்பை, கொல்கத்தா ஆகிய இடங்களில் அரைஇறுதி நடைபெறலாம். போட்டி குறித்த அட்டவணை விவரம் வருகிற 25-ந்தேதி மும்பையில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

    • நேற்று முன்தினம் 2 முறை உலக கோப்பையை வென்ற பிரான்ஸ் தகுதி பெற்றது.
    • போட்டியை நடத்தும் 3 நாடுகள் நேரடியாக விளையாடும். மற்றவை தகுதி சுற்று மூலம் தேர்வாகும்.

    சாகிரேப்:

    உலக கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2026) ஜூன் 11-ந்தேதி முதல் ஜூலை 19-ந்தேதி வரை கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகளில் நடக்கிறது. இதில் 48 நாடுகள் பங்கேற்கின்றன. இது 2022-ம் ஆண்டு போட்டியைவிட 16 அணிகள் கூடுதலாகும்.

    போட்டியை நடத்தும் 3 நாடுகள் நேரடியாக விளையாடும். மற்றவை தகுதி சுற்று மூலம் தேர்வாகும்.

    ஜப்பான், நியூசிலாந்து, ஈரான், நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா, உஸ்பெகிஸ்தான், தென்கொரியா, ஜோர்டான், ஆஸ்திரேலியா, பிரேசில், ஈக்வடார், உருகுவே, கொலம்பியா, பராகுவே, மொராக்கோ, துனிசியா, எகிப்து. அல்ஜீரியா, கானா மற்றும் குட்டி நாடான கேப்வெர்டே , இங்கிலாந்து, கத்தார், தென்ஆப்பிரிக்கா, சவுதி அரேபியா, ஐவேரி கோஸ்ட், செனகல் ஆகிய நாடுகள் ஏற்கனவே தகுதி பெற்று இருந்தன. நேற்று முன்தினம் 2 முறை உலக கோப்பையை வென்ற பிரான்ஸ் தகுதி பெற்றது.

    27-வது நாடாக ஐரோப்பிய கண்டத்தில் உள்ள குரோஷியா தகுதி பெற்றது. நேற்று நடந்த தகுதி சுற்று ஆட்டம் ஒன்றில் அந்த அணி 3-1 என்ற கோல் கணக்கில் பரோயேயை தோற்கடித்தது. குரோஷியா 7-வது முறையாக தகுதி பெற்றது. தொடர்ச்சியாக 4-வது தடவையாக முன்னேறியுள்ளது. 2018-ம் ஆண்டு 2-வது இடத்தை பிடித்ததே அந்த அணியின் சிறந்த நிலையாகும்.

    3 நாடுகள் நேரடி தகுதி மற்றும் தகுதி சுற்றுக்கு செல்லும் 27 அணிகள் என இதுவரை 30 நாடுகள் உலக கோப்பையில் ஆடுவது தெரிய வந்துள்ளது. இன்னும் 18 அணிகள் தகுதி பெற வேண்டும்.

    • 2026 டி20 உலக கோப்பையில் மொத்தம் 55 ஆட்டங்கள் நடைபெறவுள்ளது.
    • இந்த உலக கோப்பையில் இத்தாலி முதல் முறையாக தகுதி பெற்றுள்ளது.

    10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2026) இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. 20 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிக்கு இதுவரை நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் உள்பட 15 அணிகள் தகுதி பெற்றுள்ளன.

    இதில் இத்தாலி முதல் முறையாக தகுதி பெற்றுள்ளது. முந்தைய உலகக் கோப்பை போன்றே அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதும். ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடத்தை பிடிக்கும் அணிகள் சூப்பர்-8 சுற்றை எட்டும். போட்டிக்கான அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை.

    உலகக் கோப்பை போட்டிகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி 7-ந் தேதி முதல் மார்ச் 8-ந் தேதி வரை நடத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    மொத்தமுள்ள 55 ஆட்டங்கள் இந்தியாவில் குறைந்தது 5 நகரங்களிலும், இலங்கையில் இரு இடங்களிலும் நடைபெறும் என்று கூறப்படுகிறது.

    அவ்வகையில் இந்தியாவில் அகமதாபாத், டெல்லி, சென்னை, மும்பை, கொல்கத்தா ஆகிய 5 மைதானங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இறுதிப்போட்டி உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    பாகிஸ்தான் அணி விளையாடும் போட்டிகள் இலங்கையில் உள்ள கொழும்புவில் நடைபெறும் என்றும் ஒரு வேளை பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் பட்சத்தில், இறுதி ஆட்டத்தை கொழும்புக்கு மாற்றவும் இந்திய கிரிக்கெட் வாரியம் ஒப்புக் கொண்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

    • ஆசிய பசிபிக் தகுதி சுற்று போட்டியில் சூப்பர்-6 ஆட்டங்கள் ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்தது.
    • ஜப்பான் அணியை வீழ்த்தி ஐக்கிய அரபு அமீரக அணி வெற்றி பெற்றது.

    மஸ்கட்:

    20 அணிகள் பங்கேற்கும் 10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி- மார்ச் மாதங்களில் இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது.

    இதில் ஆசிய பசிபிக் தகுதி சுற்று போட்டியில் சூப்பர்-6 ஆட்டங்கள் ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகம் அணி, ஜப்பானை சந்தித்தது. இதில் முதலில் பேட் செய்த ஜப்பான் 9 விக்கெட்டுக்கு 116 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய ஐக்கிய அரபு அமீரக அணி 12.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 118 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் 3-வது வெற்றியை பெற்று புள்ளி பட்டியலில் டாப்-3 இடத்தை உறுதி செய்ததுடன், உலகக் கோப்பை போட்டிக்கு 20-வது மற்றும் கடைசி அணியாக தகுதி பெற்றது.

    இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்காளதேசம், இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், கனடா, இத்தாலி, நெதர்லாந்து, நமிபியா, ஜிம்பாப்வே, நேபாளம், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய 20 அணிகள் இந்த உலகக் கோப்பையில் விளையாட உள்ளன.

    • டி20 உலகக் கோப்பை தொடரில் 20 அணிகள் பங்கேற்கின்றனர்.
    • நேபாளம்- ஓமன் 18-வது மற்றும் 19-வது அணிகளாக தகுதி பெற்றுள்ளன.

    ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் 2026 பிப்ரவரி முதல் மார்ச் வரை நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான தகுதிச் சுற்று போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

    இந்த தகுதிச் சுற்றில் நேபாளம் மற்றும் ஓமன் ஆகிய இரு அணிகளும் 2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன. அவர்களது இறுதி சூப்பர் சிக்ஸ் போட்டிக்கு முன்பே 18-வது மற்றும் 19-வது அணிகளாக தகுதி பெற்றுள்ளன. மேலும் தகுதிச் சுற்றில் இன்னும் ஒரு இடம் மட்டுமே உள்ளது.

    தற்போது ஓமனில் நடைபெறும் சூப்பர் சிக்ஸ் சுற்றில் யுஏஇ, ஜப்பான், கத்தார், சமோவா போன்ற அணிகள் போட்டியிடுகின்றன. இந்த போட்டிகளின் முடிவுகளின் அடிப்படையில் கடைசி அணி தீர்மானிக்கப்படும். மீதமுள்ள ஒரு இடத்தை UAE அணி பிடிக்க அதிக வாய்ப்பு உள்ளது.

    இந்தியா, இலங்கை, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, அமெரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், அயர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், நெதர்லாந்து, இத்தாலி, கனடா, ஜிம்பாப்வே, நமீபியா, நேபாளம், ஓமன் ஆகிய அணிகள் இந்த தொடரில் இடம் பெற்றுள்ளனர்.

    • இத்தாலி அணி முதல் முறையாக இந்த தொடருக்கு தகுதி பெற்றுள்ளது.
    • இந்தியாவில் குறைந்தது 5 நகரங்களிலும், இலங்கையில் இரு இடங்களிலும் நடைபெறும் என்று தெரிகிறது.

    புதுடெல்லி:

    10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2026) இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. 20 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டிக்கு இதுவரை நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் உள்பட 15 அணிகள் தகுதி பெற்றுள்ளன.

    இதில் இத்தாலி முதல் முறையாக தகுதி பெற்றுள்ளது. முந்தைய உலகக் கோப்பை போன்றே அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதும். ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடத்தை பிடிக்கும் அணிகள் சூப்பர்-8 சுற்றை எட்டும். போட்டிக்கான அட்டவணை இன்னும் வெளியிடப்படவில்லை.

    இந்த நிலையில் இந்த உலகக் கோப்பை போட்டியை அடுத்த ஆண்டு பிப்ரவரி 7-ந் தேதி முதல் மார்ச் 8-ந் தேதி வரை நடத்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) முடிவு செய்திருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. மொத்தமுள்ள 55 ஆட்டங்கள் இந்தியாவில் குறைந்தது 5 நகரங்களிலும், இலங்கையில் இரு இடங்களிலும் நடைபெறும் என்று தெரிகிறது.

    இறுதிப்போட்டி உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு வேளை பாகிஸ்தான் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் பட்சத்தில், இறுதி ஆட்டத்தை கொழும்புக்கு மாற்றவும் இந்திய கிரிக்கெட் வாரியம் ஒப்புக் கொண்டுள்ளது.

    ×